பாபாவும் பாகதவரும்

எம்.கே.தியாகராஜ பாகவதர்

1947ல் சிறையிலிருந்து விடுதலையான பாகவதர், ‘நரேந்திரா பிக்சர்ஸ்’ என்ற சொந்தப் படக் கம்பெனியை ஆரம்பித்து ‘ராஜ முக்தி’ என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். படத்திற்குத் திரைக்கதை அமைத்து, வசனம் எழுதியிருந்தார் புதுமைப்பித்தன். பாகவதருடன் கதாநாயகியாக பானுமதி நடித்திருந்தார். சி.ஆர். சுப்பராமன் இசையமைத்திருந்தார். புகழ் பெற்ற திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரக் கச்சேரியும் படத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனாலும் படம் தோல்வியைத் தழுவியது. அடுத்து வெளியான அமரகவி டி.ஆர். ராஜகுமாரி, மதுரம், என்.எஸ்.கிருஷ்ணன், லலிதா, பத்மினி ஆகிய முன்னணிக் கலைஞர்கள் நடித்திருந்தும் தோல்விப் படமானது. தொடர்ந்து வெளியான சியாமளாவும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் நம்பிக்கையிழக்காமல் புது வாழ்வு படத்தைத் தயாரித்து தானே நடித்து இயக்கவும் செய்தார் பாகவதர். பாகவதர் வாழ்க்கையின் மீளாத சரிவிற்கு அப்படமே வழி வகுத்தது. அப்படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது.

தொடர்ந்து தமிழிசைக் கச்சேரிகள் செய்ய விழைந்தார். ஆனால் அதற்கும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சர்க்கரை நோயின் தாக்கத்தால் திடீரெனp பார்வை இழப்பும் ஏற்பட்டது. தங்கத் தட்டில் சாப்பிட்ட பெருமைக்குரியவர் தாங்குவதற்கு யாருமில்லாமல் தவித்தார். வாழ்ங்கு வாழ்ந்த கந்தர்வ கான இசைமாமணி இறுதிக் காலத்தில் உடல்நலிவுற்று, ஆதரிப்பார் யாருமில்லாமல் வறுமையில் வாடினார். மனம் வெறுத்துப் போய் தம் குல தெய்வமான தஞ்சை முத்துமாரியம்மன் கோவிலைச் சரணடைந்தார். அங்கேயே அமர்ந்து தம் வாழ்நாளைக் கழித்தார். பாகவதரின் நிலை பற்றிக் கேள்வியுற்ற நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவரைச் சந்தித்தார். அவர் நிலை கண்டு இரங்கி, “ வாருங்கள், உங்களுக்குக் கனகாபிஷேகம் செய்து வைக்கிறேன்” என்று வேண்டிக் கொண்டார். ஆனால் பாகவதர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ”நீங்கள் சொன்னதே போதும். செய்து வைத்தது மாதிரிதான். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!” என்று கூறி அதனை ஏற்க மறுத்து விட்டார்.

மன ஆறுதலுக்காக நண்பர் நாகரத்தினத்துடன் தீர்த்த யாத்திரை மேற் கொண்டார் பாகவதர். 1959 ஏப்ரல் மாதம் புட்டபர்த்தி சென்று ஸ்ரீ சாயி பாபாவைத் தரிசித்தார். தனது மன வேதனைகளை, தான் படும் துன்பங்களை பாபாவிடம் சொன்னார். முக்காலமும் உணர்ந்த பாபா பாகவதரிடம், “இன்னும் ஆறுமாதங்களில் எல்லாம் முடிந்து விடும்” என்றார். அது கேட்டு மனம் நெகிழ்ந்த பாகவதர் தான் பார்வையற்று இருப்பதால் பாபாவை தரிசிக்க முடியவில்லை என்றும், ஒரு சில நிமிடங்களாவது அவரைத் தரிசிக்க தனக்கு பார்வை அளிக்குமாறும் வேண்டிக் கொண்டார். பாபாவும் மனமிரங்கி, தனது கைகளால் பாகவதரின் கண்களைத் தடவ, பாகவதருக்குத் தற்காலிகமாகp பார்வை கிடைத்தது. கண்குளிர பாபாவை தரிசனம் செய்தார். பாகவதரிடம் “போதுமா?” என்று பாபா கேட்க அவரும் மனத் திருப்தியுடன் “போதும்” என்று சொல்ல, பாகவதரின் பார்வை மீண்டும் வழக்கம் போல் ஆனது. பாபாவை தரிசித்த மனத் திருப்தியில் மகிழ்வுடன் ஊர் திரும்பினார் பாகவதர்.

