ஏவல், பில்லி, சூனியம் உண்மையா, பொய்யா? – 2

முதல் பகுதி இங்கே….

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பத்தைப் பார்ப்போம்.  சுவாமிகள் சிதம்பரத்தில் தங்கி இருந்த காலம். சைவத்தை சிலர் தூற்றியதால், சுவாமிகளுக்கும் அவர்களுக்கும் பகை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கின் முடிவில் சுவாமிகளே வென்றார். அதனால் வன்மம் கொண்ட பகைவர்கள், சுவாமிகளின் மீது தீவினையை ஏவி விட்டனர். முருகன் அருளால், அந்தத் தீவினை, ஏவி விட்டவனையே சென்று தாக்குமாறுச் செய்தார் சுவாமிகள்.

இதனை,

“……………. தில்லை பின்னை வாழ்
குடில நாமர்கள் கொடிய சூனியம்
ஊட்டி னார் கொலற் கேயஃதுங் கெடுத்
துவகை செற்றுலா மவர்வ ழக்கெலாம்
ஒட்டி யேயெனக் கீந்த வென்றியிவ்
வுலகு கூறுமே யலகில் வேன்முதால்.”

-என்ற அவருடைய ’குமாரசுவாமியம்’ பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கந்தர் சஷ்டிக் கவசத்தில் வரும், “பில்லி சூனியம் பெரும்பகை அகல…” என்று வரும் வரிகளும் இது போன்ற தீச்செயல்கள் மனிதரைப் பாதிக்கும் என்பதை உறுதி செய்கிறது. ஸ்ரீ பாம்பன் சுவாமிகளும் தனது சண்முக கவசத்தில் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ சங்கரர்

சங்கரர், ராமானுஜர் இருவருமே இந்தத் தீய அபிசார மந்திரங்களால் தங்கள் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டனர் என்பதை அவர்களது வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீ சங்கரரிடம் வாதில் தோற்ற அபிநவ குப்தன், அவர் மீது தீவினையை ஏவி விட்டான். அதனால் பலத்த பாதிப்புக்குள்ளானார் ஸ்ரீ சங்கரர். பின்னர் திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானை வணங்கி,  ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் பாடி தன் நோய் நீங்கப் பெற்றார். அது போல சமணர்கள் செய்த துன் மந்திரவாதத்தால் பல சைவர்கள் பாதிக்கப்பட்டதையும் நாம் பெரிய புராணம் வழியாக அறியலாம். அவர்களை தனது இறையாற்றல் மூலம் வென்றார் ஞான சம்பந்தர் என்பதையும் நாம் அறிய முடிகிறது.

ஆக, ஏவல், பில்லி, சூனியம் என்பதெல்லாம் உண்மைதான் என்பதை இவற்றின் மூலம் உணர முடிகிறது. அதே சமயம் ஏவல் வைக்கிறேன், எடுக்கிறேன் என்றெல்லாம் கூறி ஆன்மீகத்தின் பேரில் மக்களை ஏமாற்றும் சாமியார்களிடமிருந்தும் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

காசு ஒன்றையே குறியாகக் கொண்ட இந்தச் சாமியார்கள், போலி ஆன்மீகவாதிகள், மாந்த்ரீகர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள், அதிலிருந்து எப்படித் தப்பிப்பது, ஒருவேளை தனக்கு ஏவல், பில்லி, சூனியம் யாராவது வைத்து விட்டதாகக் கருதினால் அல்லது அப்படி நம்பினால் அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதையெல்லாம் பின்னால் வேறொரு பதிவில் மிக விரிவாகக் கூறுகிறேன்.

எதுவாக இருந்தாலும் உள்ள உறுதியுடன், தன்னம்பிக்கையுடனும், இறை நம்பிக்கையுடனும், உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்தால் எப்பகையையும் வெல்ல முடியும் என்பது உண்மை.

வள்ளுவர்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி

தாழாது உஞற்றுபவர்

என்று குறிப்பிட்டிருப்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

மன உறுதி கொள்வோம்; மன்பதை வெல்வோம்.

