ஸ்ரீபைரவர் வழிபாடு – 2

முதல் பைரவர்:

பைரவ மூர்த்தங்களில் மொத்தம் 108 வகைகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அவற்றில் முதன்மையானதும், மூலமானதாகவும் விளங்குவது ஆதி பைரவராகும்.

 

யோக பைரவர், திருப்பத்தூர்

 

இந்த ஆதி பைரவர்  எழுந்தருளியுள்ள தலம் திருப்பத்தூர் திருத்தளி நாதர் ஆலயம் ஆகும். இத்தலம் காரைக்குடி திருப்பத்தூர் மார்க்கத்தில், பிள்ளையார்பட்டி, குன்றக்குடிக்கு வெகு அருகே உள்ளது. இஃது பல சிறப்புகள் வாய்ந்த தலமாகும். மகாலட்சுமிக்காக இறைவன் கௌரி தாண்டவம் ஆடிய திருத்தலமாகும். இங்கு மகாலட்சுமி, நாராயணர் என இருவரும் தனித்தனியாக யோக கோலத்தில் வீற்றிருக்கின்றனர்.

இத்தலத்தின் ஒரு புறத்தில் தனிச் சன்னதியில்  பைரவர் காணப்படுகின்றார்.

இவர் சிறப்புகள்:

உலகில் தோன்றிய முதல் பைரவர் இவர் தான் என இந்த ஆலயக் குறிப்பு கூறுகின்றது. அதானால் இவர் ‘ஆதி பைரவர்’ என அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர், பெரும்பாலான இடங்களில், கையில் சூலத்துடன், நாய் வாகனத்துடன், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே ஐதீகம். ஆனால் இங்கு பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில், காணப்படுகின்றார். அதனால் யோக பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாக இத் திருக்கோயில் குறிப்பு கூறுகின்றது. சஷ்டி, அஷ்டமி போன்ற நாட்களில் இவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றது. இவற்றில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து வழிபாடு செய்து வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை.

 

ஸ்ரீ பைரவர்

 

இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று. . பூஜை முதலியன முடிந்த பிறகு அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஆலய அர்ச்சகர்களே கூட செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு உக்கிரமானவர்.

தேய்பிறை அஷ்டமி அன்று இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது. சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு போன்றவை விலக இவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன.

அமைவிடம்:

திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை செல்லும் சாலைக்கு அருகே இவர் எழுந்தருளியுள்ள திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அருணகிரி நாதர், நாவுக்கரசர் போன்றோரால் பாடல் பெற்ற தலம். புற்று வடிவில் வான்மீகி வழிபட்ட தலம் ஆதலால் ‘திருப்புத்தூர்’ என்றழைக்கப்பட்டு, பின்னரு மருவி ‘திருப்பத்தூர்’ ஆகி விட்டது.

பிள்ளையார்பட்டி, குன்றக்குடி செல்லும் அன்பர்கள் அவசியம் இத் திருத்தலத்தைத் தரிசிக்கவும். திருப்பத்தூர் பேருந்து நிலையத்தின் அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது.

(தொடரும்)

Advertisements

17 thoughts on “ஸ்ரீபைரவர் வழிபாடு – 2

 1. அய்யா பைரவர் குறித்து எழுதியமைக்கு மிக்க நன்றி!தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் வைரவன் கோவில் என்ற ஊரில் பைரவருக்கு தனி கோயில் உள்ளது,முடிந்தால் சென்று தரிசிக்கவும்

   1. நல்லது. அந்த ஆலயத்திற்கு தஞ்சாவூர் புதிய/பழைய பேருந்து நிலையத்திற்கு எப்படிச் செல்வது என்றும் தெரிவித்தால் அது படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

 2. அருமையான பதிவு தொடருங்கள்

  சில நாள்கள் தொடர்ந்து உஜிலாதேவி வலை தளத்தை படித்து வருகிறேன் நீங்கள் எழுத்திய புத்தக விமர்சனம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது “அண்ணாச்சாமி” போன்றோருக்கு அவரின் பதிவு சாட்டை அடியாக இருக்கும் என்று நினைக்கிறேன் நமது உண்மையைத் தேடி… தளத்தில் அவரின் பதிவையும் வெளியிடுங்களேன் எங்களை போன்றோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்

  இப்படிக்கு என்றும் உங்களை போல் தினம் தினம் உண்மையைத் தேடி அலையும் மானிட ஜென்மம்
  உங்களின் பதிலையும் எதிர் பார்க்கிறேன்

  1. நன்றி சதீஷ். ’அண்ணா’ சாமிகள் எல்லாம் திருந்தாத ஜென்மங்கள். அவர்களுக்குத் தொடர்ந்து பதில் சொல்லி நேர விரயம் செய்ய விரும்பவில்லை. ராமானந்த குருஜி அவர்கள் ஒரு நல்ல ஆன்மீகச் சிந்தனையாளராகத் தெரிகிறார். அவரது அறிவை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது உண்மையான ஆன்மீக ஆர்வலர்களின் கையில்தான் இருக்கிறது.

