ஜோதிடக் கேள்வி – பதில்கள் – பகுதி – 9

 

இது பற்றிய முந்தைய கேள்விகளை வாசிக்க

 

கே: கிழக்கே சூலம், மேற்கே சூலம் என்றால் என்ன?

மிக அருமையான கேள்வி. இதை நான் விளக்க வேண்டுமென்றால் உங்களுக்கு ஜோதிடத்தைப் பற்றிய அடிப்படைப் புரிதல் கொஞ்சமாவது இருக்க வேண்டும். குறிப்பாக உச்சம், நீச்சம் போன்ற விஷயங்கள். கிரகங்களுக்கு உரிய பொருட்கள் அவற்றின் சுவைகள் இவை எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அவையெல்லாம் புரிந்தால்தான் நான் சொல்வதும் உங்களுக்குப் புரியும். அவை உங்களுக்குத் தெரியுமா என்ற்உ சொல்லுங்கள். நான் மேற்கொண்டு பின்னர் விளக்குகிறேன். எனக்கு விளக்கம் தெரியும் என்பது மட்டும் உண்மை. (களவும் கற்று மற என்பது போல், ஜோதிடமும் கற்று மறந்தவன் ஆயிற்றெ…)

கே: பிறக்கும் நேரத்தைத் தவறாகச் சொல்லி ஜாதகம் கணித்தால் என்ன ஆகும்? பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் கூறுவீர்கள்?

பிறக்கும் நேரத்தைத் தவறாகச் சொல்லி ஜாதகம் கணித்தால் ஜாதக பலா பலன்கள் மாறுபடும். தசாபுக்தி மாறி விடும். சமயங்களில் நட்சத்திரம்/ லக்னம் என அனைத்தும் கூட மாறி விடும். தசாபுக்தி மாறினால் ஜோதிடர் சொல்லும் பலன்கள் தாமதமாக நடக்கும் அல்லது தவறாக, முன் பின்னாக நடக்கும். லக்னம், ராசி, நட்சத்திரம் மாறினால் எல்லாமே மாறிப் போய் விடும். அந்த ஜாதகத்தை அடிப்படையாக வைத்துப் பலன்கள் சொன்னால் அது சரியாக இருக்காது. கணிப்புகள் தவறும். பாதக பலன்களும் ஏற்படலாம்.

பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் கூறுவார்கள் என ஜோதிடர்களைத் தான் கேட்க வேண்டும். என்னைப் பொருத்தவரை ’பிரசன்ன ஜோதிடம்’ என்ற ஒரு முறை உண்டு. அதன்படி கேள்வி கேட்கும் நேரத்தையே அல்லது ஜோதிடரைச் சந்திக்கும் நேரத்தையே அடிப்படையாக வைத்து, ஜாதகம் கணித்துப் பலன் கூறுவார்கள். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கூட இம்முறை பின்பற்றப் படுகிறது. எனக்குத் தெரிந்தது இந்த பிரச்சன முறை மட்டுமே. வேறு ஜோதிட முறைகள் இருக்கின்றனவா என்பதை ஒரு ஜோதிடர் தான் கூற முடியும்.

(தொடர்கிறேன்)

2 thoughts on “ஜோதிடக் கேள்வி – பதில்கள் – பகுதி – 9

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s