பாபா, மனிதரா, அவதார புருடரா?

பாபா

இன்று காலை 7.40 மணி அளவில் ஸ்ரீ சத்யசாய் பாபா மறைந்தார். பல நாட்களாகவே அவர் நோயுற்றிருந்த போதும், அவர் மீண்டு விடுவார் என்பதே பக்தர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கைகளைப் புறந்தள்ளி, எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி தமது 86ம் வயதில் பாபா காலமானார்.

எல்லோரது நோயையும் தீர்க்கும் பாபா, ஏன் தன் நோய்களைத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை? பாபா ஒரு பொய்யர் என்றெல்லாம் பல “அறிவு ஜீவிகள்” குரல் கொடுத்தனர். மக்கள் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட எந்த ஒருவரும் சுயநலத்திற்காக எந்தச் செயல்களையும் செய்யமாட்டார்கள். அப்படிச் செய்தால் அவர்கள் உண்மையான சேவையாளர்கள் இல்லை. இது அன்னை தெரசா முதல் மாதா ஸ்ரீ அமிர்தானந்த மயி வரை அனைவருக்கும் ஒன்றே!

அது போலவே தான் பல ஆற்றல்கள் கைவரப் பெற்றிருந்தாலும், புவியில் மானுடராகப் பிறக்கும் ஒருவர் எந்தெந்த விதிகளுக்குட்பட்டு நடக்க வேண்டுமோ அதன்படியே பாபா நடந்தார். பலரது உயிரை மீட்டுத் தந்த ஆற்றல் மிக்க பாபா, தன் உயிரையும் மீட்டுக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்ய விரும்பவில்லை.

மானுடராக அவர் வாழ்ந்தாலும் அவர் ஒரு அவதாரபுருடர் என்பதை அவரை அண்டியவர்கள், அவரது அருள் பெற்றவர்கள் உணர்ந்தனர். கடவுளாகக் கருதி வழிபட்டனர். ஆனால் சில ‘அறிவுஜீவிகளோ’ அவரி ’மேஜிக்’ செய்பவர் என்றும், ஏமாற்றுப் பேர்வழி என்றும் தங்கள் ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர்.

எந்த ’மாஜிக்’ ஆசாமிக்கு உலகம் பூராவும் பக்தர்கள் இருக்கின்றனர்? எந்த ’மேஜிக்’ ஆசாமி 70 ஆண்டுகளுக்கும் மேலாய் மேஜிக்கைச் செய்து கொண்டே இருக்க முடிந்தது? எந்த மேஜிக் ஆசாமியால் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் முன் கூட்டியே சொல்ல முடிந்தது?

இருந்த இடத்தில் இருந்து கொண்டே தமது மேதாவிலாசத்தைக் காட்டிய அறிவு ஜீவிகள், தங்கள் பங்கிற்கு பாபாவிடம் ஆரம்பத்தில் தொண்டராக இருந்து பின்னர் அந்நிய மதமாற்ற சக்திகளுக்குத் துணை போய், பாபாவை வசைபாடிய, அவரைக் குறை சொன்ன “அன்பர்களை” துணைக்கு அழைத்துக் கொண்டனர்.

சாயி

சத்ய சாய் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் என்று பாபா செய்திருக்கும் அறப்பணிகள் ஏராளம், ஏராளம். எத்தனையோ கோடிக்கணக்கான ஏழை மக்கள் அவரது அறப்பணிகள் மூலம் பயன்பெற்றிருக்கின்றன. அவரது நிறுவனங்களில் கல்வி பயின்றும், சிகிச்சை பெற்றும் பலனடைந்துள்ளனர்.

பாபா செய்யும் அற்புதங்களை வெறும் ’மேஜிக்’ என்று சொல்கின்றனர். சொல்பவர்களால் அந்த மேஜிக்கைச் செய்து காட்ட முடியுமா? சும்மா வெறும் கையில் விபூதி வரவழைப்பதல்ல. நோயை குணமாக்குவது, ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றுவது, இறைக் காட்சி அளிப்பது என்பதை ’மாஜிக்’ என்று பிதற்றுபவர்களால் செய்து காட்ட முடியுமா?

தான் ஏன் இந்த அற்புதங்களைச் செய்கிறேன் என்றும் பாபா சொல்லியிருக்கிறார். ”ஆண்டவனை நோக்கி உங்களை ஈர்ப்பதற்கான ஒரு துருப்புச் சீட்டுதான் இந்த அற்புதங்கள்” என்று சொல்லியிருக்கிறார் பாபா. இதை உணராதவர்கள் அவரை குறைத்து மதிப்பிடுகிறார்கள்.

பாபா, இக்காலத்தில் பல்கிப் பெருக்கியிருக்கும் மூச்சு தியானப் பயிற்சி ஆசாமிகளைப் போன்றவரல்லர். அவர் ஒரு அவதார புருடர் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் இருக்கின்றன.  இந்த மூச்சுப் பயிற்சி ஆசாமிகள் அந்த முத்திரை, இந்த முத்திரை, அந்த ஆனந்தம், இந்த ஆனந்தம், அந்தக் கலை, இந்தக் கலை, பயிற்சி என்று பணம் கறப்பதில் மட்டுமே குறியாக இருப்பபவர்கள். இவர்களால் தற்காலிக மன அமைதியை ஏற்படுத்தித் தர இயலுமேவிர, “ஆன்ம அனுபூதியையோ” அல்லது “ஆன்ம வளர்ச்சி” மற்றும் ”ஆன்ம உயர்வை”யோ உண்டாக்கித் தர இயலாது.

யாரோ ஒரு குரு (?) உங்களுக்கு சமாதிப் பயிற்சி அளிக்கிறேன் என்கிறார். சமாதி என்றால் என்ன அர்த்தம்? சமம் + ஆதி என்பது பொருள். ஒரு ஆன்மா, அதன் ஆதி நிலைக்குச் சமமான நிலையை எய்துவதே சமாதி. அதை யாராவது அளிக்க முடியுமா? அல்லது பெறத்தான் முடியுமா? தானாக உணர்ந்து அடைவது அல்லவா சமாதி. நம் மகான்களும், ஞானிகளும் அப்படித்தானே சமாதி அடைந்தனர். ஆனால் இந்தக் கால மூச்சுப் பயிற்சி ஆசாமிகள் என்னென்னவோ பிதற்றி மக்களை ஏமாற்றுகின்றனர். பதஞ்சலி யோக சூத்திரத்திலிருந்து சிலவற்றை அரைகுறையாக அறிந்து கொண்டு, அதை சற்றே நவீனமாக்கி, தங்களது பக்தர்களுக்கு சொல்லித் தருகின்றனர். நிரந்த அமைதியை, நிம்மதியை, ஞானத்தை, ஆனந்தத்தைப் பெற விரும்புபவர்களும் அதை முழுமையாக நம்பி ஏமாறுகின்றனர். ஆனால் முழுமையான அமைதியை இந்த ஆசாமிகளால் தர முடிவதில்லை.

பாபாவைப் பற்றி ஆரம்பித்த இந்த பதிவு திசை மாறிச் செல்வதை உணர்கிறேன். வேண்டாம். பாபா மனிதரா, அவதார புருடரா என்பதை சில சம்பவங்கள் மெய்ப்பிக்கின்றன.

தான் ஷிர்டி பாபா அவதாரம் என்பதை தனது 14ம் வயதில் வெளியிட்டார் பாபா. ஷிர்டி பாபாவோடு தொடர்புடைய ஒரு சமஸ்தான ராணியைச் சந்தித்தபோது, அந்த ராணி சிறுவயதில் ஷிர்டி பாபாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வைத்திருந்ததை நினைவூட்டி கேட்டு வாங்கிப் பெற்றார்.  அது மட்டுமல்லாமல்  ஷிர்டி பாபாவின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளை தெள்ளத் தெளிவாக நினைவு கூர்ந்ததுடன் ஷிர்டி பாபாவுடன் தொடர்பில் இருந்த சிலரையும் சந்தித்து தான் ஷிர்டி பாபாவின் மறுபிறவிதான் என்பதை நிரூபித்தார்.  தங்களது உடல்தான் வேறு வேறு என்றும் ஆன்மா ஒன்றுதான் என்றும் விளக்கியிருக்கிறார் பாபா.

மேலும்  சாதாரண புலன்களால் இதுபோன்ற விஷயங்களை ஆராய இயலாது” என்று குறிப்பிட்ட பாபா ”எங்கே விஞ்ஞானம் முடிவுறுகிறதோ அங்கே மெய்ஞ்ஞானம் தொடங்குகிறது” என்றும் சொன்னார்.

பாபா

ஸ்ரீ பாபாவின் நாடி ஜோதிடக் குறிப்பு கீழ்கண்டவாறு அவர் அவதாரம் பற்றிச் சொல்கிறது.

………………………………………………………………

அழகுமகன் வழிவழியாய் யுகத்திலேதான்

சுந்திரமாய்க் கிருட்டிணனின் அவதாரத்தில்

சுழற்சிபல வித்தைகளும் விந்தை கூட

விந்தை பல புரிந்துபின் அவதாரம் தான்

கோதில்லா ராமனவன் கடவுளாக

பாடபல நிலைகளுடன் புண்ணியங்கள்

பல படைத்து சிர்டி சாயிபாபா

பாபாவின் அவதார புருடனாக

பக்குவமாய் அவதரித்தான் சாயிபாபா

—————————————–

—————————————-

என்றெல்லாம் வரும் பாடலில் பாபா பல்வேறு அற்புதங்கள் புரிந்து, மக்கள் குறை தீர்த்து மறுபிறவியில் பிரேம சாயியாக அவதரிப்பார் என்றும் குறிப்பிடுகிறது.

