ஜோதிடக் கேள்வி – பதில்கள் – பகுதி – 5

 

முந்தைய பகுதிகளுக்குச் செல்ல

 

கே: ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்தும் விவாகரத்துகள் நடக்கின்றன, சிலர் இறந்து போகிறார்கள், மனைவியைக் கொலை செய்கிறார்கள். இதெல்லாம் எப்படி? எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கூறுவதுதான் ஜோதிடம் என்றால் எப்படி உங்களால் இவற்றைக் கணிக்க முடியவில்லை.

ஜாதகம் பார்க்காமலும், பொருத்தம் பார்க்காமலும் மணம் செய்பவர்கள் கூட விவாகரத்து செய்கின்றனரே! சிலர் இறந்து போகின்றனர். மனைவியைக், கணவனைக் கூட கொலை செய்கின்றனர். இது எப்படிச் சாத்தியம் என்று சொல்லுங்கள்?

எதிர்காலத்தில் நடக்கப் போவது எல்லாவற்றையும் ஜோதிடத்தால் கணித்துக் கூற இயலாது. சில நிச்சயம் தவறி விடும். இதற்கு ஜோதிடர்களின் கவனக் குறைவு மட்டுமல்ல, ஜோதிடம் பார்ப்பவர்களின் ஊழ்வினையும் கூடக் காரணமாக இருக்கும். இதைத் தான் “விதி கண்ணை மறைத்தது” என்பார்கள்.

ஜோதி + இடம் = ஜோதிடம். ஜோதிடம் வாழ்வில் ஒளியைக் காட்டும். அந்த ஒளியில் பார்ப்பவன் தான் கவனத்தோடும், திறமையுடனும் பயணிக்க வேண்டும். அவன் கவனமற்றவனாகவும், அலட்சியக்காரனாகவும், அந்த ஒளியையே அலட்சியம் செய்பவனாகவும் இருந்தால் யார் என்ன செய்ய முடியும்? ஊழிற் பெருவலி யாவுள?

கே: பரிகாரம் என்ற பெயரிலும் யாகம் என்ற பெயரிலும் ஜோதிடர்களும் புரோகிதர்களும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்களே, இது நியாயமா?

மஹா அக்கிரமம். நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பரிகாரங்களினாலும், யாகம் போன்றவற்றினாலும் எல்லோருக்கும் பலன் கிடைக்கும் என்பதே மதியீனம். யாகங்கள் போன்றவை ‘கர்ம காண்டத்தில்’ வருபவை. அக்காலத்தில் மன்னர்களுக்காக விதிக்கப்பட்டவை. இவற்றை சில போலிகள் பணம் சம்பாதிப்பதற்காக ’மக்களுக்கு’ என்று ஆக்கி விட்டார்கள். அவை எல்லோருக்கும் பலன் தராது.

குறிப்பாக பரிகாரங்கள் அனைத்துமே ஒரு ஜாதகத்தில் ’குரு’ இருக்கும் இடத்தைப் பொருத்தே பலன் தரும். குரு மறைந்திருந்தாலோ, பகை வீட்டில், நீச வீட்டில் இருந்தாலோ, நீச, பாபக் கிரகங்களுடன் சம்பந்தப்பாட்டாலோ, தீய கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ, பாதிக்கப்பட்டாலோ, தீய கிரகங்களின் கூட்டுச் சேர்க்கையில் இருந்தாலும், பரிகாரங்கள் முழுமையாகப் பலன் தராது. பரிகாரங்கள் செய்தும் பலருக்கு பலன்கள் ஏற்படாமல் போவதற்குக் காரணம் இதுதான்.

அக்காலத்தில் இது போன்ற யாகங்கள், ஹோமங்கள் எல்லாம் ஜோதிடப் பரிகாரங்களாகச் சொல்லப்படவில்லை. இவை பின்னால் நடுவில் சிலர் பிழைப்பிற்காகப் புகுத்தியது. உண்மையான பரிகாரங்கள் என்ன தெரியுமா?

(தொடர்கிறேன்)

Advertisements

7 thoughts on “ஜோதிடக் கேள்வி – பதில்கள் – பகுதி – 5

 1. எனக்கும் ஜோதிடத்தை பற்றி தெரியாது, ஆனால் ஒருவர் சொல்லும் வாக்கு அவரின் மனோபலத்தை பொருத்தும் அமைகிறது ……!!

  நீங்கள் சொல்லவதை நான் முழுமையாக ஏற்கிறேன்.

  ஜோதிடத்தை முறையாக கூட கற்க வேண்டாம்,
  உண்மையான இறை பக்தியும்,சித்தர்கள் அருளும், மட்டும் இருந்தால் போதும், நடக்க இருக்கும் சில முக்கிய நிகழ்வுகளை நம்மால் உணர முடியும்.

  தொடரட்டும்….

 2. 1.ஜோதிடம் பார்ப்பவர்களின் ஊழ்வினையும் கூடக் காரணமாக இருக்கும்.
  2.ஒரு ஜாதகத்தில் ’குரு’ இருக்கும் இடத்தைப் பொருத்தே பலன் தரும்.
  மிக உன்னதமான உண்மைகள்
  உரத்த குரலில் சொல்லவேண்டுமென்றால் தயவு செய்து இந்த செய்தியை படிக்கும் நண்பர்கள் இம்மாதிரி பதிவாளர்களை ஊக்கபடுத்தி உற்சாகபடுத்துங்கள் .நண்பர்களுக்கும் பதிவின் அருமையை சொல்லுங்கள் .
  நன்றி .

  1. நன்றி ஐயா. என் அனுபவத்தில் நான் அறிந்து கொண்ட உண்மைகள் இது. ஆனால் ஜோதிடர்களின் கருத்து என்ன என்று எனக்குத் தெரியாது. அதுவும் கே.பி. சிஸ்டத்தில் ”பரிகாரம்” என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லாம் ஏற்கனவே விதிக்கப்பட்டது. அதன் படிதான் அனைத்தும் நடக்கிறது என்கிறது அது. ஒருவிதத்தில் அது உண்மையும் கூட. ஆனால் அதிலும் ஆழமிக்க “துருவ நாடி” போன்ற நூல்கள் சில வகை பரிகாரங்கள் மூலம் சில விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம் (கவனிக்க குறைத்துக் கொள்ளலாம், முற்றிலுமாகத் தவிர்க்கவோ மாற்றவோ முடியாது) என்கின்றன.

   ஒவ்வொருவரும் எதை எதைப் பின்பற்றுகிறார்களோ அவ்வழி பலன்கள் கூற முற்படுகின்றன. சிலர் அனுபவ உண்மைகளை முன் வைக்கின்றனர் அவ்வளவுதான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s