வேற்றுக்கிரக மனிதர்கள் – 2

வேற்றுக்கிரக மனிதர்கள் உள்ளார்கள், இல்லை என்ற சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, அம்மனிதர்கள் ஏன் பூமிக்கு வருகிறார்கள், அவர்களது நோக்கம், அவர்கள் மனிதர்களைக் கொண்டு போய் என்ன செய்ய முடியும் என்ற விவாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

பிரிட்டனில் வசித்த ஜீன் ஹிங்க்லே என்ற பெண்ணுக்கு 1979ம் ஆண்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. பறக்கும் தட்டுக்குள் கடத்தப்பட்ட அவரது உடலிலிருந்து ரத்தமும், கரு முட்டையும் எடுக்கப்பட்டது. அதே போல 1975ல், அமெரிக்காவில், டேவிட் ஸ்டீபன்ஸ் என்பவர் பறக்கும் தட்டுக்களில் வந்த வேற்றுக் கிரக மனிதர்களால் கடத்தப்பட்டார். அவர் பறக்கும் தட்டில் அமைந்துள்ள, ஆராய்ச்சிச் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரை பல்வேறு சோதனைகள் செய்த அம்மனிதர்கள் அவருக்கு செயற்கை முறையில் உணர்ச்சிகளைத் தூண்டி உயிரணுவை வெளியேறச் செய்து அதனைச் சேகரித்துக் கொண்டனர்.

 திடீரென காணமால போகும் பலர் இது போன்ற பறக்கும் தட்டு மனிதர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஊகமும் உள்ளது. இது போன்று பல கடத்தல் சம்பவங்கள் உலகெங்கிலும் நிகழ்துள்ளன. அதே சமயம் இவ்வாறு அவர்கள் மனிதர்களைக் கடத்திச் செல்வதாலோ, உயிரணு, கரு முட்டை போன்றவற்றைக் கவர்ந்து செல்வதாலோ எந்தப் பயனும் விளையாது. அவற்றின் இணைப்பினால் ஒருவேளை மனிதர்கள் உருவாக்கப்பட்டாலும், ஆக்சிஜனைச் சுவாசிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கும் அவர்களால் அந்த வேற்றுக் கிரகச் சூழ்நிலையில் உயிர் வாழ முடியாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆனால் சில ஆய்வாளர்கள் இதனை மறுக்கின்றனர். ஒருவேளை அந்த உயிரணுக்கள் வேற்றுக் கிரக பெண் உயிர்களின் உடலில் செலுத்தப்பட்டு புதிய உயிர்கள் உருவாக்கப்படலாம். அது போல அந்தப் பெண்ணின் கருமுட்டையோடு, வேற்றுக் கிரக ஆணின் உயிரணுக்களைக் கலந்தும் புதிய சந்ததிகளை உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. அவர்கள் அங்கே அடிமை இனமாக நடத்தப்படலாம். அல்லது வேறு பல ஆராய்ச்சிகளுக்கு உதவும் பண்டமாக மாறலாம் என்றும் தெரிவிக்கின்றனர். வேற்றுக் கிரக மனிதர்கள், பறக்கும் தட்டுக்கள் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னமும் தீவிரமாகத் தொடர்ந்தபடிதான் உள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ஒரு இடத்தில் வேற்றுக் கிரக மனிதரின் உடல் கிடைத்திருப்பதாக அந்த நாட்டுப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பனி அடர்ந்த அந்த மலைப்பகுதியில் தான் ஓட்டிக் கொண்டு வந்த பறக்கும் தட்டு விண்கலம் விபத்துக்குள்ளாகியோ அல்லது வேறு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டோ அந்த மனிதன் உயிரிழந்திருக்க வேண்டும் என்கின்றர் ஆய்வாளர்கள். அந்தப் படங்கள் கீழே….

சேச்சே … இதெல்லாம் சும்மா செட்டப்… ஏமாற்றுவேலை என்ற கருத்தும் இருக்கிறது. எதற்கும் கீழ்கண்ட வீடியோவைப் பார்த்து நீங்களே ஒரு முடிவிற்கு வாருங்களேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s