ஈ.எஸ்.பி. உண்மையா? – 2

முதன் முதலில் ஈ.எஸ்.பி. பற்றிய ஆய்வுகள் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தொடங்கின. 1923ல் சிகாகோவில் டெலிபதி சோதனைகள் Zenith Broad Casting Company உதவியுடன் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வியப்பைத் தந்தன. 20 பேர்களில் குறைந்த பட்சம் ஒருவருக்காவது ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் இருப்பது தெரிய வந்தது.

 

1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் இது போன்ற ஆற்றல்கள் இருப்பதாகக் கூறப்படும் சிலரை ஆய்வு செய்த போது அவர்கள் அனைவரும் ஆல்ஃபா என்னும் அலைவரிசையில் இருப்பதைக் கண்டறிந்தார்.  அதன் பின்னர் மூளையின் ஒருவிதமான திறன் மிக்க அந்தச் செயல்பாடு நிலைக்கு ‘ஆல்பா’ நிலை என்று பெயரிட்டனர். இத்தகைய ஆழ்மன ஆற்றல்களை வளர்ப்பதற்கு பிற்காலத்தில் ஆல்பா தியானமுறை புழக்கத்திற்கு வந்தது. இதை மேலும் ஆராய்ச்சி செய்த வில்லியம் க்ரூக்ஸ் என்பவர், மூளையில் ஏற்படும் ஒருவித ரசாயன மாற்றமே இவ்வகை ஈ.எஸ்.பி. ஆற்றல்களுக்குக் காரணமாகிறது என்பதைக் கண்டறிந்தார். டாக்டர் சேரெய்ல்ன் என்பவர் இது குறித்து விரிவாக ஆராய்ந்தார். அவர் தனது ஆய்வு முடிவில், ”மூளையில் பீனியல் சுரப்பி, பிட்யுடரி சுரப்பி என்று இரண்டு சுரப்பிகள் உள்ளன. இவற்றில் ஏற்படும் மாற்றங்களால், அதிர்வுகளால் பல்வேறு மாற்றங்கள் மனித உடலிலும் எண்ணங்களிலும் எழுகின்றன. குறிப்பாக பீனியல் சுரப்பி அதிகமாகச் சுரப்பின் ஈ.எஸ்.பி., டெலிபதி, வருங்காலம் உரைத்த போன்ற ஆற்றல்கள் பெருகக் காரணமாகின்றன” என்று கூறினார்.

இந்த பீனியல் சுரப்பியின் உற்பத்தி நமது நெற்றியின் புருவ மையத்தைத் தூண்டினால் அதிகமாகிறது என்பதும், அதனாலேயே நமது இந்திய யோகிகள் அந்தப் புருவ மத்தியாகிய ஆக்ஞா சக்கரத்தை மையமாக வைத்து தியானம், யோகம் போன்றவற்றைச் செய்து வந்தார்கள் என்பதும் மிக முக்கியமான விஷயமாகும். நாம் நமது மூளையில் சுமார் 8% பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறோம். மீதிப் பகுதிகளையும் தூண்டி, நாம் பயன்படுத்த ஆரம்பித்தோமானால் ஈ.எஸ்.பி மட்டுமில்லாமல், பல்வேறு ஆற்றல்களும் கைவரப் பெற்றவர்களாவோம் என்பது உண்மை.

 

இனி ஒரு ஈ. எஸ். பி. சம்பவத்தைப் பார்ப்போம்.

 

இங்கிலாந்து நகரத்தில் உள்ளது லங்காஷயர் விகான் என்ற பகுதி. இங்குள்ள சிறப்பு பொருந்திய நகரம் ஆதர்டன். இங்கு ஜெம்மா லியேனே ஹூட்டன் என்ற இரட்டைச் சகோதரிகள் வசித்து வந்தனர். இருவரும் ஒருவர் மீது மிகுந்த அன்பு உடையவர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்வார்கள், வருவார்கள்.

 

இரட்டைச் சகோதரிகள்

அது மார்ச் மாதம், 2009ம் ஆண்டின் ஒருநாள்… மாடியறையில் குளித்துக் கொண்டிருந்தாள் லியானே. வீட்டின் கீழ்ப்பகுதியில் ஏதோ வேலையாக இருந்தாள் ஜெம்மா. அப்போது ஜெம்மாவுக்கு திடீரென ஒரு உள்ளுணர்வு ஏற்பட்டது ”லியானே ஏதோ பெரிய ஆபத்தில் இருக்கிறாள். உடனடியாகச் சென்று அவளைக் காப்பாற்ற வேண்டும்“ என்ற குரல் தன் மனதுக்குள் ஒலிப்பதாகத் தோன்றியது.

