நம்பலாமா, நாடி ஜோதிடத்தை…? பகுதி – 2

நாடி ஜோதிடம் என்ற பெயரில் சித்தர்களின் பெயரைச் சொல்லியும், முனிவர்களின் வாக்கு என்று கூறியும் இந்த போலி நாடி ஜோதிடர்கள் செய்யும் அராஜகங்களுக்கு அளவே இல்லை.  அகத்தியர் போன்றவர்களால் எழுதப்பட்ட இரண்டாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள் இவை என்று கூசாமல் பொய் சொல்கிறார்கள்.

”அகத்தியம்” என்ற இலக்கண நூலை எழுதியவர் அகத்தியர். இவர், தொல்காப்பியரின் குரு. தொல்காப்பியர் தனது இலக்கண நூலான தொல்காப்பியத்தில் “அந்தாதி” இலக்கியம் பற்றி எதுவுமே குறிப்பிட்டவில்லை. அப்படியிருக்க, இந்தச் சுவடிகளை அகத்தியர் எப்படி எழுதியிருக்க முடியும்? இந்தச் சுவடிகளில் பயின்று வரும் பாடல் வகையான அந்தாதி முறை ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இலக்கியத்தில் ஏற்றம் பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. (தமிழில் முதலில் தோன்றிய அந்தாதி நூலாக, காரைக்காலம்மையாரின் அற்புதத்திருவந்தாதி கருதப்படுகிறது. இது ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியதாக இலக்கிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.)

 ஆனால் நாடி ஜோதிடம் பார்த்தவர்களின் கருத்துக்களோ ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளது. “நான் நாடி ஜோதிடம் பார்க்கப் போனேன். ஆச்சரியப்படுத்தும் விதமாக எனது பெயர், மனைவியின் பெயர், எனது தொழில், பிறக்கப் போகும் குழந்தை பற்றிய விவரங்கள் எல்லாம் சரியாக இருந்தன” என்று ஆச்சரியப்படுகிறார்கள். நம்மிடம் கேட்கும் கேள்விகளைக் கொண்டே நம்மைப் பற்றியும், குடும்பம் பற்றியுமான விவரங்களைக் கண்டுபிடித்து, அதை திருப்பி நம்மிடமே ஓலையில் வந்திருப்பது போல படித்துக் காட்டி ஏமாற்றுகின்றனர் என்பது பலருக்குத் தெரிவதில்லை.

 ”நாடிகளில் தந்த்ர நாடி, மந்த்ர நாடி என்று பல நாடிகள் உள்ளன. பெரும்பாலான நாடி ஜோதிடர்கள் ‘கர்ண பிஷாசி (கர்ண யக்ஷணி) என்ற தேவதையை உபாசித்தே பலன்கள் சொல்கின்றனர்” என்கிறார் பிரபல ஜோதிடரும், நாடி ஜோதிடம் பற்றிய பல ஆய்வுகளைச் செய்தவருமான அமரர் பி.வி.ராமன்.

 நாடி ஜோதிட ஓலைச் சுவடிகளின் தொன்மை,  எழுத்துக்களின் தன்மை,  அதன் உண்மையான காலம் பற்றி அறிய, கார்பன் பரிசோதனை (Carbon Treatment) செய்தால் போதும். ஆனால் அதற்கு நாடி ஜோதிடர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்பதே உண்மை. அதுமட்டுமல்ல; ஏதாவது ஒரு ஓலைச்சுவடியை வைத்துக் கொண்டு (அது ராம நாடக கீர்த்தனையாகவும் இருக்கலாம். மருத்துவச் சுவடியாகவும் இருக்கலாம். அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம்) அது நாடி ஜோதிட ஓலைச்சுவடி என்று கூறி, அதைப் படித்துப் பார்த்துப் பலன் எழுதுவது போல மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

 அதுவும் மொழி தெரியாத                  வெளிநாட்டுக்காரர்கள், வட இந்தியர்கள் என்றால் ஏமாற்றுவது இன்னமும் எளிது. ”உங்கள் பெயர் இதோ இருக்கிறது பாருங்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் முனிவர் உங்களைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். நீங்கள் அதிர்ஷ்டசாலி; புண்ணியவான்; முனிவரின் அருள் பெற்றவர் ” என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி, ஓலைச்சுவடியைக் காட்டிக் காசு பறிக்கின்றனர்.

