இணையத் திருடர்கள்

இணையத் திருடர்கள்

 முதலில் இதைப் பற்றி எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் நண்பர்கள் தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பி இதை அவசியம் பதிவு செய்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால் வேறு வழியின்றி இதை எழுதுகிறேன்.

”திருட்டு” அதுவும் எழுத்துத் திருட்டு என்பது அந்தக் காலம் முதலே தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. சாதாரண எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் பல பிரபல எழுத்தாளர்களும் கூட இதற்கு விதிவிலக்கில்லை. ’கல்கி’யின் பல எழுத்துக்கள் மேலை நாட்டு எழுத்துக்களின் மூலங்களைத் தழுவியவர் என ‘ரசமட்டம்’ என்ற புனைபெயரில் புதுமைப்பித்தன் குற்றம்சாட்டினார். (ஆனால் அதே கல்கிதான் புதுமைப்பித்தன் மறைவிற்குப் பின் அவருக்காக நிதி திரட்டினார். விழா ஏற்பாடுகளுக்கு உதவினார்.) க.நா.சு.வோ புதுமைப் பித்தனின் பல கதைகள் ஆங்கில இலக்கியத்திலிருந்து உருவி தமிழ் செய்யப்பட்டவை என்று தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பிற்காலத்து சுஜாதா, சுபா போன்றோரும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்ப முடியவில்லை. சமீபத்தில் ”எந்திரன்” படத்தின் மூலக் கதை என்னுடையதுதான் என எழுத்தாளர் ஆர்னிகாநாசரும், தமிழ்நாடன் என்ற மற்றொரு எழுத்தாளரும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதுபோல சமீபத்தில் வெளியான ’பயணம்’ படத்தின் திரைக்கதை, பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான தனது ”இது இந்தியப் படை” என்ற நாவலை அப்படியே ஒத்திருப்பதாகக் கூறுகிறார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர். அதுபோல ராஜேஷ்குமாரின் பல கதைகள் சுடப்பட்டு திரைப்படங்களாகியுள்ளன என்ற கருத்தும் உண்டு.

ஆக, அறிவுத் திருட்டு என்பது யார் என்னென்ன சொல்லியும், அதைப் பற்றிய எவ்வித அக்கறையில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதற்கு இணையமும் விதிவிலக்கில்லை.

கட்டுப்பாடற்ற சுதந்திர வெளியான இணைய உலகில் தனிப்பட்ட ஒருவரது எழுத்திற்கு ’காபிரைட்’ எல்லாம் வைத்து உரிமை கோருவது மிகக் கடினம் என்றாலும், ஒரு படைப்பு வேறொருவரின் தளத்திலிருந்து எடுத்தாளப்படுமாயின் அந்த தளத்திற்கான சுட்டி (லிங்க்) தரப்படுவதுதான் இணைய உலக நாகரிகம். மனிதப் பண்பும் கூட.

ஆனால் அது நடக்கிறதா? குறிப்பாக இந்த இதில் இடம்பெறும் கட்டுரைகள் பத்திரிகை மற்றும் அச்சு ஊடகத்திற்காக உருவாக்கப்படுபவை. காபிரைட் உள்ளவை. யாரும் காபி-பேஸ்ட் செய்யக் கூடாது என அறியவும். என்று கேட்டுக் கொண்டும் கூட, கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், ஒரு வலைப்பூவின் தகவல்களைத் திருடுவதை, எழுத்துத் திருட்டை சிலர் மேற்கொள்வது மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது.

நல்ல விஷயங்கள் நாலு பேருக்குச் சென்றடைவதில் தவறில்லை. அது வரவேற்கப்பட வேண்டியதும் கூட. ஆனால் யாரோ ஒருவர் எழுதிய எழுத்தைத் திருடி, அதை தனது வலைப்பதிவில் தன் பெயருடன் வெளியிடுவது எப்படி நியாயமாகும்? அதுவும் எழுதியவரின் பெயரைக் குறிப்பிடாது, அவரது தளத்தின் சுட்டியையும் குறிப்பிடாது, அவர் செய்திருக்கும் எழுத்துப் பிழைகளைக் கூட அப்படியே காப்பி அடித்து தான் தான் உழைத்து அதை உருவாக்கியது போல வெளியிடுவது எவ்வளவு கேவலமான விஷயம்?

அதிலும் கொடுமை, அது போன்ற பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு, அந்தப் பதிவைத் தாங்கள்தான் என்னவோ கஷ்டப்பட்டு உழைதது உருவாக்கியது போல் பெருமையோடு மறுமொழி அளிப்பது. கொஞ்சம் கூட அடிப்படை நாகரிகம் அற்றவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பது திண்ணம்.

