மரணம் – ஆவி – மறுபிறவி – 4

மறுபிறவி பற்றிய ஆய்வுகளில் பல புரியாத, விடை காண இயலாத சம்பவங்கள் பலவும் இருக்கின்றன. உதாரணமாக லுரன்சி வென்னம் என்னும் ஒரு வயதுக் குழந்தை, மேரி ரோப் என்பவர் இறந்த சில மாதங்களில் அவரைப் போலவே பேச, நடக்க, அங்க அசைவுகளைக் காண்பிக்க ஆரம்பித்தது. அச்சு அசலாக மேரி ரோப் சிறுவயதுக் குழந்தையாக இருந்தால் எப்படி நடந்து கொள்வாரோ அதன்படியே நடக்க ஆரம்பித்தது.

 

மேடம் மேரி

மேரி ரோப்பின் மறுபிறவி தான் இந்தக் குழந்தை என்பதை ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், மேரி ரோப் உயிருடன் இருக்கும் போதே இந்தக் குழந்தை பிறந்து விட்டது. ஆகவே மேரி ரோப்பின் ஆன்மா இந்தக் குழந்தையின் உடலில் புகுந்து விட்டது, அதாவது அவரது ஆவி, லுரன்சி என்னும் இக் குழந்தையின் உடலில் புகுந்து கொண்டு விட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அப்படியானால் உண்மையான லுரன்சி வென்னத்தின் ஆன்மா அல்லது ஆவி என்ன ஆனது என்பதை ஆய்வாளர்களால் கண்டறிய இயலவில்லை.

மறுபிறவி பற்றிய ஆய்வுகளில் இவையெல்லாம் புரியாத புதிர்களாக உள்ளன.

மற்றொரு சம்பவத்தையும் பார்ப்போம்.

 

சிறுவன்

திபெத்தில் வாழ்ந்தவர் நைலேங் என்பவர். அவர் திடீரென நோயுற்றுக் காலமானார். ஆண்டுகள் சில கழிந்தன. புத்தமதத் துறவியாக – திபெத்தியர்களின் மௌன்காக (monk)  ’சௌகுன் ராஜ் சுதாஜார்ன்’ என்னும் சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தான் தான் முற்பிறவியில் வாழ்ந்த நைலேங் என்று கூறினார். இதை இயான் ஸ்டீவன்சன் போன்ற ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

 

டாக்டர் இயான் ஸ்டீவன்சன்

ஆராய்ச்சியின் முடிவில் நைலேங் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே ’சௌகுன் ராஜ்’ பிறந்து விட்டது தெரிய வந்தது. ஒருவர் இறந்த பிறகு தான் அவர் மறுபிறவி எடுக்க முடியும், ஆனால் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே அவர் மறுபிறவி எடுத்திருப்பதாகக் கூறுவதை ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும், ’சௌகுன் ராஜ் சொன்ன முற்பிறவி பற்றிய விஷயங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால் டாக்டர் இயான் ஸ்டீவன்சன் இந்தச் சம்பவத்தை ‘புரியாத புதிர்’ என்றும் ’couldn’t find an explanation for the discrepancy’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவில் வாழ்ந்த/வாழும் பிரபல மனிதர்களின் முற்பிறவி/ மறுபிறவிகளைப் பற்றி ஆய்வு செய்து எழுதியிருக்கிறார் டாக்டர் வால்டர் செம்கிவ்.

 

டாக்டர் வால்டர் செம்கிவ்

அவரது Origin of the Soul: And the Purpose of Reincarnation மற்றும் Born Againஎன்ற நூலிலும் காணப்படும் சில சுவாரஸ்யமான தகவல்கள்…

செம்கிவ் எழுதிய மறுபிறவி ஆய்வு நூல்

 


பிரபலங்கள் முற்பிறவியில்…
பரக் ஒபாமா (அமெரிக்க அதிபர்) லைமென் ட்ரம்பல் (லிங்கன் காலத்தவர்)
வான் ஜோன்ஸ் (அமெரிக்கா) மகாத்மா காந்தி
அப்துல்கலாம் திப்புசுல்தான்
மேனகா காந்தி அன்னிபெசண்ட்
ஷாருக்கான் சாதனா போஸ் (நடிகை, பாடகி)
அமிதாப்பச்சன் எட்வர்ட் பூத் (அமெரிக்க நடிகர்)
ரேகா மேரி  டெவ்லின் (அமெரிக்க நடிகை)
ஜெயா அமிதாப்பச்சன் மேரி மெக் விக்கர்ஸ் (அமெரிக்க நடிகை)
ஹைதர் அலி விக்ரம் சாராபாய்
ஜவஹர்லால் நேரு இரண்டாம் பகதூர்ஷா
பெனசிர் புட்டோ ஜவஹர்லால் நேரு

 

இந்தியப் பிரபலங்களின் முற்பிறவி/மறுபிறவி கூறும் நூல்

 

குறிப்பு : சென்னை லேண்ட்மார்க்கில் இந்த நூல்கள் கிடைக்கும்.