அருள்மகனே அழிவுநிலை ஏதுமில்லா

ஆயுளதை வளர்த்திடவும் வல்லவன்தான்

பொருள்முதலாம் அறநிலைகள் பலவும்காட்சி

புண்ணியமாய் வரும்பிறவி அடுத்த சென்மம்

பிறவியிலே பிரேமசாயி அவதாரமாக

பெருங்கடவுள் நிலைவாழ்வு லீலை பல்வார்

இறவாத வழிகாட்டி சத்திய செய்கை

ஏகாம்பர மாகவே வாழி முன்னே

என்று குறிப்பிடுகிறது.

இதன் மூலம் ராமனின் அவதாரமாகத் தோன்றிய ஷிர்டி பாபாவின் மறுபிறவியே புட்டபர்த்தி பாபா என்பதும், அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் சக்தியோடு இவ்வுலகில் அவதரித்துள்ளார், மறுபிறவியில் அவர் பிரேமசாயி ஆக அவதரிப்பார் என்பதும் தெரிய வருகிறது.

ஸ்ரீ சாயி பாபா

தான் மறுபிறவியில் “பிரேம சாயி”யாக மைசூருக்கு அருகில் உள்ள கிராமத்தில் அவதரிக்கப் போவதாக பாபா முன்னரே குறிப்பிடுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல; பாபாவின் முற்பிறவி அன்னையான ஸ்ரீமதி ஈஸ்வராம்பா சில வருடங்களுக்கு முன்னால் மீண்டும் மறுபிறவி எடுத்துள்ளார். அவர் வயிற்றிலேயே பாபா மீண்டும் “பிரேம சாயி” ஆக அவதரிக்க இருக்கிறார். இதை பாபா குறிப்பிட்டுள்ளது மட்டுமல்ல; பிரேம சாயி அவதாரத்தில் அவர் க்ருஹஸ்தராகவும் தோன்ற இருக்கிறார். மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும் – வசந்த சாய்

வசந்த சாய் அம்மா

திருமதி வச்ந்த சாய் அம்மா அவர்கள் முற்பிறவியில் ராதாவாகப் பிறந்தவர்கள் என்று பாபா சொன்னதாக அவர் தெரிவித்திருக்கிறார்.   வசந்த சாய் பேட்டி  இங்கே…

பாபாவின் ஆசிர்வாதங்களுடன் வசந்த சாய்க்கு எழுதப்பட்ட கடிதம் அவரது மறுபிறவியை, அதில் அவர் பிரேம சாயியாக அவதரிக்ககப் போவதை, வசந்த சாய் அம்மா “பிரேமா”வாகப் பிறக்கப் போவதைக் கூறுகிறது.

பாபாவின் கையெழுத்து + கடிதம்

96 வயதில் இறப்பேன் என்று சொன்ன பாபா ஏன் பத்தாண்டுகள் முன்னால் தனது உடலை உகுத்தார் என்றால் விரைவிலேயே பிரேம சாயி அவதாரம் எடுத்து மேலும் மக்கள் பணியை முழு வீச்சில் செய்யத்தான்.

எனவே பாபாவின் மறைவால் கலங்கும் பக்தர்கள் வருந்த வேண்டாம். விரைவில் பாபா பிரேம சாயியாக அவதரிப்பார். அவரை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள்.

ஓம் சாயிராமாய வித்மஹே

ஆத்ம ராமாய தீமஹி

தந்நோ பாபா ப்ரசோதயாத்!

******************

ஒரு வித உணர்ச்சி வசப்ப்பட நிலையில் இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன். எழுத்து, சொற் பிழைகள் இருக்கக் கூடும். இது இந்த வலைப்பூவின் 150வது பதிவும் கூட.

Advertisements

74 thoughts on “பாபா, மனிதரா, அவதார புருடரா?

 1. புட்டபா்த்தி பாபா ஒரினச்சேர்கையாளா் தான் இருந்த அறையில் எதற்காக தங்க கட்டிகளை பதுக்கி வைக்கவேண்டும். மண்ணுக்கு அடியில் எடுத்த பொருளை எதற்காக பதுக்க வேண்டும். சீரடி சாய் பாபா ஒருவரே. அவரின் பெயரைச்சொல்லி மறுஅவதாரம் என்று சொல்லும் இந்த மாதிரி ஏமாத்துகார்களை நம்பவேண்டாம். உங்களின் பகுத்தறிவை பயன்படுத்துங்கள்
  இப்படிக்கு
  சீரடி சாய்பாபாவின் தொண்டன்
  வீரசேகா்

  1. வீரசேகர்..

   உங்கள் கருத்திற்கு நன்றி.

   இந்தக் கட்டுரையில் உங்கள் கேள்விகளுக்கான விளக்கம் இருக்கிறது. அவசியம் படியுங்கள்.. தெளியுங்கள்.

   http://omsakthionline.com/?aanmigam=%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%AA&publish=4685

  1. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் அறிந்த “அறிவு” அந்த ஆன்மீக அனுபவத்தை உண்ரத் தடையாக இருக்கிறது. ஆனால், அவர்களும் பாபாவின் குழந்தைகள்தானே. என்ன கொஞ்சம் முரட்டுக் குழந்தைகள். அதனால் பாபாவின் கவனம் அவ்ர்களுக்கு அதிகம் கிடைக்கும் என்பதால் ஒருவிதத்தில் கொடுத்து வைத்தவர்கள்.

   வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

 2. thankal pathivu nanraka ullathu. nari.melum oru vidayam solkiren. pakthi kadavulukkum manithanukkum idaipaddathu. kadavulai patti pakthanukku therium. pakthani patti kadavulukku puriyum. anal ungal pakthiyai paktharallothoridam kallanthu uriyaduvathu unkal pakthiyai kurikum.kurai unkalil irunthal thiruthikollunkal avarkalil enral viduvidu swami mel paarathai podungal. ellamm nanrakave naddakkum. Sairam

 3. என்னவோ சொல்றீங்கன்னு புரியுது… ஆனா என்னன்னு தான் புரியல…. குருவருள் எல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது….

  நன்றி… வணக்கம்

  1. //குருவருள் எல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது//

   உண்மை. உண்மை. இதற்கு மேல் நான் என்ன செல்வது? அதான் மூலத்தைப் பிடித்து ஜெயக்கொடி நாட்டி விட்டீர்களே! அப்புறம் என்ன? வருகைக்கும் கருத்திற்கும், இனிப்பிற்கும் மிக்க நன்றி ஐயா…

  1. உண்மை. உண்மை. முக்காலும் உண்மை. ஆனால் இது பலருக்குப் புரியவில்லையே ஐயா. வசை பாடத் தெரியுமளவிற்கு, உண்மைகளைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லையே! என்ன செய்வது? இதுவும் கடந்து போகும் என்று நம்புவோம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

 4. ஐயா, கடவுளுக்கு ஆவதாரமெடுக்கும் அவசியமில்லை. இன்று மக்களுக்கு கடவுளைப்பற்றி, சமயத்தைப்பற்றி தெரியவில்லை, அதாவது மக்கள் அறியாமையிலுள்ளனர். எவனொருவன் ‘அணுவின் அளவு கடவுளின் அருளை பெற்றால் ஐந்து மூர்த்திகளின் தொழில்களை செய்யலாம்’. மற்றும் இறப்பு என்பது நமது உடலை விட்டு கடவுள், கடவுளின் நிலைகள் வெளியேறுவதே,அதன் பின் ஆன்மாவை எமதர்மராஜனின் தூதுவரகள் எடுத்து செல்வார்கள்.பொய் பேசுவது, கொலை செய்வது,திருடுவது, சராயம்குடிப்பது, காமம்{இவை எட்டு வகையுள்ளது} தனது தேவைக்கு மேல் பணம், சொத்து சேர்ப்பதும் காமமே இவை ஐந்தும் பஞ்சமஹா பாவங்கள் ஆகும்.இப்படிப்பட்ட பாவிகள் எழு விதமான நரகத்தில் அல்லல் படுவார். என்கிறது பழந்தமிழ். இக்கருத்துகள் தமிழ் நூற்களிலுள்ளது.
  கடவுளை நம்பாத நாத்திகன நல்லவர்களே, தாங்களை போன்றவர்கள் ஆதியும், அந்தமல்லா, இறவா,பிறவா கடவுளையும், கடவுளின் நிலைகளை,தெய்வங்களையும் அசிங்கப்படுத்துவதும், அவமானபடுத்துவதும் உங்களுக்கோ உங்களின் வாரிசுகளுக்கோ நல்லது இல்லை. ஏன் பணத்திற்க்கா கடவளை கொச்சைப்படித்தி மீளா ஏழ் நரகத்தில் விழ வேண்டும்?

