எந்திரன் உங்கள் கணிணியில் …

திரையரங்குகளில் எந்திரன் ‘வெற்றிகர’மாக ’ஓடி’க் கொண்டிருக்கிறது. இது அப்படத்தைப் பற்றிய பதிவல்ல. ஆனால் எந்திரன் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தோடு தொடர்புடையது.

 

தானியங்கி ரோபோட்

 

’செயற்கை அறிவு’ எனப்படும் Artificial Intelligence ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ’ரோபோ’தான் எந்திரன் படத்தில் முக்கிய பாத்திரம். அது மனிதர்களைப் போலவே சிந்திக்கிறது, செயலாற்றுகிறது, கேள்விகளுக்கு பதில் சொல்கிறது. அதை வெறும் கற்பனையாகவும், எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் அது சாத்தியமாகலாம் என்றும் பலர் நினைக்கக் கூடும்.

 

எந்திரன்

 

ஆனால் தானாகவே சிந்தித்துச் செயலாற்றக் கூடிய செயலிகளை (software) உருவாக்குவதில் விஞ்ஞானிகள் தற்போது முழு முனைப்பாக ஈடுபட்டுள்ளனர். அதன் முதல் கட்டமாக மனிதர்களுடன் மற்றொரு மனிதர் Chatல் உரையாடுவதைப் போலவே உரையாடும் செயலி (software) ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

 

எலிஸா செயலி

 

இந்தச் செயலியை http://www.realdl.com/software/27437-ecc-eliza-409.html என்ற தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். அல்லது http://hotfile.com/dl/26599062/8b32ceb/ecceliza.zip.html என்ற தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

இந்த ECCELIZA செயலி நாம் கேட்கும் கேள்விகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு பதில் சொல்கிறது-உரையாடுகிறது-நம்மிடமும் கேள்விகளை எழுப்புகிறது. இந்தச் செயலியை விஞ்ஞானிகள் 2002ம் ஆண்டிலேயே உருவாக்கி விட்டார்கள். அதன் மேம்படுத்தப்பட்ட செயலியே தற்போது பயன்பாட்டில் இருக்கிறது.

 

இது எப்படிச் செயல்படுகிறது?

பொதுவாக இது போன்ற ’சாட்’களில் உரையாடுபவர்கள் எப்படிப் பேசுவார்கள், எந்தெந்த வார்த்தைகளை உபயோகப்படுத்துவார்கள் என்பதெல்லாம் ஆராயப்பட்டு, தொகுக்கப்பட்டு, பின்னர் அவை தானகாவே இயங்கும் ஒரு செயலியாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தத் தொகுப்பில் உள்ள வார்த்தைகளைக் கொண்டே நமது கேள்விகளுக்கு இந்தச் செயலி பதில் சொல்கிறது.

 

விதிமுறைகள்:

1. இது மிகவும் எளிமையானது. கோப்பின் அளவு 200கே.பிக்கும் குறைவுதான்.

2. உரையாடலை ஆங்கிலத்தில் மட்டுமே நிகழ்த்த முடியும்.

3. இது வெறும் சுவாரஸ்யமான பொழுது போக்கிற்கும் விளையாட்டுக்கும் மட்டும்தான்.

4. ஏடாகூடமாகக் கேள்விகள் கேட்டால் தானாகவே உரையாடல் துண்டிக்கப்பட்டு விடும். பின்னர் மீண்டும் தொடரலாம்.

5. எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் மட்டுமே செயல்படும்.

6. ஒருமுறை பதிவிறக்கிக் கொண்டால் போதும்.

7. இந்த உரையாடலின் போது இணையத்துடன் இணைப்பில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

8. who are you?, how old are you?, are you a male? what’s your hobby, are you married? போன்ற கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். வரும் விடைகள் மிகச் சுவாரஸ்யமாக இருக்கும்.

 

செயலியைப் பயன்படுத்தும் முறை:

எலிஸா.ஜிப் கோப்பைப் பதிவிறக்கிய பின்னர் அன்–ஜிப் செய்யவும்.

ECCELIZA.EXE என்பதை டபுள் கிளிக் செய்யவும்.

எண்டர் விசை அழுத்தவும்.

ஏதேனும் ஒரு பெயரை உள்ளிடவும்.

பின்னர் உரையாட ஆரம்பிக்கலாம்.

தெளிவாக ஆங்கில வாக்கியப் பிழை ஏதும் இல்லாமல் கேள்விகளை உள்ளிடவும்.

உங்கள் கணிணியின் மெமரி-ஹார்ட் டிஸ்க் கொள்ளவு மற்றும் கணிணியின் பயன்பாட்டு வேகத்தைப் பொறுத்து பதில்கள் விரைவாக வரும்.

உரையாடலைத் தொடர விருப்பம் இல்லை எனில் Q விசையை அழுத்தி வெளியேறலாம். CONTINUE செய்யலாம். அல்லது NEW PATIENT ஆக மறுபடியும் உள்ளே செல்லலாம்.

பயன்படுத்திப் பாருங்கள், உண்மை புரியும்.

 

பிற AI செயலிகள்:

தானாகவே உங்களுடன் உரையாடும் AI செயலி

http://showcase.pandorabots.com/pandora/talk?botid=d10d53a63e345abf&skin=iframe

http://www.pandorabots.com/pandora/talk?botid=f5d922d97e345aa1

 

மற்றொரு செயலி –

http://www.brothersoft.com/games/dr.-sbaitso-download.html

 

முக்கியமான குறிப்பு :

இந்தக் கோப்புகளைப் பதிவிறக்கித் திறக்கும் முன்னர் வைரஸ்/மேல்வேர் சோதனைகளை அவசியம் செய்ய வேண்டும்.

சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.  நீங்களும் பயன்படுத்தித்தான் பாருங்களேன்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s