ஏவல், பில்லி, சூனியம் உண்மையா, பொய்யா? – 1

கிராமம் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் ஏன் சில அரசியல் தலைவர்களாலும் கூறப்படும் / நம்பப்படும் செய்தி, அவர் எனக்கு ஏவல் வைத்து விட்டார். அதனால்தான் எனக்கு ஆட்சியில் பிரச்னை ஏற்படுகிறது; மோரில் இடு மருந்து வைத்துக் கொடுத்ததால்தான் அந்த அரசியல்வாதியின் உடல் செயலிழந்து விட்டது; என் எதிரி எனக்கு ஏவல் வைத்து விட்டதால்தான் என் மகன் பைத்தியமாகி விட்டான்; மகள் ஓடிப் போய் விட்டாள்; எதிரிகள் சூனியம் வைத்து விட்டார்கள், அதனால்தான் என் நண்பருக்கு தொழில் நஷ்டமாகி விட்டது. – இது போன்ற பல செய்திகளை நாம் கேட்டிருக்க முடியும். நாளிதழ்களிலும் கூட அது பற்றிய செய்திகள், சில இதழ்களில் இந்த மர்ம, மாந்த்ரீகம் பற்றிய விளம்பரங்களைப் பார்க்க முடிகிறது. அது சரி, ஏவல், பில்லி, சூனியம் என்பதெல்லாம் உண்மைதானா? இல்லை. மக்களை ஏமாற்றிப் பிழைக்க சிலர் செய்யும் ஏமாற்று வேலையா? அது பற்றிப் பார்ப்போம்.

சிலர், ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் கட்டுக்கதை. மக்களை ஏமாற்றச் சிலர் செய்யும் தந்திரம் என்பார்கள். அவர்களது கூற்று ஒருவிதத்தில் உண்மையும் கூட. ஆனால் அதற்காக ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் இல்லவே இல்லை என்று நாம் கூறி விட முடியாது.

சிலவகை மந்திரங்களை உச்சாடனம் செய்து உருவேற்றி அதன்மூலம் தங்கள் விரோதிகளுக்கு, அல்லது தாங்கள் விரும்பாதவர்களுக்கு பல பாதிப்புகளை ஒருவரால் ஏற்படுத்த முடியும். அந்த வகை மந்திரங்களுக்கு ’அபிசார மந்திரங்கள்’ என்று பெயர். இவை அதர்வண வேதத்தில் உள்ளன. தமிழிலும் பல ஓலைச்சுவடிகளில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. கேரளாவில் இருக்கும் மாந்த்ரீகர்கள் இவற்றில் தேர்ந்தவர்கள்.

இதுபற்றி, “அதர்வண வேதத்தின் இரண்டாம் பிரிவைச் சார்ந்த மந்திரங்கள் எண்ணிறந்தவை. இவை பெரும்பாலும் பேய் முதலியவற்றை விரட்டி ஓட்டுவன. சில சபிப்பன. சில காதலர்க்கிடையே ஊடல், பிணக்கு முதலியவற்றைத் தோற்றுவிப்பன. சில மனைவியைத் திரும்ப கணவனிடம் சேர்ப்பன. சில உறக்கத்தை உண்டு பண்ணுபவன. சில விருப்பமில்லாத ஆடவனிடத்து அல்லது பெண்ணிடத்துக் காதலைத் தோற்றுவிக்கும் வலிமை உடையன. ஒருவனது படத்தின் துணைக் கொண்டு அவனைத் தன்வயமாக்கவும், அவனுக்குத் தீங்கிழைக்கவும் வல்ல மந்திரங்கள் சில.  …………..  சில பாடல் பெண்ணைக் கருவுறச் செய்யாது தடுப்பதற்கும், ஆடவனை ஆண்மை குன்றியவனாக ஆக்குவதற்கும் ஆற்றல் படைத்தவை. இப்பாடல்கள் எல்லாம் அங்கிரஸர்களுடன் தொடர்புபட்டவை. இதுவரை கூறியவாறு சபிப்பன சில; கெடுப்பன சில; சத்துருக்களையும், மாந்திரீகர்களையும் அழிப்பன சில. இவற்றிற்கு அபிசாராணி என்று இன்னொரு பெயரும் உண்டு.“ என்கிறார் டாக்டர் கா. கைலாசநாதக் குருக்கள், தனது வடமொழி இலக்கிய வரலாறு என்னும் நூலில். (நர்மதா பப்ளிகேஷன்ஸ்)

மந்திரங்கள் என்பவை ஒலி அதிர்வு உடையவை. அவை ஒரு மனிதனின் எண்ண ஆற்றல்களில் மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. தீய மந்திர உச்சாடனங்களால் தீய அதிர்வலைகள் ஏற்பட்டு அவை ஒரு மனிதனைக் குழப்பி தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். இதுதான் ஏவல் எனப்படுகிறது. ஏவல் என்றால் ஏவி விடுதல் என்பது பொருள்.