**************

Advertisements

61 thoughts on “ஏவல், பில்லி, சூனியம் உண்மையா, பொய்யா? – 2

 1. engal kudupathirku yaro seivinai vaithirukkirarkal endru oru kududupukaran solidu ponaga…ennum 2 mathathil oru periya problem unka vittuku vara pothunu solidu poidaga…enna roma payama iruku…please ennaku help pannuga…nan enna pananum

   1. 105 Days poraditu irukan en manaviya kappatha en kuda avanga illa nanum enathu manaviyum kadhal kalyanam pannom but engala en manavi kudumbam vala vidala problem kuduthutay irunthanga en kuda en manavi stornga ha irukura nala ella problems enaku easy than irunthathu en manaivya college padika vachiirunthan evvlo problem nanga 2 perum face pannitu irunthom july 19 en manivyedam ammaku udambu serillanu kuttitu ponanga en manivya collegela irunthau 5 days avangala thedatha place illa police case kuduthan avanga station vanthanga en face pathathum kovapaduranga appavay en maniviya etho pannirunga nu think pannan kuttitu pona 10days la divorce apply pannirukanga ippa case nadanthu itu iruku ana en manivya pathi enaku theriyum neraya samiyar poi pathan en manivku sappatu la maranthu vachi en mela verupu vara mari pannirukanga nu solluranga jathi veri ullavanga en manavi parents avanga jathi veriku nanga 2perum paliava poram en manavi ya pakkavidama panranga vetta mathitay irukanga varathuku our nal ennudan valntha natkal suthama avangalu niyabagam illa enna panrathu en manaviya nan kappathanum en manavi enaku venum help pannunga pls

 2. thank you so much sir
  silar enakku seivinai vaithirupathagavum athai eduka sila parigarangalai seiyavendum endrum solgirargal
  seivinai patria mulumaiyana thagalvagal ingu kidaithana
  enaku kadavul nambikai undu
  maatram ondrey maarathathu—-enavey nambikaiyodu nalvinaigalaye seivom
  thank you very much for your support sir
  na 10th la 493 mark vaangnen
  but ennal 12th continue panamudila
  na 3 schools la join paniyum engayumay ennala padikamudila
  kalvi arivu thadaipadama iruka enna panalam?
  specific god name ethavathu mention pannunga please

 3. me and my husband led our life happily 1time we got fight among with us my husband is malayalee hindu their parents use this fight and they gave some seeds with his food now we are in speartion how could i get back my husband and divcorce is going in court please help me i am suffering lot with my 2month baby i am prayig god daily lord shiva and every sunday i am making arachane to sarbeiswarer and kali at raghu kalam time

  1. தினந்தோறும் அருகில் உள்ள காளி/பிரத்யங்கிரா தேவி/ சரபேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். அங்குள்ள குருக்களிடம் கேளுங்கள். வழி சொல்வார்.

 4. எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள்.

  இவரைக் “கலியுக வரதன்” என்றும் குறிப்பிடுகிறார்கள். “நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. சிதம்பரம் கோவிலில் தனிச் சன்னதி உள்ளது.

  ஞாயிற்றுக் கிழமை , தின பிரதோஷ நேரம் வரும் ராகு கால வேளையில் – சரபேசர் வழிபாட்டில் , கலந்து கொள்ளுங்கள்…

  ஞாயிற்று கிழமை – பிரதோஷம் வந்தால் , தவறாமல் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.. அபரிமிதமான பலன்கள் ஏற்படும்..

  திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் , நவக்கிரக சந்நிதி அருகில் – சரபேசர் சிலை , தூணில் உள்ளது… மஞ்சள் அல்லது சந்தன காப்பு அணிந்து நீங்கள் வேண்டினால், கேட்டது கிடைக்கும்..

  சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும்.

  கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும்.குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும்.

  சுவாமி கம்பகேசுவரரை வணங்குவோர்க்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி,தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

  அம்பாள் தருமத்தை வளர்த்து காப்பவள் என்பதால் அவளை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்கப் பெறும்.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறுவார்கள்.