சத்ய சாய் பாபா


ஆனால் பாபாவின் வாக்கு பலித்தது. சரியாக ஆறு மாதங்கள் கழித்து, 1.11.1959 அன்று பாகவதர் காலமானார். வாழ்வாங்கு வாழ்ந்து, தமிழ்த் திரையுலகின் சிம்மாசனத்தில் 30 ஆண்டுகாலம் இசையரசராக வீற்றிருந்து, பட்டி, தொட்டிகளிலெல்லாம் கர்நாடக இசை வெள்ளம் பெருக்கெடுத்தோட வைத்த பெருமைக்குரிய பாகவதர் மறைந்தார்.

நன்றி : தென்றல் மாத இதழ், அக்டோபர் 2010 இதழ்

********

Advertisements

9 thoughts on “பாபாவும் பாகதவரும்

 1. அய்யா,
  பாபாவின் அறையில் இருந்து கோடி கோடியாக பணம் எடுத்த பின்னும் உங்கள் நம்பிக்கை அதே போல இருக்கிறதா? பாகவதருக்கு மரணத்தை அறிவித்த மகான் தன் மரண கணக்கில் தவறியது ஏன் ?

  1. enakku ellaa nalla saint/makangal meethum nambikkai ullatthu. neengal Venu Srinivasanin interviewaip paarkavillaiyoo?

   makan than marana seithai nichayikkavillai enbathai neengal eppadi ariveergal? Iraivanin siththathai manithan engganam unara mutiyum?

   avar avathara purutanaka vandar. sila pala nalla kariyangalai seithar. sendrar. mutinthal naamum nallathu seivom.illaavittaal nallathu seibavarkali kinda keli seithu pazikkamal avathu iruppoom.

  2. உங்கள் கேள்விக்கு ஜக்கிவாசுதேவ் பதிலையே விளக்கமாகத் தருகிறேன்

   —- சாய் பாபாவின் படுக்கை அறையிலிருந்து, 12 கோடி ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டது…அவரது உயரத்துக்கு, 12 கோடி ரூபாயெல்லாம் ஒன்றுமே இல்லை. அந்த அறையில் எவ்வளவு இருந்தது என்று, அவருக்கே தெரிந்திருக்காது.
   பக்தர்கள் கொடுத்ததை, அப்படியே வாங்கி ஓரமாக வைத்திருக்கிறார். அந்தப் பணத்தைப் பதுக்கி, அவர் என்ன செய்யப்போகிறார்? அவரைத் தேடி கோடிகள் கொட்டப்பட்டபோது, எதற்கு இந்தச் சிறிய தொகையை லட்சியம் செய்யப்போகிறார்! அவர் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது தான் உண்மை!—

   ஆதாரம் – தினமலர் 17-07-2011- http://www.dinamalar.com/News_Detail.asp?Id=276611

 2. நல்ல பதிவு.
  பாபாவின் அற்புதங்கள் பலவும் என்வாழ்வில் நடந்துள்ளது. பாபா இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றார். அவருடன் தற்போதும் சிலரால் பேசவும் முடியும்.

 3. பாபா உண்மையில் மிகப் பெரிய மகான்.அவரின் அடுத்த அவதாரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அவரது கோடானு கோடி பக்தர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s