 

பதட்டத்துடன் மாடியை நோக்கி ஓடினாள் ஜெம்மா. உள்ளே லியானே நீர்த் தொட்டிக்குள் விழுந்து, தன்ணீரில் மூழ்கியபடி மயக்கமாகக் கிடந்தாள். அவள் உடல் நீல நிறத்திற்கு மாறிக் கொண்டிருந்தது.

 

 லியானேவுக்கு வலிப்பு நோய் உண்டு. அது அவ்வப்போது தலை காட்டும். அதனால்தான் இப்போதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்த ஜெம்மா, உடனடியாக அவளை நீரிலிருந்து எடுத்து, தனக்குத் தெரிந்த ஆரம்ப கட்ட முதலுதவிகளைச் செய்து பின் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றாள். டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின் கண் விழித்தாள் லியானே.

 

ஜெம்மா மட்டும் சரியான சமயத்திற்கு அவளுக்கு முதலுதவி அளித்து இங்கே அழைத்து வராவிட்டால் லியானேவைக் காப்பாற்றியிருக்கஏ முடியாது என்கிறார் சிகிச்சை அளித்த டாக்டர் ஸ்டீவ் பியர்சன்.

 

”ஆம். எனக்குள் ஏதோ ஓர் குரல் ஒலித்தது. ’லியானேவுக்கு ஆபத்து. அவள் உன் உதவியை எதிர்பார்க்கிறாள்’ என்று. சந்தேகப்பட்டு நான் சென்று பார்த்தபோது தொட்டியில் தண்ணீருக்குள் மூழ்கியபடி அவள் இருந்தாள். முதலில் அவள் தலையை அலசிக் கொண்டிருக்கிறாள் அல்லது ஏதேனும் விளையாட்டு செய்து கொண்டிருக்கிறாள் என்று தான் நான் நினைத்தேன். ஆனால் உடலில் எந்த அசைவுமில்லை. மெல்ல மெல்ல உடலும் நீல நிறத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. மிக மிக  ஆபத்தான நிலையில் அவள் இருந்தாள் என்பது அப்போதுதான் தெரிய வந்தது. எப்படியோ விரைந்து செயல்பட்டு இறைவன் அருளால் அவளைக் காப்பாற்ற முடிந்தது” என்கிறாள் ஜெம்மா.

 

இது போன்ற சம்பவங்களை ஆராய்ந்து வரும் டாக்டர் லின்னே செர்காஸ் கூறுகிறார்.  “டெலிபதி எனப்படும் இவ்வித உள்ளுணர்வு இரட்டைப் பிறவிகளிடம் மிக மிக அதிகமாக இருக்கிறது. இவர்களில் பல பேருக்கு உள்ளுணர்வுகள் ஒத்துப் போகின்றன. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்க்க முடியாமல் எங்கோ வெகு தொலைவில் இருந்தாலும் இந்த டெலிபதி உள்ளுணர்வு மிக தீவிரமாகச் செயல்படுகிறது. அதில் எந்தத் தடையும் இருப்பதில்லை” என்கிறார்.

 

இரட்டைப் பிறவிகளில் ஒருவர் நோயுற்றால் மற்றவருக்கும் நோய் வருவதும், ஒருவர் உள்ளம் சோர்ந்தால் மற்றவரும் அது போன்று சோர்வடைவதும் இது போன்ற காரணங்களினால் தான் இருக்கும் என்கின்றனர், சில ஆராய்ச்சியாளர்கள்.

 

Lyon Playfair என்ற ஆராய்ச்சியாளர் இது பற்றி ஆய்வு செய்து, Twin Telepathy: The Psychic Connection என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் இது பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார்.

அதுசரி, உங்களுக்கு ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் இருக்கிறதா? 

Advertisements

9 thoughts on “ஈ.எஸ்.பி. உண்மையா? – 2

 1. இந்த பதிவின் மூலமும் இந்த பதிவிற்கு வந்துள்ள கருத்துக்களின் மூலம் நிறைய தெரிந்துகொண்டேன் நண்பர்களே..!