  Read more: http://www.livingextra.com/2011/02/blog-post_7490.html#ixzz1rBHiChwH

 5. எனக்கு செய்வினை வைக்கபட்டுள்ளது. சிலர் செய்வினை எடுக்கிறோம் என்று சொல்லி எதோ செய்கிறார்கள் .. ஆனால் போன்னதாக தெரியவில்லை . இது நிரந்தரமாக எங்களைவிட்டு நீங்குவதற்கு யாராவது வழி காட்டினால் நன்றாக இருக்கும். yaravathu therintha sariyaga therintha mugavari koduthal mekavum uthaviyaka irukum

  1. சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் “பட்சிகளின் அரசன்” என்றும் “சாலுவேஸ்வரன்” என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.
   இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள்.
   சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் “பட்சிகளின் அரசன்” என்றும் “சாலுவேஸ்வரன்” என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.
   எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள்.
   இவரைக் “கலியுக வரதன்” என்றும் குறிப்பிடுகிறார்கள். “நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. சிதம்பரம் கோவிலில் தனிச் சன்னதி உள்ளது.
   ஞாயிற்றுக் கிழமை , தின பிரதோஷ நேரம் வரும் ராகு கால வேளையில் – சரபேசர் வழிபாட்டில் , கலந்து கொள்ளுங்கள்…
   ஞாயிற்று கிழமை – பிரதோஷம் வந்தால் , தவறாமல் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.. அபரிமிதமான பலன்கள் ஏற்படும்..
   திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் , நவக்கிரக சந்நிதி அருகில் – சரபேசர் சிலை , தூணில் உள்ளது… மஞ்சள் அல்லது சந்தன காப்பு அணிந்து நீங்கள் வேண்டினால், கேட்டது கிடைக்கும்..
   சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும்.
   கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும்.குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும்.
   சுவாமி கம்பகேசுவரரை வணங்குவோர்க்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி,தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
   அம்பாள் தருமத்தை வளர்த்து காப்பவள் என்பதால் அவளை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்கப் பெறும்.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறுவார்க

   Read more: http://www.livingextra.com/2011/02/blog-post_7490.html#ixzz1rBIPjpoH
   Read more: http://www.livingextra.com/2011/02/blog-post_7490.html#ixzz1rBI3cUAJ

 6. எனக்கும் என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் செய்வினை வைக்கபட்டுள்ளது. எனது மிக நெருங்கிய உறவினர்களை நம்பி பழகினோம். அவர்கள் எங்களுடைய தலைமுடி, வியர்வை துணி, காலடி மண் எடுத்துக்கொண்டு போய் செய்வினை வைத்து விட்டார்கள். இருபது வருடங்களாக தொடர்ந்து போராடி கொண்டு இருக்கிறோம். சிலர் செய்வினை எடுக்கிறோம் என்று சொல்லி எதோ செய்கிறார்கள் .. ஆனால் போன்னதாக தெரியவில்லை . இது நிரந்தரமாக எங்களைவிட்டு நீங்குவதற்கு யாராவது வழி காட்டினால் நன்றாக இருக்கும்.

 7. I have one doubt which if clarified by you will be helpful to me. One of my friends who is doing the work of removing the billi sunyas created by enemies. He told me that billi sunyas can be done on kerchiefs used by ladies so that when that lady uses that kerchief by keeeping it in hip, the seivinai will affect that lady through her body when it is kept in her hip. I want to know is it true? In such case if that lady does not keep that kerchief in her hip the seivinai will not affect her? Please send me your view in this regard Pl send your reply to sujaramu1@gmail.com

  1. வணக்கம்.

   தங்கள் சந்தேகத்திற்கான பதிலை தமிழிலேயே தருவதுதான் எனக்கு மேலும் விளக்குவதற்கு சௌகர்யமாக இருக்கும். உங்கள் நண்பர் சொன்னதில் பாதி சரி; பாதி தவறு.

