ஜோதிடக் கேள்வி – பதில்கள் – இறுதிப்பகுதி

 

இதை முதல்ல படிங்க…

 

கே: போலி ஜோதிடர்கள் குறித்து…

இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றிலும் போலிகள் ஊடுருவி உள்ளனர். ஜோதிடமும் அதற்கு விதிவிலக்கில்லை. போலிகளைத் தரம் பிரித்து அறியமுடியாத நிலைதான் தற்போது நிலவுகிறது. அதற்காக ஜோதிடம் முழுவதுமே பிதற்றல் என்பது மதியீனம். எந்தவித ஆய்வுகளும் செய்யாமல், இருந்த இடத்தில் இருந்து கொண்டே மொத்த அனைத்தையுமே போலி என்பதில் எந்த உண்மையும் இல்லை. அப்படி அனைத்தையுமே போலி என்பது உண்மையான தேடல் உள்ள மனிதரின் கருத்தாகாது..

பாலுக்கும் கள்ளுக்கும் வேறுபாடு அறியாத, அதை சீர்தூக்கிப் பார்த்து அறிந்து கொள்ளும் தெளிவில்லாதவர்களாகத் தான் இங்கே பலர் உள்ளனர். எந்த ஒரு ஆராய்ச்சி அறிவும் இல்லாமல் கண்மூடித்தனமாக எதையும் ஏற்றுக் கொள்வது அல்லது முற்றிலுமாக மறுத்து நிராகரிப்பதே பலரது செயல்பாடாக உள்ளது. பகுத்தறிவு என்பதன் உண்மையான பொருள் தெரியாத இவர்களைக் கண்டு பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. மேலும் முன் முடிவுகளோடு எந்த ஒரு கருத்தியலையும் அணுகினால், அது நமது கொள்கைகளுக்கு ஏற்பாக இல்லை என்றால் மழுப்பலாகவும், சொதப்பலாகவும்தான் தோன்றும். ஆகவே நிஷ்காம்யமாக, எந்த வித முன் முடிவுகளும் இல்லாமல் ஜோதிடத்தை ஆராய்ந்தால் அது உண்மையா அல்லது பொய்யா என்பது புலப்படும்.

ஜோதிடத்தை உண்மை என்பவர்களும் சரி, இல்லை, அது முழுக்க முழுக்கப் பொய், ஏமாற்று வேலை என்பவர்களும் சரி, சற்று ஆராய்ந்து பார்த்தால் உண்மை என்ன்னவென்பது விளங்கும்.

கம்யூனிஸச் சிந்தனையாளரும், பெரியாரின் கொள்கைகளில் பெருத்த ஈடுபாடும் கொண்டவரான நடிகர் ராஜேஷ் இப்படித்தான் எந்த முன் முடிவுகளுமற்று, இந்த ஜோதிடத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆராயப் புகுந்தார். அவரது பல்லாண்டு கால ஆராய்ச்சியை இதோ, இப்போது பிரபல ’ராணி’ வார இதழில் அனுபவக் குறிப்புகளாக எழுதிக் கொண்டு வருகிறார்.

அதே சமயம் ஜோதிடத்தின் பெயராலும், மகரிஷிகளின், முனிவர்களின், சித்தர்களின் பெயராலும் தம்மை நாடி வருபவர்களை ஏமாற்றுபவர்கள், அவர்களுக்கு தவறான வழியைக் காண்பிப்பவர்கள், திசை திருப்புபவர்கள், பரிகாரங்கள் என்று சொல்லிப் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் மனிதர்களை ஏமாற்றினாலும் காலம் அவர்களைச் சும்மா விடாது.  எந்த நவக்கிரஹங்களின் பெயரைச் சொல்லி அவர்கள் ஏமாற்றுகிறார்களோ அதே நவ கோள்களினாலே அவர்கள் நாசமடைவர். இது சத்தியம்.  உண்மை.