 ”நாடி ஜோதிடம் என்பது முழுக்க முழுக்கப் பொய். ஏமாற்றுவேலை. சாந்தி செய்கிறேன், பரிகாரம் செய்கிறேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஓலையைப் புகையில் காண்பித்து, பழங்கால ஓலை போன்ற தோற்றத்தை உண்டாக்கி, அதில் எதையாவது கிறுக்கி, தங்களிடம் வருபவர்களிடம் ஏதையாவது சொல்லி பயமுறுத்திக் காசு பறித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது மிகப் பெரிய குற்றம்” என்பதே வரலாற்றாய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

கீழே உள்ள படங்களைப் பாருங்கள்…

ராம நாடகக் கீர்த்தனைச் சுவடி
ராமநாடகம்

இதைப் பெரிது படுத்தில் பார்த்தால் ராமன், பெரிய பிராட்டி, வனவாசம் போன்ற வார்த்தைகள் தெரியும். உண்மையில் இது நாடி ஜோதிடச் சுவடி அல்ல. “கோபால கிருஷ்ண பாரதியார்” என்ற அறிஞர் எழுதிய “இராம நாடக கீர்த்தனை” என்ற செய்யுளின் சுவடி. இது போன்ற பழங்கால இலக்கண, இலக்கியச் சுவடியை வைத்துக் கொண்டு, மொழி தெரியாத மக்களையும், மொழி தெரிந்தாலும் இவற்றைப் படிக்க முடியாத, இதன் சூட்சுமங்கள் அறியாத மக்களையும் சில நாடி ஜோதிடர்கள் ஏமாற்றி வருகின்றனர். 

மக்கள் எதையும் ஆராயாமல் கண்மூடித் தனமாக நம்பிக் கொண்டிருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் எல்லாத்துறையிலும் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள். இதற்கு ஜோதிடமும் விதிவிலக்கல்ல.

**********

Advertisements

32 thoughts on “நம்பலாமா, நாடி ஜோதிடத்தை…? பகுதி – 2

  1. வணக்கம்.

   தங்கள் கருத்திற்கு நன்றி.

   ஐயா, எனக்கென்ன பொறாமை இருக்கப் போகிறது? அனுபவத்தைப் பகிர்கிறேன். அவ்வளவுதான். ஏமாற்றுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதை ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறேன். அதே சமயம் உண்மையான நாடி ஜோதிடர்களும் இருக்கிறார்கள் என்பதையும் மற்ற பதிவுகளில் சுட்டிக் காட்டியிருக்கின்றேனே! நான் பொறாமைப்படுவதெல்லாம் ராமகிருஷ்ண பரமஹம்சரையும், ரமணரையும் பார்த்துத் தான். நீங்கள் என்னடாவென்றால்.. 😦

 1. தொல்காப்பியரின் குரு அகத்தியர் கிடையாது தொல்காப்பியர் அப்படி சொல்லவே இல்ல அகத்தியம் தொல்காப்பியத்துக்கு முன்பு எழுதப்பட்ட நூல் அவ்வளவுதான் வரலாற்று ஆசிரியர்கள் திருவள்ளுவர் காலத்தை தவறாக குறிப்பிட்டுள்ளார்கள் மாமூலனார் திருவள்ளுவர் பற்றி குறிப்பிட்டுள்ளார் மாமூலனார் காலம் கி.மு 355 என்று தக்க சான்றுகள் கிடைத்துள்ளன திருவள்ளுவர் திருக்குறள் மட்டும் எழுதல ஞாணவெட்டியான் என்று மொத்தம் 12 இலக்கியங்கள் அவருடையது வள்ளுவர் ஆசிரியர் அகத்தியர் மாணவர்கள் கொங்கனர் மற்றும் ஏலேலசிங்கன் நிறைய தமிழ் ஓலைச்சவடிகள் படிக்காமல் இருக்கின்றன இலச்சக்கணககில் படித்த பிறகு உறுதியாக சொல்லுங்க

  1. உங்கள் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்.

   தொல்காப்பியரின் குரு அகத்தியர் என்பதாக பேராசிரியர் தனது உரையில் குறித்திருக்கிறார். அதை வைத்தே அவ்வாறு எழுதினேன். தொல்காப்பியரின் முன்னோடி என்று அகத்தியரைச் சொல்லலாம் அல்லவா?