சூனியம் என்பதற்கு ஒன்றுமில்லாதது என்று பொருள். ஒரு மனிதனின் மனதைக் குழப்பி அவனை ஒன்றுமில்லாமல் ஆக்குவதே, அவனைச் செயல்பட முடியாதபடி முடக்குவதே சூனியம். பில்லி என்பதும் இந்த வகையைச் சேர்ந்ததே.

பொதுவாக மனச்சோர்வு உற்றவர்களும், தன்னம்பிக்கை குறைந்தவர்களும், கர்மவினைப் பாதிப்புகள் அதிகம் உள்ளவருமே இவற்றால் பாதிக்கப்படுகின்றனர். என்றாலும் சிலசமயங்களில் எதிரிகளின் பொறாமை, தீய வன்மம் போன்றவற்றின் காரணமாக, புனிதர்களும், மகான்களும் கூட இவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

சில சம்பவங்களைப் பார்ப்போம்.

அரவிந்தர் ஆசிரமத்தில் ஒருநாள்… புதுச்சேரி வந்த ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் மற்றும் பிற சாதகர்கள் தங்கியிருந்த இல்லத்திலேயே தங்கினார். அதை ஒரு முழுமையான ஆசிரமமாக்கும் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டார். உடன் தத்தா என்ற தோழியும் இருந்தார். இவர்களது வீட்டு வேலைகளைக் கவனிக்க ஓர் வேலையாள் இருந்தான். அவன் ஐரோப்பியப் பெண்கள் தானே என நினைத்து எதிலும் அலட்சியமாக நடந்து கொண்டான். தத்தாவிடம் அடிக்கடி மரியாதைக் குறைவாக நடக்கலானான். யாரையும் மதிக்கவில்லை. தொடர்ந்து பல தவறுகள் செய்து வந்தான். அவனால் அடிக்கடிப் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. பல முறை கண்டித்தும் அவன் திருந்தாததால் அன்னையும் தத்தாவும் அவனை வேலையை விட்டு நீக்கினர்.

ஸ்ரீ அன்னை

பொறாமைக்காரனான அவன் ஒரு மந்திரவாதியை அணுகினான். ஸ்ரீ அன்னை மற்றும் தத்தாவைப் பழிவாங்குவதற்காக தீவினையை ஏவி விட்டான். அது முதல் அடிக்கடி அவர்கள் தங்கி இருந்த அந்த வீட்டில் கற்கள் வந்து விழ ஆரம்பித்தன. இது பல நாட்கள் தொடர்ந்தது. யாராலும் காரணம் என்னவென்று அறிய இயலவில்லை. எது செய்தும் தடுக்க முடியவில்லை. சரமாரியாகக் கற்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.

ஒரு நாள் தீவினையின் தொல்லை பொறுக்க முடியாமல் போகவே பொறுமை இழந்த அன்னை அதற்கான மூல காரணத்தைக் கண்டறிய விழைந்தார். தனித்தமர்ந்து ஆழ்நிலை தியானத்தில் மூழ்கினார். தியானத்தின் மூலம் நீக்கப்பட்ட வேலைக்காரன்தான் இவற்றிற்குக் காரணம் என்பது தெரியவந்தது. அவனுக்கு இணைப்புச் சக்தியாக அந்த வீட்டிலுள்ள ஓர் வேலைக்காரச் சிறுவன் இருக்கிறான் என்பதையும் ஸ்ரீ அன்னை கண்டறிந்தார். உடனடியாக அந்தச் சிறுவனை வேறு இடத்திற்கு மாற்றினார். அதுமுதல் அந்தத் தீவினை தொடர முடியாமல் செயலிழந்தது.

ஸ்ரீ அரவிந்தர்

ஆனால் அது ஏவிய அந்த வேலைக்காரனைச் சென்று பாதித்தது. அவன் கை, கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையானான். அதனால் மிகவும் மனம் கலங்கிய அவன் மனைவி ஸ்ரீ அன்னையையும் ஸ்ரீ அரவிந்தரையும் சந்தித்து, அவனது தீச்செயலை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டாள். ஸ்ரீ அரவிந்தரும், ”அவன் ஏதோ ஆத்த்திரத்தில் அறியாமல் செய்து விட்டான். அவனை மன்னிப்போம்” என்றார், ஸ்ரீ அன்னையிடம். அன்னையும் அவனை மன்னித்தார். அதுமுதல் அத்துன்பம் நீங்கி உடல், மனத் தெளிவு பெற்றான் அந்த வேலைக்காரன்ன். ஸ்ரீ அரவிந்தரின் பக்தராகவும் மாறிப் போனான்.