   உண்மையை நாம் உண்மையாகத் தேடத் தேட அது ஒருநாள் நம்முன் உண்மையாகவே வந்து நிற்கும் என்பதுதான் உண்மை. தங்கள் கருத்திற்கு நன்றி.

 3. உங்கள் வலைப்பூ பிரமாதம். சூப்பர். பைரவர் பற்றிய தொடர் மிகவும் அருமை. தொடருங்கள் – இப்படியெல்லாம் வாழ்த்த நான் மடையன் அல்ல. மகா மட்டமான வலைப்பூ உங்களுடையது. இதை வாசிப்பவர்கள் மடையர்கள். காட்டு மிராண்டிகள் என்பதில் சந்தேகம் இல்லை. காலம் முன்னேறி எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இப்படி வெட்கமில்லாமல் மூட நம்பிக்கியைப் பரப்புகிறீர்களே… தூ.. கேவலமாக இல்லை…

  கடவுளே இல்லை என்னும் போது பைரவராம், ஆதியாயோம்… போடாங்..

  1. மிஸ்டர் அண்ணாச்சாமி

   உங்களுக்குக் கருத்துக் கூற உரிமை இருக்கிறது. கடவுளைப் பழிக்கலாம். இந்த வலைப்பூவைத் திட்டலாம். என்னை வசைபாடலாம். ஆனால் இதை வாசிப்பவர்களை மடையர்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்றும் கூறுவதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இதை வாசித்ததின் மூலம் நீங்களும் அதுவாகிறீர்கள் என்பதை மறக்காதீர்கள். நீ எதைப் பிறருக்குத் தருகிறாயோ, அதுதான் உனக்குக் கிடைக்கும் என்கிறார் பகவான் ரமணர். நம் வார்த்தைகளில் கண்ணியம் தேவை நண்பரே. நீங்கள் உணர்ச்சிவசப்படுமளவிற்கு இங்கே என்ன நடந்து விட்டது? யாரை நான் முட்டாளாக்கி விட்டேன், இல்லை மூட நம்பிக்கையைப் பரப்பி மூடர்களாக்கி விட்டேன்? புரியவில்லை. உங்களுக்கு வேறு ஏதோ பிரச்சனை அல்லது யார் மீதோ கோபம் என நினைக்கிறேன். அது இங்கே வசையாய் வெளிப்படுகிறது. பரவாயில்லை. பைரவரைப் பற்றி எழுதியதும் இதுமாதிரி ”சத்தங்கள்” வருவதில் வியப்பில்லை. உங்களுக்கு என் பிரார்த்தனைகள்.

 4. பைரவ வழிபாடு செய்யும் எனக்கு, பைரவர் குறித்தான நல்ல தகவல் இது. அதிலும் ஆதிபைரவர் என்று குறிப்பிட்டுள்ளது மேலும் சந்தோஷம். இருப்பிடத்தையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
  வரும் ஜனவரி-1ல் பிள்ளையார்பட்டி மார்க்கமாக சபரிமலை யாத்திரை செல்ல உள்ளோம். ஆதிபைரவரின் அருளால் அவரை தரிசிக்க நினைக்கின்றேன். அவரின் அருள் கிடைக்கட்டும்.

  சிவத்தை முழுமுதலாகக் கொண்டு சித்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் பைரவரின் அருள்பெற அவசியம் முயற்சி செய்யவேண்டும்.

  சரியான தருணத்தில் இந்த பதிவு வெளியாகியுள்ளது. மிக்க சந்தோஷம்.

  1. அவசியம் சென்று வாருங்கள் முருகையன். மிக மிக உக்ரமான பைரவர். இவரை சங்கிலியால் பிணைத்திருப்பார்கள். அதன் மூலமே அவரது சக்தியை அறிந்து கொள்ளலாம். நன்று சொன்னீர்கள். நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s