“அம்மா” செய்த அற்புதம்

என்னுடைய தோழி ஸ்ரீபுரத்துக்குப் பாடச் சென்றாள். நான் துணைக்குச் சென்றிருந்தேன். சக்தி அம்மாவை நான் எனது ஏழாவது வயதிலேயே தரிசனம் செய்திருக்கிறேன். அப்போது நான் பாடிய கேட்சடை அவரிடம் கொடுத்து ஆசி வாங்கினேன். அவர் அதில் குங்குமம் வைத்து, தன்னுடைய ரேகை அதில் படும்படியாக அழுத்தி, “எம்.எஸ். அம்மா மாதிரி பெரிய ஆளாக வருவாய்” என்று சொல்லி ஆசிர்வதித்துக் கொடுத்தார். அதை நான் இப்போது என் தோழியிடமும், அங்குள்ள பக்தர்களிடமும் சொன்னேன். அதைக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்களில் ஒருவர் சக்தி அம்மாவிடம் அதைச் சொன்னார். உடனே சக்தி அம்மா என்னை விசாரித்தார். “நான் கச்சேரிகள் செய்து கொண்டிருக்கிறேன். ஹரிகதையும் செய்வேன்” என்று சொன்னேன். “ஹரிகதையிலிருந்து எனக்கு ஏதாவது சொல்” என்றார். உடனே நான் “செழியர்பிரான் திருமகளாய்க் கலைபயின்று முடிபுனைந்து” என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில் இருந்து பாடிச் சில நிமிஷங்கள் ஹரிகதை சொன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம்.

அம்மா

அன்றைக்கு பிரதோஷம். அடுத்த பிரதோஷம் அவரது ஜயந்தி. அன்று வந்து ஹரிகதை செய்ய வேண்டும் என்று சொன்னார். ஜயந்திக்குச் செல்வதற்குள் எனக்குப் பல நல்ல விஷயங்கள் நடந்தன. விகடன் பிரசுரத்தின் ‘யூத் ஜுகல்பந்தி’ என்ற புத்தகத்தில் என்னைப்பற்றி எழுதினார்கள். அடுத்த நாள் கல்கி அட்டைப்படத்தில் நான்! அந்தப் பூரிப்புடன் சக்தி அம்மாவின் ஜயந்தி விழாவில் ஹரிகதை செய்தேன். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் தங்கியிருந்த ‘ஸ்ரீபவன்’ ஆசிரமத்திற்கு நான், அம்மா, அப்பா எல்லோரும் சென்றோம். சக்தி அம்மா பூஜை செய்து கொண்டிருந்தார். பூஜை முடிந்ததும் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென என்னிடம் “கையை நீட்டு” என்றார். நான் குங்குமம் தரப் போகிறார் என எண்ணி வலக்கையை நீட்டினேன். “இரண்டு கையையும் நீட்டு” என்றார். மெல்ல மெல்ல ஒரு விக்ரகம் அவர் கையிலிருந்து தோன்றி என் கைக்கு வந்தது. அது ஒரு மகாலக்ஷ்மி விக்ரகம். உடனே சக்தி அம்மா, “இதை உனது வீட்டுப் பூஜையறையில் வைத்து மந்த்ராட்சதை போட்டு பூஜை செய்து வா. என்றும் மகாலக்ஷ்மியின் அனுக்ரகம் உனக்கு இருக்கும். எல்லா வளமும் கிடைக்கும். நல்லா எம்.எஸ். சுப்புலட்சுமி மாதிரி பெரிய ஆளா வருவே. ஹரிகதைய மட்டும் என்றைக்கும் விட்டுவிடாதே. அதுதான் அம்மாவுக்கு சந்தோஷம் தரக்கூடியது” என்று சொல்லி ஆசிர்வதித்தார். நாங்கள் அப்படியே பிரமித்துப் போய்விட்டோம். இன்றும் என் வீட்டுப் பூஜை அறையில் அந்த விக்ரகத்தை வைத்து பூஜித்து வருகிறேன்.

 – சுசித்ரா

சுசித்ரா

நன்றி :  தென்றல்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s