குறளும் அறிஞர்களும் – 2

குறள் பற்றி அறிஞர்களின் கருத்துகள்

வள்ளுவர்

அயோத்திதாசப் பண்டிதர் – வள்ளுவர் ஒரு பௌத்தரே!

 திருக்குறள் என்பதன் உண்மையான பெயர் திரிக்குறள் என்பதாகும்.

 இதன் மூல நூல் மூவர் மொழியாக அழைக்கப்படும் திரிபேத வாக்கியமாகும்.

 இதனை திரிபீட வாக்கியம் என்றும் அழைப்பார்கள்.

 இது பாலி  மொழியில் இயற்றப்பட்டதாகும்.

 தன்மபீடக, சூத்ர பீடக, வினய பீடகமாம் மகா பாஷா நூலே இது.

 இதன் வழி நூலே திருக்குறளாகும்.

 திரிவர்க்கம் என்பதன் ஆசிரியர் பிரம தேவர்.

 மகாபாரதத்தில் சாந்தி பர்வதத்தில் 58-ஆம் அத்தியாயத்தில் இது உள்ளது.

 சிவனால் இயற்றப்பெற்றது வைசாலவம்.

 இந்திரனால் இயற்றப்பெற்றது பாகுதந்தகம்

 குருவால் இயற்றப்பெற்றது பார்ஹசுபத்யம்

 சுக்ர நீதி இயற்றப்பெற்றது சுக்ராச்சாரியாரால்.

 பிரமனின் திரிவர்க்கமே முப்பாலாக பரிணமித்தது.

 பின்னரே மற்ற நீதி நூல்கள் தோன்றின.

 பிரமனின் அவதாரமே வள்ளுவர். அதானால் தான் அவருக்கு நான் முகன் என்று பெயர்.

 தமிழில் தோன்றிய முதல் நீதி நூலும் அதுவே.

 வள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி அல்ல. மாதானுபங்கி என்பதாகும்.

 வள்ளுவர் வடநூல் சார்பு மிக்கவர். அவர் வைதீகச் சார்புடையவராதலின் தென்புலத்தார், இல்வாழ்வான் ஆகிய குறட்கள் மூலம் பஞ்சம காயறங்களினை ஈண்டொழுகக் கூறினார்.

 ஆதி பகவன் என்பது புத்தனையே குறிக்கும்.

 மண்டல முனிவரும் தனது நிகண்டுரையில் “பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்” என்று கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.

 “ஆதி பகவன் அருமறை ஓதுமின்” என்று திருமூலரும் கூறியுள்ளார்.

 “ஆதிபகவனையே பசுவே அன்பாய்த் தொழுவாயேல்

சோதி பராசக்தி தான் பசுவே சொந்தமாகாதோ” என்றும் சித்தர் கூறியுள்ளார்.

 ஆக புத்தமதக்கருத்துக்களை அடியொற்றியே குறள் யாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வழிநூலே.

வள்ளுவர் ஒரு பௌத்தரே!

 காஞ்சி மகாப்பெரியவர் ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் – வள்ளுவர் ஒரு வைதீகரே!

 “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு

ஐம்புலத்தார் ஓம்பல் தலை”

 பிதிர்க்கடன், பரமேஸ்வர பூஜை, வேத யக்ஞம், எல்லா ஜீவ ராசிகளுக்கும் உணவு படைப்பது ஆகியவற்றை வைதீக மதம் விதித்திருக்கிறது. வள்ளுவர் இதனையே பின்பற்றுகிறார். அவர் ஒரு வைதீகர்.

 “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

 உயிர் செகுத்து உண்ணாமை நன்று”

 வள்ளுவர் வைதீக அனுஷ்டானங்களில் நம்பிக்கை கொண்டவர். காவிரியின் பெருமையைச் சொல்ல வந்த ஒருவர், ‘ஆயிரம் கங்கையை விடக் காவிரி சிறந்தது’ என்று கூறினால் கங்கையும் உயர்ந்தது என்று தானே பொருள். அவ்வாறே, ‘ஆயிரம் யாகத்தைவிட அஹிம்சை உயர்ந்தது’ என்றால் ‘யாகமும் உயர்ந்தது’ என்றே பொருள். இக்குறள் இல்லறவியலில் சொல்லப்படவில்லை. துறவறவியலில் சொல்லப்பட்டிருக்கின்றது. துறவிக்கு யாகத்தில் அதிகாரம் இல்லை. ஆக, “திருவள்ளுவர் வைதீகத்தை ஆட்சேபிக்கும் நாஸ்திகர் அல்லர்”

நாவலர் சோமசுந்தர பாரதியார்வள்ளுவர் வைதீகரல்லர்!

 வள்ளுவர் ஒரு வைதீகரல்லர். அவர் ஒரு தமிழ்ச் சான்றோர். ஆரியரின் தரும சாத்திரத்தை மறுக்கிறார். அதே சமயம் சான்றோராதலின் நிந்தனை செய்யாமல், ஏசாது வாளா அகல விடும் பெற்றிமை அறிந்து பாராட்டத்தக்கது.