 5. ஐயா, கடவுளுக்கு ஆவதாரமெடுக்கும் அவசியமில்லை. இன்று மக்களுக்கு கடவுளைப்பற்றி, சமயத்தைப்பற்றி தெரியவில்லை, அதாவது மக்கள் அறியாமையிலுள்ளனர். எவனொருவன் ‘அணுவின் அளவு கடவுளின் அருளை பெற்றால் ஐந்து மூர்த்திகளின் தொழில்களை செய்யலாம்’. மற்றும்
  இறப்பு என்பது நமது உடலை விட்டு கடவுள், கடவுளின் நிலைகள் வெளியேறுவதே,அதன் பின் ஆன்மாவை எமதர்மராஜனின் தூதுவரகள் எடுத்து செல்வார்கள்.பொய் பேசுவது, கொலை செய்வது,திருடுவது, சராயம்குடிப்பது, காமம்{இவை எட்டு வகையுள்ளது} தனது தேவைக்கு மேல் பணம், சொத்து சேர்ப்பதும் காமமே இவை ஐந்தும் பஞ்சமஹா பாவங்கள் ஆகும்.இப்படிப்பட்ட பாவிகள் எழு விதமான நரகத்தில் அல்லல் படுவார். என்கிறது பழந்தமிழ். இக்கருத்துகள் தமிழ் நூற்களிலுள்ளது.
  கடவுளை நம்பாத நாத்திகன நல்லவர்களே, தாங்களை போன்றவர்கள் ஆதியும், அந்தமல்லா, இறவா,பிறவா கடவுளையும், கடவுளின் நிலைகளை,தெய்வங்களையும் அசிங்கப்படுத்துவதும், அவமானபடுத்துவதும் உங்களுக்கோ உங்களின் வாரிசுகளுக்கோ நல்லது இல்லை. ஏன் பணத்திற்க்கா கடவளை கொச்சைப்படித்தி மீளா ஏழ் நரகத்தில் விழ வேண்டும்?

 6. பாபா ஏழைகளுக்கு உதவி செய்தார் ….
  உணவு வழங்கினார் …
  மருத்துவ மனைகள் கட்டினார் …
  இலவச கல்வி கொடுத்தார் ….
  மக்களுக்கு நல்லவற்றை போதித்தார் …
  எல்லாவற்றையும் பாராட்டலாம் … ரொம்ப நல்ல விஷயம் ..

  ஆனால் …. தான் ஒரு கடவுள் அல்லது கடவுளின் அவதாரம் என்று கூறுவது ஒரே நேரத்தில் கடவுள் மனிதன் இருவரையும் சேர்த்து கேவலப்படுத்தும் செயல் என்பது என் கருத்து ..

  மனிதன் என்பவன் இறைவனால் படைக்கப்பட்டவன் …
  ஒரு குழந்தையாக பிறந்து வாலிபனாக வளர்ந்து முதுமை அடைந்து மரணம் அடையக்கூடியவன் …
  இது மனிதன் மட்டுமல்ல … எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் …
  இறைவனை தவிர, அவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களும், பொருள்களும் அழியக்கூடியதே …
  இறைவன் மட்டுமே நிலையானவன் …..

  நீங்கள் சொல்வது என்ன ..?
  /// எத்தனையோ பக்தர்களை குணப்படுத்திய பாபா …
  தன்னுடைய நோயையையும் குணப்படுத்தி இருக்க முடியும் ….
  ஆனால் அதை செய்ய விரும்ப வில்லை ….. ////
  என் செய்ய விரும்ப வில்லை …??? செய்ய வேண்டியது தானே ..?
  இன்னும் 250 ஆண்டுகள் வாழ்ந்தால் இன்னும் நிறைய சேவைகள் செய்திருக்கலாமே ..?
  அதுதான் உண்மையான அற்புதம் ..!!!

  எந்த பயலும் வாய் பேச முடியாத வாறு செய்திருக்கலாமே ..???

  உலகத்தில் உள்ள அம்புட்டு பயலுகளையும் புட்டபர்த்திக்கு கூட்டி வந்திருக்கலாமே ..???
  ம.மோ . சிங். மட்டுமல்ல … ஒபமா , பான் கி மூன், பில் கேட்ஸ். எல்லா பயலுகளும் வந்து மண்டி போட்டிருப்பானே ..??
  நல்ல சான்ஸ் … மிஸ் பண்ணிட்டீங்களே ..???

  சரி …. சேவை செய்தார் என்று ஏற்றுக்கொள் வோம் …
  கையில வாயில இருந்தெல்லாம் பவுடர், சோப்பு இதெல்லாம் எடுத்து தான் சேவை செய்யனுமா .. அய்யா….????
  அதெல்லாம் எடுக்காம சேவை செய்ய முடியாதா …??
  அன்னை தெரசா போன்றவர்கள் எல்லாம் இப்படி தான் சேவை செய்தார்களா …???
  அவர்கள் எல்லாம் சேவை செய்ய வில்லையா ….???

  ரொம்ப கொடூர மாகவும் வேதனையாகவும் உள்ளது உங்கள் பதிவு…
  நாமெல்லாம் 21 ம் நூற்றாண்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறீர்கள் ..
  வாழ்க உங்கள் ஆன்மிகம் … வளர்க உங்கள் சேவை ..

  1. உங்கள் புரிதல் மிக அருமை. ம்ம்ம்… ஏன் உயிர் பிழைத்திருக்கக் கூடாது என்கிறீர்கள்? இதே கேள்வியை சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணரைப் பார்த்துக் கேட்டார். பக்தர்கள், ரமணரைப் பார்த்துக் கேட்டார்கள். ஏன், யோகி ராம்சுரத்குமாரிடம் கூட இதே கேள்வி கேட்கப்பட்டது. அவர்கள் யாரும் இயற்கை நியதிகளை மீற முடியாது என்றுதான் கூறினார்கள்.

   கடவுள் அவதாரம் என்பதற்கும், கடவுள் என்பதற்கும் நிரம்பவே வேறுபாடு உள்ளது. அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை போலும். ’அவதாரம்’ என்றால் இறங்கி வருவது என்பது பொருள். கடவுள் அம்சத்துடன், அவரது அருளுடன் பிறப்பவர்கள் அவதாரங்கள். அவர்களே மகான்களாக, ஞானிகளாக, யோகிகளாகப் போற்றப்படுகிறார்கள்.

   கடவுளே பூமிக்கு இறங்கி வருவதில்லை. கடவுள் தனது பிரதிநிதிகளை பூமிக்கு அனுப்பி வைக்கிறார். இதைத் தான் நான் சொல்லியிருக்கிறேன்

   பாபா தன்னை ஷிர்டி பாபாவின் அவதாரம் என்று தான் சொன்னார். அவரது பக்தர்கள் கண்களுக்கு அவர் கடவுளாகத் தெரிந்தார். எப்படி தேவ குமாரனான இயேசு, தனக்கும் மேலான கடவுளான பிதாவை வணங்கிய இயேசு, பலரால் கடவுளாகப் போற்றப்படுகிறாரோ அப்படித்தான் பாபாவும், அவரது பக்தர்களால் போற்றப்படுகிறார். அது அவருக்கும் அவரது பக்தர்களுக்கும் இடைப்பட்ட விஷயம். நாம் ஏன் இதில் தலையிட வேண்டும், விவாதிக்க வேண்டும், கவலைப்பட வேண்டும்?

   நீங்கள் எனது மற்ற அனைத்துப் பதிவுகளையும் படித்திருந்தால் எனது “ஆன்மீகம்” என்ன என்பது பற்றிய புரிதல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். அதனால் பரவாயில்லை.

   ஆனால் ஒன்று…. நிகரற்ற அன்புடையவனும், அளவற்ற ஆற்றல் உடையவனும், மகா பிரபஞ்ச சக்தியுமான இறைவனுக்கு யாருமே நிகராக மாட்டார்கள். அந்த ர்டு சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உள்ள்து. சிலருக்கு அது கூடுதலாகச் செயல்படுகிறது. சிலருக்குச் செயல்படுவதில்லை அல்லது அவர்கள் அது பற்றி அறிந்திருக்கவில்லை. அவ்வளவுதான்.

   பாபா போன்றவர்களுக்கு அந்தச் சக்தி மிக அதிகமாக இருந்திருக்கிறது. அதன் மூலம் அவர் பக்தர்களை ஈர்த்திருக்கிறார்.

   அதுசரி, அற்புதங்கள் செய்வதை ஏன் விபரீதமாகப் பார்க்க வேண்டும். அஷ்டமாசித்திகள் மூலம் எத்தனையோ சித்தர்கள் வாழ்ந்த அற்புத பூமிதான் இது. நாம் அதை நம்பமுடியவில்லை என்பதற்காக அந்தச் ’சித்துக்கள்’ என்றாகி விடாது.

   இப்படி நம்முன் வாழ்ந்து மறைந்த பல மகான்களின், ஞானிகளின் சித்தாற்றல்களை எனது பல பதிவுகளில் அளித்துள்ளேன். பாபா மட்டுமல்ல; பலரும் இவ்வகைச் சித்தாற்றல்கள் செய்தவர் தான். இதில் என்ன தவறு இருக்கிறது.

   ஒருவர் அதனை ஏமாற்று வேலையாகக் கருதலாம். மற்றவருக்கு அது அருள் பிரசாதமாக இருக்கக் கூடும். இது அவரவர்களது அனுபவம், பக்குவத்தைப் பொறுத்தது. இதனால் ஒருவர் புத்திசாலி அல்லது முட்டாள் என்று நினைத்தால் அது தவறு.

