பாபாவும் நானும்

பாபா

நான் கல்லூரியில் படிக்கும்போது ஒருமுறை ஸ்ரீ சத்ய சாயி பகவான் சென்னைக்கு வந்திருந்தார். சுசீலாம்மாவும் அஞ்சலி தேவியும் அவரைக் காண எங்களை அழைத்திருந்தனர். நானும் என் தந்தையும் பாபாவைச் சென்று தரிசித்தோம். தந்தை பாட, நான் உடன் பாடினேன். நிகழ்ச்சி முடிந்ததும் எங்களை உள்ளே கூப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார் பாபா. ஒரு நண்பரைப் போல் உரையாடினார். அப்போது எனக்குக் கல்யாணம் ஆகவில்லை. என் தந்தையிடம், “உங்க பிள்ளை நல்ல பிள்ளை. ஊரு நல்ல ஊரு. சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க அவனுக்கு” என்றார். நான் அப்போதுதான் தேர்வு எழுதிவிட்டு வந்திருந்தேன். அது அவருக்குத் தெரியாது. ஆனால் என் தந்தையிடம், ” எக்ஸாம் எழுதிட்டு வந்திருக்கு. ஆனா ஒரு பேப்பர்ல மட்டும் கொஞ்சம் பயப்படும். எல்லாம் பாஸ் ஆய்டும்” என்று சொல்லி ஆசிர்வதித்தார். நானும் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றேன்.

சீர்காழி சிவ சிதம்பரம்

நான் பின்னணிப் பாடகனாக வளர்ந்த பிறகு எனக்கு ஒரு ஆசை இருந்தது, பகவானின் முன்னிலையில் புட்டபர்த்தியில் சென்று பாட வேண்டும் என்று. நிச்சயம் பாபாவே அதற்கு நமக்கு வழி செய்வார் என்று எண்ணிப் பிராத்தனை செய்து வந்தேன். ஒருநாள் அகில இந்தியா சாயி சமிதித் தலைவர் என்னை அழைத்தார். ‘Water For Life’ என்ற பெயரில் தமிழக மக்கள் நன்மை பெறுவதற்காக கிருஷ்ணா நதி நீர் திட்டத்திற்கு பாபா உதவியிருக்கிறார். அதற்கான விழாவுக்காகத் தமிழகம் வர இருக்கிறார். நேரு ஸ்டேடியத்தில் விழா நடக்க இருக்கிறது. நீங்கள் அப்போது சுவாமி பேரில் ஒரு பாடல் பாட வேண்டும். அது நிகழ்ச்சிக்குப் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும்” என்றார். கலைஞர் அப்போது முதல்வராக இருந்தார். நாத்திகர்கள் கலந்து கொள்கிற ஆத்திக விழா அது. எனவே பாடலும், பொருளும் நயம்பட இருக்க வேண்டும் என்று கவனம் எடுத்துக் கொண்டேன். கவிஞர் நெமிலி எழில்மணி ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார். “ஏழையின் சிறப்பில் இறைவனைக் காண்பது எங்கள் சுவாமியின் கருத்தாகும்” என்று தொடங்கிய அந்தப் பாடலைப் பாடினேன்.


பார்வையாளர்கள் கைதட்டி அதை ரசித்து வரவேற்றனர். உடன் சுவாமியும் என்னைப் பார்த்துச் சிரித்தவாறே கையை உயர்த்தி அனுக்ரகம் செய்தார். புட்டபர்த்தியில் சென்று பாடமுடியவில்லையே என்ற குறைப்பட்ட எனக்கு சுவாமியே நேரில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாடியது மிகப் பெரிய பாக்கியம். இன்றும் ஆன்ம ஜோதியாய் உலவிக் கொண்டிருக்கும் பாபாவின் அருளால் விரைவில் புட்டபர்த்தியிலும் பாடுவேன்.

– டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம்

நன்றி : தென்றல்

இன்று பாபாவின் பிறந்த நாள். அவரது நினைவைப் போற்றுவோம்.

சத்ய சாய் பாபா

சத்ய சாயி ஜெயதே!

Advertisements

One thought on “பாபாவும் நானும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.