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்பது இதற்கும் பொருந்தும்

தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்களின் மேற்கோளோடு இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

“சோதிடத்தைப் படிக்கலாம், ஆராயலாம். அது வருங்கால நிகழ்வுகளை உணர்த்தி, விளைவுகளை வெல்லக் கடவுளை அடையுமாறு அறிவு கொளுத்துவது” – திரு,வி,க,, வாழ்க்கைக் குறிப்புகள்.

ஆம். நம்புபவரோ, நம்பாதவரோ அப்படி என்னதான் இந்த ஜோதிடத்தில் இருக்கிறது என்று ஆராய்ந்து பாருங்களேன்! அது கடவுளை நோக்கிய பாதையில் ஏதோ ஒரு விதத்தில் அழைத்துச் சென்று விடும் என்பது உண்மை.

இதுவரை இதை அறுவை என்றெண்ணியும் எண்ணாமலும் பொறுமையாகப் படித்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

Advertisements

20 thoughts on “ஜோதிடக் கேள்வி – பதில்கள் – இறுதிப்பகுதி

 1. hi sir, i am kanth. நான் திருமணம் செய்ய எண்ணியிருக்கிறேன். எனது ராசி ரிஷபம் நட்சத்திரம் கார்த்திகை 3ம் பாதம். மணமகளின் ராசி மகரம் நட்சத்திரம் திருவோணம். இருவரது பிறந்த குறிப்புகளையும் வைத்து 2,3 ஜோதிடரிடம் கொடுத்து பொருத்தம் பார்த்ததில் பொருத்தம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். குறிப்பாக ஜோனி பொருத்தம் இல்லை ( பகை மிருகங்கள்) திருமணம் செய்யகூடாது என்று சொன்னார்கள். ஆனால் எனக்கு அந்த பெண்ணை திருமணம் செய்ய விருப்பமாக உள்ளது இதற்கு ஏதேனும் பரிகாரங்கள் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்

  1. இந்த திருமணம் நடந்தால் எனது தாய் தந்தைக்கு ஏதேனும் பிரச்சனை நடக்குமா? புத்திர பாக்கியம் இல்லையா? அடாட்கு ஏதேனும் பரிகாரம் இருகிறதா?

 2. SIR, my date of birth is 30-4-1957 birth time 7-33 PM in kattuputur Tiruchy dist Tamil nadu In my Horoscope there are 5 planets viz sun , moon, kethu, sukhran & bhuthan in mesha, In mithuna Mars, In Simha JUPITER , IN Thula Raghu ,and in Viruchikka Lagna & Saturn I am jobless since march2009 to till now, May you please tell me when shall i get the job again Pls also advice me wht lucky stone should i wear
  Thanks
  S.GUNASUNDARAN

  1. Sir

   I’m not a professional astrologer a researcher only. So I can’t tell anything Brief. But as a special case i studied your chart. Now come to the conclusion that some problem is in the chart. Your mind is always wavering. That is the reason for all the problems. So pray the lord Surya and Dakshinamurthy daily.

   Lucky stone is moon stone.

   Be strong in your mind. Don’t confuse. Everything will be alright after 10-04-2012. until then do the work what you like. Don’t be jobless. Choose anything as your wish and work hard. Accounting and finance is good for you.

   ok. best of luck.

  1. ஸ்ரீனிவாச ஐயங்கார் என்ற பெயரில் பின்னூட்டமிட்டிருக்கும் போலி நபருக்கு…

   உங்களுக்கும் இன்னொரு பதிவருக்குமான பிரச்சனைகளை இங்கு வந்து பின்னூட்டமிட என்ன காரணம்? அதுதான் உங்கள் வலைப்பதிவிலேயே தெரிவித்திருக்கிறீர்களே! அதை ஏன் இங்கு வந்து பிட் பிட் ஆக பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள். இது ஒன்றே போதுமே நீங்கள் நேர்மையற்றவர் என்பதை நிரூபிக்க. இது என்ன குப்பைத் தொட்டியா? இல்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வக்காலத்து வாங்கும் சந்தை மடமா? அல்லது ஒருவேளை நான் நீங்கள் குறிப்பிடும் ஓரினத்தைச் சேர்ந்தவனாக இருப்பேனோ என்ற எண்ணமா? அது மட்டும் நிச்சயமாக இல்லை.