   எனது பதிவில் பாபாவை நான் கடவுள் என்று கூறவில்லை. கடவுளின் அவதாரம் என்றுதான் கூறியிருக்கிறேன். இரண்டிற்கு வேறுபாடு உள்ளது. அதற்கு ஆதாரமாக பாபாவின் நாடி ஜோதிடக் குறிப்பையும் அளித்துள்ளேன். அதிலும் அவர் அவதார புருடன் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

   நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. கடவுள் என்பது வேறு; கடவுள் அவதாரம் என்பது வேறு. பாபா உட்பட ரமணர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், வள்ளலார், அய்யா வைகுண்டர், சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், யோகி ராம்சுரத் குமார், மாயம்மா, குழந்தையானந்தர், த்ரை லிங்க சுவாமிகள், ஞானானந்தர், சையது பாவா பக்ருதீன் அலி சாஹிப், சிவஸ்ரீ படே சாஹிப், சிக்கந்தர் சாஹிப், நாகூர் ஆண்டவர் – இவர்கள் எல்லோரும் அவதார புருடர்களே, இறைவனின் அருள் பெற்றவர்களே!

   இந்து மதத்தைப் பொறுத்த்தவரை குருவையே கடவுளாகக் கருதி வணங்கும் வழக்கம் உண்டு.

   குருர் பிரம்மா;
   குருர் விஷ்ணு
   குருர் தேவோ மஹேச்வரஹ
   குரு சாஷாத் பர ப்ரம்மா
   தஸ்மை ஸ்ரீ
   குரவே நமஹ

   என்பது வழிபாட்டு ஸ்லோகம்.

   இதன் படி பாபாவை தங்களது குருவாகக் கருதுபவர்கள் அவரை இறைவனாக வணங்குவதில் எந்தத் தவறும் இல்லை. அது இந்த மதத்தில் தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது தான்.

   அவ்வாறு வணங்க முடியாதவர்கள், வணங்க விரும்பாதவர்கள், பக்தர் அல்லாதவர்கள், நாத்திகர்கள் ( கடவுள் இருக்கலாம் அல்லது இல்லை எனக்கு அது தேவையில்லை. அதைப் அப்ற்றிய கவலையுமில்லை என்று மனச்சாடிப்படி ஒழுக்கமாக வாழும், அன்பும், கருணையும், இரக்கமும், தன்னபிக்கையும், உதவும் மனப்பான்மையும் கொண்ட, நான் மிக மிக மதிக்கும் உண்மையான நாத்திகர்களைச் சொல்கிறேன். இப்போது கூவிக் கொண்டிருக்கும் போலி நாத்திகர்களை அல்ல) இது பற்றி விவாதிக்கவோ, அல்லது கவலையுறவோ ஏதுமில்லை.

   ஏனென்றால் கடவுள், அற்புதம் போன்ற இந்த விஷயங்கள் பாபாவுக்கும் அவரது பக்தர்களுக்கும் இடையேயேனது. அவர்கள் விரும்பினால்ம் கடவுளாகக் கருதினால் வணங்கி விட்டுப் போகிறார்கள். இதில் மற்றவர்கள் கருத்துக் கூற என்ன இருக்கிறது? எனக்குப் பிடிக்கவில்ல, அதில் நம்பிக்கையில்லை என்றால் அதை ஒதுக்கு விட்டு நான் என் வழியில் சொல்லவேண்டுமே தவிர, அதை நம்புபவனிடம் போய் குடுமியை ஆட்டக் கூடாது.

   பாபா, மற்ற எல்லோரையும் பார்த்து, “பாவிகளே இங்கே வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன் என்று அழைத்தாரா? என்னை வணங்க வேண்டும் இல்லாவிட்டால் உங்களுக்கு நரகம் தான் என்றாரா? மற்ற மதத்தவரைத் தாழ்த்திப் பேசினாரா? வெறுத்தாரா? ஒறுத்தாரா? இல்லை, அவரது பக்தர்கள் தான் போவோர், வருவோர் எல்லோரையும் மல்லுக் கட்டி நோட்டீஸ் வெளியிட்டாரா? சொல்லுங்கள்.

   இந்த பக்தர்கள் கூட்டம் தானாகத் திரண்டது. பாபாவின் மீதுள்ள நம்பிக்கையால், அவரால் வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்களால் உண்டானது. இதை முட்டாள்ள் கூட்டம் என்று ஒருவன் சொன்னால்…. நான் என்ன பதில் சொல்வது?

   மீண்டும் சொல்கிறேன். பாபா கடவுள் அல்ல; கடவுளின் அவதாரம். ஆனால் இந்து மத முறைப்படி, அவரது பக்தர்கள் அவரைக் கடவுளாகக் கருதி வழிபடுவதில் தவறேதுமில்லை. அதை இந்து மதம் அனுமதித்தே இருக்கிறது. பிற மதங்களில் அந்த அனுமதி இல்லை என்பதற்காக இதைத் தவறு என்று ஒருவர் கூற முடியாது.

   மீண்டும் நன்றாக பதிவுகளை வாசியுங்கள்; நான் பாபாவை எந்த இடத்திலும் ”கடவுள்” என்று சொல்லவில்லை; அவதார புருடர் என்றுதான் சொல்லியிருக்கிறேன். நாடி கிரந்தமும் அதைத் தான் சொல்கிறது. கடவுள் என்பதற்கும், அவதாரம் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்து சமயத்தைப் பொறுத்தவரை மஹா விஷ்ணு கடவுள். இராமர் அவதாரம். இதைத் தான் கம்பனும் “மானுடம் வென்றதம்மா” என்று பாடினான். அது போல கிருஷ்ணரும் ஒரு அவதாரம். அவதாரங்களை பக்தர்கள் கடவுளாகக் கருதி வழிபடுகின்றனர். அது அவரவர்களது நிலைப்பாடு. அவ்வாறு வணங்குவதில் எந்தத் தவறுமில்லை. இயேசுவை தெய்வமாகக் கருதி வணங்குவது போலத் தான் இது. (இயேசுவே வணங்கிய கடவுள் ஒருவரும் இருக்கிறாரல்லவா? அவரே பரம பிதா. அவரே பரம் பொருள். அவரே அல்லா. அவரே மகாசக்தி. அவரே ஈஸ்வரன்)

   இந்த நீண்ட விளக்கம் சகோதரர் முபாரக்கிற்காக மட்டுமல்ல; அரைகுறையாக இந்தப் பதிவைப் படித்து விட்டு, அல்லது நான் ஆன்மீகம் பற்றி சென்ன சொல்லுகிறேன் என்பதைப் புரிந்து கொள்ளாமல் பின்னூட்டமிடும் மற்ற சகோதரர்களுக்கும் தான்.

   1. நண்பரே தங்கள் இவர் மீது உள்ள அதீத அன்பினால் இவரை கடவுள் என்றாலும் சரி. அவதார புருடர் என்றாலும் சரியே. இவரின் பல அற்புதங்கள் என்பவை தெருவில் மிக சாதாரணமான magic செய்யும் குரலி வித்தைக்காரன் செய்தவை. இவை நிரூபிக்கப்பட்டு youtube வலைத்தளத்தில் ஏராளமாக கிடைக்கும்.
    இவரை நீங்கள் புகழும் பொது ஆன்மீக பயிற்சி கொடுக்கும் மற்ற எல்லாரையும் காசு பிடுங்கிகள் என்னும் ரீதியில் பொத்தாம் பொதுவாக சொல்ல கூடாது.
    முக்கியமான விஷயம் ஆன்மிகம் என்பது சும்மா ரஜினி கை காண்பித்தால் வருவது போல காற்றில் வருவது அல்ல. அதற்க்கு பயிற்சியும் முயற்சியும் கண்டிப்பாக வேண்டும். வைராக்கியம் என்பது இதில் முக்கியம்.
    உங்க ஆள் தனக்கென்று சொந்த பெயர் கூட வைத்து வளர முடியாமல் ஏற்கனவே நல்ல விசயங்களில் மக்களை கவர்ந்திருந்த சீரடி ஸ்ரீ சாய்பாபா அவர்களின் பெயரை இரவல் பெற்று ஏமாற்றியவர் என்பதிலிருந்தே எப்படி பட்டவர் என்பது தேய்ந்துகொள்ளுங்கள்.
    மிக முக்கியம் இவரிடம் பாராட்ட பட வேண்டியது வேறு எந்த சாமியார்களிடமும் இல்லாத சிறப்புத்தன்மை மக்களிடமிருந்து வாங்கிய பணத்தை மக்களுக்காக முறையாக எந்த குழப்பமும் இல்லாமல் செலவு செய்தது.
    மற்றபடி இவரை கடவுள் என்றோ, அற்புத புருஷன் என்றோ சொல்ல ஒன்றும் இல்லை.

    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. வெறும் யு ட்யூப் வீடியோக்களைப் பார்த்து முடிவுக்கு வந்தால் எப்படி? அதுதான் பகுத்தறிவா?

     நான் பாபாவைச் சந்தித்ததில்லை.

     புட்டபர்த்தி சென்றதில்லை.

     அவர்களது கூட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை.

     சொல்லப் போனால் எனது ஞான குரு பகவான் ரமண மஹர்ஷி தான். இருந்தாலும் நான் பாபாவைப் போற்றி எழுதக் காரணம், அவரைக் கண்டு தரிசித்த மக்களைச் சந்தித்தபோது பெற்ற அனுபவங்கள் தான்.

