அஞ்சலி – ஹநுமத்தாஸன்

ஜோதிட வழிகாட்டியும், ஆன்மீக எழுத்தாளருமான ஹநுமத்தாஸன் (66) சென்னையில் நேற்று (26-10-2010) காலமானார். சில காலமாகவே சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

தனக்குக் கிடைத்த அகத்தியர் ஜீவ நாடியின் மூலம் லட்சக் கணக்கானோருக்கு ஏடு படித்து, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றக் காரணமாக இருந்தவர் ஹநுமத்தாஸன். சாதாரண மனிதர் முதல், அன்றைய, இன்றைய பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் ஹநுமத்தாஸனின் ஜீவநாடி மூலம் பலன் பெற்றவர்களாகவர்.

சென்னை துறைமுகத்தில் பணியாற்றிய ஹநுமத்தாஸன் (இயற்பெயர் த.கி.இராமசாமி) ஆரம்பத்தில் கலைமகள் இதழில் அகத்தியர் ஜீவ நாடி மூலம் நடந்த விஷயங்களைத் தொடராக எழுதி வந்தார். அது பின்னர் அம்மன் பதிப்பகத்தாரால் ‘நாடி சொல்லும் கதைகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக (இரு பாகங்கள்) வெளி வந்தது. அதில் ஸ்ரீ ஹனுமனின் தரிசனம், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் செய்த லீலைகள், நரசிம்மரின் அகோபிலத்தில் நள்ளிரவில் நடந்த சம்பவங்கள் என பல ஆச்சரியமான விஷயங்களை மிகச் சுவையாக எழுதியிருந்தார். தொடர்ந்து பிரபல நாளிதழின் மூலம் ’அகத்தியர் அருள் வாக்கு’ என்ற தொடரை எழுதினார். அது அவரை நாடெங்கும் பிரபலப்படுத்தியதுடன், பத்திரிகை விற்பனையையும் பெருக்கியது.

தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏன், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அவரிடம் ஜீவ நாடி படித்துப் பலன் பெற்றோர் பலர். பழகுவதற்கு மிகவும் இனிய ஹநுமத்தாஸன் தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவர். பெயர், பணம், புகழ் இவற்றில் ஆசையில்லாதவர். லட்சக்கணக்கான வாசகர்களது மனதில் இடம் பிடித்த அவரது புகைப்படம் கூட இன்று இணையத்தில், புத்தகங்களில் காணக் கிடைக்கவில்லை என்பதே அவரது அடக்கத்திற்கும், பணிவிற்கும், நேர்மைக்கும் சான்று. அவரை இழந்து வருந்தும் குடும்பதாருக்கும் என் அஞ்சலிகள்.

பிரதிபலன் பாராது தன் பணியை ஒரு ஆன்மீக சேவையாக எண்ணிச் செய்து வந்த ஸ்ரீ ஹநுமத்தாஸனின் மறைவு ஆன்மீக, ஜோதிட உலகுக்கு பேரிழப்பு. அவரது ஆன்மா அகத்தியரின் திருவருள் துணையுடன் இறைவனின் திருவடிகளை அடையப் பிரார்த்திக்கிறேன்.


ஜீவநாடி என்றால் என்ன என்பது பற்றித் தெரிந்து கொள்ள….

 

ஜீவநாடி பற்றி விரிவாக அறிய

 

ஹனுமத்தாஸனின் நாடி சொல்லும் கதைகளைப் படிக்க


Advertisements

11 thoughts on “அஞ்சலி – ஹநுமத்தாஸன்

  1. என்ன சொல்ல அகத்தியர் இவ்வளவு சீக்கிரம் அவரை குப்பிடுவார் என்று நான் நினைக்கவில்லை , அவரால் பயனடைந்தோர் ஏராளம் , அந்த மாமனிதரை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தும் என்னால் பார்க்கமுடியாமல் போனது என்னோடைய துர்பாகியம் என்று தான் சொல்ல வேண்டும். அவர் என்னும் சிறுது காலம் இருந்து இருந்தால் எத்தனையோ பேர் பயன் பெற்று இருப்பார்கள். சரி அவர் அவர் விதி படிதான் வாழ்க்கை என்று எண்ணி மனதை தேற்றிகொள்ளவேண்டியதுதான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s