   அதே போல் நான் உங்களை ஆதரிக்கப் போவதுமில்லை. உங்கள் பின்னூட்டத்தில் ’த்வேஷமும், கையாலாகாத்தனமும்’ தான் வெளிப்படுகிறது. பண்போ, மன முதிர்ச்சியோ, பொறுமையோ, சகிப்புத்தன்மையோ இல்லை.

   இனிமேல் இது போன்று உங்களது தனிப்பட்ட சொந்தப் பிரச்சனைகள் குறித்து இங்கே பின்னூட்டமிட வேண்டாம். நான் அதை வெளியிடவும் மாட்டேன். மன்னிக்கவும்.

   உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாக எல்லாம் வல்ல மகர நெடுங்குழைக் காதரை வேண்டிக் கொள்கிறேன்.

   ஸர்வே ஜனா ஸூகினோ பவந்து. ஓம்

   (இந்தப் பின்னூட்டத்தை ஸ்ரீனிவாச ஐயங்கார் இட்டிருக்க மாட்டார் என்றொரு சந்தேகம் எனக்கு உள்ளது. வேறு யாரோ ’வினோத’மான ஒருவர் செய்யும் சிண்டு முடியும் வேலை என்கிறது என் வழிபடு தேவதை. மேலும் இது போன்றவை தொடர்ந்தால் ’பத்மாஸினி’ பார்த்துக் கொள்வாள்.பிறகு நான் ஒன்றும் செய்ய இயலாது. சாரி போலியாரே!)

 3. ”பகுத்தறிவு என்பதன் உண்மையான பொருள் தெரியாத இவர்களைக் கண்டு பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை ”
  மிக சரியாய் சொன்னீர்கள்………..

  ”எந்தவித ஆய்வுகளும் செய்யாமல், இருந்த இடத்தில் இருந்து கொண்டே மொத்த அனைத்தையுமே போலி என்பதில் எந்த உண்மையும் இல்லை.”

  இந்த வார்த்தையை கேட்க்கும் போது கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்துமதம் , நினைவுக்கு வருகிறது அவர் சொல்வார்
  ”இல்லை என்று சொல்வதற்கு எந்த வித அறிவும் தேவயில்லை, எந்த இடியட்டும் சொல்லமுடியும், ஆனால் இருக்கு என்று சொல்லுபனக்குத்தான் எல்லா வித அறிவு தேவை, திரு நீறு பூசுபவன் எதற்க்க பூசுகிறான் என்பதை அவன் மற்றவனுக்கு அதை நிரூபித்தாக வேண்டும்.”

  என்று சொல்லவர் இந்த வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது …….

  எப்படியோ விரைவாக முடித்தற்கு தங்களுக்கு ஒரு விருது கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்,

  1. என்ன விருது என்று சீக்கிரம் சொல்லுங்கள். இல்லாவிட்டால் தலை வெடித்து விடும் போல இருக்கிறது. ஏதாவது “வெயிட்”டா கவனிக்கப் போறீங்களா? 🙂 ஐ.. ஜாலி.

 4. Very Good Afternoon Sir!…
  I have read your instructions.I believe the Jothisham.I want to ask something regarding my future.My name is V Gopinathan Nair (Orginal) Now I have changed my name as V Gopinath.My date of birth is 01-04-1956 and star is Kettai.At present I am running a data entry business with the help of my relative and a friend.They are working and I am maintaining by me.I am a handicapped man.Upto last december 2010 I have worked some company.Due to some reason I have left the job.Now nobody is giving any chance.That is why I have started this business.But I am facing lot of problems.This is my situation.Now I want to run this business with my friend and my relative.Is it possible to run this business and how will my future.Please give me some advice.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s