   கர்சீப் என்றில்லை, பாதிக்கப்பட வேண்டிய நபரின் பிற ஆடைகள், தலைமுடி, நகம், செருப்பு, அவர் உபயோகப்படுத்தும் பிற பொருட்களைப் பயன்படுத்தி இந்த இழி செயலைப் பலர் செய்வது உண்டு. உணவில் இடு மருந்து கலந்து கொடுத்து பாதிப்பு ஏற்படுத்துபவர்களும் உண்டு. அது முழுக்க முழுக்கப் பாவம் மட்டுமல்ல; அவ்வாறு செய்பவர், அதற்கு உறுதுணையாக இருப்போர் என அவர்களது தலைமுறை, வாரிசுகள் என பலரும் கடுமையாக பாதிக்கப்படுவர்.

   இந்தப் பொருட்கள் வினை கடத்தும் ஊடகங்களாக இருந்து சம்பந்தப்பட்டவருக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதாவது சார்ஜ் செய்யப்பட்ட பாட்டரியை நாம் பயன்படுத்தி டார்சை எரியச் செய்வது போல்தான் இதுவும். ஒரு கர்சீபிற்கு இந்த சக்தி எப்படி வரும் என்று வியப்பு தோன்றலாம்! சாதாரண யந்திரத் தகட்டில் சில குறியீடுகளைப் போட்டு, அதை மந்திர உருவேற்றி, சடங்குகளோடு ஆலயத்தில் சிலைக்கு அஷ்டபந்தனம் வைத்து பூஜிக்கும் போது, அந்த வெறும் கற்சிலை தெய்வமாக வணங்கப்படுகிறதல்லவா? அதுபோலத்தான் இதுவும்.

   அது தெய்வ காரியம். மக்களுக்கு மன அமைதியையும், சாந்தியையும் தருவது. இது நீச காரியம். பாவத்தை மட்டுமே பலனாகத் தெரிவது.

   அவ்வாறு செய்வினை வைக்கப்பட்ட பொருளை (உம்-கர்சீப்) சம்பந்தப்பட்டவர் பயன்படுத்தாத போது, அது அவரை முழுமையாகப் பாதிப்பதில்லை என்றாலும் அதன் பாதிப்புகள் ஓரளவுக்காவது இருக்கத்தான் செய்யும். அதாவது அதன் ”ஆற்றல்கள்” குறைந்திருக்குமே தவிர முழுமையாக மறைந்திருக்காது.

   இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கு இந்த ஊடகங்கள்/பொருட்கள் எல்லாம் தேவையில்லை. இருந்த இடத்தில் இருந்தே தங்களது மந்திர உச்சாடன சக்தியைக் கொண்டு ஒரு தீய அதிர்வலையை (negative vibration) ஏற்படுத்தி அதனை எதிரிக்கு எண்ணங்கள் மூலம் கடத்தி பாதிப்பை ஏற்படுத்துவார்கள். இப்படிப்பவர்கள் சில நீச தேவதைகள் உதவவும் கூடும்.

   இதெல்லாம் நமக்குத் தேவையில்லை.

   தீயவை தீய பயத்தலால் தீயவை
   தீயினும் அஞ்சப் படும்.

   நல்லதை எண்ணுவோம்; நன்மையைச் செய்வோம்.

   இறைவனைத் தொழுவோம். இனிமையாய் வாழ்வோம்.

   நன்றி

 8. If these negative aspects like Pilli,Sooniams not attack the strong hearted, good hearted and spiritual hearted persons, then why did it affect Adi Sankarar, Paamban Swamiga and Annai? Does it mean they are not strong hearted, good hearted and spiritual hearted people?

  Life is a game played on us, when we are busy playing our own games. All are predetermined based on our previous karmas. Even good deeds do not save us from previous birth’s bad karma but may increase the count of our good karmas.

  Sir, All are based on our Jaadhagam; I am saying this because,

  All saints such as SRI RAMANA MAHARISHI,SRI ANNAI,SRI AUROBINDO,SRI SANKARAR etc are born saints and not made saints.

  For example: I cannot become a saint if I am not allowed as per my jaadhagam…

  Stop all these nonsense and start doing good. Atleast we can increase the count of good deeds.

