நம்பினால் நம்புங்கள் – 19 – கை தட்டினால் தேங்காய்

“கை தட்டித் தேங்காய் விழவைத்தல்”

கைதட்டினால் சப்தம் தான் வரும். தேங்காய் விழுமா?.

விழும், சில முறைகளைச் செய்தால் தேங்காய் என்ன மரத்திலிருந்து மாங்காய் கூட விழவைக்கலாமாம். இதை நான் சொல்லலைங்க. பழங்கால ஓலைச் சுவடிக் குறிப்பொன்னு சொல்லுது. செம்மஞ்ச்சேரி ஆசிய நிறுவனத்தில் இது போன்ற பதிக்கப்படாத பல மாந்த்ரீக, சோதிட ஓலைச்சுவடிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றிலிருந்து…

“கருங்குருவி என்னும் நெடிய வால்குருவியைக் கொன்று, சுட்டு, அதன் சாம்பலை, தலைப் பிள்ளை பெற்ற ——- இல் கலந்து, நன்றாகக் குழப்பி, உள்ளங்கையில் தடவி, தென்னை மரத்தைத் தொட்டுத் தடவிக் கைதட்ட, மரத்திலிருந்து தேங்காய் ஒன்றன் பின் ஒன்றாய் விழும்”

(இது தேவையா? ஒரு உயிரைக் கொன்னு தேங்காய் பறிக்கணுமா? மரத்துல ஏறி, இல்லன்னா காசு கொடுத்து ஆளக் கூட்டி வந்து பறிச்சிக்கிடலாமுல்ல.. என்னமோ போங்க. நம்ம மக்கள் சமயங்கள்ள ஒரு மாதிரியாதான் யோசிச்சிருக்காங்க… குறிப்பா இதையெல்லாம் அந்தக் காலத்துல மந்திரவாதிங்க பயன்படுத்தியிருப்பாங்க போல… அதுக்குன்னு, யாராவது இதனைப் பரிட்சித்துப் பார்த்து, தேங்காயோ அல்லது அதற்குப் பதில் வேறு ஏதாவதோ, தலையிலேயே விழுந்து விட்டால்????…… அதனாலேயே சில முக்கியமான இடங்களில் ——- விட்டுவிட்டேன். ஆக இரகசியங்கள் இரகசியங்கள் ஆகவேஇருப்பது தான் மனிதனுக்கு நல்லது. அந்த இரகசியத்திற்கும் நல்லது,  இல்லீங்களா…

அடுத்து பாலை எப்படி தண்ணீரா மாத்துறதுன்னு பார்க்கலாமா?

(நிறைய தண்ணீர் விட்டால் பால் தண்ணீர் ஆயிடும்ங்குறீங்களா… அட, அது அப்படி இல்லைங்க… மேல படிங்க…

பால் நீராக..

“தேத்தான் கொட்டையை வெள்ளெருக்கம் பாலில் விட்டு அரைத்து, அதில் —— கலந்து, தண்ணீரில் கலந்து விட பால் நீராகும்.”

இனி கள்ளைப் பாலாக்குவோமா?

கள் பாலாக…

கோழிமுட்டையின் மஞ்சள் கருவோடு, ஒரு மரத்துக் கள்ளைக் கலந்து அதனை —– செய்ய கள் பாலாகும்.

அடுத்த பதிவுல வசியம் செய்ய, நாய் வாய் கட்ட, மிருக வசியம் செய்ய, பிறர் மனதை அறிய என்னவெல்லாம் நம்ம மக்கள் டெக்னிக்ஸ் யூஸ் பண்ணியிருக்காங்கன்னு பார்ப்போமா?

அதுவரைக்கும் காத்திருங்க….

***********

Advertisements

15 thoughts on “நம்பினால் நம்புங்கள் – 19 – கை தட்டினால் தேங்காய்

 1. En maalai vanakam sir . na kalabairavat ashtakam keden unmailaye oru freshness irunthusu bharathiyar song polave . atsam illai atsam illai song maari … enaku oru doubt sunthara kaandam abirami anthathi padinganu neraya peruku sollirunthinga ithuvaraikum sundharakandam kamparamayanathula ullathu madumthan theriyum story schoola padujuruken itha padikirathu mana amaithikava ila namma kasdangala marakurathukakava ? itha therunjuka aasai paduren

  1. vanakam sir . na kalabairavat ashtakam keden unmailaye oru freshness irunthusu bharathiyar song polave . atsam illai atsam illai song maari … enaku oru doubt sunthara kaandam abirami anthathi padinganu neraya peruku sollirunthinga ithuvaraikum sundharakandam kamparamayanathula ullathu madumthan theriyum story schoola padujuruken itha padikirathu mana amaithikava ila namma kasdangala marakurathukakava ? itha therunjuka aasai paduren

  1. அன்பு. அது ஒன்றுதான் மந்திரம். அன்பின்ற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? கட்டற்ற அன்பு செலுத்துங்கள். அப்புறம் பாருங்கள்.

 2. hi nenka sonathu sarri.ethu pola vara thahavalkal unkal edam irukka?
  nan ethu pola n life la um sandichu irukeran. payam 1 pakam, arvam i pakam.
  lot of nala vidayam alindu poitu athil sila
  mendum unkaledam irukku but athu inni um paathu kaaka padanum n du wish panran.
  Biranna

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s