ஜோதிடக் கேள்வி – பதில்கள் – 10

 

முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சுட்டலாம்

 

கே: ஜோதிடத்தால் நன்மையா, தீமையா?

எந்த ஒன்றினாலுமே நன்மையும் உண்டு தீமையும் உண்டு. ஏன் விஞ்ஞானத்தால் கூட நன்மையும் உண்டு, தீமையும் உண்டு தானே! ஆனால் நாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவைப் பொறுத்து அவற்றில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஜோதிடமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

 

ஜோதிடத்தின் நன்மைகள்:

 

 1. பொதுவாக, மானிட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிகள் பற்றியும், அறம் என்பது மானிட வாழ்க்கைக்கு அடிப்படையாவதையும், ஜோதிடம் விளக்குவதுடன், மனிதவாழ்வு செம்மையுறவும், தவறு செய்பவர்கள் அதற்கான தண்டனையையும், காரணத்தையும் அறிந்து திருந்தி வாழவும் மறைமுகமாக எச்சரிக்கிறது.
 2. ஒரு தனிமனிதன் தன் எதிர்காலம் பற்றி அறிந்து அதன் வழி நடக்க, எதிர்ப்புகள் போன்றவற்றிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, சிறந்த ஒன்றை இலக்காகக் கொண்டு தனது வாழ்க்கையை நடத்த, ஜோதிடமானது தக்க ஒரு வழிகாட்டியாகவும், நண்பன் போன்றும் செயல்படுகிறது.
 3. எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மையை நீக்கி நம்பிக்கை கொள்ள வைக்கின்றது. பாவச் செயல்கள், தீமைகள் போன்றவை பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுடன், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது. பல்வேறு வகையான குழப்பங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்குத் தக்கதொரு வழிகாட்டியாக ஜோதிடம் செயல்படுகின்றது.
 4. எதிர் காலத்தில் இன்ன இன்ன பிரச்னைகள் ஏற்படலாமென்றும், அதற்குத் தகுந்தவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை பற்றியும் ஜோதிடம் அறிவுறுத்துகின்றது.
 5. எதிர்காலத்தில், எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும் பொழுது, அது ஜோதிடத்தில் முன்னரே குறிப்பிட்டவாறு தான் நடந்தது, எனத் தேற்றிக் கொள்ளவும், சமாதானம் செய்து கொள்ளவும் ஜோதிடம் உதவுகின்றது.

 

ஜோதிடத்தின் தீமைகள்


 1. அதிகப் பொருள் மற்றும் கால நேரங்கள் விரயமாகின்றது.
 2. சில சமயம் தனது மாறுபாடான தகவல்களால் எதிர்காலத்தைப் பற்றிய பய உணர்வையும் நம்பிக்கையின்மையையும், நிச்சயமற்ற தன்மையையையும் நாடி ஜோதிடம் ஏற்படுத்தி விடுகின்றது.
 3. பாவம் செய்தால் அதற்குத் தகுந்த பரிகாரங்கள் செய்வதன் மூலம் அத்தகைய பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்னும் கருத்து சில பேரிடம் எதிர் மறையான தாக்கங்களையும் செயல்பாடுகளையும், அலட்சிய மனோபாவங்களையும் ஏற்படுத்துகின்றது.
 4. சில சமயம் தனது எதிர் மறையான தகவல்களால் இலக்கு நோக்கிய பயணத்தில் தடைகளையும், குழப்பங்களையும் ஜோதிடம் ஏற்படுத்துகின்றது.
 5. போலி ஜோதிடர்களால் பண விரயம், பொருள் விரயம், மனக் கஷ்டம் என பல பிரச்னைகளை மக்கள் எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. தெளிவற்ற மனமுடையோர் இத்தகைய போலி ஜோதிடர்களால் ஏமாற்றப்பட்டு மேலும் மனம் குழம்புகின்றனர். தங்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை இழக்கின்றனர். இது போன்ற தீமைகளுக்கு ஜோதிடம் பல சமயங்களில் உறுதுணையாக இருக்கின்றது.

 

// இன்னும் நிறையக் கேள்விகள் உள்ளன. முதலில் இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் முழுமையாக/உண்மையாக பதிலளியுங்கள் பார்ப்போம்.//

முழுமையாக/உண்மையாக பதிலளித்திருப்பதாகவே எண்ணுகிறேன். ஒன்று செய்யுங்கள். இதே கேள்விகளை இணைய ஜோதிடர்களிடம் கேளுங்கள். அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பாருங்கள். அப்போது தெரியும் உங்களுக்கு எது உண்மை என்று… சரியா… இந்த இணைய உலகில்தான் பல ஜோதிடர்கள் வெற்றிகரமாக வலைப்பதிவு நடத்தி வருகிறார்களே, அவர்கள் ஒருவேளை இதை விட மிகச் சிறப்பாக, தெளிவாக விளக்கலாம்.

எப்படியோ, கேள்விகளுக்கு மிக்க நன்றி. நீங்கள் இப்படி வித்தியாசமாகக் கேள்விகள் கேட்டதால்தான் என்னால் மீண்டும் கொஞ்சம் பின்னோக்கிப் போய், பழசையெல்லாம் பார்த்து வர முடிந்தது. அதற்கு என் நன்றிகள். எனது தாமதமான பதிலுக்கு மன்னிக்க.

 

(போதும்டா சாமி, இதுவே டோண்டு பதில்கள் மாதிரி ஆகி விட்டது. அடுத்த கட்டுரையோடு எல்லாவற்றையும் முடித்து விடுகிறேன். பொறுமையாகப் படித்த வாசக அன்பர்களுக்கு நன்றி)

 

(அடுத்த பதிவில் மங்களம்)

Advertisements

5 thoughts on “ஜோதிடக் கேள்வி – பதில்கள் – 10

 1. There are lot of Astrolgers’ come from Tamilnadu, they book a small room, and advertise by pasting small notice near the Tamil Markets, with their expereience, prominent VIP’s photo’s taken together, advertise in Televsion, await for one or two weeks, make good money by prediction and doing some pooja’s, making Talisman etc.,after they visit other European countries viz: Swiss, Germany, Italy, Holland etc., also Canada, USA. I got caught to two or three cheaters like this and spent nearly 500 euros, but no good results, only I am undergoing very bad time. After one perso leaves another person will come and do the same thing. The Income Tax should take the list from the Embassy’s who gave the Visa’s and raid their residences. All the monbey earned are sent through illegal transactions. For the last 10 to 15 years going on.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.