ஆன்மிகத் துணுக்குகள்

பழனி முருகன்

1.            புலி போன்ற உடல் அமைப்பைப் பெற்ற வியாக்ரபுரீஸ்வர முனிவர் வழிபட்டு அருள் பெற்ற தலம் தான் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயமாகும். இது புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசலில் உள்ளது.

2.            பரங்கிமலை என்பதன் உண்மையான பெயர் பரங்கி மலை அல்ல. பிருங்கி மலை என்பதே ஆகும். இறைவனிடம் பெற்ற சாபத்தினால் பிருங்கி முனிவர், பூவுலகம் வந்து தவம் செய்தார். அவ்வாறு அவர் தவம் மேற் கொண்ட மலை தான் பிருங்கி மலையாகும். அதுவே பின்னர் காலப் போக்கில் மருவி பரங்கி மலையாகி விட்டது. (வள்ளல் பாரியின் பறம்பு மலை, பிறம்பு மலையாகிப் பின்னர் பிரான்மலை ஆனது போல்).

3.            சிவன் கோவில்களில் விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, அம்பாள் சன்னதி போன்று மற்றுமொரு முக்கியமான சன்னதியாக விளங்குவது பைரவர் சன்னதியாகும். பைரவருக்கு உகந்த நாளான தேய்பிறை அஷ்டமி அன்று, வடை மாலை முதலியன சாற்றி அருச்சனை செய்து வழிபட்டால் வழக்குகள், அபவாதங்கள், வீண் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.

 

பைரவர்

4.            18 சித்தர்களுக்கான கோயில், சோழவந்தான் அருகே உள்ள நாகதீர்த்தம் என்ற ஊரில் உள்ளது. சென்னையில் உள்ள மாடம்பாக்கத்திலும் 18 சித்தர்களுக்கு தனித் தனிச் சன்னதி உள்ளது.

 

பதினெண் சித்தர்கள்

5.            சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ திருத்தளி நாதர் ஆலயம், வான்மீகிக்கு அருள் வழங்கிய தலமாகவும், திருநாவுக்கரசர், அருணகிரியார் போன்றோரால் பாடப்பட்ட தலமாகவும் விளங்குகிறது. மேலும் ஈசனின் கௌரி தாண்டவம் காண மகாலட்சுமி தவம் செய்த இடமும் இதுவே. பைரவ மூர்த்தங்களில் முதன்மையான ஆதி பைரவர் தோன்றிய அருட் தலமும் இது தான்.

6.            பகைக் கிரகங்களான சூரியனும் சனியும் நேருக்கு நேர் நட்பு நிலையில் காட்சி அளிக்கும் திருத்தலம் திருவலஞ்சுழியில் உள்ள சுபர்தீசுவரர் திருக்கோயிலாகும்.

7.            மதுரைக்கு அருகே உள்ள ஊர் திருவாதவூர். மாணிக்கவாசகர் அவதரித்த இத்திருத்தலம், வாதம் போன்ற நோய்களைத் நீக்கும் புனிதத்தன்மை உடையது. சனிபகவானின் சாபம் நீங்கிய தலமுமாக இது விளங்குகின்றது. சுயம்புலிங்கமாக விளங்கும் இத்தலத்து இறைவனின் தலையில் பசுவின் குளம்படிகள் உள்ளன.

8.            திருக்கடையூர் அருகே உள்ள அனந்தமங்கலம் என்ற ஊரில் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சனேயருக்கு நெற்றிக்கண் உள்ளது.  சிங்கப் பெருமாள் ஆலயத்தில் உள்ள நரசிம்மருக்கும் நெற்றிக் கண் உள்ளது.

 

ஸ்ரீ ஆஞ்சநேயர்

 

9.            கரூர் அருகே உள்ள வெண்ணெய் மலை என்ற தலத்தில் முருகன் தனியாக, வேல், மயில், வள்ளி, தெய்வானை இல்லாமல், காட்சி தருகின்றார்.

10.          அய்யர் மலை. குளித்தலை அருகே உள்ள ஊர். இந்த ஊரில் எழுந்தருளியுள்ள இறைவன் தலையில் மிகப் பெரிய வடு உள்ளது. அது மன்னன் ஒருவனால் வாளால் வெட்டப்பட்டதால் எழுந்ததாகும். இறைவன் இரத்தினகிரீசுவரர் என்று வாட்போக்கி நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

 

Advertisements

3 thoughts on “ஆன்மிகத் துணுக்குகள்

 1. ரமணன், அது மருவி பெயர் மாறவில்லை. திட்டமிட்டு விஷமிகளால் மாற்றப் பட்ட பெயராகும் (பிருங்கி – பரங்கி )

  சேலம் அருகே சித்தர் கோவிலிலும் இத்தகைய சித்தர்கள் சிலை இருக்கிறது என்று எண்ணுகிறேன். பிறகு உறுதி செய்கிறேன்

  படம், நாமக்கல் ஆஞ்சநேயர்தானே ??

  உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  1. உண்மை. உண்மை. உண்மை. அதுபற்றி விரிவாக ஒரு பெரிய கட்டுரையையே நான் ஒரு இதழில் எழுதியிருக்கிறேன். எல்லாம் ’அடியார்களின்’ சூழ்ச்சிதான். பிருங்கி மாநகரம் இராமசாமி முதலியார் என்று ஒருவர் ராமலிங்க அடிகள் காலத்தில் இருந்தார். அவருக்கு அடிகளார் அந்தப் பெயரைக் குறிப்பிட்டுக் கடிதம் கூட எழுதியிருக்கிறார். பரங்கி மலையின் பழைய பிருங்கி மலை என்பதற்கு நிறைய சான்றுகள் இருக்கின்றன. பரங்கி மலை ரயிலடி அருகே உள்ள நந்தீஸ்வரர் கோவிலில் வழிபட்டுதான் ப்ருங்கி முனிவர் சாப விமோசனம் பெற்றார். அதுபற்றிய குறிப்பு அந்த ஆலயத்தில் இருக்கிறது. மகா பெரியவரும் அந்தக் கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

   அது போல இன்று ’புதுப்பேட்டை’ என்று வழங்கப்படும் பகுதியின் பழைய பெயர் என்ன தெரியுமா? கோமளீஸ்வரன் பேட்டை. அங்கே புகழ் பெற்ற கோமளீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதுபோல வேளச்சேரியின் அன்றைய பெயர் ’வேத ஸ்ரேணி’ இதற்கு பாடல் ஆதாரம் கூட உள்ளது. பல விஷமிகளின் சதியால் நாம் இழந்து விட்டவை இன்னும் எத்தனை, எத்தனையோ…

   இதற்கெல்லாம் வருத்தப்படுவதைத் தவிர நம்மால் செய்யக் கூடுவது ஒன்றுமில்லை. வேண்டுமானால் அது குறித்து வலைப்பதிவுகளில், இதழ்களில் எழுதலாம். வேறென்ன நாம் செய்ய முடியும்? எல்லாம் அவன் செயல்.

  2. //சேலம் அருகே சித்தர் கோவிலிலும் இத்தகைய சித்தர்கள் சிலை இருக்கிறது என்று எண்ணுகிறேன்//

   ஆமாம்.

   //படம், நாமக்கல் ஆஞ்சநேயர்தானே//

   ஆமாம்.

   //உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்//

   நன்றி கார்த்திக். உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். வணக்கங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s