   வள்ளுவர் காலம் பற்றி ஆய்வுகள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. அதில் நிறையவே முரண்களும் உள்ளன. தமிழக அரசே ஒரு குழு அமைத்து வள்ளுவராண்டை பின்பற்றி வருகிறதே! அது அறிஞர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அது சரியா தவறா என்பது பற்றி அடியேன் அறியேன்.

   ”ஞானவெட்டியான்” முதல் பதிப்பு நூலே என்னிடம் இருக்கிறது. 1889ல் அச்சிடப்பட்டது என நினைக்கிறேன். பழைய தமிழ் ஆண்டு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். சரியாக ஞாபகம் இல்லை. அதில் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த “ஞான வெட்டியான்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். குறள் தந்த வள்ளுவர் வேறு என்பதும் ஞானவெட்டியான் எழுதிய வள்ளுவர் வேறு என்பதும் அதைப் படித்து பார்த்தபோது புரிந்தது.

   பிற்காலச் சொற்கள் பல அதில் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆகவே ’ஞான வெட்டியான்’ எழுதியவர் காலத்தால் பிற்பட்டவர். அந்த நூல் காயகல்பம் தயாரித்தல், என்றும் இளமையோடிருத்தல், ரசவாதம் போன்றவற்றைப் பற்றி ஆராய்கிறது. பல வருடங்களுக்கு முன்னால் படித்திருக்கிறேன். குறிப்பாக “முப்பூ” தயாரித்தல் பற்றி மிக விரிவாக அந்த நூல் மூலம் அறிந்து கொண்டேன்.

   //நிறைய தமிழ் ஓலைச்சவடிகள் படிக்காமல் இருக்கின்றன இலச்சக்கணககில்//

   உண்மை. இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் படிக்குமளவிற்கு சுவடிகள் உள்ளன. ஆசிய சுவடியியல் நிறுவனம், ஓரியண்டல் மனுஸ்க்ரிப்ட் நூலகம், மடங்கள், சரஸ்வதி மகால், தனி நபர்கள் என்று பல்லாயிரக்கணக்கான சுவடிகள் மனிதர்கள் படிக்கக் காத்திருக்கின்றன. அதெல்லாம் என்று யாரால் அச்சிடப்படுமோ? இறைவனுக்கே வெளிச்சம்.

   ”சுவடிகள்” நான் தனியாகவே இதே வலைத்தளத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

   நன்றி. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும். வாழ்க.

  1. உண்மைதான். அருணாசல கவி எழுதியதுதான் ராம நாடக கீர்த்தனை. கோபாலகிருஷ்ண பாரதி எழுதியது நந்தனார் சரித்திரக் கீர்த்தனை. முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இதை இட்டு, பெயரைக் குழப்பிக் கொண்டு விட்டேன். தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி!

   சித்தர்கள், முனிவர்கள், மகான்கள், கடவுள் பெயரால் ஏமாற்றுபவர்கள் அதற்குரிய தண்டனையை தானே அனுபவிப்பர்.

   யாரையும் குறைசொல்லு நோக்கத்தில் இந்தக் கட்டுரைகளை எழுதவில்லை. இது மாதிரி ஆட்களை அணுகும் போது சற்று எச்சரிக்கையாக அணுக வேண்டும் என்று குறிக்கவே இத்தகைய விழிப்புணர்ச்சி ஊட்டும் பதிவுகள்.

   வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

 2. It is true that a naadi josier is able to reveal the names of one’s parents, grand parents and a few close relatives. I do not know how, but I can tell you that it is not from the information that I made available. In fact, I had refused to tell the jothidar anything except my name and answered all his questions with yes / no. Once I was surprised that he revealed the nick name of my uncle which was known to only a very few in the family (he is not called by his nick name by anyone since he had become a very rich man). I request that someone does more research on this instead of blindly opposing.

   1. Many people have benifited from Nadi solthidam. It is almost impossible to tell back all the family member name and their details with the meagre details collected from us ( most of the time we need to say only yes , or )

    Nadi Sothidam is the only live proof for the existence of hindu principle KARMA.

    This article was written for creating awareness among the people, but with out analyzing the full facts.

    I has a chance to read nadi sothida olai suvadi when I went with my cousin brother, his full name ( which I didnt aware ) and his full family menbers name were written well on that olai.

    I urge the writer of this article and Dinamai to conduct detailed research on that before publishing any half info article.

   2. They not only reveal the names, they clearly mentioning the accidents, medical emergencies happened in the past. They clearly telling the nature of business our family members are into.

