ஜோதிடக் கேள்வி – பதில்கள் – பகுதி – 7

 

முந்தைய பகுதிகளைக் காண இங்கே சுட்டவும்

 

கே: விதிப்படி தான் அனைத்தும் நடக்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம். அப்புறம் ஏன் ஜோதிடம்?

முதலில் ஒரு உண்மையைப் பார்க்க வேண்டும். ஜோதிடம் என்பது எல்லோருக்குமானது அல்ல. ”விதிப்படி நடப்பது நடக்கட்டும். அனைத்தும் இறைவன் செயலே” என்று பற்றற்று இருக்கும் ஆன்மீக ஞானிகளுக்கு ஜோதிடம் தேவையில்லை.

எது வந்தாலும் சரி; ஒரு கை பார்த்து விடுவோம்” என்ற தன்னம்பிக்கை கொண்ட உண்மையான நாத்திகர்களுக்கும் (இன்று மிகுந்திருக்கும் போலி நாத்திகர்களை நான் சொல்லவில்லை. நான் சொல்வது உண்மையான, ஒழுக்கமான, எல்லோரையும் மதித்து, உயர்வான எண்ணங்கள் கொண்ட நல்ல நாத்திகர்களை) ஜோதிடம் தேவையில்லை

பின் யாருக்கு? தங்களுக்கு ஒரு வழிகாட்டி வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு; தங்களது பிரச்னைகளே தாங்களே எப்படித் தீர்ப்பது என்று அறியாத நிலையில் இருப்பவர்களுக்கு; எப்படியாவது நமது பிரச்சனை தீராதா என்று துன்பத்தில் உழல்பவர்களுக்கு ஜோதிடம் உதவுகிறது.

சற்று விளக்கமாகச் சொல்கிறேன்.

இது ஒரு வழிகாட்டலே அன்றி வேறல்ல. எல்லாருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்காலத்தில் முனிவர்கள், ஞானிகள் ஆராய்ந்து இவற்றை எழுதி வைத்துள்ளனர். அவற்றைப் பின்பற்றுவதும், பின்பற்றாததும் அவரவர்களது விருப்பம்.

க்கல்களில் சிக்கித் தவிப்பவருக்கு ஜோதிடம் ஒரு நல்ல வழிகாட்டியாக, நண்பனாக இருந்து உதவுகிறது. வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவுகிறது. துன்பங்கள் தீர, துயரங்கள் மறைய வழிகாட்டிகிறது. எச்சரிக்கை செய்யும் நண்பனாக விளங்குகிறது.

ஜோதிடர்களில் போலி ஜோதிடர்கள் பலர் உள்ளனர். உண்மையானவர்களை விட இவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இவர்களால் தான் ஜோதிடம் மீதான நம்பகத் தன்மை குறைகின்றது. இக்கலைக்கும் கெட்ட பெயர் உண்டாகின்றது. ஆனாலும் இவர்களைக் கண்டறிவதோ, அவர்களை ஒதுக்கிப் புறந்தள்ளுவதோ இயலாத காரியமாகவே உள்ளது. ஏனெனில் யார் உண்மையானவர், யார் போலியானவர் என்று கண்டறிவதே மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. அந்த அளவிற்கு போலிகள் ஜோதிடத்தில் ஊடுருவி உள்ளனர்.

எதிர்காலப் பலன்கள் பலருக்கும் சரியாக இல்லை என்பதால் மட்டும் ஜோதிடத்தைப் பொய் என்று குறிப்பிட முடியாது. சிலருக்கு ஜோதிடத்தில் குறிப்பிட்டவாறே எதிர்காலப் பலன்கள் நடந்துள்ளது என்பதும் உண்மை. எனவே எல்லாருக்கும் ஏன் ஜோதிடத்தில் குறிப்பிட்டவாறு எதிர்காலப் பலன்கள் அமைவதில்லை, சிலருக்கு மட்டும் நடப்பது ஏன் என்பது ஆராயத்தக்கது.

மக்கள் அனைவரும் அறவழியில் வாழவேண்டும். பாவங்களையும், குற்றங்களையும் செய்தால், பல சிக்கல்கள் ஏற்பட்டு வாழ்வில் துன்பப்பட நேரிடும் என உணர்ந்து, நல்ல முறையில் தங்கள் வாழ்நாளைக் கழிக்க வேண்டும், என்ற நோக்கத்தில் தான், இக்கலையைச் சான்றோர்கள் உருவாக்கியுள்ளனர். ஆனால் இக்கலையை மையமாக வைத்து ஆதாயம் தேடும் கும்பல்களால் ஜோதிடம் வளர்ச்சி அடையாமல் அப்படியே தேங்கி நிற்கிறது.

(தொடர்கிறேன்)

Advertisements

3 thoughts on “ஜோதிடக் கேள்வி – பதில்கள் – பகுதி – 7

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s