மேற்கண்ட சம்பவம் மூலம் நமக்குத் தெரிவது என்ன? ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் பொய்யல்ல என்பதும், சிலவகை மந்திரங்களை உச்சாடனம் செய்து உருவேற்றி அதன்மூலம் தங்கள் விரோதிகளுக்கு, அல்லது தாங்கள் விரும்பாதவர்களுக்கு பல பாதிப்புகளை ஒருவரால் ஏற்படுத்த முடியும் என்பதும் தெரிய வருகிறதல்லவா?

 Every Action has an Equal and Opposite Reaction என்றார் நியூட்டன். இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். ஒருவருக்கு நாம் தீமை செய்தால் அந்தத் தீவினை நம்மையும் வந்து பாதிக்கும். இதற்கு மேற்கண்ட சம்பவம் சரியான உதாரணம். இதைத் தான் வள்ளுவரும்,

 ” மறந்தும் பிறன் கேடு சூழற்க; சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு”

என்று குறிப்பிட்டிருக்கிறார்.

(தொடரும்)

Advertisements

15 thoughts on “ஏவல், பில்லி, சூனியம் உண்மையா, பொய்யா? – 1

 1. நான் அறிந்த வரை அதர்வண வேதத்தில் இது போன்ற மந்திரங்கள் உண்டு என்று ஒரு பிராமணர் சொல்ல கேட்டிருக்கிறேன்,
  இந்த வித வேலைகளை செய்வோர் சில துர்தேவதை-களை வழிபடுவார்கள், எல்லா வித மந்திரங்களுக்கும் அதிர்வுகள் உண்டு,
  என் அருகில் ஒரு சித்த மருத்துவர் இருக்கிறார், இவர் மாந்திரீக வேலைகளும் தெரிந்தவர், இவர் என்னிடம் சில உண்மைகளை பகிர்ந்துகொன்டுள்ளார் அந்த வகையில் அவர் செய்த சில வேடிக்கைகளையும் கூறியுள்ளார்,
  இவர் துஷ்ட சம்பவங்களை செய்வதில்லை காரணம் விரும்பத்தகாத வேலைகளை செய்வதில்லை, இவர் ஒரு பரம்பரை வைத்தியர் என்பதால் பிற உயிர்கள் இடத்தில் அன்பு செலுத்துவதே இவர் பண்பு,
  இந்த மாந்தீரக வேலைகள் செய்வோர் தனது இறுதி காலத்தில் அதாவது இவர்கள் மரணம் கொடூரமாக இருக்குமாம்,

  டாக்டர் கா. கைலாசநாதக் குருக்கள், எழுதியதாக நீங்கள் எழுதி இருக்கும் தலைப்புக்கள் சிலவற்றை தவிர்த்து மற்றவைகள் உண்மைதான்,
  ”சில பாடல் பெண்ணைக் கருவுறச் செய்யாது தடுப்பதற்கும், ஆடவனை ஆண்மை குன்றியவனாக ஆக்குவதற்கும் ஆற்றல் படைத்தவை.”
  இவற்றைத்தான் ஏற்க்க முடியவில்லை, காரணம் இவைகள் உடல் சார்ந்த வேலைகள், விந்து சுரப்பது கூட ஒரு வகையில் மனம் சார்ந்த வேலை என்று சொல்லலாம், ஆனால் பெண்ணை கருவுறாமல் தடுப்பது என்பது சற்று ஏற்க்க முடியவில்லை…!!!

  நம்ப பாணியில் சொன்னால் இறை என்னும் சக்தி (சாப்ட்வேர் எஞ்சினியர்)
  மனித தலை என்பது கணினி, அதில் பெருமூளை என்பது CPU , சிறு மூளை என்பது Ram , முகுளம் என்பதை hard disk என வைத்துக்கொள்ளலாம்,

  இறவன் வடிவமைத்த இந்த software என்னும் மனதை, சில மாந்திரீக வல்லுனர்கள் re-edit என்ற பேரில் தற்க்காலிகமாக முகுளத்தை தாக்குகிறார்கள் சில நேரங்களில் உயிர் இழப்பும் நிகழ்கின்றது…

  நம் மனம் என்னும் software-க்கு நல்ல anti virus போட்டு பார்த்துக்கொண்டால்,
  எந்த வித வைரஸ்-களாலும் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்,
  அதாவது மனதை திடமாக வைத்துக்கொண்டால், இந்த வித பாதிப்புகளில் இருந்து விலகி இருக்கலாம்,

