34வது புத்தகக் காட்சி

கண்காட்சி அறிவிப்பு

”எங்க வீட்டுக்காரரும் களை பறிக்கப் போனார்” என்பது மாதிரி எப்படியோ ஒருவழியாக 34ம் புத்தகக் காட்சிக்குச் சென்று வந்தேன். தொடர்ந்து இரண்டு நாட்கள் சென்று, அங்கும் இங்குமாய் நடந்ததில் கால் மட்டுமல்ல கையும் வலிக்க ஆரம்பித்து விட்டது. (இந்த முறை புத்தகச் சுமை கொஞ்சம் அதிகம்)


நுழைவாயில்

கொஞ்சம் இடறினாலும் கீழே விழுந்து விடுகிற மாதிரி மரத்தால் தரைத் தளம் அமைத்திருந்தார்கள். ஆகவே மிகவும் கவனமாகக் காலை அளந்து வைத்து நடக்க வேண்டி ஆகி விட்டது. (மகாபலி?)


புத்தகச் சந்தை உள்ளே..

முதலில் என்னைப் போன்ற குழந்தைகள் படிப்பதற்கான புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று தேடினேன். ஒன்றும் சரியாக அமையவில்லை. அப்படி இருந்ததும் கூட அடாத விலையாக இருந்தது. காமிக்ஸ் புத்தகங்கள் ஏதும் கண்ணில் படவில்லை. கட்டக் கடைசியாக வானதி பதிப்பகத்தில் வாண்டுமாமாவின் ’மர்ம மாளிகையில் பலே பாலு’வை வாங்கினேன். புலிக்குகை போன்ற வேறு சில நூல்களும் இருந்தன. ஆனால் நான் தேடி வந்த ’பச்சைப் புகை’ இல்லை. நான் சென்ற அன்று அங்கு பயங்கரக் கூட்டம். நீண்ட நேரம் க்யூவில் நிற்க வேண்டியதாகப் போய் விட்டது. பில் போடும் பெண் பாவம் திணறி விட்டார். சாண்டில்யனுக்கும் கல்கிக்கும் இன்னும் அதிக வரவேற்பு இருந்தது புரிந்தது. எல்லோர் கையிலும் கல்கி, சாண்டில்யன் தான். பின் வேணு சீனிவாசன் எழுதிய ’கருடன் காத்த புதையல்’ நூலை தலைப்பின் சுவாரஸ்யம் கருதி வாங்கினேன்.

நான் பார்த்த அன்று சில அரங்குகளில் கிழக்கு, விகடன், காலச்சுவடு, உயிரிமை, நக்கீரன், வம்சி போன்ற அரங்குகளில் வாசகர்கள் கூட்டம் நிறைய இருந்தது. கீழைக்காற்று, சந்தியா, அலைகள், தமிழினி, விசா, திருமகள், விஜயா போன்றவற்றிலும் ஓரளவு நல்ல கூட்டம் இருந்தது. அம்ருதா, முல்லை, ஐந்திணை, பாரிநிலையம், அமுத நிலையம் போன்றவற்றில் அதிக வாசகர்கள் தென்படவில்லை.

முதல் ரவுண்டில் சில அரங்குகளில் கூட்டம் இருந்தது. சிலவற்றில் இல்லை. மறுநாள் சென்ற போதும் நிலைமையில் பெரிதாக மாற்றம் இல்லை. தொடர்ந்து நான் செல்லவில்லை என்பதால் என்னால் வாசக வரவேற்பு பற்றியோ, அதிக விற்பனை பற்றியோ சொல்ல இயலவில்லை.

பொதுவாக கிழக்கு பதிப்பகம் இந்த முறை கடை பெரியதாகப் போட்டிருந்ததால் வாசகர்கள் கும்பலாக வந்து வாங்கினார்கள். நான் பார்த்த வரை தினம்தோறும் கிழக்கில் நல்ல கூட்டம் இருந்தது. சுஜாதாவின் புத்தகங்கள் நல்ல சேல்ஸ். பட் அடிக்க வருமாறு புத்தக அட்டையில் அவர் பெயர் கொஞ்சம் பெரிதாக எழுதியிருந்ததுதான் உறுத்தியது. இன்னும் கொஞ்சம் ரேப்பரில் கவனம் செலுத்தினால் நல்லது என நினைக்கிறேன். (புத்தகம் வாங்குபவர்கள் சுஜாதாவுக்காகத் தான் வாங்குகிறார்கள். ரேப்பருக்காக இல்லை என்றாலும் கூட)

இந்த முறை இரண்டு நாட்கள் சென்று நிறையவே புத்தகங்கள் வாங்கினேன். ஆனால் அதுபற்றி லிஸ்ட் போடப் போவதில்லை. படமாக இணைத்திருக்கிறேன். (சோம்பேறித்தனம் தான் காரணம்) ஆனால் இது புத்தகங்களின் ஒரு பகுதி மட்டும் தான். இன்னும் இரு பெரிய பைகளை (கிழக்கில் கொடுத்தார்கள்) அப்படியே வைத்திருக்கிறேன்.