எனது வலைப் பதிவில் உள்ள பல விஷயங்கள் எனது அனுபவத்தின் வெளிப்பாடுகள். சில நான் படித்தவை. சில நான் அறிந்தவை. சில எனது நண்பர்களுக்கு நிகழ்ந்தவை. சில ஆங்கிலத்திலிருத்து மொழி பெயர்த்தவை. சில எனது ஆராய்ச்சியின் விளைவுகள். எது எப்படியாக இருந்தாலும், பிறரது தகவல்களை நான் கையாண்டிருந்தால் அது பற்றிய சுட்டிகளை நான் தவறாது கொடுத்தே வந்திருக்கிறேன். (சான்றாக தென்றல் தளம், Reincarnation பற்றிய ஆங்கிலத் தளங்களைச் சொல்லலாம்)

இவ்வாறு அவற்றை நான் நேரம் ஒதுக்கி, டைப் செய்து, சரிபார்த்து வெளியிட – சிலர் நோகாமல் நுங்கு தின்பது போல் – அதை திருடி தங்கள் பதிவாக வெளியிடுவது எப்படி உள்ளது என்றால் “அடுத்தவன் குழந்தைக்கு நான் தான் தகப்பன்”  என்று சொல்லும் பேடியின் செயலைப் போல் உள்ளது. பத்திரிகை மற்றும் அச்சு ஊடகத்திற்காக உருவாக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டும் சிலர் அதனை மதியாது “திருட்டு வேலை” செய்வது அவர்களது ஈன புத்தியையே காட்டுகிறது. (அவர்கள் சாமியோ, ஆசாமியோ, பக்தனோ, பித்தனோ திருடன் திருடன் தான். திருட்டு, திருட்டுதான்)

கீழே அப்படித் திருடி வெளியிடப்பட்ட எனது கட்டுரைகளுக்கான சுட்டிகளைக் கொடுத்திருக்கிறேன்.

வள்ளலாரின் வாழ்வில்

http://agatiyaradimai.blogspot.com/2011/01/blog-post_5925.html

கிரிவலம்

http://agatiyaradimai.blogspot.com/2011/01/blog-post_3197.html

விரதம்

http://agatiyaradimai.blogspot.com/2011/01/blog-post_7060.html

http://agatiyaradimai.blogspot.com/2011/01/blog-post_713.html

பார் போற்றும் பர்வத மலை

http://agatiyaradimai.blogspot.com/2011/01/blog-post_813.html

லக்ஷ்மி நரசிம்ம ஸ்தோத்திரம்

http://agatiyaradimai.blogspot.com/2011/02/blog-post_10.html

ஓலைச்சுவடிகள்

http://amanushyam.blogspot.com/2011/04/blog-post_3232.html

ஆவிகள் உலகம்

http://amanushyam.blogspot.com/2011/04/ghost-world.html

கல்பனா சாவ்லா

http://amanushyam.blogspot.com/2011/03/blog-post_21.html

சந்யாசி தந்த ஆரஞ்சு பழம்

http://amanushyam.blogspot.com/2011/03/blog-post.html

கல்பனா சாவ்லாவின் மறுபிறவி

http://www.eegarai.net/t40398-topic

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=12509.0

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் மற்றும் பல ஆன்மீக ஞானிகள்

http://srikanmani.blogspot.com/2010/10/blog-post_18.html

ஹனுமான் சாலீஸா

http://agatiyaradimai.blogspot.com/2011/01/blog-post_8528.html

மற்றும் பல கட்டுரைகள்

 http://amanushyam.blogspot.com/2011/05/blog-post_2561.html

 http://amanushyam.blogspot.com/2011/04/2_29.html

ஆதாரத்திற்கு சில இமேஜ்கள்…

அமானுஷ்யம்
சந்யாசி தந்த ஆரஞ்சு பழம்
வானத்தில் பறந்த பெண் சித்தர்
கல்பனா சாவ்லா திருட்டுப் பதிவு
சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் மற்றும் பல
கல்பனா சாவ்லா
விரதம் திருட்டுப் பதிவு
பாம்பன் சுவாமிகள் திருட்டுப் பதிவு
பின்னூட்ட ப்ரதாபம்
முற்பிறவிப் பதிவுத் திருட்டு

இதைப் பாருங்க—-

https://ramanans.wordpress.com/2010/11/21/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/

