ஜோதிடக் கேள்வி – பதில்கள் – பகுதி – 8

 

முந்தைய பகுதிகள் இங்கே…

 

கே: வைணவ ஆலயங்களில் ஏன் நவக்கிரகங்கள் காணப்படுவதில்லை?

வைணவத்தைப் பொருத்தவரை அண்ட கோடி அகில உலகம் எல்லாமே சாட்சாத் ஸ்ரீமன் நாராயணனுக்குள் அடக்கம். ஏன் தாயாரான மகாலக்ஷ்மியே அவரது மார்பினுள் உள்ளார். பிரம்மா வயிற்றினுள். இப்படி அனைத்தையுமே தன்னிலிருந்து தோற்றுவிக்கும் வல்லமையுடைய ஸ்ரீமன் நாராயணனை மட்டும் வணங்கினாலே போதுமானது. நவக்கிரகங்களை தனியாக வணங்கத் தேவையில்லை என்பது ஸ்ரீ வைணவத்தின் கருத்து.

எப்படி இஸ்லாத்தில் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவான உள்ளானோ அது போல வைணவத்திலும் ஸ்ரீமன் நாராயணனும் அவனது அடியொற்றி வாழும் ஆச்சாரியர்களும் மட்டுமே வணங்கத் தகுந்தவர்கள். அதனால் நவக்கிரகங்களுக்கு வைணவத்தில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் தான் நவக்கிரகங்களுக்கு என்று தனியாக வைணவ ஆலயங்களில் சன்னதிகள் இல்லை.

 

கே: பட்சி சாஸ்திரம், சகுனம், ராகு காலம், எம கண்டம் இவையெல்லாம் பைத்தியக்காரத்தனமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?

ஏன் பைத்தியக்காரத்தனமாக அவற்றைப் பார்க்க வேண்டும். அவற்றை நம்புபவர்கள் அதனைப் பின்பற்றுகின்றனர். அது அவர்களது தனிப்பட்ட நம்பிக்கை மற்றும். புரிதல். அது நமக்கு ஏற்பில்லை என்பதற்காக பைத்தியக்காரத்தனமானது என்று விமர்சிப்பதுத்தான் பைத்தியக்காரத்தனம்.

”நாளும் கோளும் சரியில்லை. இப்போது நீங்கள் பயணம் செய்வது உகந்ததல்ல. அதனால் தீமையான விளைவுகள் உண்டாகும்” என நாவுக்கரசர், ஞான சம்பந்தர் மதுரைக்குப் புறப்பட ஆயத்தமானபோது கவலையுடன் தெரிவித்தார். அதற்கு ஞான சம்பந்தர் பாடியதுதான், “ வேயுறு தோளி பங்கன்” என்ற கோளறு பதிகம். இந்த ஒரு சான்று போதுமே, இத்தகைய நம்பிக்கைகள் பைத்தியக்காரத்தனமானது அல்லது இல்லையா என்பதை அறிய.

இதெல்லாம் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் அய்யா… நாளும் கோளும் நலிந்தோர்க்கில்லை’ என்ற மொழியையும் கேட்டிருப்பீர்களே!’. நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் என்ற முருக பக்தரின் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? அவை முருகனையே முழுக்க முழுக்கச் சரணடைந்த பக்தர் பாடுவது. இறைவனையே முழுக்க முழுக்கச் சரண் புகுந்தால் ஏது இன்னல்?

”அறவாழி அந்தணர் தாள் சேர்ந்தாற்க்கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது” ஆயிற்றே

ஒருவரது நம்பிக்கையை, நமக்கு அது ஏற்பில்லாத போதும் கூட, நமக்கு அது சரியாகப் படவில்லை என்றாலும் கூட இகழ்ந்துரைத்தல் தவறானது., அவரவர் கருத்தும் நம்பிக்கையும் அவரவருக்கு.

 

கே: செவ்வாய் தோஷம், மூலம் என்றெல்ல்லாம் பெண்களை ஜோதிடம் கொடுமைப்படுத்துகிறதே, இது நியாயம் தானா?

இதெல்லாம் அரைகுறை ஜோதிடர்கள் செய்யும் பம்மாத்து வேலைகள். மூல நக்ஷத்திரத்தில் பிறந்த எல்லோருமே பாதிப்படவதில்லை. அதுபோல செவ்வாய் தோஷத்தினால் எல்லோருக்குமே கெடுபலன்கள் உண்டாவதில்லை. எங்கோ ஒரு சிலருக்கு ஏற்படக் கூடும். அதுவும் செவ்வாயின் வீரியம், ராகு போன்ற விஷக் கிரகங்களின் சம்பந்தம், பார்வை, ஸ்தான பலன், உச்ச, நீசம் என பல காரணிகளைக் கொண்டுதான் அளவிடப்படும். இப்படியிருக்க செவ்வாய் தோஷம், மூலம் என்றெல்ல்லாம் பெண்களை ஜோதிடம் கொடுமைப்படுத்துவதற்குக் காரணம் ஜோதிடம் பற்றிய அறியாமை, உண்மையான புரிதல் இன்மை, மக்களின் பயம், ஏமாற்றிப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஜோதிடர்களின் எண்ணம் இவைதான் காரணம். இதுபோன்ற விஷயத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். நல்ல, அனுபவம் வாய்ந்த, பரம்பரை ஜோதிடர்களை அணுகி விளக்கம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

 

(தொடர்கிறேன்)


Advertisements

3 thoughts on “ஜோதிடக் கேள்வி – பதில்கள் – பகுதி – 8

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.