விஷ்ணு தனுசு – 2

முதல் பகுதி இங்கே…

பரசுராமனைக் கண்ட தசரதர் ”கொடியவனாகிய இவன் இங்கே இப்போது எதிரில் வருவதற்குக் காரணம் என்னவோ?” என்று எண்ணி வருந்துகிறார். பரசுராமனால் தமது அருமை மகனாகிய இராமனுக்குக் கேடு விளையக் கூடுமோ என்ற எண்ணமே தசரதருக்கு அவ்வளவு அளவற்ற வருத்தத்தையும், அச்சத்தையும் கவலையையும் உண்டாக்குகிறது. இச்சமயம் பரசுராமனுடைய புருவங்கள் நுனி நெறிந்து, கண்கள் நெருப்புப் பொறி சிந்துகின்றன. உடனே தசரதருடைய சேனைகள் பயந்து நிலை குலைந்து ஓடுகின்றன. பரசுராமன் பேரிடி போலக் கர்ஜித்துக் கொண்டு, இராமன் எதிரே கம்பீரமாகச் சென்று நிற்கிறான்.

பரசுராமர்

பரசுராமனைப் பார்த்த இராமன் “இவன் யாரோ? இவ்வளவு சினத்துடனும் ஆற்றாமையுடனும் காணப்படுகிறானே, என்ன காரணமாக இருக்கும்?” என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதே, தசரதர் இராமனுக்கும் பரசுராமனுக்கும் இடையே சென்று தனது திரு முடி நிலங்களில் படியப் பரசுராமன் கால்களில் வீழ்ந்து வணங்குகிறார்.

ஆனால் பரசுராமனின் சினம் அதனாலெல்லாம் தணியவில்லை. அவன் மேலும் சீற்றமாக (இங்கே உளவியல் படி பொறாமை என்று வைத்துக் கொள்ளலாம். நான் அப்படித்தான் நினைக்கிறேன். தன்னாலும் முறிக்க முடியாத ஒரு சக்தி வாய்ந்த தனுசை கேவலம் ஒரு க்ஷத்திரிய அரசன் முறித்து விட்டானே என்ற ஆத்திரம், தன்னை விடப் பெரிய ஒருவன் இருக்கக் கூடுமா என்ற ஆற்றாமை, அப்படிப்பட்ட ஒருவன் இருக்கத்தானே செய்கிறான் என்ற பொறாமை என இவ்வளவும் சேர்ந்த பரசுராமன்) கோபம் மாறாமல் இராமனை நோக்கி, “நீ முறித்த சிவ தனுசின் திறமையை நான் அறிவேன். உனக்கு உண்மையிலேயே ஆற்றல் இருக்கிறதா என்பதைச் சோதிக்க விரும்புகிறேன். ஆயிரக்கணக்கான அரசர்களை அழித்த என் தோள்கள் இப்பொழுது போர் ஏதும் இல்லாமல் கொஞ்சம் தினவு கொண்டிருக்கின்றன. அந்தத் தினவை சிறிது தீர்த்துக் கொள்ளவேதான் நான் இங்கு வந்தேன்” என்கிறான்.

அதைக் கேட்டதும் தசரதர் மனம் தளர்கிறார். உடனே பரசுராமனைச் சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். பரசுராமனைப் புகழ்ந்து பேசி, “சிறு மனிதர்களாகிய நாங்கள் எல்லாம் உங்களுக்கு ஒரு பொருளா, ஐயனே! கோபத்தை ஒழிப்பீராக, சாந்தம் கொள்வீராக. என் குலத்தை முடித்து விடாதீர் ஐயா!” என்றெல்லாம் பிரார்த்திக்கிறார். “இவனும் எனதுயிரும் உனதபயம் இனி” என்று பரிதாபமாகச் சொல்லித் தன் கண்மணியாகிய இராமனைக் காப்பாற்ற வேண்டுமென்றும், இராமனும் தம் உயிரும் பரசுராமனது அடைக்கலப் பொருளாகும் என்றும் பேசுகிறார். (தசரதன் மாபெரும் வீரன். பத்து ரதங்கள் வைத்து பகைவர் பலர் அஞ்சும் படி ஆட்சி செய்தவன். அவன் கெஞ்சுகிறான், பரசுராமனிடம் தன்னையும், தன் கண்மணி ராமனையும் அபயமாக விட்டு விடும்படி. ஒருவர் மீது அன்பும் ஆசையும் அதிகமாக ஏற்படும்போது, அவன் எப்படிப்பட்ட வீரனாக இருந்தாலும் கூட அவனுக்குத்தான் எத்தனை கவலைகளும் அச்சமும் குழப்பமும் ஏற்பட்டு விடுகின்றன?!)

