புதிய வார இதழ் – சுதேசி

கலை, இலக்கியம், சினிமா, அரசியல், ஆன்மீகம், பக்தி, அறிவியல், தொழில்நுட்பம் என்று பலவேறு அம்சங்களைத் தாங்கி புதிதாக சுதேசி என்ற வார இதழ் அறிமுகமாகியுள்ளது.

 

சுதேசி வார இதழ்

 

கடந்த ஆண்டுகளில் திரிசக்தி, தேவதை, சூரிய கதிர், கொலுசு, புதிய தலைமுறை போன்ற இதழ்கள் வெளியாகி வாசகர்களின் ஆதரவைப் பெற்று இன்று விற்பனையில் முன்னணியில் இருக்கின்றன. இந்நிலையில் வெகுஜன வாசகர்களின் அறிவுப் பசிக்குத் தீனி போடும் வண்ணம் சுதேசி இதழ் வெளியாகியுள்ளது.

 

முதல் பக்கம்

சுப்ரமண்ய சாமி கூறும் ஓட்டுப் பதிவு இயந்திரத் தில்லுமுல்லுகள், டாஸ்மாக் தமிழக அரசுக்கு அவசியமா என்ற கட்டுரை, ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவிப் பணம் வேண்டும் என்று கூறும் பொன் ராதா கிருஷ்ணனின் பேட்டி, இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் திரு பாரி வேந்தர் (எஸ்.ஆர்.எம். குழும நிறுவனர்) பேட்டி என முதல் இதழே மிகச் சிறப்பாக, கனமான விஷயங்களைக் கொண்டதாய் இருக்கிறது.

 

பாரி வேந்தர் பேட்டி

 

மற்ற இதழ்கள் போல வெறுமனே சினிமாச் செய்திகளையும், படங்களையும் பெரிதாகப் போட்டு பக்கங்களை நிரப்பாமல் சுவாரஸ்யமான பல செய்திகளைக் கொண்டு இதழை உருவாக்கியிருக்கிறார்கள். இந்திரா சௌந்திர ராஜனின் சித்தர்கள் பற்றிய தொடரும், கின்னஸ் சாதனை (செய்ய உள்ள) எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் தொடர்கதையும் இடம் பெற்றிருப்பது சிறப்பு. தமிழன் திராவிடனா? – என்ற கட்டுரை வெகு சுவாரஸ்யம். இது தவிர டாக்டர் நாராயண ரெட்டியின் ஸ்பெஷல் தொடர் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. அயோத்தி தீர்ப்பு பற்றிய கட்டுரை சிந்திக்க வைக்கிறது.

 

சித்தர்கள் தொடர்

 

நாளிதழ் வடிவில் மொத்தம் 32 பக்கங்கள் உள்ளன. விலை ரூ. 7/-

ஒவ்வொரு வெள்ளியன்றும் இதழ் வெளியாக இருக்கிறது.

முதல் இதழையே இவ்வளவு சிறப்பாக வடிவமைத்திருக்கும் ஆசிரியர் குழு, இதழியலில் மேலும் பல சாதனைகளைச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். ஆசிரியர் குழுவினருக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.

உண்மையாகவே படிக்க வேண்டும், நல்ல, அறிவுபூர்வமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்கள் அவசியம் வேண்டிப் படிக்க வேண்டிய இதழ் இது.

 

முகவரி
சுதேசி வார இதழ்
5/15, 3-வது குறுக்குத் தெரு,
கஸ்தூரிபா நகர்,
அடையாறு, சென்னை – 600 020

இணையதளம் சுதேசி

2 thoughts on “புதிய வார இதழ் – சுதேசி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s