    If u can still argue they can do it, why cant they find out our bank account no and online password.

    1. Dear Sir

     All possible through “YAKSHINI UPASANA” I have the very brief experience in NADI ASTROLOGY from my age of 19. I have many friends in this filed. They accept their “YAKSHINI UPASANAI” Also they have the knowledge of Mind Reading, Psychology and Astrology. So, with the use of all this they can tell the above matters. But their predictions about the future are not perfect. Because That is based on our strong Karma.

     Thanks for the visit and comment.

     1. Sir If they are well versed in mind reading and Yakshini Upasana, They should be the most wealthiest person. Why should they daily work for 200-1000rs per person.

      And also When I visited Nadi Sothidar first time in life alng with my cousin brother, at the end of sothida session, I urged the nadi sothidar to show me the olai suvadi, he has shown it with out hesitation, and he has shown the names of my cousin brothers name and his family members name. How is it possible to write a name during our conversation with ideally no interval.

      1. //They should be the wealthiest person.//

       wrong. All the astrologers are not a wealthy person. Few peoples are only the rich.

       //Why should they daily work for 200-1000rs per person.//

       Because they want to survive in this little world. They chose this as their profession.

       //he has shown the names of my cousin brothers name and his family members name. How is it possible to write a name during our conversation with ideally no interval.//

       It’s a trick. If you are well known in palm script reading and writing you can also do this. I’ll explain in the future posts. Please follow.

       இதில் முக்கியமான விஷயம். நான் நாடி ஜோதிடத்தின் எதிரி அல்ல. அதை முழுமையாக நம்புபவன். ஜோதிடத் திறன், காலக் கணிதம், இறையருள், குரு ஆசி என்று பல காரணிகள் நாடி ஜோதிடத்தில் உள்ளன. ஆனால் இன்றைக்கு இவற்றில் தேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் என்பது கேள்விக்குறியே! முழுக்க முழுக்க பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட பலர் இவற்றில் தற்போது ஈடுபட்டுள்ளனர். அதனால் தொன்மையான இக்கலைக்கு மிகுந்த கெட்ட பெயர். நாடி ஜோதிடம் உண்மைதான் என்றாலும் நாடி ஜோதிடர்களில் எவ்வளவு பேர் உண்மையானவர்கள் என்பது கேள்விக்குறி!

      2. // I urged the nadi sothidar to show me the olai suvadi, he has shown it with out hesitation, and he has shown the names of my cousin brothers name and his family members name. How is it possible to write a name during our conversation with ideally no interval.//

       ஒரு காலத்தில், நான் முதன் முதலில் நாடி ஜோதிடம் பார்க்கப் போனபோது இப்படித்தான் என்னிடமும் ஒரு ஓலைச்சுவடியைக் காட்டினார்கள். அதில் என் பெயர், என் தந்தை, தாய் பெயர், தந்தையின் தொழில் உட்பட எல்லாம் இருக்கிறது என்று கூறிப் படித்துக் காண்பித்தார்கள். என் பெயரையும் காட்டி, ‘இது அந்தக் காலக் கூட்டெழுத்து. அதுவும் ஓலைச் சுவடியில் எழுதியிருப்பதால் இப்படித்தான் இருக்கும்” என்று சொன்னார்கள். நானும் நம்பினேன். அப்புறம் இதில் ஆர்வம் ஏற்பட்டு நான் விரிவாக இதை ஆராயப் புகுந்தபோதுதான் – பல வருடங்கள் இதெற்கென்றே செலவழித்து, சில நாடி ஜோதிடர்களைச் சந்தித்த பிறகு தான், அந்த நண்பர்களின் மூலம் தான் சில பல நுணுக்கமான விஷயங்கள் தெரிய வந்தன. அவற்றை எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை.

       சில பொதுவான உண்மைகளை மட்டும் ஆதாரத்தோடு சொல்ல விரும்புவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். அதையே சொல்ல முயல்கிறேன்.

       இதில் தனிப்பட்ட யார் மீதும் எனக்கு எந்தக் காழ்ப்பும் இல்லை. ஒரு ஆராய்ச்சியாளன் தனது கருத்துக்களை, தனது ஆய்வு அனுபவங்களை எடுத்து வைக்கிறான். மறுப்பவர்கள் அதனை ஆதாரத்தோடு மறுத்தால் நான் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.