     அவர்கள் பொய் சொல்லக் கூடியவர்கள் அல்ல. அவர்களில் சாதாரணர்கள் முதல் அரசின் உயர் பதவிகள் வகிப்பவர் வரை பலரும் உண்டு. அல்ப விஷயங்களுக்கு பொய் சொல்லி அவர்களுக்கு ஆவப்போவதும் ஒன்றுமில்லை.

     அவர்கள் பெற்ற பரவச அனுபவத்தை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த அனுபவத்தைப் பெற இயலாதவர்களுக்கு அல்லது அதற்கான தகுதி இல்லாத மற்றவர்களுக்கு அது முட்டாள் தனமாக இருக்கிறது.

     சரி.பாபா செய்வது வெறும் மேஜிக்காவே இருந்து விட்டுப் போகட்டுமே, அதனால் என்ன ஆகி விட்டது இப்போது? பாபாவை நம்புபவர்கள் முட்டாள்கள். யு ட்யூப் வீடியோ பார்ப்பவர்கள் எல்லாம் புத்திசாலிகள், அறிவுஜீவிகளா?

     அற்புதங்களை வைத்து மட்டுமே ஒருவரை எடை போடுவீர்களா? பாபா சொன்ன தத்துவங்கள் என்னவென்றாது அறிய வேண்டாமா?

     அவரைப் புரிந்து, அறிந்து, அவரது நூல்களைப் படித்து அவர் சொல்வது எதுவும் சரியில்லை என்று நிராகரித்தால் ஏற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து டிவி, இன்டர்நெட் பார்த்து ஒருவரது தகுதியை முடிவு செய்வது, சமீபத்திய எல்கஷனின் போது சில சேனல்கள் செய்ததைப் பார்த்து அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பொதுப் புத்தியைத் தான் காட்டுகிறது.

     சிந்திக்க வேண்டியது நானல்ல. எனது ஆன்மீகம் பற்றிய புரிதலை அறிய நீங்கள் மற்ற கட்டுரைகளையும் படித்தால்தான் விளங்கும்.

     பாபா மட்டுமல்ல; எனக்கு ரமணர், அய்யா வைகுண்டர், வள்ளலார், அன்னை, அரவிந்தர், சேஷாத்ரி, ஞானானந்தர், மாயம்மா, யோகிராம், இயேசு என எல்லோரும் ஒன்றுதான்.

     நம்மைப் போன்று, நம்மோடு வாழ்ந்து மறைந்ததாலேயே ஒரு அவதார புருடர் சாதாரணர் ஆகி விட மாட்டார். எல்லோரையும், எல்லாவற்றையும் ஒரே அளவுகோல் கொண்டு அளந்தால் அது தவறான முடிவுகளையே தரும்.

     தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி சிவா.

     பாபா செய்த சேவை மகத்தானது.

 7. தங்களது 150-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்,
  இவரை பற்றி நான் எதுவும் சொல்லவிரும்ப வில்லை…!!

  1. நன்றி சிங்கம். ஏன் ஏதும் கூற விரும்பவில்லை. நீங்கள் சொல்லாவிட்டால் வேறு யார் சரியாகச் சொல்வார்கள். அற்புதங்களை விடுத்து சேவைகளை வைத்துப் பார்த்தாலும் அவர் மகத்தான ஒருவர் தானே? எனிவே தாங்க்ஸ். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

 8. எதுக்கு அடுத்து அவதாரம் எடுக்கனும்!?
  எடுத்து என்னாத்த புடுக்கிட்டானுங்க இந்த மாதிரி கோமாளிங்க!?

  மத்திரத்துல எவனாவது பூசணிக்காய் வரவச்சு காட்டுங்களேன்!, எத்தனை வருசம் தான் மோதிரத்தையே கொடுத்து ஏமாத்துவிங்க!?

  1. அதுதானே, நல்ல கேள்விதான். பூசணிக்காய் என்ன ஏன் பலாப் பழத்தை வரவழைச்சுக் கொடுக்கலை. ஏன் மோதிரம், செயின் மட்டுமே தர்றாரு. சில பேருக்கு மட்டும் ஏன் விக்ரகம், செப்புச் சிலைகள்னு கொடுத்திருக்கிறாரு.ஒண்ணுமே புரியலையே! இதெல்லாம் எப்படி சாத்தியம்? நல்லா ’மாஜிக்’ பண்ணி கோடிக்கணக்கான பேரை அந்த ஆளு ஏமாத்திய்ருக்காரு அந்த ஆளு. நம்பினவங்க அத்தனை பேரும் முட்டா பசங்க. இல்லை, வால் பையன். என்னமோ போங்க, எல்லோரும் இப்படி முட்டாளா இருக்காங்களே, நான் என்ன பண்ணுறது. கடவுளே… கடவுளே… கட உள்ளே…. கட உள்ளே…

  2. Dai nathari unnamathiri Alugalukku Poosanikkai ellaida, Pallakkai ella, Palla Marathaiyee varavachalum ungala thiruthamudiyathuda… Unakkunu Oru pirachanai varum pothuthan Unga Ammavo Ellai Unnai Surri Eruppavargalo Seruppilaiye nalu pottu yethavuthu kovillukku alachittu pogum pothuthan da nathari theriyum. . Nee Yellam Anmeegatha pathi pesava Arugathai Ellathavan. Eni Entha Website Ulla Etti pathidathada Oodidu. Neril Kedaicha Konnuduva.

   1. ஐயா.. என் மீதுதான் என்ன ஒரு அன்பு உங்களுக்கு… ஐயா, என்னைக் கொன்று நீங்கள் ஏன் பாவம் கொலைகாரன் ஆக வேண்டும். நீங்கள்.பாட்டுக்கு நிம்மதியாக இருங்கள், இந்த மாதிரி வலைப்பூ பக்கம் வந்து படித்து விட்டு ஏன் டென்ஷன் ஆகிறீர்கள்? எனக்கு ஒரு கிராமத்துப் பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது – நாயை அடிப்பானேன் ——

    சரி, ”ஆன்மீகம்” என்றால் என்ன என்று பெரியவராகிய தாங்கள் விளக்கினால் அடியவன் கேட்டுக் கொள்கிறேன். இந்தச் சிறியவனை மதித்து பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.

    உங்கள் ’கருணை’ உள்ளத்துக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா. நிவீர் வாழ்க வளமுடன்.

    ஒரே ஒரு சந்தேகம். ’கார்த்திக்’ என்ற பெயரை விடுத்து உங்கள் மனம் கவர்ந்த ’சாயிபாபா’ பெயரைச் சூட்டிக் கொண்டு இருப்பது ஏனோ? அவ்வளவு பக்தியா?

    நல்லா இருங்க சாமி!

 9. ”ஆண்டவனை நோக்கி உங்களை ஈர்ப்பதற்கான ஒரு துருப்புச் சீட்டுதான் இந்த அற்புதங்கள்” என்று பாபா சொல்லியிருக்கிறார்” என நீங்களும் ஒப்புக் கொண்டு உள்ளீர்கள் – நன்றி. அப்படியென்றால், தனக்கு மேல் ஒரு பெரும் சக்தி (ஆண்டவன்) உள்ளான் என்றும், தான் ஆண்டவனால் படைக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதன்தான் என்றும் பாபாவும் ஒப்புக் கொண்டுதானே வாழ்ந்து இருக்கிறார்.

  தனது ஆசியால் ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்த்த பாபா, ஏன் தனக்கு ஏற்பட்ட நோய்க்கு வைத்தியம் பார்க்க முடியாமல் போனது??

  பாபா தனது வாழ்நாளில் சில நல்லதும் செய்தே இருக்கிறார். அதற்காக அவரை ஒரு மனிதர் என்ற முறையில் மட்டும் பாராட்டுகிறேன். நம் நாட்டில் ஏழைகள் அதிகம். காற்றில் இருந்து வெறும் விபூதியை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்ததற்கு பதிலாக, ஆளுக்கு ஒவ்வொரு கிலோ தங்கம் வீதம் ஒரு நாளைக்கு சுமார் வெறும் நூறு பேருக்கு கொடுத்து இருந்தால், நமது நாட்டின் பொருளாதாரமே எங்கோ போயிருக்குமே!!! எவ்வளவோ நல்லது செய்த பாபா இதை ஏன் செய்யவில்லை??

  (பின்குறிப்பு: உங்கள் பித்தத்தை தெளிய வைக்க என்னிடம் எவ்வளவோ கை மருந்து தயாராக இருக்கிறது. நாங்க ரெடி!! நீங்க ரெடியா??)

  1. அப்துல் ”கடவுள்” என்பது வேறு. கடவுள் அவதாரம் என்பது வேறு. அவதாரம் என்றால் இறங்கி வருவது என்று பொருள். கடவுளின் அம்சத்தோடு செயல்படும் ஒருவன் அவதார புருடனாகிறான். இறைவன் நினைப்பதை அவன் செயல்படுத்துகிறான், எந்த வித சுயநலமுமற்று.

