ஜோதிடக் கேள்வி – பதில்கள் – 4

 

முந்தைய பகுதிக்குச் செல்ல

 

கே: சூரியக் குடும்பத்தில் புதிதாக ஏதேனும் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அப்போது ஜோதிடர்கள் என்ன செய்வீர்கள்?

ஐயா, நான் ஜோதிடன் அல்ல. இதை ஜோதிடர்களிம் கேட்டால் என்ன சொல்வார்களோ எனக்குத் தெரியாது. நான் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். எத்தனை கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனால் ஜோதிடமோ, ஜோதிட பலா பலன்களோ மாறாது. ஏனென்றால் வானில் சுழன்று கொண்டிருக்கும் கிரகங்களின் சுழற்சியினால் பூமியில் வசிக்கும் மானுடர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிக் கூறுவதுதான் ஜோதிடம்.

இதில் கிரஹங்கள் மட்டுமல்லாது, அவற்றின் சுழற்சிப் பாதை, பூமியில் இருந்து அக்கிரகங்கள் இருக்கும் தொலைவு ஆகியவைதான் அதி முக்கியம். பூமிக்கு அருகில் இருக்கும் கிரஹத்தின் சுழற்சிகளினால் விளைவுகள் விரைவாகவே பூமியை வந்தடையும். (உதாரணமாக சந்திரன் பூமிக்கு அருகே வரும் போது, ஈர்ப்பு சக்தியில் மாறுபாடு உண்டாகி அலைகள் சீற்றத்துடன் எழுவதைக் கூறலாம்) அது போலவே ஒவ்வொரு கிரகங்களின் ஈர்ப்பு சக்திக்கு ஏற்றவாறு மனித உடலிலும், மனங்களிலும் செயல்களிலும் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. (இதை விஞ்ஞானத்தால் விளக்க இயலாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், தூங்கும் போது உங்கள் கனவில் வருவது என்ன என்பதையெல்லாம் விஞ்ஞானத்தால் விளக்க முடியுமா? அது போலத் தான் இது) ஜாதகத்தில் அவை இருக்கும் இடத்தை வைத்தும் அதன் பலம், பலவீனம் போன்றவற்றைப் பொறுத்தும் தான் பலன்கள் கூறப்படுகின்ற்ன.

உதாரணமாக நெப்டியூன், புளூட்டோ போன்றவை பூமி கிரஹத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பவை. அதனால் அதன் ஈர்ப்பு சக்திகள் மனிதனை அதிகம் பாதிப்பதில்லை. மேலும் அவை கிட்டத்தட்ட 150, 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இடம் மாறுபவை. மனிதனின் சராசரி ஆயுளே அதில் பாதிக்குள்தான். ஆகவே தான் பூமியின் மீது பாதிப்பை ஏற்படுத்தாத அவ்வகைக் கிரஹங்களுக்கு ஜோதிடத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இன்னும் எத்தனை கிரஹங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் சரி, அவை பூமியின் மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் தொலைவுகளில் நிச்சயம் இருக்காது. (அப்படி இருந்தால் கோபர் நிகஸ், கலிலியோ எல்லாம் என்றோ அவற்றைக் கண்டு பிடித்து லிஸ்டில் சேர்த்திருப்பார்களே). ஆகவே சூரியக் குடும்பத்தில் புதிதாக ஏதேனும் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஜோதிடப் பலா பலன்கள் என்றும் மாறாது.

 

கே: அதது இயற்கையாக நடந்து கொண்டிருக்கும் போது, ஜாதகம் போன்றவற்றை நம்புவது பகுத்தறிவிற்கு முரணாக உள்ளதை அறிவீர்களா?

எது எது இயற்கையாக நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறீர்கள்? ”பகுத்தறிவு” என்றால் உண்மையில் என்னவென்று தெரியுமா? யாரோ சிலர் ”சும்மா பிழைப்பிற்காக” பகுத்தறிவு என்று சொல்லி ஏமாற்றி, ஏதேதோ பிதற்றியதை அப்படியே நம்புவதுதான் பகுத்தறிவா? எந்த ஒன்றையுமே விருப்பு, வெறுப்பின்றி ஆராய்ந்து பார்த்து, என்ன உண்மை வருகிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் ஐயா பகுத்தறிவு. அந்த உண்மை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நாம் முன் முடிவுகளின்றி, விருப்பு, வெறுப்பின்றி உண்மையாக உண்மையை அறியும் ஈடுபாட்டோடு ஆராய வேண்டும். அப்படி ஏதும் ஆராயமல் ’பகுத்தறிவு’, ’பகுத்தறிவு’ என்று பிதற்றிப் பலனில்லை.

(தொடர்கிறேன்)

Advertisements

8 thoughts on “ஜோதிடக் கேள்வி – பதில்கள் – 4

 1. ”பகுத்தறிவு” என்றால் உண்மையில் என்னவென்று தெரியுமா?

  இந்த கேள்வி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது….!!!

  ”சும்மா பிழைப்பிற்காக”

  இந்த பதிலும் எனக்கு பிடித்திருக்கிறது….!!!

  நடத்துங்க சார்….!!

 2. சமீபத்திய நாளிதழ் செய்திகளைப் படித்திருப்பீர்கள். கைது ஆகும் படியான ஒரு விதி அமைப்பு ஜாதகத்தில் இருக்கும் என்றால் நாம் முன்னரே அப்படி ஒன்றை ஏற்படுத்தி சிறைக்குச் சென்று விட்டால் அதிலிருந்து தப்பி விட முடியுமா? ஜாதகப்படி இது சரியா? நவக்கிரகங்களை ஏமாற்றும் வேலை இல்லையா அது? விரிவான விளக்கம் தேவை

  1. நீங்கள் யாரை/எதைச் சொல்கிறீர்கள் என்பது புரிகிறது. இதற்கு மிக விரிவாக பதிலளிக்க வேண்டும். ஒரு பதிவாக விரைவில் போட முயற்சிக்கிறேன் சிவா.

 3. //..சூரியக் குடும்பத்தில் புதிதாக ஏதேனும் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அப்போது ஜோதிடர்கள் என்ன செய்வீர்கள்?..//

  இந்த கேள்விக்கான பதில் முற்றிலும் சரியானது. விஞ்ஞானமும் சந்திரனின் ஈர்ப்பு சக்தியை ஒப்புக்கொண்டுள்ளது.
  தொடருங்கள்.

  //எந்த ஒன்றையுமே விருப்பு, வெறுப்பின்றி ஆராய்ந்து பார்த்து, என்ன உண்மை வருகிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் ஐயா பகுத்தறிவு. அந்த உண்மை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நாம் முன் முடிவுகளின்றி, விருப்பு, வெறுப்பின்றி உண்மையாக உண்மையை அறியும் ஈடுபாட்டோடு ஆராய வேண்டும். அப்படி ஏதும் ஆராயமல் ’பகுத்தறிவு’, ’பகுத்தறிவு’ என்று பிதற்றிப் பலனில்லை.//

  இது நல்ல பதில். நான் ஆத்திகவாதி என்று சொல்பவர்களுக்கும் சரி, நான் நாத்திகவாதி என்று சொல்பவர்களுக்கும் சரி, இந்த பகுத்து அறியும் ஆற்றல் தேவை என்பது மட்டும் உண்மை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s