(முற்றும்)

 

Advertisements

17 thoughts on “மரணம் – ஆவி – மறுபிறவி – 4

 1. எந்த பதிவு செய்யும் போதும் அதன் உண்மைத்தனத்தை சற்று சோதிப்பது நன்று..

  பெனசிர் புட்டோ முற்பிறவியில் நேரு என்று குறிப்பிட்டிருப்பது தவறு..
  பெனசிர் பிறந்தது 1953 இல் நேரு இறந்தது 1964 இல் …

  இந்த மறுபிறவி நூல்களின் உண்மைத்தன்மை சற்று சோதிக்கப் படவேண்டியவையே ..

  1. நண்பரே. இது எனக்கு நன்கு தெரியும். முந்தைய பதிவுகளில் இந்தத் தவறுகள் பற்றி மிக விரிவாகவே விளக்கியிருக்கிறேன். நீங்கள் படிக்கவில்லை போலிருக்கிறது. இது மட்டுமல்ல, ஷாருக்கானின் முற்பிறவிதான் நடிகை சாதனா போஸ் என்பதும் தவறு. இன்னும் அந்த நூலில் உள்ள சில ஏற்க முடியாத பல விஷயங்கள் உள்ளன. நேரம் கிடைக்கும் போது அதைப் பதிவிடுகிறேன். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

 2. தங்கள் தன்னடக்கம் உயர்வான என்னங்களையும், ஆத்மா தூய்மையையும், வெளிக்காட்டுகிறது…..

  சரி அது இருக்கட்டும், தாங்கள் ”எனக்கு பிடித்த தளம்” என்ற பெயரில் மரணத்திற்கு அப்பால் என்று ஒரு வெப்சைட் ஐ நினைவு கூர்ந்த்துல்லீர்கள், சரி அதன் முழு கதையையும் படித்து விட்டீர்களா…..???
  படிக்காமல் இருந்ததால் தயவு செய்து படித்து முடித்துவிடவும்….,,

  நான் என் நண்பருடன் அதை படித்தேன்
  அவர் சொன்னார்
  ”என்னைய கொடுமையுது இங்கதான் படம் நடத்தி
  பரிச்சை வைச்சி கொல்றாங்க-ன்ன செத்த பிறகும் விடமாட்டங்கள ”……. என்றார்

  ”அப்படியானால் பரிச்சையில பெயில் ஆனா மாணவர்கள் தற்கொலை செய்துக்கிறாங்களே ..
  அவங்க நிலைமையே நினச்ச தான் பாவமா இருக்கு” என்றார் ……

  இதை பற்றி தங்கள் கருத்து என்ன…..????

  அந்த பக்கத்தில் முதல் 111 வரிகளில் ,. 100 வரிகள் நன்றாகவே இருந்தது, ஆனால் அதற்க்கு பிறகு தான்
  சற்று வயிற்ரை கலக்குகிறது,
  சரி அதுவும் போகட்டும், உண்மை அதுவானால் பிறகு என் நிலைமை என்னவாகும்……..
  ஈஸ்வர என்ன காப்பாத்து……………….

  1. நண்பரே, உண்மையை ஒப்புக் கொள்கிறேன். நான் அதில் முதல் இரண்டு அத்தியாயங்கள் மட்டுமே இதுவரை படித்திருக்கிறேன் மற்றவற்றை முழுமையாக இன்னும் படிக்கவில்லை. ஒரு சில பத்திகளும், பக்கத்தில் உள்ள விஷயங்களையுமே படித்தேன். அதுவே மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் என் தளத்தில் குறிப்பிட்டேன். இதோ, இப்போது நேரம் ஒதுக்கி எத்தனை மணி நேரம் ஆனாலும் படித்து முடித்து விட்டுத்தான் மறுவேலை. பின்னர் உங்கள் கேள்விகளுக்கு வருகிறேன்.

   அதே சமயம் தேர்வு, பரீட்சை என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவை இங்கு மட்டுமல்ல. மேலுலகத்திலும் உண்டு என்று தான் ஆய்வாளர்களும், ஆன்மீகவாதிகளும் சொல்கிறார்கள். ஆன்மா பரிபக்குவ நிலைக்கு உயர அவை பயன்படுகின்றன. இது பற்றி விரிவாக எழுத வேண்டும். கட்டுரையை முடித்து விட்டு பின்னர் வருகிறேன். இவற்றையெல்லாம் பொறுமையாகப் படிக்கும் தங்களுக்கும், தங்கள் நண்பருக்கும் என்நன்றிகள்.