  மிக்க நன்றி….! 🙂

 2. மூலையில் ஏற்படும் மாற்றங்கள் எதிர்காலத்தை அறிய மற்றும் எண்ணங்களை கடத்த எப்படி உதவும் என்பது புரியவில்லை. எண்ணங்கள் அலை வடிவில் பிரபஞ்சமெங்கும் பரவியிருக்கும் என்று சுவாமி சிவானந்தர் நூலில் படித்திருக்கிறேன். ஆரோ(Auro) பற்றி ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன். தெளிவான விளக்கம் இல்லை. இது பற்றி எழுதுவீர்களா? ஏற்கனவே எழுதியிருந்தால் இணைப்பு தாருங்கள். உங்கள் நற்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள். நன்றி.

  1. நன்றி இசைப்ரியன்.

   நாம் அனைவரும் ’காலம்’ என்ற ஒன்றுக்குள் சிறைப்பட்டிருக்கிறோம். அதனால் எதிர்காலம் என்ற ஒன்றைப் பற்றி நாம் அறிய முடிவதில்லை. ஆனால் சில வகை தியான, யோகப் பயிற்சிகள் மூலம் மூளையின் சில திறன்கள் விழிப்புறும் போது கடந்த காலம், எதிர்காலம் மட்டுமல்ல; கடந்த பிறவிகள், வரப்போகும் பிறவிகள் பற்றி அறியும் ஆற்றல் உண்டாகின்றது. ஆனால் இது எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. எல்லோராலும் அறிய முடிவதுமில்லை. இது பற்றி விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். நீங்கள் பதஞ்சலி யோக சூத்திரத்தைப் படித்துள்ளீர்களா? அதில் இவ்வகை ஆற்றல்கள் குறித்த விளக்கங்கள் கிடைக்கும்.

 3. Hi Ramanan,

  I have a thought of an incident that happened recently. My grandpa died recently at the age of 96. Two weeks before his death, he called me and spoke to me about his brother who died 40 years ago. In fact, my grandpa was speaking to me about his brother as if he was alive though, he died 40 years back. My grandpa cried saying many incidents with his brother. He was crying like a child indeed. I could not believe my eyes and I also started crying.

  My first question is, why do people get the thought of childhood and the events of childhood at the time of nearing death?

  When he was admitted to the hospital, 2 days before his death, he asked me the question at the hospital room, “Who is sitting on the top?” I looked up and said no one is sitting there. He again told me that I am lying and someone is sitting there.I looked again and I could see no one on the wall on the top but, to convince my grandpa, I said, yes my friend is sitting and he has come to see you. Then, he said ok with a smiling face.

  My second question is, why do death nearing people tend to feel that someone is there watching them when no one really is watching them?

  I really felt confused whether to take it as a mental disorder due to old age or any spiritual meaning lies behind.

  Please explain these.It has been haunting me like anything and I am not able to come out of these thoughts. I do not know who to ask these questions to. Please reply in tamil. Thanks in advance.

  1. நண்பரே..

   இதற்கு மிக விரிவாகப் பதிலளிக்க வேண்டும். விஞ்ஞானிகள் இந்த மாதிரி இறக்கும் நிலையில் உள்ளவர்கள் கூறுவதை ’பிதற்றல்’ என்றும் ‘மூளையின் செயலிழந்த நிலை’ என்றும் ‘கற்பனை’, ’உளறல்’ என்றும் கூறி ஒதுக்கி விடுகின்றனர். முழுக்க முழுக்கக் கற்பனை என்றால் இறக்கும் நிலையில் இருக்கும், முழு நினைவோடு மூளையின் செயல்பாட்டோடு இருக்கும் பலரும் இவ்வாறு உளறுவது புலம்புவது ஏன்?

   இதற்கு நமது இந்துமத புராணங்கள் அழகாக விளக்கம் கொடுத்துள்ளன.

   குறிப்பாக ’கருட புராண வசனம்’ இதனைக் குறிப்பிடுகிறது. கடோபநிஷத்தும் சிலவற்றைக் கூறுகிறது. ஆகவே இதனை கொதிப்படைந்த மூளையின் கற்பனை என்றோ, மரணிப்பவரின் பயத்தினால் எழும் உளறல் என்றோ கருத வேண்டியதில்லை.

   இறப்பவருக்கு முன் அவருக்கு முன்னால் இறந்த நண்பர்களோ, உறவினர்களோ, மனதுக்கு நெருக்கமான பிறரோ (இவர்கள் அதுகாறும் மறுபிறவி எடுக்காதவர்கள்; ப்த்ரு லோகம், மத்திய, புண்ணிய லோகங்களில் வசிப்பவர்கள்) தோன்றி ஆறுதல் படுத்துகின்றனர். மரணத்துக்குத் தயார் செய்கின்றனர். சில செய்திகளைக் கூறுகின்றனர். உணர்த்துகின்றனர். இவற்றை நம்மால் உணர முடிவதில்லை. பார்க்கவும் முடிவதில்லை என்பதால் நாம் அதை ’உளறல்’ எனக் கருதுகிறோம்.

