சங்கர ஜயந்தி

ஆதிசங்கரர்

இன்று ஸ்ரீ ஆதிசங்கரர் அவதரித்த தினம். சாட்சாத் ஸ்ரீபரமேஸ்வரனின் அம்சமாக ஆதிசங்கரர் அவதரித்தார் என்கிறது சங்கர விஜயம். வியாசர், சுகர், கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர் என்ற வரிசையில் வந்தவர் ஸ்ரீ ஆதிசங்கரர். சுக ப்ரம்ம மகரிஷியின் அத்யந்த சீடரான கௌடபாதரின் சீடர், ஸ்ரீ கோவிந்த பகவத் பாதர். இவரே ஆதிசங்கரரின் குரு.  இந்துமதத்தைத் தழைத்தோங்கச் செய்யவும், அத்வைத ஞானத்தை உலகுக்கு உணர்த்தவுமே அவரது அவதாரம் ஏற்பட்டது. இவர் வாழ்ந்த காலம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் உண்டு. சைவ சமயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதுடன் ஷண்மதங்களான காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்பனவற்றை ஸ்தாபித்து மக்களிடையே சமய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.

 தமிழகம் உட்பட இந்தியா முழுதும் புண்ணிய தல யாத்திரைகள் மேற்கொண்டார். பல்வேறு நதிகளில் நீராடினார். அவர் தவம் செய்த கொல்லூர் தலம் மிகப்பெரும் அதிர்வலைகள் உடையது. கொல்லூர் சென்று ஸ்ரீ முகாம்பிகையைத் தரிசத்து வந்த ஒவ்வொருவரது வாழ்விலும் நிச்சயம் அந்த தரிசனத்துக்குப் பின்னான வாழ்க்கை பெரும் திருப்புமுனையானதாக இருக்கும் என்பது கண்கூடு. அதுபோல அவர் ஸ்தாபித்த சிருங்கேரி தலத்திலும் ஒருவர் அதிக பட்ச அதிர்வை உணர முடியும். ஸ்ரீ சாரதா தரிசனம் ஒருவரது வாழ்வில் ஞானம் அடைய மிகப் பெரும் உந்துதலாக இருக்கும் என்பது உண்மை. திருவானைக்காவில் ஸ்ரீசக்ர வடிவிலான தாடங்கப் பிரதிஷ்டை செய்ததும் ஆதி சங்கரரே!

ஸ்ரீ சங்கர பகவத் பாதர்

மேற்கில் துவாரகாவிலும், வடக்கே பத்ரியிலும், கிழக்கே பூரியிலும், மத்தியில் சிருங்கேரியிலும் தெற்கே காஞ்சியிலும் பீடங்களை நிறுவினார் ஸ்ரீ சங்கரர். காஞ்சியில் காமகோடி பீடத்தை நிறுவி அவரே அதன் முதல் குருவாக இருந்தார். தனக்குப்பின் ஆச்சார்யராக ஸ்ரீ சுரேஸ்வரரை நியமித்தார். ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்து ஆலய நிர்மாணம் செய்வித்தார். ஸ்ரீகாமகோடி பீடத்தில் தான் கைலாயத்திலிருந்து கொண்டு வந்த ஐந்து ஸ்படிக லிங்கங்களில் ஒன்றான யோக லிங்கத்தை ஸ்தாபித்தார்.

ஸ்ரீ சங்கரர் சமயப் பொறை உடையவர். “தன ஆகர்ஷண யந்திரத்தை” திருப்பதியில் பிரதிஷ்டை செய்து “விஷ்ணு பாதாதி கேஸாந்த ஸ்தோத்திரத்தை” அருளியதும் அவர்தான். கனகதாரா ஸ்தோத்திரம் பாடி பரம ஏழைக்கு தங்க மாங்கனி மாமழையாகப் பெய்விக்க வைத்ததும் அவர்தான்.  அவர் இயற்றிய விவேக சூடாமணி மிக முக்கியமானது. “பிரச்னோத்திர ரத்ன  மாலா, சுப்ரமண்ய புஜங்கம், ஸ்ரீ நரசிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம், பிரம்ம சூத்ர பாஷ்யம் உட்பட பல நூல்களை ஸ்ரீ சங்கரர் எழுதியிருக்கிறார். ஸ்ரீஆதி சங்கரர் காஞ்சியிலேயே சித்தி அடைந்ததாக அவரது வரலாறு குறிப்பிடுகிறது.

ஸ்ரீ சங்கரர்

இன்று சர்வதேச அன்னையர் தினம். கணவனை இழந்து, தனக்கு என்று இருந்த ஒரே ஆதரவையும் உலகம் உய்வதற்காகத் துறந்து, ஸ்ரீ ஆதிசங்கரை சந்யாசம் ஏற்றுக் கொள்ள அனுமதித்து, உலகுக்கு ஓர் உன்னத புருடரைத் தந்த அன்னை, ஸ்ரீ ஆதிசங்கரரின் தாய் ஆர்யாம்பாளைப் போற்றுவோம்.

ஓம் ஸ்ரீ ஆர்யாம்பிகாயை நம!

Advertisements

4 thoughts on “சங்கர ஜயந்தி

  1. The great Sankara Bhagavat Pada was instrumental in saving India from being disintegrated by unifying all sects of worship and evolving a common code.Though his age is officially proclaimed to be 788 A.D.,traditional history of Four mutts among the five prominent mutts place it in 509 B.C.
    His Date is not important,only his message and the need to have devotion to Guru and humility.Humility is the need of the hour.Lets pray to Sri.Sankara to grant us humility and the right knowledge

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s