அப்படியே இதையும் நல்லாப் படிச்சுப் பாருங்க…

http://www.maalaimalar.com/2011/02/12132941/tiruvannamalai-arunachaleswara.html

நான் என்னத்தச் சொல்ல? அட வலைப்பூக்காரர்கள்தான் இப்படி என்றால் பத்திரிகைக்காரர்களும் கூடவா? இணையதளத்தின் பெயரைக் குறிப்பிட்டால் குறைந்து போய் விடுவார்களோ?  இன்னும் நிறைய வலைப்பூக்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் என்னால் இங்கே குறிப்பிட இயலவில்லை. ’காய்த்த மரம் கல்லடி படும்’ என்பது போல சிலரது இந்தச் செயல் இருக்கிறது. பதிவுகள் போடுவதை நிறுத்தி விடலாமா என்றும் கூடச் சமயத்தில் தோன்றுகிறது. ஒரு கட்டுரையே சுயமாக உழைத்து சிந்தித்து எழுத இயலாதவர்களுக்கு, நேர்மையற்றவர்களுக்கு எப்படி ஆண்டவனும், அருள்ஞானிகளும், அகத்தியர் போன்ற மகரிஷிகளும் உதவ முடியும்? தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு பிறரையும் ஏமாற்ற வேண்டியதுதான். இவர்களுக்காக இரக்கப்படுவதைத் தவிர வேறு என்ன செய்வது? கடுமையான சொற் பிரயோகங்களாலாவது தங்கள் தவறை உணர்ந்து மனம் திருந்துகிறார்களா என்று பார்ப்போம்.

இருக்கும் வேலையையே செய்ய இயலாத நிலையில் மேற்கண்டவற்றைத் தேடி எடுத்து நேரம் ஒதுக்கி எழுதியிருக்கிறேன். இதற்கு உதவிய “சைபர்” நண்பர்களுக்கு நன்றி. இனிமேலாவது திருட்டு எழுத்தர்கள் திருந்துவார்கள் என்று நம்புவோம்.

(இந்தப் பதிவை ஒருமாதிரி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எழுதியிருக்கிறேன். மனம் சமனமான பிறகு மீண்டும் வருகிறேன்)

Advertisements

26 thoughts on “இணையத் திருடர்கள்

 1. ஒன்றில் இருந்து ஒன்று உருவாவது இயற்கை
  முற்றிலும் வரிக்கு வரி எடுப்பது தவறு
  அதை கொண்டு மாற்றி திருத்தி விரிவுப்படுத்தி எழுதலாம்
  தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வளவு கடுமையான கட்டுரை
  தேவையா தமிழ் வளர வேண்டும்

  1. //இவ்வளவு கடுமையான கட்டுரை
   தேவையா// தேவையில்லை தான். வேறு வழியில்லாமலேயே இவ்வாறு எழுதியிருக்கிறேன்.

   இதையும் படித்து விட்டு, பின்னர் இந்த அளவு கடுமை தேவையா, இல்லையா என்று சொல்லுங்கள்.

   https://ramanans.wordpress.com/2014/06/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F/

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா. தமிழ் வாழ்க.

 2. நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதிவிட்டீர்கள். எனது பதிவுகள் கூட வானொலி, இணையம். முகநூல் போன்ற தளங்களில் வெளியாகி மனம் நொந்து பொய் இருக்கின்றேன்.

  1. ஆமாம் கௌசி அவர்களே.. இந்த வயிற்றெரிச்சலை நாம் யாரிடம் போய்ச் சொல்வது… ஊடகங்களே இப்படிச் செய்யும் போது..!! ஆனால் ஒன்று மட்டும் உண்மை. சுயசிந்தனை உள்ளவர்கள் அருகிக் கொண்டு வருகிறார்கள். காபி-பேஸ்ட் மன்னர்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும்.

 3. அண்னே…

  என்னண்ணே கட்டுரைகளையே காணோம். கொசுக்குப் பயந்து கோட்டையை விட்டுப் போனவன் மாதிரி இந்தத் திருட்டுப் பசங்களுக்கு பயந்து பதிவு போடாம இருக்கீங்களா? பயப்படாதீங்கண்ணே தைரியமா எழுதுங்க.. நாங்க இருக்கோம்ல…. வெளில வாங்கண்ணே சும்மா

  1. பயமா? எனக்கா? ஐயா… நான் சில பல பயணங்களில் இருக்கிறேன். கல்லூரிகள் திறப்பதற்குள் சில விஷயங்களை முடிக்க வேண்டியுள்ளது. அதுதான் பதிவுகள் பக்கம் வர இயலாமைக்குக் காரணம்.

   திருட்டுப் பதிவர்களுக்கு பிரச்சனையில்லை. கூசாமல் காபி, பேஸ்ட் செய்து சுகமாக இருப்பார்கள். நமக்கு இங்கே யோசித்து யோசித்து அதை டைப் செய்து, பின் பிழைதிருத்தம் செய்து அப்புறம் அப்லோட் செய்து, படங்கள் சேர்த்து சுமார் 1 மணிநேரமாவது ஒதுக்க வேண்டியுள்ளதே! அந்த நேரமின்மைதான் பதிவுகள் போடாமைக்குக் காரணம். நீங்கள் சொன்னதற்காவது இன்று இரவு வண்டியை நடுவில் நிறுத்தி, கண் விழித்து ஏதாவது பதிவு போட முயற்சிக்கிறேன்.