   சரி, இறக்கும் நிலையில் மட்டும் இது போன்றவர்களைப் பார்க்கு ஆற்றல் ஒருவனுக்கு எப்படி உண்டாகிறது? சில வகைப் புலன்கள் ஒடுங்கும்போது சிலவகை வாயுக்கள் விழிப்பு நிலைக்குச் செல்கின்றன. மிகவும் தீவிரமாகச் செயல்படுகின்றன. இந்த தச வாயுக்களில் “தனஞ்சயன்” போன்ற வாயுக்களின் ஆற்றல் சுழற்சியினால் அதுவரை கண்களுக்குப் புலனாகாத காட்சிகள் தெரிகின்றன. செய்திகள் கேட்கின்றன. இவற்றை நம்மால் அவ்வளவு எளிதில் உணர முடியாது.

   இன்னும் நிறைய இருக்கிறது. நீங்கள் சொல்லும் சம்பவங்கள் பலரது வாழ்வில் நடந்திருக்கும். சமயங்களில் சிலரது மரணத்தை கனவுகளில் வந்து கூட முன்னோர்கள் தெரிவிப்பதுண்டு. என் பாட்டி மரணிப்பதற்கு முன் அது பற்றியும், தன்னை தன் கணவர், மாமியார் அழைத்துச் செல்லப் போவதாகக் தன் கனவில் கூறியதையும் என் தங்கையிடம் தெரிவித்திருக்கிறார். என் தங்கை கிழம் உளறுகிறது என்று யாரிடமும் சொல்லவில்லை. அதே கனவு என் தந்தைக்கும் வந்திருக்கிறது. ’உன் அம்மாவை நாங்கள் கூட்டிச் செல்லப் போகிறோம்’ என. அவரும் யாரிடமும் சொல்லவில்லை. பாட்டியின் இறப்பிற்குப் பின் தான் இந்த விஷயங்கள் தெரிய வந்தன.

   இதுபோன்ற விஷயங்களை அவ்வளவு எளிதில் நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. இவை மிக சூட்சுமமானவை. அதோ ந்க்கிறான். இதோ நிக்கிறான். எருமை நிற்கிறது. என்னை யாரோ ஒருவன் கறுப்பாய் குண்டாய் இருந்து கொண்டு கூப்பிடுகிறான் என்றெல்லாம் புலம்புவதை நாம் உளறல் என்றே எடுத்துக் கொள்கிறோம். இவற்றில் சில உளறல்களாக இருக்கலாம். ஆனால் எல்லாமே உளறல் கிடையாது. வெளிநாட்டில் இதைப் பற்றி மிக விரிவாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். “நியர் டெத் எக்ஸ்பீரியன்ஸ்” என்ற தலைப்பில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் கிடைக்கின்றன. இதிலும் இறக்கும் நிலையில் உள்ளவர்கள் தங்களுக்கு முன்னால் இறந்த நண்பர்களை, உறவினர்களைக் காண்பதாகவும், அவர்கள் தங்களைஅழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

   உலகெங்கிலும் ஒரு விஷயம் ஒரே மாதிரியாகக் குறிப்பிடப்படுகிறது என்றால் அதில் உண்மை இருக்கிறது என்பதுதான் பொருள். ஆனால், இதில் உள்ள பிரச்னை என்னவென்றால், இவற்றை அறிவியல் பூர்வமாக நாம் மெய்பிப்பது மிக மிகக் கடினம். ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நீங்கள் இது சம்ந்தப்பட்ட புத்தகங்களை (சென்னை லேண்ட் மார்க்கில் கிடைக்கும்) வாங்கிப் படியுங்கள். இன்னும் நிறைய, சுவாரஸ்யமான, புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

   கருட புராண வசனத்தையும் வாங்கிப் படியுங்கள். (கூடுமானவரை பாரம்பரியமான, பழைய பதிப்பகங்கள் வெளியிட்ட நூலை வாங்குங்கள். அதில்தான் எல்லாம் தெளிவாக விரிவாக இருக்கும்)

   நன்றி.

 4. Dear sir,
  In the previous article of ESP part 1, I request articles regarding Yoga and values of it and the significance of it. I wrote it with utmost faith that you would reply but I could not see any response for that. Please respond whether you have any plans to include articles on yoga and meditations in this site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s