கிழக்குப் பை (கிழக் குப்பை அல்ல)

 

சில புத்தகங்களை (நினைவில் நின்றவை, அககாட்சி) இரண்டு நாளும் சென்று இரண்டு முறை வாங்கி எனது புத்திசாலித்தனத்தை நானே மெச்சிக் கொண்டேன். (பார்க்க படம்)


ஒன்றாக இரண்டு
இரண்டும் ஒன்று
தா... தா... சுஜாதா...
கிழக்கில் ஒரு பேய்...

கீழ்கண்ட சில புத்தகங்களை நண்பர்களுக்கு சிபாரிசு செய்கிறேன். (முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் ஆங்காங்கே புரட்டியதில் என்னைக் கவர்ந்தது)

மகாத்மா காந்தி கொலை வழக்கு – கிழக்கு

ஹிந்துத்வம் – கிழக்கு

நாகர் வரலாறு – காவ்யா

மகா காளி – விகடன் பிரசுரம்

கிருஷ்ணாஜியுடன் நாற்பதாண்டுகள் – நர்மதா

வழி இருக்க வருந்துவதேன் – ஸ்ரீ ஆனந்த நிலையம்

நெஞ்சில் நிறைந்தவர்கள் – திரிசக்தி பதிப்பகம்

நாடி ஜோதிடம் உண்மையா, பொய்யா? மேகதூதன் பதிப்பகம்

ஸ்ரீ சுகர் ஜீவ நாடி அற்புதங்கள் – கற்பகம் புத்தகாலயம்

முற்பிறவியை அறிந்து கொள்வது எப்படி? மேகதூதன் பதிப்பகம்


சென்ற ஆண்டு புத்தகக் காட்சி பற்றி…

 

******************

Advertisements

9 thoughts on “34வது புத்தகக் காட்சி

 1. அது என்ன சார் நுழைவு வாயிலில் அத்தன பொம்பள பிள்ளையிங்களோட போடோ- வ வச்சிருக்காங்க….!
  அவிங்களுக்கும் இந்த கண்காட்சிக்கும் என்ன சார் சம்மந்தம்….??
  என்ன கொடும சார் இது….?

  1. அது ’நல்லி சில்கஸ்’ விளம்பரங்க. அவர் புடைவை வியாபாரி இல்லையா அதுதான் அந்த போஸ். ஆனால் ஒரு வ்சியம இன்றுதான் இந்தப் புத்தகக் காட்சிக்கு யார் யாரோ ஸ்பான்சர் செய்கிறார்கள், ஆதரிக்கிறார்கள். ஆனால் கடந்த 20, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த அளவுக்கு மக்களிடம் இந்தப் புத்தகக் கண்காட்சிகள் பிரபலமாகும் முன்னரே ஆதரித்து, எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் ஸ்பான்சர் செய்தவர் நல்லி குப்புசாமிச் செட்டியார். அந்த வகையில் அவர் செய்திருக்கும் இதழியல் தொண்டு மகத்தானது. நிறைய எழுத்தாளர்கள் ஆதரித்திருக்கிறார். இன்னமும் தனது ட்ரஸ்ட் மூலம் நலிவடைந்த பல எழுத்தாளர்களுக்கு உதவி வருகிறார். நூல்கள் பல வெளியிட்டு எழுத்தாளர்களை கௌரவித்து வருகிறார். அவர் பணி ஆதரிக்க வேண்டிய ஒன்று.

 2. ”முற்பிறவியை அறிந்து கொள்வது எப்படி? ” என்ற புத்தகத்திப்பற்றி கொஞ்சம் எழுதுங்களேன் ஐயா…………!!!

  1. அதில் ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லை நண்பரே! சும்மா டைம் பாஸுக்கு (இந்த வலைப் பூவை வாசிப்பது போல) வாசிக்கலாம். அது போன்ற புத்தகத்தைப் படித்தெல்லாம் முற்பிறவிகளை அறிந்து கொள்ள முடியாது. அது மாதிரிதான் “பேய்” என்ற புத்தகமும். ஜஸ்ட் டைம் பாஸ்தான். நோ யூஸ்.

   கிருஷ்ணாஜி புத்தகம் சூப்பர். மஹா காளியை படித்துக் கொண்டிருக்கிறேன். நாகர் வரலாறு நூலையும் அவ்வப்போது புரட்டிக் கொண்டிருக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.