நடிகர் ராஜேஷ் எழுதும் புதிய ஜோதிடத் தொடர்

ஜோதிடம் புரியாத புதிர்

நடிகர் ராஜேஷ்

நடிகர் ராஜேஷ். தமிழ்த் திரையுலகின் முக்கியமான, தனித்துவமிக்க கலைஞர். பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். பட்டுக்கோட்டை அருகே ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து, ஆசிரியராகப் பணியில் சேர்ந்து, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் கலைஞராக உயர்ந்தவர். நடிகராக மட்டுமல்லாது சிறந்த தொழிலதிபராகவும் வெற்றிக் கொடி நாட்டியவர். முக்கியமாக ஈ.வெ.ரா பெரியாரின் கொள்கைகள் மீது பற்றுக் கொண்டவர். கம்யூனிசச் சிந்தனைகளில் நாட்டம் கொண்டவர். உலக, அரசியல் வராலாறுகளை விரல் நுனியில் வைத்திருப்பவர். சிறந்த ஆராய்ச்சியாளரும் கூட. ஜோதிடம், வானியல், பிரபஞ்சத்தின் தோற்றம் என்று பல துறைகளில் மிக விரிவான ஆய்வுகளைச் செய்திருப்பவர்.

குறிப்பாக, ஜோதிடம், நாடி ஜோதிடம், கை ரேகை ஜோதிடம் என்று ஜோதிடத்தின் பல பிரிவுகளிலும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் செய்திருக்கிறார். பல ஜோதிடர்களைச் சந்தித்தும், ஜோதிடம் பார்த்த பிரபலம் முதல் சாதாரணர்கள் வரையிலானவர்களைக் கண்டு விவரங்கள் சேகரித்தும் அனுபவம் பெற்றிருக்கிறார். ஜாதக அலங்காரம் உட்பட பல ஜோதிட நூல்கள், விதிகள், பாடல்கள் இவருக்கு மனப்பாடம்.

இவ்வாறு தான் கற்றறிந்த விஷயங்களை தற்போது இவர் ’ஜோதிடம் புரியாத புதிர்’ என்ற தலைப்பில் ’ராணி’ வார இதழில் எழுத இருக்கிறார். முதல் அத்தியாயம் இவ்வார ராணி இதழில் வெளியாகி இருக்கிறது.

ராஜேஷின் கட்டுரை

தான் கண்டறிந்த, பார்த்த, சேகரித்த உண்மைகள் தன்னோடு மறைந்து விடக் கூடாது என்பதற்காகவே இந்தத் தொடரை எழுத ஆரம்பித்திருப்பதாகக் கூறும் ராஜேஷ், ஜோதிடம் என்பதை உண்மை என்று நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எழுதவில்லை என்றும், அதற்கு எந்தவித அவசியமும் தனக்கு இல்லை என்றும், உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுத ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகிறார்.

எது உண்மை என்பதைத் தேடுவதில் எனக்கு சிறுபிள்ளையில் இருந்தே ஆர்வம் இருக்கிறது. …. ஜோதிடம் பொய், கடவுள் இல்லை என்று கூட பலமணி நேரம் பேசலாம். அதற்கு முக்கியம் நம்முடைய அறிவும், அனுபவமும், ஆராய்ச்சித் திறனுமாகும். ஆனால், ஜோதிடத்தில் உண்மையைத் தேட வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்கிறார்.

ஆம், உண்மையை, பாரபட்சமற்று, விருப்பு, வெறுப்பற்று உண்மையாகவே நாம் தேட ஆரம்பிக்கும் போது, அந்த உண்மை நம் கண்முன்னால் பரந்து விரிந்து தன்னைப் பார் என்று காட்டும். அவ்வாறு உணரும் உண்மையை, விருப்பு, வெறுப்பற்று மக்கள் முன் வைப்பவனே உண்மையான ஆராய்ச்சியாளன். அவ்வகையில் ராஜேஷ் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். பல்துறை வல்லுநர்.

அவர் தினமணியில் எழுதி வரும்   முரண்சுவை தொடர் பல லட்சம் வாசகர்களால் படிக்கப்படுவது. பிரபலங்களின் பாராட்டைப் பெற்றது. மிக மிகச் சிறப்பானது.

இன்றைக்கு இருக்கும் பல ஜோதிடர்களை விட ஜோதிடத்தில் நுண்மான் நுழைபுலமும் பரந்து பட்ட அறிவும் உடையவர் ராஜேஷ்.. ஜோதிடம் ஒரு அறிவியலா, கலையா, கணித சாஸ்திரமா, மெய்ஞ்ஞானத்தைச் சேர்ந்ததா, விஞ்ஞானமா, புள்ளியியல் சம்பந்தப்பட்டதா இல்லை புரியாத புதிர் தானா என்ற கேள்விக்கெல்லாம் ராஜேஷின் இந்தத் தொடர் நிச்சயம் விடையளிக்கும். அவருடன் பழகி அவரது அறிவுத் திறம் கண்டு வியந்தவன் என்ற முறையில் நிச்சயம் இந்த ஜோதிடத் தொடர் பலரது அகக் கண்களைத் திறக்கும். புதிய தரிசனம் கிடைக்கும் என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடிகிறது.