பரசுராமன் தசரதனின் வேண்டுகோளை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை. அவனுக்குத் தான் என்ற எண்ணமும் அகந்தையும் அதிகரிக்க, தன் காலில் விழுந்த தசரதரை இகழ்ந்து இராமனை நோக்கி நெருப்பு எழ விழிக்கிறான். தசரதரோ மதி மயங்கி, உயிர் தளர்ந்து, மூர்ச்சை அடைகிறார்.

இராமன்

பரசுராமன் இராமனை நோக்கி, “இராமா, நீ ஒடித்த வில் ஊனமுற்ற வில். அது முன்னமே சிவனுக்கும் விஷ்ணுவுக்கு ஏற்பட்ட போரில் முறிந்து போன ஒன்று. அதை நீ முறித்ததெல்லாம் பெரிய வீரத்தில் சேர்த்தியில்லை. (ஒருவரால் முடியாத ஒரு காரியத்தை வேறொருவர் வெற்றிகரமாக முடித்து விட்டால், அந்த ஒருவரது அந்த வெற்றியையும், வெற்றிச் செயலையும் எப்படி இழித்தும் பழித்தும் அந்தச் சக மனிதர் கூறுவாரோ அப்படியே பேசுகிறான் பரசுராமனும். ஆனறவிந்தும் அவனுக்கு ஆணவம் அழியவில்லையே, அதுதான் காரணம்)  அப்போரில் வெற்றிபெற்ற விஷ்ணுவின் வில் இதோ இருக்கிறது. இதை உன்னால் வளைக்க முடியுமா?” என்று சவால் விடுகிறான். 

(புகைப்படங்கள் – நன்றி – கூகிள் இமேஜஸ்)

(தொடரும்)

Advertisements

4 thoughts on “விஷ்ணு தனுசு – 2

 1. சிவனுக்கும் விஷ்ணுவுக்கு ஏற்பட்ட போரில் முறிந்து போன ஒன்று. அதை நீ முறித்ததெல்லாம் பெரிய வீரத்தில் சேர்த்தியில்லை. அப்போரில் வெற்றிபெற்ற விஷ்ணுவின் வில் இதோ இருக்கிறது. இதை உன்னால் வளைக்க முடியுமா?” என்று சவால் விடுகிறான்.

  yhow enna ?purada uttungira mavane avvalowthaan
  entha kathai alakkira velaiyellaam ethodu niruththikko muthalla un pathivula mele ulla varigalai neekkividu /azhiththu vidu .

  yaarukitta vanthu yaaru sandaporrathu athula yaaru jeyikkirathu . sivanin adiyaalil oruvare vishnu . avvalave ovara ellaam aasaippadathe !

  1. இன்னா நைனா.. சௌக்யமா? யாரு புருடா விட்டுக்கினுகீறாங்க இங்க. அது வால்மீகி ராமாயணத்துலயும் கம்ப ராமாயணத்துலயும் கீது நைனா. ரெண்டு பேருமே ஸொல்கீறாங்க. அப்போ அவனுங்க ரெண்டு பேரும் மடையனுங்களா? நீ இன்னா புத்சா ’சிவப்ரிய பெருமாள்’ ராமாயணம்னு எதுனா எள்தப் போறீயா.. உனக்கு கம்பராமாயணம் சொல்லி ஆதாரம் எதுனா வேணுமா சொல்லு எட்த்துப் போடறேன்.

   சிவனே சதா சொல்லுறது, சிவனுக்கு ரொம்பப் பிடிச்சது ராம நாமம்னு விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லுதே அது இன்னா பொய்யா? இன்னாச்சுபா ஒன்க்கு?