 3. மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களே உங்களுக்கு
  என் பணிவான வணக்கம். நான் தற்போது உங்களைப்
  போன்று ஒரு வலைத்தளம் அமைத்துள்ளேன். உங்களின்
  வலைத்தளத்தில் வருகிற மாதிரி என் வலைப்பதிவும்
  www .thatstamil .com இடம் பெறவேண்டும். அந்த தளத்தில்
  புதிய கணக்கும் ஆரம்பித்துள்ளேன் என்பதை எவ்விடம்
  கூறிக்கொள்கிறேன். உங்களின் வலைத்தளம் எப்படி அந்த
  தளத்தில் இடம்பிரகிறது அது மாதிரி என் வளைத்தலும் இடம்பெற
  நான் என்ன செய்யவேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக
  விளக்கம் தருமார் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
  நன்றி. வணக்கம்

  1. அன்புள்ள தஞ்சை இனியவன்,

   எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. www .thatstamil .com எனது வலைப்பூ வருவதையும் இப்போதுதான் அறிகிறேன். அதற்கான விதிமுறைகள் பற்றி எனக்குத் தெரியவில்லை. சுவாரஸ்யம் அல்லது ஏதாவது சிறப்புச் செய்திகள் இருந்தால் அவர்களாகவே எடுத்துப் போடுவார்களோ என்னவோ… தங்கள் வருகைக்கு நன்றி.

 4. தங்களிடம் சில கேள்விகள் நேரடியாக கேட்க விழைகிறேன், சாத்தியமாகுமா…….?
  (தங்கள் அனுபவம் பற்றி )
  face book or orkut

  1. அனுபவமா.. எனக்கா… எந்த விஷயத்தில்… எல்லாக் கேள்விகளுக்கும் பதில் பகவான் ரமணரின் தத்துவத்தில் இருக்கிறதே! வேண்டுமானால் இந்த வலைப்பூவிலேயே கேளுங்கள். ஏதாவது தெரிந்தால் பதில் சொல்கிறேன். உங்களைப் போல நான் “சிங்கம்” அல்ல. சாதாரண பூனைதான். தமிழ்ப் பூனை. தமிழ் மட்டுமே தெரிந்த வீட்டுப் பூனை.

 5. ramanans சார் கொஞ்சம் நம்ப ஊருல நடக்கிறதையும் சேர்த்து எழுதுன நல்ல இருக்கும்,
  எழுதுற எல்லாமே வெளிநாட்டு சமாச்சாரம இருக்கு, ஒரு வேல நம்ப ஊர்ல ஆவிகள் இல்லையா , ஆன்மாக்கள் இல்லையா, மனிதர்கள் இல்லையா , இவர்கள் இறப்பதே இல்லையா , அல்லது இதை ஆராய்ச்சி செய்ய விஞ்சானிகள் இல்லையா………..?

  இந்த சம்பவங்கள் நிகழ்ந்த நாட்களையும் குறிப்பிட்டால் கொஞ்சம் உதவியாக இருக்கும்.
  இந்த விஞ்சானிகள் எழுதிய நூல்கள் போலோ தமிழில் எதாவுது இருந்தால் எழுதவும் .
  வெகு நாட்களாக ஒரு கேள்வி என்னுள் : நீங்கள் இந்த ஆவிகள் விஷியத்தில் அனுபவ ரீதியாக
  எவ்வளவு தூரம் சென்றுல்லீர்கள், இதையும் எழுதலாமே….!!

  ***தற்போது தங்களிடம் எதிர் பார்ப்பது தமிழ் நாடு ஆவிகளை பற்றி ***
  (தகவல்கள் சேகரிக்க எங்களுக்கு கொஞ்சம் ஏதுவாய் இருக்கும்)

  1. நன்றி நண்பரே. இந்த ஆவிகள், முற்பிறவி, மறுபிறவி போன்றவற்றில் எல்லாம் எனக்கு ஆர்வம் இல்லை. ஒருகாலத்தில் என் தேடலில் முதல் படியாக இவை இருந்தன. இப்போது இவை கடந்து வந்து விட்ட பாதைகள் அவ்வளவே. ஆனாலும் ஏன் இவற்றைப் பதிவாகப் போடுகிறேன் என்றால் அதே போல் தேடலும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் ஈர்ப்பாக இருக்குமே என்பதற்காகத் தான். எனது ஆர்வம் எல்லாம் “ஆன்மீகத்தின் மூலம் மானுடம் உயர்வதே”. ஆன்மீகப் பதிவுகளும், மகான்கள், சித்தர்களின் பெருமையைப் பேசுவதுமே எனது விருப்பம்.

   தமிழகத்தில் ஆவி, மறுபிறவி ஆய்வுகள் மிகவும் கம்மி ஐயா. சில வருடங்கள் முன்னால் (ஸ்டீவன்சன் காலத்தில்) சிலர் ஈடுபட்டனர். தற்போது யாரும் இத்துறையில் ஆராய்வதாகத் தெரியவில்லை.

   விக்கிரவாண்டியார் ஓரிரு புத்தகம் இதுபற்றி எழுதியிருக்கிறார். ஆங்காங்கே சில இதழ்களில் சில கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவ்வளவே. எனக்குத் தெரிய வந்தால் நான் பதிவிட முயற்சிக்கிறேன், சிங்கம். நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.