 “சிலர், பாயிரம், கடவுள் வாழ்த்து போன்ற அதிகாரங்கள் இடைச் செருகல் எனக் கருதுகின்றனர். ஆனால் அவை இடைச் செருகல் அல்ல என்பது, குறளை முழுமையாக ஆயும் அனைவருக்கும் புரியும்.”

ரா.பி. சேதுப்பிள்ளை:  திருவள்ளுவர் நூல் நிலையம்.

 “பரிமேலழகர், பல இடங்களில், இலக்கண அமைதிக்காக, இலக்கியத்தை முறித்து, இயற்கைக்கு மாறான பொருள் கண்டுள்ளார்”.

அறிஞர் அண்ணா:  குறள் அமுதம்.

 “உரையாசிரியர்கள் தம் மனம் போன படி, குறளுக்குப் பொருள் உரைத்துள்ளனர். நாவலர் போன்றவர்கள், இக்குறையைக் களைய முன் வர வேண்டும்”

வ.உ.சி:    உரைப் பாயிரம், திருவள்ளுவர் திருக்குறள்

 “பாயிரத்தில் இடம் பெறும், கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை போன்ற அதிகாரங்கள் இடைச் சொருகலே. இவை வேறு யாரோ ஒருவர் இயற்றியதே! ஏனெனில் கடவுள் வாழ்த்து அதிகாரக் கருத்துகளுக்கும், பின்னர் வரும் துறவு, மெய்யுணர்தல் அதிகாரத்திற்கும் இயைந்த பொருத்தம் இல்லை. மேலும் கடவுள் வாழ்த்து, மெய்யுணர்தல் என இரண்டு அதிகாரங்கள் இயற்றத் தேவையும் இல்லை. ஆகவே  கடவுள் வாழ்த்து போன்றவை இடைச்சொருகலே என்பது எனது தாழ்மையான கருத்து.

சி. இலக்குவனார்:  இனிய பொழிப்புரை

  ” ‘ஐந்தவித்தான்’ என்பது இடைச் செருகலே”

பாவாணர்:   பாவாணர் உரை

  “திருவள்ளுவர் ஏதேனும் ஒரு பொருள் கருதியே, இதனை (ஐந்தவித்தான்)ப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அது என்னவென்று இதுகாறும் அறியப்படவில்லை”

புலவர் குழந்தை:  குறள் அமுதம்

  ” ‘தெய்வம்’ என்பது கடவுளைக் குறிக்கவில்லை. அது ‘தேய்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகும். அது போலவே ‘வானவர்’ என்பதும். அது உயர்ந்த இடத்தில் உள்ளோர், அதாவது இமயம் போன்ற பகுதியில் உள்ளோரைக் குறிக்கின்றது. வெளிநாட்டில் உள்ளவரை நாம் மேல் நாட்டினர் என்று குறிப்பது போல்.”

 புத்தேள்-புத்தாள் அதாவது புது ஆள் என விரியும். புதியவர் என்று  பொருள். இது வடவரை குறிப்பதாகும். அவர்கள் வசிக்குமிடமே புத்தேள் உலகம். அதாவது உயர்ந்த இடம் என்பதாகும். ஆக, புத்தேள் உலகம் என்பதற்குப் பொருள் புதிய உலகம் என்பதாகும்.

 தெய்வம் என்பதன் வேர்ச் சொல் ‘தே’ ஆகும்.

 தேவர் என்பது கடவுளரையோ வானவரையோ குறிக்காது. அது சான்றோரைக் குறிப்பதாகும். சான்று: அருண்மொழித்தேவர், மெய்கண்ட தேவர், திருக்கத்தேவர்.

 ஆல்பர்ட் சுவைட்சர்:  இண்டியன் தாட்ஸ் அன்ட் இட்ஸ் டெவலப்மெண்ட்

  “குறளில் காணப்படும் ‘காமத்துப்பால்’ என்னும் பகுதி சாலமோனின் பாட்டுடன் ஒப்பிட்டு மகிழத்தக்கது.”

காமாட்சி சீனிவாசன்:   திருக்குறளும் விவிலியமும்

  “விவிலியம் ‘ஆதி முதல்வனாகிய’ என்று தான் ஆரம்பிக்கின்றது. குறளும் ‘ஆதிபகவனை’ குறளின் முதலாகச் சுட்டுகின்றது. இது ஒப்பு நோக்கத்தக்கது.”

  த்தேயு. மீட்புச் செய்தி”

“காசுக்கு இரண்டு கிடைக்கும் சிட்டுக் குருவியேயாயினும் பரமபிதாவின் சித்தமில்லாமல் யாரும் பிடிக்க முடியாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது.”  

Charles E Gover. The folk songs of southern India.

ஒரு உண்மையான தமிழ்ப் புலவரை கிறித்துவராகக் காட்டுவதை நான் எதிர்க்கிறேன்.

H.Drew

 I am also Agree.

வள்ளுவர் கோட்டம்

 

(ஆதாரம் : வள்ளுவரும் சமயமும், கலை அரசு)


Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.