ஜோதிடக் கேள்வி – பதில்கள் – 3

முதல் பகுதி இங்கே…

 

இரண்டாவது பகுதி இங்கே…

 

கே: ஜோதிடம் பார்த்தும் பலருக்கு அதன்படி பலன்கள் நடக்கவில்லையே அது ஏன்?

அது அவரவர்கள் செய்த, செய்யும் பாவ, புண்ணிய பலன்களைப் பொறுத்தது. இப்படித்தான் நடக்க வேண்டும், இப்படி நடக்கக் கூடாது என்று சோதிடம் அறிவுறுத்தி இருந்தால் அதன்படிதான் நடக்க வேண்டும். மாறி நடந்தால் அல்லது தீய செயல்களில் ஈடுபட்டால் எப்படி நல்லது நடக்கும்? அதற்கு அவரவர்கள் செய்யும் வினை தான் காரணமேயன்றி சோதிடம் அல்ல. நம் மீதுதான் தவறே தவிர நிச்சயம் ஜோதிடக் கலையின் மீது அல்ல. (ஆனால் ஜோதிடர்களில் பலர் ஏமாற்றுப் பேர்வழிகளாக இருக்கிறார்கள் என்பதும் உண்மை.) மேலும் தற்காலத்துக்குப் பொருந்தாத விதிகளை அடிப்படையாக வைத்து பலன்கள் சொல்வதாலும் பலன்கள் மாறுபாடு. தவறு ஜோதிடர்கள் மீதுதான், ஜோதிடத்தின் மீது அல்ல. அனுபவம் வாய்ந்த, நல்ல, சேவை மனப்பான்மை உள்ள, பணத்தாசையற்ற ஜோதிடர் கூறும் அறிவுரை என்றுமே தவறாகாது.

 

கே: ஒரே ஜாதகத்திற்கு ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமாகப் பலன் கூறுகிறார்களே அது எப்படி?

உண்மைதான். ஒப்புக் கொள்கிறேன். அதற்கு அவரவர்களது அனுபவம் தான் காரணம். ஒரு ஜாதகத்தைப் பார்த்தது ஒவ்வொரு ஜோதிடருக்கும் ஒவ்வொரு விதமான கிரக சக்திகளின் ஆற்றல்கள், சாதக, பாதகங்கள் புலப்படுகின்றன. அவற்றை வைத்து அவர்கள் பலன் சொல்கிறார்கள். பெரும்பாலும் பொதுவான பலன்கள் ஒன்றாகவே இருக்கும். நுணுக்கமான பலன்கள் மாறுபடும்.

இதை விளக்கமாகச் சொல்வதானால் ஒரு நோய்க்கு ஒரு மருத்துவரை அணுகினால் ஒரு மருந்தைப் பரிந்துரைப்பார். மற்றொரு மருத்துவர் வேறொன்றைச் சிபாரிசு செய்வார். மற்றொருவர் வேறு ஒன்றை எழுதித் தருவார். அவரவர்களது அனுபவத்தையும், நம்பிகையையும் பொருத்து அவர்கள் மாத்திரை, மருந்துகளுக்குச் சிபாரிசு செய்வர். இதைப் போன்றதுதான் ஜோதிடமும். நோய் குணமாக வேண்டும் என்பதுதான் மருத்துவரின் நோக்கம். பிரச்னை தீர வேண்டும் என்பதுதான் (நல்ல) ஜோதிடரின் நோக்கம். அதற்கேற்ப அவர்கள் கூறும் விஷயங்களில் சிற்சில வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஒரே கேள்விக்கு விடை ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக எழுதுவார்கள் இல்லையா, அதுபோலத் தான் இதுவும்.

 

கே: ராகு, கேது பாம்புகள், கிரஹணத்தின் போது சந்திரனை, சூரியனை விழுங்கும் என்பதெல்லாம் பொய் என்று விஞ்ஞானம் நிருப்பித்திருக்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

ஆமாம். உண்மைதான். ராகு, கேதுக்கள் “சாயாக் கிரஹங்கள்” என்று அழைக்கப்படுபவை. ‘சாயா’ என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு ’நிழல்’ என்பது பொருள். கருநிறமாகவும், நீல நிறமாகவும் பாம்பு போல் நீளமான நிழல்களாக அவை இருப்பதால், நம் முன்னோர்கள் அவற்றை பாம்போடு உருவகபடுத்தினர்.   நிழல்களால் சூரிய, சந்திரன் மறைக்கப்படுவதையே அவர்கள் அவ்வாறு “பாம்பு விழுங்குகிறது” என்று கூறினர். அது ஒரு உருவகம்தான். இதில் என்ன தவறு இருக்கிறது?

 

(தொடர்கிறேன்)


Advertisements

3 thoughts on “ஜோதிடக் கேள்வி – பதில்கள் – 3

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s