சமீபத்தில் தனது ரஷ்யச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியிருக்கும் நண்பர், நடிகர் ராஜேஷிற்கு என் வாழ்த்துகள். ஜோதிடம் மட்டுமல்லாமல் பிரபஞ்ச ரகசியம், காலம், அமானுஷ்யம் என்று பலதுறைகளிலும் அவர் செய்திருக்கும் ஆய்வுகளை மக்கள் முன் கொண்டுவர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் ”ராணி வார இதழ்” கடைகளில் கிடைக்கும்.

 

Advertisements

26 thoughts on “நடிகர் ராஜேஷ் எழுதும் புதிய ஜோதிடத் தொடர்

 1. நாடி சோதிடத்தில் மிகுந்த நாட்டமுள்ளது. நாடி சோதிடம் பார்க்கச் சிறந்த இடம் ஒன்றைப் பரிந்துரைக்க முடியுமா?

 2. ஹா, இன்று ராணி வாங்கி ஊமை சொன்ன ஜோதிடத்தைப் படித்தேன். திகைத்தேன். வியந்தேன். ராஜேஷ் சார் தூள் கிளப்பிட்டார். இது மாதிரி நான் சின்னப் பையனா இருக்கும்போது எங்க கிராமத்துல ஒரு சாமியார் மாதிரி ஆளு வந்து சொன்னார். (எனக்கு ஒரு தம்பியும், தங்கையும் பிறப்பான் அப்படின்னு) அது பலித்தது. அது மாதிரி ஒரு சமயம் ஒரு குடுகுடுப்பாண்டி வந்து சொன்ன மரணச் செய்தியும் பலித்தது. ஆனால் நான் ஜோதிடத்தை நம்பவில்லை. ராஜேஷ் தொடரை முழுமையாகப் படித்த பின்னர்தான் முடிவு செய்யணும். நமபலாமா, வேண்டாமான்னு. நல்ல பதிவை அறியத் தந்தமைக்கு நன்றி ரமணன். வாழ்க.

  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. இந்தத் தளத்தில் இன்னும் பல சுவாரஸ்யமான அமானுஷ்ய விஷயங்கள் உள்ளதே, படித்தீர்களா ஜெய்?

 3. சார். இன்று ராணி இதழ் வாங்கி ராஜேஷின் ”ஜோதிடம் புரியாத புதிர்” படித்தேன். மனிதன் அசத்தியிருக்கிறார் வாழ்த்துக்கள். இனி தொடர்ந்து படிப்பேன். அவரது இணையதளம்/வலைப்பூ முகவரி, மின்னஞ்சல் விவரங்கள் கிடைக்குமா ப்ளீஸ்?

  1. நல்லது ராம். அவருக்கு இணையதளம்/வலைப்பூ/மின்னஞ்சல் ஏதும் தற்போது இல்லை. இருந்தால் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். தங்கள் வருகைக்கு நன்றி.

 4. அய்யா ஒரு சின்ன வேண்டுகோள்,
  நான் ஒரு ஆய்வு மாணவன். திரு.ராஜேஷ் அவர்களின் ஆய்வுகளை பற்றி அறிய மிக்க ஆவலாயிருக்கிறேன். அவரை தொடர்புகொள்ள இயலுமா? மின்னஞ்சல் முகவரி ஏதேனுமுண்டா? ஆட்சேபனையில்லையேல் அறியத்தரவும். நன்றி

  பத்மஹரி

  1. மின்னஞ்சல் ஏதுமில்லை ஹரி. அவரது தொடரைத் தொடர்ந்து படித்து வாருங்கள். ஒருநாள் அவரோடு பேசலாம். அதற்கு நான் முயற்சிக்கிறேன். நன்றி!

 5. வாவ், கிரேட் நியூஸ். ராஜேஷ் ஒரு நடிகர், ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்பவர் என்றுதான் இதுநாள் வரை நினைத்துக் கொண்டிருந்தேன். அவருக்குள் இவ்வளவு ஆற்றலா? திறமையா? சூப்பர். இந்த வார ராணி கிடைக்கவில்லை. அடுத்த வாரம் முதல் வாங்கி விடுகிறேன். தகவலுக்கு நன்றி ரமணன்.

  1. நன்றி ராம் குமார். படியுங்கள். தொடர் மிக மிக வித்யாசமாக, பரபரப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என்கிறார் ராஜேஷ். ஒரு நல்ல அனுபவத்தைத் தவற விடாதீர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s