  திடமான மனம் உடைய மனிதர்களை இவர்கள் தீண்ட முடியாது என்பது என் ஆழமான கருத்து…,

  1. //டாக்டர் கா. கைலாசநாதக் குருக்கள், எழுதியதாக நீங்கள் எழுதி இருக்கும் தலைப்புக்கள் சிலவற்றை தவிர்த்து மற்றவைகள் உண்மைதான்,
   ”சில பாடல் பெண்ணைக் கருவுறச் செய்யாது தடுப்பதற்கும், ஆடவனை ஆண்மை குன்றியவனாக ஆக்குவதற்கும் ஆற்றல் படைத்தவை.”
   இவற்றைத்தான் ஏற்க்க முடியவில்லை, காரணம் இவைகள் உடல் சார்ந்த வேலைகள், விந்து சுரப்பது கூட ஒரு வகையில் மனம் சார்ந்த வேலை என்று சொல்லலாம், ஆனால் பெண்ணை கருவுறாமல் தடுப்பது என்பது சற்று ஏற்க்க முடியவில்லை…!!!//

   ஐயா… அவர் (கைலாசநாதக் குருக்கள்) சொன்னதை நான் சொல்லியிருக்கிறேன். அவ்வளவுதான். இது எனக்கு ஏற்புடைத்து என்பது பொருளல்ல.

   ஆனால் சில செயல்கள் மூலம் பெண்ணைக் கருவுறாமல் தடுக்க முடியும். கருத் தங்காமல் செய்ய முடியும். கருவைக் கலைக்கவும் முடியும். அதைச் செய்ய சில துர்த் தேவதைகள், தீய யக்ஷிணிகள் என பல துர் சக்திகள் உள்ளன. நான் அதுபற்றி அறிந்திருந்தாலும், ஆய்வு செய்திருந்தாலும், அப்படிப்பட்டவர்களை நேருக்கு நேராகச் சந்தித்து பல அனுபவம் (ஏன் சில பாதிப்புகளும் கூட) பெற்றிருந்தாலும் அவற்றைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்பவில்லை. ஏனென்றால் தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என பெரியப்பா சொல்லியிருப்பதால்தான்.

   //நம் மனம் என்னும் software-க்கு நல்ல anti virus போட்டு பார்த்துக்கொண்டால்,
   எந்த வித வைரஸ்-களாலும் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்,
   அதாவது மனதை திடமாக வைத்துக்கொண்டால், இந்த வித பாதிப்புகளில் இருந்து விலகி இருக்கலாம்,

   திடமான மனம் உடைய மனிதர்களை இவர்கள் தீண்ட முடியாது என்பது என் ஆழமான கருத்து//

   உண்மை உண்மை முற்றிலும் உண்மை.

   100% வழிமொழிகிறேன். அதையே 2வது கட்டுரையிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.

   வருகைக்கும் நன்றி சிங்கம்.

  2. //நான் அதுபற்றி அறிந்திருந்தாலும், ஆய்வு செய்திருந்தாலும், அப்படிப்பட்டவர்களை நேருக்கு நேராகச் சந்தித்து பல அனுபவம் (ஏன் சில பாதிப்புகளும் கூட) பெற்றிருந்தாலும் அவற்றைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்பவில்லை. //

   இதன் பொருள் – இதுமாதிரித் தன்மையுடைய மாந்தீரீகர்களை, சாமியார்களை, அருள் வாக்குக் கூறுகிறேன் என்று ஏமாற்றுபவர்களை – அவர்கள் சொல்வது உண்மைதானா, ஆம் என்றால் அது எப்படி என்றறிவதற்காக ‘அப்பாவி’ வேடத்தில், அருள் வாக்குக் கேட்கும் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று அவதானித்திருக்கிறேன். ஆராய்ந்திருக்கிறேன். நள்ளிரவுகளில் காத்துக் கிடந்திருக்கிறேன். அதன்மூலம் பல அனுபவங்கள் பெற்றிருக்கிறேன். அதெல்லாம் அந்தக் காலம் ஐயா….

   இறைவனை நோக்கிய பயணத்தில் காலில் குத்தும் பருக்கைக் கற்கள், முள்கள், கரும் பாறைகள் இவை. பிடுங்கி எறிந்து விட்டு அல்லது விழுந்தாலும் எழுந்து தடவி விட்டுக் கொண்டு மேலே செல்ல வேண்டியதுதான். அப்படித்தான் கடந்து வந்திருக்கிறேன்.

   எல்லாம் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ ரமணர் அருள். அன்பே சிவம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s