ஸ்ரீ பைரவ வழிபாடு – 3

சிவகங்கை, புதுக்கோட்டைப் பகுதிகள் பைரவ வழிபாடு அதிகம். இந்த பைரவ வழிபாட்டில் அஷ்டபைரவர்கள் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

வைரவர்

அஷ்ட பைரவர்கள்

1. யோக பைரவர்,   திருத்தளி நாதர் ஆலயம், திருப்பத்தூர்

2. . கால பைரவர்,    துர்வாசபுரம்

3. வடுக பைரவர்,   கொடுங்குன்ற நாதர் ஆலயம், பிரான்மலை

4. கோட்டை பைரவர், திருமய்யம்

5. சொர்ணாகர்ஷன பைரவர், தபசு மலை

6. வைரவர்  ஸ்ரீவளரொளிநாதர் ஆலயம் வைரவன்பட்டி.

7. மெய்ஞானபைரவர், மெய்ஞான வைரவ சுவாமி ஆலயம்       தி.வயிரவன்பட்டி.

8. கால பைரவர் ஆண்டப்பிள்ளை நாயனார் ஆலயம்,  கண்டரமாணிக்கம்

பைரவ அம்சங்களில் ஷேத்ரபாலகர், ஸ்ரீ பிஷாடணர், பூதநாதர், கபால பைரவர், ஆபதுத்தாரணர் எனப் பல பைரவ அம்சங்கள் உள்ளன.

கால பைரவர்:

பைரவரின் அவதாரம் பற்றி மற்றொரு புராணத் தகவலும் கூறப்படுகின்றது. சம்பாசுரனை வதம் செய்வதற்காக, சஷ்டித்திதி அன்று சிவபெருமானின் மூர்த்தமாக, கால பைரவர் அவதரித்து அவனை வதம் செய்ததாகக் கூறப்படுகின்றது. அதனால் தான் ‘சம்பா சஷ்டி’ என்பது பைரவருக்கான விழாவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துர்வாசபுரம் ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றது.

கால பைரவர்

விழா:

சம்பாசுரனை, இறைவன் கால பைரவராக அவதரித்து வதம் செய்ததற்காக, இவ்விழா ஒவ்வொரு வருடமும், கார்த்திகை மாதச் சஷ்டித் திதி அன்று கொண்டாடப்படுகின்றது. முருகனுக்கு எப்படி ஐப்பசி மாதச் சஷ்டித் திதி என்பது கந்த சஷ்டியாக விசேடமோ அது போன்று இங்குள்ள பைரவருக்கு கார்த்திகை மாதச் சஷ்டி விழா சம்பா சஷ்டியாக விசேடம். சுற்றுப் புற கிராமங்களிலிருந்தும்  பெருந்திரளான மக்கள் இவ்வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவின் இறுதி நாளன்று சம்பாச் சாதம்’ செய்து, இறைவனுக்கு நைவேத்தியம் செய்த  பின்னர் மக்களுக்கு விநியோகம் செய்கின்றனர். (சம்பாச் சாதம் என்பது, சாதத்துடன், நெய், மிளகு, சீரகம் போன்றவற்றைக் கலந்து செய்வதாகும். சற்றேறக்குறைய ஆலயங்களில் பிரசாதமாக வழங்கப்படும் வெண் பொங்கல் போல இருக்கும்)

துர்வாசபுரம் என்ற பெயருக்கும் ஒரு காரணம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. துர்வாச முனிவர் வழிபட்ட தலம் எனவும், அவர் தவம் செய்த இடம் என்றும், அவர் ஜீவ சமாதி உள்ளது என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

அமைவிடம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் (ஊமையன் கோட்டை) என்னும் ஊருக்கருகே, பொன்னமராவதி செல்லும் வழியில் துர்வாசபுரம் அமைந்துள்ளது. கீழச்சிவல்பட்டியிலிருந்து, குருவிக்கொண்டான்பட்டி வழியாக ராங்கியம் என்னும் ஊர் செல்லும் பாதை வழியாகவும் வரலாம்.

(தொடரும்)

 

 

Advertisements

5 thoughts on “ஸ்ரீ பைரவ வழிபாடு – 3

 1. பைரவர் குறித்தான நல்ல பதிவு.
  சிவகங்கை புதுக்கோட்டை பகுதிகளுக்கு பைரவர் தரிசனம் செய்வதற்கு ஒரு தனி ஆன்மீக பயணம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன். பைரவர் அருள் புரிய வேண்டும்.
  அதிலும் யோக பைரவர் ( திருத்தளி நாதர் ஆலயம், திருப்பத்தூர்)
  சொர்ணாகர்ஷன பைரவர் (தபசு மலை),
  மெய்ஞானபைரவர் (மெய்ஞான வைரவ சுவாமி ஆலயம் தி.வயிரவன்பட்டி) தரிசனங்கள் வேண்டி சித்தர்களை பிரார்த்தனை செய்கிறேன்.
  இந்த பைரவர் குறித்தான தொடரினை விரிவாக எழுத ரமணன் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

  1. ஆமாம் முருகையன். பைரவர் ஆலயங்கள் மட்டுமல்ல. இன்னும் முக்கியமான பல ஆலயங்கள் அப்பகுதியில் உள்ளன. குறிப்பாக திருமெய்யத்தில் உள்ள சத்தியமூர்த்திப் பெருமாள் மற்றும் சத்தியகிரீஸ்வரர் ஆலயம் மிக மிகத் தொன்மையானது. ஸ்ரீ ரங்கத்திற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்கிறது தல புராணம். முனிவர்களால் பூஜிக்கப் பெற்றத் தலம். ஞானத்தை அருளி ‘மெய்’யை உணர்த்துவதால் இறைவன் மெய்யப்பர் (சத்திய மூர்த்தி, சத்தியகிரீஸ்வரர்). அவசியம் தரிசியுங்கள். நீங்கள் சபரி மலை யாத்திரை செல்லும் போது கோட்டை வாயிலில் கோட்டை பைரவரைத் தரிசிக்கலாம். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். பயணிகளின் வழித்துணையாக வந்து காப்பதாக ஐதீகம். அதனால் அவ்வழியில் செல்வோர் அனைவரும் இறங்கி தரிசித்து விட்டுச் செல்வர். அதுபோல திருக்கோகர்ணத்தில் உள்ள பிரகாதம்பாள் ஆலயம் முக்கியமானது. ஜட்ஜ் ஸ்வாமிகளால் ஆராதிக்கப்பெற்றது புவனேஸ்வரி ஆலயம். இப்படி அங்கு தரிசிக்க வேண்டிய நிறைய ஆலயங்கள் உள்ளது.

   அதுபோல காட்டுப் பாவா பள்ளிவாசலில் உள்ள ’தர்கா’ மிக மிக முக்கியமானது. அங்கு சமாதி கொண்டிருக்கும் ’பாவா’ கருணையே உருவானவர். நமது பிரச்சனகளைத் தீர்ப்பவர். ’சையது பாவா பக்ருதீன் சாஹிப்’ என்பது அவர் பெயர் கொள்ளையர்களிடமிருந்து சில பிராமணப் பெண்களின் உயிரைக் காக்கத் தன்னுயிரைத் துறந்த மகான். மகத்தான சக்தி மிக்கவர். பின்னர் அவர் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s