பகவான் ரமணரின் ஜயந்தி விழா

இன்று பகவானின் 131வது ஜயந்தி விழா. இந்த நன்னாளில் அவரை நினைவு கூர்வோம்.

 

பகவான்

பகவான் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில் அவதரித்தவர். ‘நான் யார்’ என்னும் விசாரணை மூலம் ஒரே கணத்தில்ஆத்மானுபவம் எய்தியவர். அதன்பின் அருணாசல அண்ணலை நாடி அண்ணாமலை வந்தார். பல இடங்களிலும் தங்கி தவம் செய்தார். சில போக்கிரிகளால் இவரது தவத்திற்கு இடையூறு ஏற்படவே, இடிந்து, சிதலமடைந்திருந்த, யார் கண்ணிலும் படாத பாதாள லிங்கேச்வரர் சன்னதியில் தவம் செய்தார். அப்போதும் சில போக்கிரிச் சிறுவர்கள் கல்லெறிந்து அவரைத் தொந்தரவு செய்தனர். சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் இவரை உலகுக்கு அடையாளம் காட்டினார்.

அதுமுதல் வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தார். பேசாமல் தியானத்திலேயே எப்போதும் இருந்ததால் ‘மௌன குரு’ என்றும், ‘பிராம்மண சுவாமி’ என்றும் அன்பர்களால் அழைக்கப்பட்டார். மாமரத்துக் குகை, பவழக் குன்று, விரூபாக்ஷிக் குகை போன்றவற்றில் சிலகாலம் தவம் செய்த இவர் பின்னர் ஸ்கந்தாச்ரமம் சென்று வசிக்கத் தொடங்கினார்.

தம்மை நாடி வந்தவர்களுக்கு மௌன குருவாய், தக்ஷிணாமூர்த்தியாய், நயன தீக்ஷை வழங்கி, அவர்களது ஆன்ம ஒளியை ஊக்குவித்தார். பின்னர் மலையை ஒட்டிய பகுதியில் கீழே வந்து வசிக்கத் தொடங்கினார். அதுவே பிற்காலத்தில் ‘ரமணாச்ரமம்’ ஆகிற்று.

ரமணரின் சமாதித் தலம்

‘ஒருவன் தன்னைத் தான் அறிந்து கொள்ளுதலே, இறைவனை அறிந்து கொள்வதற்கு முதற்படியாகும்’ என்ற ஞான உபதேசத்தை அருளிய பகவானின் 131வது ஜெயந்தி விழா 23-12-2010 அன்று கொண்டாடப்படுகிறது. பகவானைப் பணிவோம். பரமனருள் பெறுவோம்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

ரமணர் வாழ்வில் நடந்த ஒருஅற்புதம்

*****************

Advertisements

5 thoughts on “பகவான் ரமணரின் ஜயந்தி விழா

  1. ஐயா வெங்கடேஸ்வரன் அவர்களே …..
    ரமணன் சார் கேட்டதுபோல் கொஞ்சம் முகவரியும் சேர்த்து எழுதி இருந்தால் சௌகரியமாக இருந்திருக்கும், தங்கள் கொடுத்த தகவலுக்கு மிக்க நன்றி*** சரி ஓகே இனி நாங்கள் பார்த்துக்கிறோம் \\

  2. ramanarai guruvaga etru kondu jeevan muktha nilaiyai adainthavar gurudevi sri janaki matha. ivar ramanar moolam guru ubadesam petravar. ramanar ivarai seedaragha etruk kondar. illara dharmathil iruntu kondu epadi jeevan muktha nilaiyai adaiya mudiyum enbatharku vazhi katinar.

    guru devi shri janaki matha thanjavuril oru ashramam uruvakinar. angu mathru bootheshwarar endra siva linga moorthathai prathishtai seitar. indrum angu rama jayanthi, janaki matha jayanthi, aradhanai, navarathri pondra anaithu vizhakalum sirapaga kondadapattu varugirathu. mudinthavargal ingu tharisanam ramanar matrum annaiyin arulai peralaamae..

    om namo bagavathe sri ganesha swaminatha janaki ramanaya

    1. மிக்க நன்றி ஐயா, ஜானகி மாவின் வாழ்க்கை வரலாறு நூலாக வெளி வந்துள்ளதா, அவரது சமாதி ஆலயம் / ஆச்ரமம் எங்கே உள்ளது? ஏதேனும் இணையதளம், வலைப்பூ உள்ளதா? தேவராஜ முதலியாரின் நாட்குறிப்பில் அம்மா பற்றி ஏதேனும் செய்தி உள்ளதா? மேல் விவரங்கள் இருப்பின் தருக. ஸ்ரீ சர்க்கரை அம்மாள் உட்பட பலர் ரமணரிடம் மானசீகமாக உபதேசம் பெற்றவர்கள்தான். நீங்கள், ஆச்ரமம் முகவரி, செல்லும் வழி போன்ற மேல் தகவலைத் தந்தால் அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.