   உங்களுக்குப் புரிகிற மாதிரி சொன்னால் காட்டுப்பாவா பள்ளிவாசல் – சையது பாவா பக்ருதீன் அலி சாஹிப், பிரான் மலை – சிக்கந்தர் சாஹி, நாகூர் – நாகூர் ஆண்டவர், சுல்தான் காதிர் சாஹிப், மவுண்ட் ரோட் தர்கா இவற்றில் சமாதி கொண்டிருப்பவர்கள் எல்லாம் இறையருள் பெற்ற அருளாளர்கள் தான். கடவுள் அருள் பெற்று, அவன் சித்தப்படி வாழ்ந்தவர்கள்.

   நண்பரே, ஒருவேளை நீங்கள் அவர்களை வணங்க முடியாவிட்டாலும் நான் மனப்பூர்வமாக அவர்களை வணங்குகிறேன். வாய்ப்புக் கிடைக்கும் போது செல்கிறேன். பாத்தியா ஓதச் சொல்லி வழிபடுகிறேன்.

   இறை இல்லாத இடம் ஏது சகோதரா. உங்களிடமும் இருக்கிறது, என்னிடமும் இருக்கிறது. பாபாவிடமும் இருக்கிறது. தன்னுள் இறை ஆற்றல் இருக்கிறது என உணர்ந்தவர் பாபா. நாம் உணராதவர்கள், அவ்வளவுதான் வித்தியாசம்.

   இறைவன் மிகப் பெரியவன்.

 10. முக்காலத்தையும் கணிக்க முடிந்த பாபா, “அமெரிக்காவின் உலக வர்த்தக இரட்டை கோபுரத்தை இடிக்கப் போகிறார்கள்” என்று முன்னெச்சரிக்கை செய்து இருக்கலாமே? சரி. உங்கள் பாபாவுக்கு அவ்வளவு தூரத்திற்கு சிக்னல் கிடைக்காமல் இருக்கலாம். “மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த போகிறார்கள்” என்று நமது தேசத்தை காப்பாற்றி இருக்கலாமே?? சரி. மும்பைக்கும் சிக்னல் வீக் என்றே வைத்துக் கொள்வோம். “ஆழிப்பேரலை (சுனாமி) அழிக்கப் போகிறது” என்று முன்பாகவே கூறி பல ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை காப்பாற்றி இருக்கலாமே?? சரி. அதுவும் வேண்டாங்க… “புட்டபர்த்தியில் நாம் இந்த தேதியில் புட்டுக்குவோம்” என்று தன்னைப் பற்றி தனக்கேகூட தெரியாதா? இப்போ பாருங்க… பல கோடி சொத்துக்காக “அடுத்த தலைமை யார்?” என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். முக்காலத்தையும் கணிக்க முடிந்த உங்க பாபாவுக்கு இதுபற்றி தெரியாமல் போனது ஏனோ??

  1. அருமையான கேள்விகள் சகோதரர் அப்துல். இதை ஏன் பாபா உயிரோடு இருக்கும் போது யாரும் கேட்க முயற்சிக்கவில்லை? இல்லை, கேட்டார்களாம். அதற்கு பாபா சொன்னராம், “இயற்கையின் நியதிகளில் யாரும் தலையிட முடியாது. தலையிடவும் கூடாது” என்று. இயற்கையாம், தலையிடக் கூடாதாம்? என்ன சால்ஜாப்பு பாத்தீங்களா?

 11. ennamo vittalacharyar padam paartha madhiri oru effect, neengallam eppaddham thirundha poreengalo, anal onnu solla aasaipadukiren

  Kadavul illai endru solbavanai nambalam
  kadavul irukkar endru solbavanaiyum nambalam
  anal
  NAANDHAN KADAVUL ENDRU SOLBAVANAI MATTRUM NAMBAVE KOODADHU

  (nangri thiru. kamalhaasan)

 12. சத்யா சாய் பாபாவின் மேஜிக் வித்தைகள் அத்தனையும் அப்பட்டமான ஏமாற்று வேலை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. விரல் இடுக்கில் சிறு சாம்பல் உருண்டையை மறைத்து வைத்துக்கொண்டு பக்தர் அருகில் சென்று கையை சுற்றும்போது அந்த சாம்பல் உருண்டையை கசக்கி விபூதி மாதிரி விழ வைக்கிறார். இதே போல் காற்றில் கையை சுற்றினால் 916 ஹால்மார்க் தங்கச்சங்கிலி செய்கூலி சேதாரம் இன்றி வருகிறது. இதுவும் டுபாகூர் வேலை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. காற்றில் தங்கச்சங்கிலியே வரும்போது எல்லா செல்வங்களையும் காற்றிலே வரவைக்கலாமே. எதற்காக கலெக்சன்? வாயில் லிங்கமும் ஒரு டுபாக்கூர் தான். youtube இல் சென்று பாருங்கள். கொட்டிக்கிடக்கின்றன எல்லாமே. தயவுசெய்து மூடநம்பிக்கைகளை பரப்பாதீர்கள்.

  1. மிக்க நன்றி விஜய். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும். இந்த மாஜிக் ஆசாமி, எப்படி திட்டம் போட்டு இத்தனை பேரை, அதுவும் லட்சக்கணக்கான வெளிநாட்டுக்காரர்களை எல்லாம் இத்தனை வருடமாக ஏமாற்றியிருக்கிறார் என்பதை அறியும் போது மிக்க ஆச்சரியமாக இருக்கிறது. என்னமோ போங்கள்! எல்லாம் முட்டாப் பசங்கள். வேறு என்ன நான் சொல்வது?

 13. நீங்கள் சொன்னால் நாங்கள் நம்பி விட வேண்டுமாக்கும். அவர் கடவுள் ஆதாரம் என்பதற்கு ஏதாவது விஞ்ஞான ஆதாரம் காட்ட முடியுமா? கடவுளே இல்லை என்னும் போது அவதாரம் எப்படிங்க நிகழும்? போங்க, சும்மா வெறுப்பேத்தாம.

  1. ஆதாரம் எதுவும் நான் காட்டத் தேவையில்லை. அனுபவித்து உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு எப்படி ஆதாரம் காட்ட முடியும்? இனிப்பு என்பது சுவை. அதுதான் இனிப்பு என்பதற்கு என்ன ஆதாரம் காட்ட முடியும்? எனிவே, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

 14. \\ஒரு வித உணர்ச்சி வசப்ப்பட நிலையில் இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.\\ இது கேனத் தனத்தில் எழுதியிருக்கீர். நீயும் முட்டாளாகி மற்றவர்களையும் அவ்வாறாக்குவதை முதலில் நிருத்துமைய்யா.

 15. \\திருமதி வச்ந்த சாய் அம்மா அவர்கள் முற்பிறவியில் ராதாவாகப் பிறந்தவர்கள் என்று பாபா சொன்னதாக அவர் தெரிவித்திருக்கிறார்.\\ முற்பிறவியில ஜோடி, அடுத்தது அம்மா வேடமா? இது என்ன சினிமாப் படமா எடுக்குறீங்க? அதுலதான் சில நடிகைகள் முன்னணி நடிகர்களுக்கு முதலில் ஜோடியாகவும், அப்புறம் கிழடு தட்டியதும் அவர்களே அம்மாவாகவும் நடிப்பார்கள், நடிகர் மட்டும் என்றும் பதினாராவே இருப்பார், அது போல உங்க கதை இருக்கே!!

  1. உங்கள் கூர்ந்த அறிவுத் திறன் கண்டு வியக்கிறேன். டாக்டர் இயான் ஸ்டீவன்சனின் ஆராய்ச்சி நூல்களில் உங்களது பல கேள்விகளுக்கு விடை இருக்கிறது.

 16. \\சத்ய சாய் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் என்று பாபா செய்திருக்கும் அறப்பணிகள் ஏராளம், ஏராளம். எத்தனையோ கோடிக்கணக்கான ஏழை மக்கள் அவரது அறப்பணிகள் மூலம் பயன்பெற்றிருக்கின்றன. அவரது நிறுவனங்களில் கல்வி பயின்றும், சிகிச்சை பெற்றும் பலனடைந்துள்ளனர்.\\ நம் நாட்டில் அரசியல் வாதிகள் சரியில்லை. இவனுங்களுக்கு மக்கள் பணத்தை திருடி வெளிநாட்டு வங்கியில் போடவே நேரம் போதவில்லை. பணமெல்லாம் அங்கே போகாமல் இங்கே மக்களுக்காக செலவழிக்கப் பட்டிருந்தால், இந்த மாதிரி பாபாகளின் உதவியே இல்லாமல், எல்லோருக்கும், தரமான கல்வி, மருத்துவ சேவை கிடைக்கும்படி செய்திருக்க முடியும், மக்களின் தரித்திரம் வந்தவனெல்லாம் திருடனாவே இருக்கிறான். அதனால் இந்த பாபாவை நம்ப வேண்டிய சூழ்நிலை. அப்படியே இவர் நல்லது செய்திருந்தாலும், இவரை ஒரு நல்ல மனிதராகத் தான் கருத வேண்டுமே தவிர கடவுளாக அல்ல. பில் கேட்ஸ் பாபாவைப் போல ஆயிரம் மடங்கு சேவை செய்யும் அளவுக்கு பணம் படைத்தவர், ஆனால் தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டவர் இல்லை.

