வேற்காட்டு மாரி

நாமெல்லாரும் இப்பிறவியில் நம்மை ஈன்றெடுத்த தாயாரை அம்மா என்கிறோம். நூறு வயது வரை வாழ்ந்தாலும் இப்பிறவிக்கு ஒரு தாயார்தான். அடுத்த பிறவியில் யாருடைய வயிறோ? யாரை நாம் அம்மா என அழைத்தபடி எவள் பின்னால் ஓடுவோமோ? அதை யாராலும் அறிய முடியாது.  ஆனால் எத்தனையெத்தனை பிறவி எடுத்தாலும் நமக்கென ஒரு தாய் நிரந்தரமாய் இருக்கிறாள். கண்ணையும், கருத்தையும் நம் மீதே பதித்தபடி. அவளை நாம் அழைக்கக் கூடத் தேவையில்லை. தானே வந்து உதவுவாள்.  அவள் யார்?

அவள் தான் வேற்காட்டு மாரி.  ஆம் திருவேற்காடு கருமாரியம்மன் தான் அந்த அகில உலக அன்னை.

வேற்காட்டு மாரி

துன்பங்கள் மிகுந்த தற்கால உலகில் உலகத்தவரின் நம்பிக்கைக்கு கலங்கரை விளக்காக ஆங்காங்கு உள்ள சக்தி பீடங்கள் விளங்கி வருகின்றன. அவ்வாறு உலக மக்களால் போற்றப்படும் தலங்களில் குறிப்பிடும்படியான ஒன்றாக விளங்கி வருகிறது அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருத்தலம் .

சென்னையில் புகழ்பெற்று விளங்கும் சக்தித் திருத்தலங்களில் மகிமை மிக்கது இத்திருத்தலம். அகத்தியருக்கு சிவபெருமான் தம் திருமணக் கோலம் காட்டியருளிய தலம் இத்தலம். அப்பர், சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப் பெற்ற தலம்.

நுழைவாயில்

அன்னை கருமாரியம்மன் அருள் வரலாறு

தாய்! ஒரு குழந்தை காணும் முதல் முகம்! அந்தத் தாய் தன் குழந்தையிடம் அளப்பரிய அன்பு கொண்டவள். எனவே குழந்தைகள் அன்னையைத்தான் முதலில் நாடும். தனக்குத் தேவையானவற்றை அன்னையிடம் கூறி அவள் மூலம் தந்தையிடமிருந்து பெறுவதே குழந்தையின் இயல்பு. அதே போல ஆண்டவனின் அருளை நாடுவோர் முதலில் அன்னையை நாடுவர். அம்மை மனம் கனிந்தால் அப்பனின் அருள் எளிதில் கிடைக்கும். அந்த அன்னை எண்ணிலா வடிவங்களில், எண்ணிலாப் பெயர்களில் எண்ணிலாத் திருக்கோவில்களில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறாள்.

ஏழை, பணக்காரன் முதல் படித்தவன், பாமரன் ஈறாக அவள் பாதம் காண ஓடி வருவர். அனைவருக்கும் அருளும் அன்பு தெய்வம் அவள்! குறை தீர்க்கும் கற்பகவல்லி! நிறை வாழ்வு நல்கும் நித்தில நாயகி!

கருமாரி அம்மன்

கருமாரி பெயர்க் காரணம்

மாரி என்றால் மழை. கருமாரி என்றால் கருமையான மேகம் எனப் பொருள் கொள்ளலாம். ”கருமாரி” என்பதில் நான்கு அட்சரங்கள்.

 க – கலைமகள்

ரு – ருத்ரி

மா – திருமகள்

ரீ- ரீங்காரி – ரீங்கார பீடத்தில் உறையும் சக்தி.

கலைமகளும், மலைமகளும், திருமகளும் ஒரு சக்தியாய் உள்வயப்பட்டு ரீங்காரமாகிய ஓங்காரத்திலே உறையும் ஆதிபராசக்தியே அன்னை கருமாரி. அது மட்டுமன்று! க-கஞ்சன் (பிரம்ம தேவன்); ரு – ருத்திரன்; மா – திருமால்; ரீ – ரீங்கார பீடம். ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்தொழில்களை நடத்தும் அன்னையின் பெயர், வேற்காட்டின் மூலை முடுக்கெல்லாம் ரீங்காரமாய் அல்லும் பகலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அகில உலகமும் காக்கும் அந்த அன்பு அன்னையைத் தொழுவோம்! அனைத்து அருளும் பெறுவோம்.

ஓம் சக்தி

Advertisements

2 thoughts on “வேற்காட்டு மாரி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s