   சிவன், விஷ்ணு, முருகன் எல்லாம் ரூபம் தான். ’பரம்பொருள்’ ஒண்ணுதான் நைனா. அது புர்லையா ஒன்கு?

   உயர்வற உயர்நலம் உடையவன் எவன்? அவன்
   மயர்வற மதிநலம் அருளினன் எவன்? அவன்
   அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
   துயரறு சுடரடி தொழுது என் மனனே

   இது நம்மாழ்வார் சொன்னது நைனா. இது பெருமாளுக்கும் சேரி, சிவனுக்கும் சேரி பொருத்தமாக் கீறதுதான்.

   ”அரியும் சிவனும் ஒண்ணு. அறியாதவர் வாயில மண்ணு” – இது தெர்யலைங்கறதுதான் தாம்பா ரொம்ப வருத்தமாக்கீது.

   1. naan savukkiyam naina neenga savukkiyama ?
    //நீ இன்னா புத்சா ’சிவப்ரிய பெருமாள்’ ராமாயணம்னு எதுனா எள்தப் போறீயா..//
    ean? naan ezhutha koodathaa ? appadiye azhuthinaalum sivaayanam-nuthaan ezhuthuvan .nee solramaathiri ezhuthamaatten.
    //உனக்கு கம்பராமாயணம் சொல்லி ஆதாரம் எதுனா வேணுமா சொல்லு எட்த்துப் போடறேன்//
    aalu-aalukku eppadiye maaththi maaththi (saivam vs vainavam )aathaaram kodukkalaam sir.
    athu ellaam thevaiyatrathu .
    ///சிவனே சதா சொல்லுறது, சிவனுக்கு ரொம்பப் பிடிச்சது ராம நாமம்னு விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லுதே அது இன்னா பொய்யா? இன்னாச்சுபா ஒன்க்கு?///
    hello unakku ennaachipa unga paartinga karpanaikku oru alave elliyaa? ennai sirikka vaippatharkku mikka nandri ungalukku.
    ///சிவன், விஷ்ணு, முருகன் எல்லாம் ரூபம் தான். ’பரம்பொருள்’ ஒண்ணுதான் நைனா. அது புர்லையா ஒன்கு?///
    tho eppa sonniye ethu reesanu /sariyanathu .

    atha vuttuttu evaru jeyiththaaru avaru thoththaaru sonninnaa angathaan edikkuthu .
    evaru thoththaaru avaru jeyiththaarunu naanum niraiya vachingiran .

    “evaru avaru ellaam ore paartithaanu”
    enakku/namakku theriyum athanaala engeyum veena phesarathilla .
    //இது நம்மாழ்வார் சொன்னது நைனா. இது பெருமாளுக்கும் சேரி, சிவனுக்கும் சேரி பொருத்தமாக் கீறதுதான்.//
    “sivane anaiththum arivaan hariyum” ariyumo un ullaam
    khelu nee unnavanidame avan unarththuvaan unakkum .avanuyirum avanendru avane sivanenru !!!

    tamizh-la type panna en computter la kastamaa erukku enakku athanaalthaan aangila ezhuththil ezhuthuran
    khovichukaatha nanbare !!!

    yesterday only i saw your blog .it is nice
    ok friend after reading your blog completly i will comment with you .

    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே! அந்தக் கட்டுரையில் நான் எடுத்தாண்ட வரிகள் எனது கருத்து அல்ல. பரசுராமன், ராமனைப் பார்த்து அவ்வாறு கூறுகிறான். பாடல் வடிவில் உள்ள அதையே நான் கருத்தாகத் தந்திருக்கிறேன் அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரை எனக்கு சிவ, விஷ்ணு பேதம் எல்லாம் எதுவும் இல்லை. நம்ம வழி ரமணர் வழி. ப்ரம்மம் ஒன்றே நித்யமானது. அதுவே நான். அதுவே நீ. அதுவே எதுவும். அகம் ப்ரம்மாஸ்மி. நன்றி. மற்ற கட்டுரைகளுக்கு உங்கள் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன். நன்றி, நண்பா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.