  Dear Ramanans,

  Please reply this post in Tamil. I am typing in English because, I am not able to type in tamil but I want you to answer this post in Tamil, if you are willing to answer this post.

  1. willing to answer this post.?? ம்ம்ம். நல்லது. இந்த பூமி கர்ம பூமி. இதில் பிறப்பவர் யாராக இருந்தாலும் அந்த கர்மவினைகளுக்கு ஆட்பட்டுத்தான் ஆக வேண்டும். அது மகான்களாக இருந்தாலும் கூட. அதனால்தான் அவர்களுக்கு அப்படி நடந்தது. இந்தச் சம்பவங்கள் நடப்பது எதற்காக அல்லது இதன் மூலம் காட்டப்படும் உண்மை என்ன? எந்தத் துன்பம் வந்தாலும் இறைவனை பற்றுக் கோடாக ஒரே நம்பிக்கையாகக் கொண்டால் அவை மறைந்து விடும் என்பதைக் காட்டத்தான். இங்கே தனிமனித அகங்கரங்களுக்கு வேலை இல்லை.

   மகான்களாகப் பிறந்தாலும் கர்ம சட்டத்திற்கு உட்பட்டத்தால்தான் ராமகிருஷ்ணர், ரமணர், யோகிராம் என பலரும் புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாகினர். அவர்களால் அதிலிருந்து விடுபட்டிருக்க முடியாதா? முடியும். ஆனால் செய்யவில்லை. காரணம், கர்மவினையில் அவர்கள் குறுக்கிட விரும்பவில்லை. அவர்களுக்கு என்ன கர்மவினை? பக்தர்களின் கர்மவினைகளே அவர்களைத் தாக்கியது.

   கர்மாக்களின் சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என மூன்று வகைகளுண்டு. இவற்றின் பாதிப்பு மனிதராகப் பிறவி எடுத்த யாருக்கும் இருக்கவே செய்யும். அது மகான்களானாலும் கூட.

   நீங்கள் நினைத்தால் நீங்களும் ஒரு மகானாக ஆகலாம். ஆனால் அது அவ்வளவு எளிதில் கை கூடாது. இந்தப் பிறவி இல்லாவிடினும் ஏதாவது ஒரு பிறவியில் ஆக முடியும். ஜாதகம் எல்லாம் இந்த விஷயத்தில் ஒன்றுமில்லை. ஊழிற் பெருவலி யாதுமில்லைதான். ஆனால் ஊழையும் உப்பக்கம் காண முடியும் என்பதும் உண்மை. அதற்குத் தேவைதான் நீங்கள் சொன்ன வில் பவர்.

   அப்புறம் இன்னொரு விஷயம். உங்கள் ஜாதகத்தையே செயலிழக்கச் செய்ய முடியும். கோள்வினைகள் உங்களை முற்றிலும் பாதிக்காமல் செய்ய முடியும். ஆனால் அவை எல்லாம் அதி சூட்சுமமானவை. சுருக்கமாகச் சொன்னால் ’ரமணன்’ என்பவர் இருந்தும் ‘இல்லாமல்’ போனால் கோள் வினைகள் அவரைப் பாதிக்காது. ஆனால் இவையெல்லாம் அவ்வளவு எளிதானவை அல்ல.

   இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன். மேலும் இந்தக் கட்டுரையை இப்படியெல்லாம் உள்ளன எனச் சொல்வதற்காகத் தான் எழுதினேனேயன்றி மூட நம்பிக்கையை வளர்க்க அல்ல. யாராக இருந்தாலும் கர்மாவின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை விளக்கவே இதுபோன்ற கட்டுரைகள். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா.

  1. விளக்கங்களும்,கதைகளும் சந்தேகம் உள்ளவர்களுக்கும்,குழப்பம் இருப்பவர்களும் நம்பியும் நம்பாத நடுநிலையில் உள்ளவர்களுக்குமே. ஆகவே ஆதாரபூர்வமான சம்பவங்கள்/ விளக்கங்கள் அவசியம் தேவை என்பது எனது கருத்து.

   உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சாமி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s