  1. அரசியல் சரியாக இருந்தால் ஏன் நாடு இப்படி இருக்கிறது? எதையும் சரிப்படுத்த ஒருவராது இல்லாவிடில் சோனாலியா மாதிரி ஆகி விடும் இந்தியா. அதற்காகத் தான் பாபா போன்றவர்கள் மக்கள் சேவை ஆற்ற முன் வந்தது. அந்த ”சேவை” பிடிக்காத சில “சேவைக்காரர்கள்”, தாங்கள் மட்டுமே ’சேவை’யின் பிறப்பிடமாகக் கருதி ஊரை ஏமாற்றுபவர்கள்தான் பாபாவின் பணிகளை வசைபாடுகிறார்கள்.

 17. \\புவியில் மானுடராகப் பிறக்கும் ஒருவர் எந்தெந்த விதிகளுக்குட்பட்டு நடக்க வேண்டுமோ அதன்படியே பாபா நடந்தார். பலரது உயிரை மீட்டுத் தந்த ஆற்றல் மிக்க பாபா, தன் உயிரையும் மீட்டுக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்ய விரும்பவில்லை.\\ மனுஷனாப் பொறந்தா என்ன வெல்லாம் இயற்கையின் நியதிப் படி என்னென்ன நடக்குமோ அதுதான் இவருக்கும் நடந்தது. உன்னைப் போலவே உண்டு, மலம் கழித்து, முதுமையைந்து செத்துப் போன மாமூல் மனுஷன், ஒரே வித்தியாசம், இந்தாள் விட்டா புருடாவை உன்னைப் போல கூமுட்டைகள் நம்பிச்சு, இந்தாள் கடவுளாக்கிடிச்சு.
  \\மானுடராக அவர் வாழ்ந்தாலும் அவர் ஒரு அவதாரபுருடர் என்பதை அவரை அண்டியவர்கள், அவரது அருள் பெற்றவர்கள் உணர்ந்தனர். கடவுளாகக் கருதி வழிபட்டனர்.\\ அது உங்க முட்டாள் தனம்.

  1. ஆமாம். இந்திய மொழிகள் ஏதும் அறியாத எத்தனை, எத்தனையோ வெளிநாட்டினர் ஓடி வந்து அவரை தரிசித்துச் சென்றனர். இன்றும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் எல்லாம் முட்டாள்கள். ”நீங்கள்” எல்லாம் புத்திசாலிகள். எல்லாம் தெரிந்த மேதாவிகள்தான். ஒப்புக் கொள்கிறேன்.

 18. \\இவர்களால் தற்காலிக மன அமைதியை ஏற்படுத்தித் தர இயலுமேவிர, “ஆன்ம அனுபூதியையோ” அல்லது “ஆன்ம வளர்ச்சி” மற்றும் ”ஆன்ம உயர்வை”யோ உண்டாக்கித் தர இயலாது.\\ சும்மா கதையளக்க வேண்டாம், உனக்கு இந்த புசு.. புசு..ன்னு முடி வளர்ந்த பாபாவைப் பிடிச்சிருக்கு, நீ அங்க அமைதி காண்கிறாய், இன்னொருத்தனுக்கு ரஞ்சிதானந்தா கிட்ட நல்லாயிருக்குன்னு போறான், உங்க பாபா மட்டும் பணம்வசூல் செய்யாமல இத்தனை ஆசுபத்திரி, கல்லூரிகள் கட்டினார்? அதே மாதிரி அவனவனும் காசு வசூல் பண்றான், கேட்டால் எங்க இயக்கத்தை விரிவு படுத்தி அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யவே இந்தப் பணம் என்பான். நீ அவர்கள் டுபாக்கூர் என்றால், அவன் நாங்கள்தான் ஒரிஜினல், மற்றவர்கள் டுபாக்கூர் என்பான், இதற்க்கு சரியான தீர்ப்பைச் சொல்ல சொம்பில வெற்றிலை எச்சிலை பொலிச் …பொலிச் .. என்று துப்பும் நாட்டாமைக்கு நான் எங்க போறது?

  1. மக்கள் சேவையை மையப்படுத்தியே அதைச் சொன்னேன். ஆன்ம உயர்வும் அடுத்தது. உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? நீங்கள் ஆத்திகராக இருந்து கோபப்பட்டால் உண்மையை உணராது இருக்கிறீர்கள் என்பது பொருள். நாத்திகராக இருந்து கோபம் வந்தால் அதற்கு அவசியமே இல்லையே. உங்களுக்கு இது சம்பந்தமில்லாத விஷயம் ஆயிறே.

 19. \\எந்த ’மாஜிக்’ ஆசாமிக்கு உலகம் பூராவும் பக்தர்கள் இருக்கின்றனர்? எந்த ’மேஜிக்’ ஆசாமி 70 ஆண்டுகளுக்கும் மேலாய் மேஜிக்கைச் செய்து கொண்டே இருக்க முடிந்தது?\\ மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆடச் சொன்னா எங்களால ஆட முடியாது, அதுக்காக அவர் என்ன கடவுளா? ரஜினிகாந்த் கிட்ட கூடத்தான் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் பூராவும் பல்வேறு நாட்டு மக்களைக் கவரும் வசீகரம் இருக்கிறது, அதனால் அவர் என்ன கடவுளா? இப்போ பில் கேட்ஸ் கூடத்தான் ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்களை டிரஸ்ட் ஆக மாற்றி மக்கள் சேவைக்கு கொடுத்துள்ளார், அதற்காக அவர் என்ன தன்னைக் கடவுள்ன்னு சொல்லிக் கொண்டாரா? நீங்க மட்டும் ஏன்டா இப்படி தலை புழுத்துப் போய் ஆடறீங்க, மான்க மடையனுங்களா? மனுஷனை மனுஷனா பாருங்கடா, கடவுலாக்காதீங்கடா, அது கடவுளுக்கு இழுக்கு.

  1. ’பாபா’ கடவுளா இல்லையா என்பது அவரது பக்தர்கள் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். நீங்கள் அவர் பக்தரா? இல்லையென்றால் அதைப் பற்றிக் கவலைப்பட ஏதுமில்லை. நாத்திகரா, அப்படியென்றால் இந்த மாதிரி விஷயங்களில் நீங்கள் தலையிடவே வேண்டியதில்லை. எதுவுமே இல்லை என்னும் போது எதற்கு இருக்கிறது என நம்புபவர்களிடம் வந்து கூக்குரல் இட வேண்டும். தங்கள் வீட்டில் உள்ளவர்களைத் திருத்த முடியாதவர்கள், நாட்டைத் திருத்துகிறார்களாம். நல்ல காமெடி

 20. \\ஆனால் சில ‘அறிவுஜீவிகளோ’ அவரி ’மேஜிக்’ செய்பவர் என்றும், ஏமாற்றுப் பேர்வழி என்றும் தங்கள் ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர். \\ தங்க நகை, விலையுயர்ந்த வாட்ச் போன்றவற்றை ஏன் உங்க பாபா வி.ஐ.பிக்களுக்கு மட்டும் கொடுக்கிறார்? ஏழைகளுக்கு வெறும் விபூதி மட்டும் தானா? ஏன் போறவங்க எல்லோருக்கும் ஒரு எட்டு சவரனில் தங்க நகை குடுக்கலாமே? அது சரி, கையை காற்றில் அசைத்து கொண்டு வந்து கொடுக்கும் பொருளெல்லாம் ஏன் சின்ன சின்னதாகவே இருக்கு? ஏன் ஒரு பூசணிக்காயை கொண்டுவர முடியவில்லை, இத்தனைக்கும் தங்க நகை ஆயிரக்கணக்கில் விலையுடையது, பூசணிக்காய் வெறும் பத்து ரூபாயில் கிடைக்கும். கொடுக்க முடியுமா உங்க பாபாவால்? ஆக, முழுக்கை சட்டை தொல.. தொல..வென்று போட்டுக் கொண்டு, கையை காற்றில் அசைத்து பொருட்களைக் கொடுப்பது வெறும் மேஜிக் தான், அதை பி.சி. சொர்க்கார் மற்றும் அவரது மகன் தங்களது வாழ் நாள் முழுவதும் செய்து பெயரும் புகழும் பெற்றுள்ளார்கள், ஒரே வித்தியாசம், அவர்கள் மக்களின் பொழுது போக்குக்கு செய்கிறார்கள், உங்க பாபா தன்னைக் கடவுள்ன்னு சொல்லி ஏமாற்ற செய்தார்.

  1. சரி, நீங்கள் ஏமாறாத புத்திசாலியாகவே இருங்கள். அவரை நம்பி, வாழ்வில் உயர்ந்து பலனடைந்தவர்கள் எல்லாம் முட்டாளாகவே இருக்கட்டும். அதனால் இப்போது என்ன கெட்டுப் போய் விட்டது?

 21. எம்புட்டு நாலு மக்களே இப்பிடி பேக்கா இருப்பீங்க.

  கொஞ்சமாச்சும், கொஞ்சம், கொஞ்சம், கடுகவிட கொஞ்சமாச்சும் யோசிங்க மக்களே.

  இன்னும் கேட்டுப்போறேன் என்ன பந்தயம் கட்டுற, அப்டின்னு சொன்னா எண்ணத்த சொல்றது.

