குறளும் அறிஞர்களும் – 1

இன்று ஆசிரியர் தினம். ஆசான்களுக்கெல்லாம் ஆசானான வள்ளுவரைப் போற்றுவோம். 

வள்ளுவர்

வள்ளுவம் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்

 

“திருவள்ளுவராண்டானது கி.பி. 1945 பொங்கலன்று தொடங்கி, தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது”

– கி. ஆ. பெ. விஸ்வநாதம், திருச்சி பொன்மலையில் நடந்த ஒரு கருத்தரங்கில்.

“குறளைப் பின்பற்றி, பிற்காலத்தே பல நூல்கள் அதே வகை நடையில் தோன்றின. சினேந்திர வெண்பா ஒரு சைனப் பெரியாரால் இயற்றப் பெற்றது. ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு. அது போல சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா எனப் பலவுண்டு.

 – மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாதையர்

”கடவுள் வாழ்த்து என்பது கேலிக்குரியது. மிகவும் தவறான சங்கதி. சர்வ வல்லமை படைத்த, நம்மையெல்லாம் படைத்த கடவுளுக்கு, கடவுள் வாழ்த்து என்று நாம் போய் வாழ்த்துக் கூறுவதா?… வள்ளுவர் மாபெரும் அறிவாளி, ஆராய்ச்சிக்காரர் என்று கூறுகிறோம். அதற்குத் தக்க ஆதாரங்களும் இருக்கின்றன. அவர் போய், இந்தப் படி கடவுள் என்று நாம் கருதுபவருக்கு வாழ்த்துப் பாடல் வாசிப்பாரா?. மனிதன் எப்படி வாழவேண்டும் எனக் காட்டவே கடவுள் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

– பெரியார் ஈ.வே.ராமசாமி

”சாந்தோமில் கிறித்துவப்பணி ஆற்றிவந்த புனித தாமசிடம் நெருங்கிப் பழகியும், ஞான உபதேசம் பெற்றும் இயேசு பெருமானின் கொள்கைகளை நன்கு உணர்ந்திருந்ததாலுமே வள்ளுவர் இத்தகைய சிறப்புமிக்க அற நூலை இயற்ற முடிந்தது.

Edvward jewitt robinson/g.u.pope

THE SECOND KURAL, piii

”திருவள்ளுவர் காலத்திய, வள்ளுவர் வெளியிட்ட, அவர் கருத்துகளைக் காட்டக் கூடிய உரை ஏதும் நமக்குக் கிடைத்திலது. அப்படிப்பட உரைப்பகுதி ஒன்றாவது கிடைத்திருந்தால், இப்போழுது  நினைத்தவர்கள் நினைத்தபடி உரை சொல்லத் துணிய மாட்டார்கள்.

– நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை.

1. திருக்குறள் ஒரு தொகை நூல்.

  2. ஒரே புலவரால் பல்வேறு துறைகளுக்குரிய விழுமிய கருத்தைத் தர முடிந்திருப்பது ஐயமே!

 3. காமத்துப்பால் மற்ற இயல்கள் அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பது ஏன்?

  4. பலமுனிவர்கள் நாலடியார் போல் ஒரு காலத்தில் இயற்றிய பாடலை பிற்காலத்தில் யாரேனும் ஒருவர்    ஏன் தொகுத்திருக்கக் கூடாது.?

– M.Jules Vinsion, me’langes

Orientauxparis, Lerovx, se.1883, p.12

1. தொகை நூல் அல்ல.

  2. ஒரே ஆசிரியரால் இயற்றப்பெற்றதே.

  3. காமத்துப்பால் மாறுபட்டு இருந்தாலும் அவற்றின் வள்ளுவர் முத்திரை தெள்ளத் தெளிவாகத்    தெரிகிறது.

  4. இவை அனைத்தும் ஒரே மூளையில் தோன்றியதே அன்றி வேறில்லை.

G.U. Pope

”திட்டமிட்ட நல்ல அமைப்பும் செறிவும், நல்ல கருத்துக்களும், உணர்ச்சி மிகு திறனும் கொண்டது திருக்குறள். இது போன்ற நூல் இதுகாறும் வந்ததில்லை.

   -Sri Aurobindo. The Foundation of Indian culture. p-358.

********

Advertisements

One thought on “குறளும் அறிஞர்களும் – 1

  1. கடவுள் வாழ்த்து

    கட வுள் உனக்கு வாழ்த்து என பரிபாஷையை புரிந்து கொள்பவர்க்கு திருவள்ளுவர் வாழ்த்துகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s