ஸ்ரீ முருகன் துதிகள்

இன்று தமிழ்க் கடவுளான முருகனைத் துதிக்கும் சில மந்திரங்கள், பாடல்களைக் கண்டு, கேட்டு மகிழ்வோம்.

ஓம் முருகா!

அனைவருக்கும் முருகன் அருள் முன் நிற்பதாக! ஓம் முருகா!


வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீஷண்முகர்

 

அதி சூட்சும முருக மந்திரம்

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்

உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்

கிலியும் சௌவும் கிளரொளியையும்

நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்

சண்முகன் ரீயும் தனியொளி யொவ்வும்

குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக

கந்தர் ஷஷ்டிக் கவசத்துப் பாடலின் இவ்வரிகளை உண்மையான பக்தியோடு தொடர்ந்து பாடினால் முருகனின் அருட் காட்சி கிட்டும்.

 

பாரதியார் பாடிய, முருகனை நேரே எழுந்தருளச் செய்யக் கூடிய பாடல்


மகாகவி

முருகா!-முருகா!-முருகா!

வருவாய் மயில்மீ தினிலே

வடிவே லுடனே வருவாய்!

தருவாய் நலமும் தகவும் புகழும்

தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)

அடியார் பலரிங் குளரே

அவரை விடுவித் தருள்வாய்!

முடியா மறையின் முடிவே! அசுரர்

முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)

சுருதிப் பொருளே,வருக!

துணிவே, கனலே, வருக!

கருதிக் கருதிக் கவலைப் படுவார்

கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா)

அமரா வதிவாழ் வுறவே

அருள்வாய்!சரணம், சரணம்

குமரா, பிணியா வையுமே சிதறக்

குமுறும் சுடர்வே லவனே, சரணம்! (முருகா)

அறிவா கியகோ யிலிலே

அருளா கியதாய் மடிமேல்

பொறிவே லுடனே வளர்வாய்! அடியார்

புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய் (முருகா)

குருவே! பரமன் மகனே!

குகையில் வளருங் கனலே!

தருவாய் தொழிலும் பயனும் அமரர்

சமரா திபனே! சரணம்!சரணம்! (முருகா)

 

இப்பாடலை சென்னையில் ஒரு சபையில், முருகன் திருவுரு முன் மாலை நேரத்தில் பாரதி பாடிய போது புகைப்படத்தில் இருந்து முருகன் அப்படியே இறங்கி வந்தது போல் இருந்தது என்று குறிப்பிடுகிறார் வெ.சாமிநாத சர்மா ஒரு நூலில். அதையே முன் மொழிந்திருக்கிறார் திரு.வி.க. அவர்களும் தமது நூலில்.

 

இந்தப் பாடலைக் கேட்க :

 

 

வரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம்

 

ஓம் நமோ பகவதே

சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே

ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார

காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய

வீராய சூராய மக்தாய மஹா பலாய

பக்தாய பக்த பரிபாலனாயா

தனாய தனேஸ்வராய

மம ஸர்வா பீஷ்டம்

ப்ரயச்ச ஸ்வாஹா!

ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!

(இதை அனுதினமும் முருகன் திருவுருமுன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரஹிக்கப்படும் மந்திரமாகும். இதை யந்திரத்தில் ஸ்தாபனம் செய்து 48 நாட்கள் பூஜித்தால் முருகன் காட்சி கிட்டும் என ‘மாலா மந்த்ரம்’ என்னும் பழங்காலத்து நூல் தெரிவிக்கிறது)

 

ஒரு அழகான முருகன் பாடலை அருணா சாயிராமின் குரலில் இங்கே கேளுங்கள் :

 

ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரவண பவ

Advertisements

10 thoughts on “ஸ்ரீ முருகன் துதிகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.