   வருகைக்கும், ஆலோசனைக்கும், தந்திருக்கும் தைரியத்திற்கும்(?) உறுதுணைக்கும் 🙂 மிக்க நன்றி நன்றி நன்றி. வந்தனம் மதுரை வீரரே.

  1. உங்கள் அருமையான புன்மொழிக்கு, ஒப்புதல் வாக்குமூலத்துக்கு நன்றி. நீங்கள் இப்படி வெளிப்படையாகப் பேசும் போது நான் என்ன சொல்வது? செய்வது? உங்களோடு போட்டி போட என்னால் இயலாது. நல்லா இருங்கய்யா…

 4. ramanan nethiyadi. intha shanmugam oru allakai. amanushyam enum thiruttu valiapu ivarodathutan. ivar thirudi vittu neengal yar enbathu teriyamal neengal tan ezhuthiyathu enbathu puriyamal ungalai thirudan enkirar. nalla comedy. ivar thirudar. anal pazhi ungalukku.. super. fruad pasanga.

  1. அப்படியா? என்னவோ தெரியவில்லை. இவர் என்னை நேர்மையற்றவர் என்கிறார். திருடன் என்கிறார். இவர் தான் அவர் என்பது இப்போதுதான் புரிந்தது. பரவாயில்லை விட்டு விடுவோம். தான் குற்றவாளி என்பதை மறந்து விட்டு, தனது குற்றங்களை ஒப்புக் கொள்ளும் நேர்மை இன்றி பிறரை வசைபாடுபவர்களை நாம் என்ன சொல்வது? அவரது மனசாட்சியே முடிவு செய்யட்டும். நாம் கண்ணியக் குறைவாக ஏதும் உரைக்க வேண்டாம் சிவா. மறப்போம். மன்னிப்போம்.

 5. நண்பரே நீங்களும் சில பத்திரிக்கையில் இருந்து தான் திருடி தங்கள் தளத்தில் வெளியிட்டு உள்ளீர்கள் அதனால் இணைப்பு கொடுக்க வேண்டிய அவசியம் எதற்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து இணைப்புகளும் பார்த்தேன் சில ஆவிகள் உலகம் பத்திரிக்கையில் படித்தது தான் அப்படி என்றால் நீங்களும் திருடர் தானே உங்கள் தளத்தின் இணைப்பு கொடுக்க வில்லை என்கிற வருத்தம் தான் தங்களின் எழுத்தில் தெரிகிறது முதலில் நீங்கள் சுயமாக எழுத பழகுங்கள் அடுத்தது மற்றவர்களை குறை கூறுங்கள்

  இந்த கமெண்டை வெளியிடுவதே சந்தேகம் தான் பார்ப்போம் உங்கள் நேர்மையே

  1. ஆஹா.. நல்ல காமெடி. ஐயா, ஆவிகள் உலகம் இதழில் அதை எழுதியதே நான் தான். சந்தேகம் இருந்தால் விக்கிரவாண்டியாரிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள். நான் 2000மாவது ஆண்டுமுதல் பல புனைபெயர்களில் அரசியல், இலக்கியம், ஆன்மீகம், அமானுஷ்யம், நகைச்சுவை என்று பலஇணைய தளங்களில்,பல மடற் குழுக்களில், வலைப்பூக்களில், பருவ இதழ்களில், பல பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன். இன்றும் எழுதி வருகிறேன். அதனால்தான் ” இதில் இடம்பெறும் கட்டுரைகள் பத்திரிகை மற்றும் அச்சு ஊடகத்திற்காக உருவாக்கப்படுபவை. காபிரைட் உள்ளவை. யாரும் காபி-பேஸ்ட் செய்யக் கூடாது என அறியவும்..” என்று குறிப்பிட்டிருக்கிறேன். என்னைப்பற்றி அதிகம் வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாததால், தன் முனைப்பு ஆர்வம் இல்லை என்பதால்தான் இந்த புனைபெயர்களும், அடையாளமின்மையும். எனது விருப்பங்களை இதில் கட்டுரைகளாக அளிக்கிறேன்.

   எனது கட்டுரையை நானே ஒரு பருவ இதழிலும், அதே கட்டுரையை மேலும் பலர் வாசிக்க ஏதுவாக எங்களது இணைய தளத்திலும் வெளியிட்டால் நான் திருடனா? அய்யகோ.. என்னே.. உங்கள் புரிதல்! அருமை.அருமை ஐயா! மிக்க நன்றி! வருகைக்கும் கருத்திற்கும், விளக்கத்திற்கும் நன்றியோ நன்றி!

 6. அட நீங்க வேற இது ரொம்ப நாளா நடக்குது. ஒன்னும் பண்ண முடியாது. அடிப்படை நாகரீகம் இருந்தால் செய்யமாட்டார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.