 22. \\96 வயதில் இறப்பேன் என்று சொன்ன பாபா ஏன் பத்தாண்டுகள் முன்னால் தனது உடலை உகுத்தார் என்றால் விரைவிலேயே பிரேம சாயி அவதாரம் எடுத்து மேலும் மக்கள் பணியை முழு வீச்சில் செய்யத்தான்.\\ முக்காலமும் உணர்ந்தவர்தான் கடவுள். இந்த மாதிரி தப்பு தப்பா கணக்கு போடுபவர் கடவுள் அல்ல, மக்கள் பணியை முழு வீச்சில் செய்ய பிரேம சாயி அவதாரம் முன்னாடியே எடுக்க வேண்டும் என்று ஏன் முன்பே அவருக்குத் தெரியாமல் போய் விட்டதா? இவருக்கு \\நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் முன் கூட்டியே சொல்ல முடிந்தது\\ ஆனால் தான் 86 வயதில் மண்டையைப் போடுவோம் என்று முன்கூட்டியே சொல்ல முடியவில்லை. பத்து வருடம் வித்தியாசம் வருவதற்கு நீர் ஒரு புனைக் கதையை திரித்துவிட்டீர்!! நல்லா சமாளிக்கிறீங்கடா சாமி….

  1. ஆக, முன் கூட்டியே சொல்லி அதன் படி நடந்தால் நம்பி இருப்போம் என்கிறீர்கள். குட். இப்போது உங்கள் உண்மையான “முகம்” தெரிந்து விட்டது. மிக்க நன்றி.

   1. சாய் வாக்கு சத்ய வாக்கு:” 95 வயது வரை வாழ்வேன்” என்று சத்ய சாய் பாபா ஏற்கனவே கூறியிருந்தார். இதனால்தான் மார்ச் மாதம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, “பாபாவுக்கு ஒன்றும் நேராது; அவர் உடல்நிலை தேறி மீண்டு வருவார்” என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சாய் பாபா தற்போது ஸித்தி அடைந்தது எப்படி என்று சில பக்தர்கள் மனதில் ஐயம் எழலாம்.

    இது குறித்து சாய் பாபாவின் தீவிர பக்தர் ஒருவர் விளக்குகையில், “நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்‌போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங்கில முறைப்படி ஒரு மாதம் என்பது 30 அல்லது 31 நாட்கள். ஆனால் ஹிந்து முறைப்படி பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வரும் காலம்தான் ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள்தான் ஆகிறது. அந்த அடிப்படையில் கணக்கிட்டால் சாய் பாபாவுக்கு தற்போது வயது 94 ஆகிறது. மேலும் ஹிந்து வழக்கப்படி அவர் பிறந்த ஆண்டே முதல் வயதாக கருதப்படுவதால் சாய் பாபாவுக்கு 95 ஆகிறது. எனவே சாய் பாபா தமது ஆயுள் குறித்து தெரிவித்த வாக்கு பொய்க்கவில்லை; சாய் வாக்கு சத்ய வாக்காக‌வே இருக்கிறது” என்று தெரிவித்தார்.

 23. அட பாவிகளா, இன்னுமா நீங்க திருந்தல ??
  உங்களை எல்லாம் ஒரு கோடி பெரியார் வந்தாலும் திருத்த முடியாது ….

  1. முதலில் தான் திருந்த வேண்டும். அதை விடுத்து அடுத்தவனைத் திருத்தும் வேலையில் இறங்கினால் எப்படி ஐயா? தான் முதலில் திருந்தாதவன், அடுத்தவனைத் திருத்த என்ன தகுதி இருக்கிறது?. வீட்டைத் திருத்தாதவன் நாட்டைத் திருத்த முடியுமா?

  1. உண்மை கார்த்திக். அவரை வசை பாடி வந்திருக்கும் இத்தனை கமெண்டுகளின் மூலம் தெரிகிறதே! அவர் எந்த அளவுக்கு சிலருக்கு தங்கள் ’சுயம்’ வெளுத்து விடுமோ என்ற பயத்தை, எங்கே தங்களால் ஊரைச் சுரண்டி ஏமாற்றி வாழ முடியாதோ என்ற பாதிப்பை, இன்ன பிற உணர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது. பாபாவை எப்படிக் குறை கூறினாலும், அவரது சேவையால் பயன் பெற்றோர் எண்ணற்ற கோடி பேர்.

   தூற்றுவார் தூற்றினும், போற்றுவார் போற்றினும் எல்லாம் ”கண்ணனு”க்கே. வருகைக்கு நன்றி, கார்த்திக்

 24. இன்று உயிர்த்த ஞாயிறு. அவர் மீண்டும் உயிர்த்து வர வேண்டும் என்ற ஆசையில் தவிக்கிறேன். உங்களுக்கு இருக்கும் தைரியம் எனக்கு இல்லை என்னை வெளிப்படுத்திக்கொள்ள.

  1. கவலை வேண்டாம். ஆண்டாண்டு காலமாக நமது இந்து மரபில் ஞானிகள், அவதார புருடர்கள் தோன்றுவதும் மறைவதும் யுகம் யுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. மகான்களின் அருமை அவர்கள் இருக்கும் போது தெரியாது. இறந்த பின் புலம்புபவர்கள் பலர் உண்டு, என்னைப் போல – பாபாவைப் பல முறை சென்று பார்க்க வாய்ப்புக் கிடைத்ததும் ஏனோ அதற்கு தீவிரமாக முயலாதவன் நான். பாபாவை நான் பார்க்க வேண்டும் என்பதை விட அவரது நயன தீக்ஷை என் மேல் பட வேண்டும் என்று பின்பு விரும்பினேன். கடந்த மாதம் செல்ல வேண்டும் என தீவிரமாக நினைத்த போது பாபா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆக, அது சாத்தியமில்லாது போயிற்று. எல்லாவற்றிற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். அது எனக்கு இல்லை – இனி அதை நினைத்து வருந்திப் பயனில்லை.

   ரமணர் இறந்த போது பக்தர்கள் மனதில் துயரம் சூழ்ந்தது. அவர் அதற்கு முன் சொன்னார், “ ஏன் அழுகிறீர்கள்? நான் எங்கே போகப் போகிறேன். இந்த உடல் தானே மறையும். என் ஆன்மா எங்கும் வியாதித்திருக்கும்” என்ற பொருளில் பதில் சொன்னார். அதே தான் பாபாவுக்கு. அவர் எங்கும் போகவில்லை. உடலை உகுத்திருக்கிறார். அவர் அந்த உடலில் இருக்கும் போதே பலரது கனவில் சூட்சுமமாக வந்து எவ்வளவோ உபதேசித்திருக்கிறார். நல்வழிப்படுத்தியிருக்கிறார். இப்போதும் அதையே செய்வார்.

   ஆனாலும், இது நாள் வரை நம்மோடு பழகி, பேசி, பாடி, அரவணைத்து, அறிவுரை கூறி, அன்பு காட்டி, வழிநடத்திச் சென்ற ஒருவர் இனி இல்லை, காண முடியாது என்னும் போது அந்தச் சோகத்தை நாம் வார்த்தையால் ஆறுதல் கூற முடியாது. படிப்படியாகத் தான் மீள வேண்டும்.

   பாபாவுக்கு நாம் காட்டும் நன்றிக் கடன் இன்னும் தீவிரமாக மக்கள் பணி செய்வதே. ஏழைகள் துயர் துடைப்பதே!

   ஓம் சாயிராம்

   இறைவன் கருணை மிக்கவன். அவன் வேண்டுதல், வேண்டாமை இலான். அறியாமையால் தூற்றுபவரும், அவனை வெறுப்பவரும் அவன் குழந்தைகள் தானே!

  2. நண்பரே..

   உங்கள் ஆசை நிறைவேறுமா என்பது பற்றி எனக்குச் சொல்லத் தெரியவில்லை. மேலும் இதில் வெளிப்படுத்திக் கொள்ள எதுவுமில்லை. அவர் செய்த அற்புதங்களால், தீராத நோய் தீர்த்த கருணையினால் அவரை நான் இயேசுவைப் போல ஒரு அவதார புருடராகப் பார்க்கிறேன். மானுட சேவையினால் அவரை வள்ளலாரைப் போல் ஒரு மகானாக, விவேகானந்தரைப் போல் ஒரு மக்கள் நலம் விரும்புபவராகப் பார்க்கிறேன். ஆன்மீக சேவையினால் அவரை ஒரு ஞானியாகப் பார்க்கிறேன். அவ்வளவுதான். இத்தனைக்கும் நான் பாபாபைச் சென்று பார்த்ததில்லை. வாய்ப்பிருந்தும் செல்லவில்லை. அவரது பஜனைகளில் கலந்து கொண்டதில்லை. ஏன் அவரது படம் கூட எங்கள் இல்லத்தில் பல ஆண்டுகள் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் தான் கிடைத்தது.

   அவர் செய்த அற்புதங்களை விட மகத்தான மானுட சேவையால் அவரை நான் மதிக்கிறேன். அவர் இழப்புக்கு வருந்துகிறேன். அதனால் தான் இந்தப் பதிவு. இதற்கு திட்டி வந்திருக்கும் பின்னூட்டங்களே அவரது சேவையின் சாதனைகளுக்குக் கிடைத்த வெற்றி.

   ஆவி, பேய், பிசாசு, மறுபிறவி என்று எனது பல பதிவுகளுக்கு இல்லாத வரவேற்பும், பின்னூட்டங்களும், எதிர்ப்பும் இருப்பதே ’பாபா’ ’அவர்களை’ எந்த அளவிற்கு பாத்திருக்கிறார் என்பதை உணர முடிவதாய் இருக்கிறது. தங்கள் வருகைக்கு நன்றி. நண்பரே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s