ஸ்ரீ பைரவ வழிபாடு – 8

உக்ர பைரவர்

தி.வயிரவன்பட்டி: மெய்ஞானபைரவர்

திருக்கோஷ்டியூரை அடுத்து இந்த ஊர் காணப்படுவதால், தி.வயிரவன்பட்டி எனச் சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.

தல இறைவன் மெய்ஞான சுவாமி என அழைக்கப்படுகின்றார். லிங்கத் திருமேனியாக, கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இறைவி பாகம் பிரியாள் என்னும் பெயரில் காட்சி அளிக்கின்றாள்.

பைரவர் தெற்கு நோக்கிய திசையில் காணப்படுகின்றார். உக்ர மூர்த்தி. காபாலிகர்களால் வழிபட்டதாகத் தெரிய வருகின்றது. வழிபோடுவோருக்குச் சகல பேறுகளையும் அளிப்பவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. பல்வேறு கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. மிகவும் பழமையான ஆலயம்.

ஸ்ரீ பைரவர்

கண்டரமாணிக்கம்: ஆண்டப்பிள்ளை கால பைரவர்:

கண்டரமாணிக்கம் என்னும் ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது. இக்கோயில் இறைவன் பெயர் சுகந்தவனேசுவரர். இறைவி சாமீப வல்லி

இங்கு பைரவர் காலபைரவராக, பல்வேறு அற்புத வேலைப்பாடுகளுடன் எழுந்தருளியுள்ளார். இது நவபாஷாணச்சிலை என்றும், பைரவ சித்தர் என்பவர் உருவாக்கி வழிபட்டது என்ற தகவலும் கூறப்படுகின்றது.

பிரம்ம கபாலத்தை ஏந்தியுள்ளதால் கபால பைரவர் என்றும், கால பைரவர் என்றும், நாடி வரும் பக்தர்களின் துயர் துடைத்து உடன் போக்குவதால் ஆண்டப்பிள்ளை பைரவர் என்றும் போற்றப்படுகின்றார்.

ஆதி பைரவர்

இங்கு சனீசுவரரும் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கின்றார்.

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றனவாம். ஸ்தல மரம் வன்னி. வன்னி  பத்திரத்தால் அருச்சனை, சமித்துகளால்  ஹோமம் முதலியன செய்வது விசேடம் எனக் கூறுகின்றனர்.

வன்னிமரம் சாட்சி சொன்ன திருவிளையாடல் இந்தத் தலத்தில் அரங்கேறியதாகவும் கூறப்படுகின்றது.

(தொடரும்)

 

 

 

 

Advertisements

3 thoughts on “ஸ்ரீ பைரவ வழிபாடு – 8

 1. திட்ட மாட்டிங்க-ன்னு நினைக்கிறேன், ஒரு சின்ன வேண்டுகோள்,
  இந்த மாதிரி செய்திகளை எழுதும் போது, கொஞ்சம் செல்லும் வழியையும் எழுதினால் நல்ல இருக்கும்,

  ”வாழைப்பழத்தை உரிச்சி உனக்கு வாயில வைக்கனுமட” -ன்னு கேட்காதிங்க சார்..!

  இந்த மாதிரி ஒரு சில புண்ணிய ஸ்தலங்களை நான் சேகரித்து வருகிறேன், அதனால் தான் கேட்கிறேன்,

  எனக்கு என்னவோ நீங்க புத்தகத்தில் இருப்பதை பார்த்து எழுதிரிங்கலோன்னு சந்தேகமாக இருக்கு சார்,

  1. இல்லை நண்பரே, புத்தகத்தைப் பார்த்து எழுதவில்லை. நண்பனின் ஊருக்கு விடுப்பில் சென்ற போது சுற்றிப் பார்த்துத் தெரிந்து கொண்டு எழுதியது. கேமரா கைவசம் எடுத்துச் செல்லாததால் புகைப்படங்கள் எடுக்கவில்லை. அதனால் தான் தெளிவான படங்களை இணைக்க இயலவில்லை.

   // புத்தகத்தைப் பார்த்து எழுதறீங்களோன்னு சந்தேகமா இருக்கு…//

   இல்லவே இல்லை. காபி அடிப்பது எனக்குப் பிடிக்காது. அதுவும் இது போன்ற விஷயங்களில். .. சரி, எந்தப் புத்தகத்திலாவது இது பற்றியெல்லாம் விரிவாக வெளியிடுவார்களா என்ன? ஆனால் ’ஆன்மீகப் புத்தகம்’ ஒன்றை எழுதினால் இவற்றைச் சேர்த்துக் கொள்ளும் எண்ணம் உண்டு. அப்போது விரிவாக பல தகவல்களை / பயணக் குறிப்புகளை இணைக்கலாம்.

   சரி, உங்களுக்கு என்ன விவரங்கள் இதில் வேண்டும் என்று சொல்லுங்கள் தருகிறேன். என்னையும் சில பதிவர்கள் போல காபி- பேஸ்ட் பதிவர் என நினைத்து விட்டீரோ என்னவோ?

   நான் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து சில எழுதியிருக்கிறேன். அப்படியாயின் அதற்கு சுட்டி கொடுத்திருப்பேன். அல்லது நூல் பெயர் சொல்லி இருப்பேன். தமிழ்ப் புத்தகங்களிலிருந்து எடுத்து எழுதுவதில்லை. அப்படி எழுதினால் கண்டிப்பாக நூலின் பெயர், பதிப்பக விவரம் அனைத்தும் கொடுப்பேன். அதுதான் தர்மம். அடுத்தவன் குழந்தைக்கு நான் ’அப்பா’ உரிமை கொண்டாட முடியுமா என்ன? ஆனால் ஒரு விஷயம், எனது இந்தப் பதிவுகளை பலரும் திருடி தங்கள் வலைப்பூக்களில் போட்டுள்ளனர். லிங்கும் கொடுக்கவில்லை. இந்தத் தளத்தின் பெயரையும் கொடுக்கவில்லை. இதில் உச்சபட்சக் காமெடி அந்தக் காபி-பேஸ்ட் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு/ பாராட்டுக்களுக்கு வேறு பெருமையாக, ஏதோ தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து எழுதியது போல் பதில் கூறுகின்றனர். எல்லாம் காலக் கொடுமை. இது பற்றி விரிவாக ஒரு பதிவு எழுத வேண்டும்.

   முக்கியமான விஷயம் நான் புத்தகங்களிலிருந்து எடுத்து எழுதுவதில்லை. ஆனால் எனது கட்டுரைகள் பல இதழ்களில் பல பெயர்களில் வெளியாகி இருக்கின்றன.

   வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s