உள்ளங்கையில் சிகரம்

பூஜ்ய ஸ்ரீ இராமனந்த குருஜி அவர்கள் எழுதிய உள்ளங்கையில் சிகரம் – நூல் விமர்சனம்

இது புத்தகங்களின் பொற்காலம். தினந்தோறும் பல்வேறு தலைப்புகளிலே பல தரபட்ட நூல்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. இலக்கியம், ஆன்மீகம், சினிமா, பொதுநலம், கவிதைகள், நாவல், சிறுகதை என்று அவற்றை ஒரு வரையறைக்குள்  நாம் அடக்கி விட முடியாது. அவ்வாறு வெளியாகும் புத்தகங்களில் பல உண்மையில் படிக்க மட்டுமே உதவுபவை. சில மட்டுமே பாதுகாத்து வைக்கும் ஒன்றாய் அமைந்து விடுகின்றன. அவற்றுள் ஒன்று தான் பூஜ்ய ஸ்ரீ இராமனந்த குருஜி அவர்களின்  “உள்ளங்கையில் சிகரம்” என்ற நூல்.

பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குருஜி அவர்கள்

உங்களுக்கு குழிபறிக்கும் மூலிகையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா… நரியைப் பரியாக்கும் மை பற்றி அறிய வேண்டுமா… எதிரிகளை எப்படி வசியம் செய்து வெற்றி கொள்வது என்பது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா… நோய் நொடிகள், கடன் தொல்லைகள் விலகி நிம்மதியாக வாழ உதவும் மந்திரங்கள் பற்றி அறிய வேண்டுமா…???? காலம் காலமாக சித்தர்களால் பின்பற்றப்பட்டு வந்த இரகசிய முறைகள் என்ன, அவற்றை எப்படிப் பயன்படுத்துவது, அவற்றினால் விளையும் நன்மைகள் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமா….???? அப்படியென்றால் நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் “உள்ளங்கையில் சிகரம்”.

இது வெறும் ஒரு சாதாரண மனிதரின் அனுபவப் பதிவுகள் அல்ல. சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தனது தேடலைத் தொடங்கி, அதற்காக பல்வேறு முயற்சிகள் செய்து, பல தடங்கல்களை எதிர் கொண்டு, தனது உடல் ஒத்துழைக்காத நிலையிலும், மன உறுதியால், நினைத்ததை நினைத்தவாறு சாதித்த ஒரு மகத்தான மனிதரின் வாழ்க்கைப் பதிவுகள் அடங்கிய ஞானப் பெட்டகம்.

ஒரு சாதாரண கிராமத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கி, தனக்கு ஏற்பட்ட உடல் நலிவால், படிப்பைத் தொடர முடியாது கஷ்டப்பட்டு, வாழ்க்கையில் மற்றவர்களால் கேலிக்கு ஆளாகி… சாதிக்க வேண்டும் என்ற வெறி கொண்டு உழைத்து, அனைத்தையும் கற்று.. எழுத்தாளராய்.. சமூகப் பணியாளராய் மாறி, நாத்திகத்த்தின் பால் ஈர்க்கப்பட்டு, பின் தேடலின் மூலம் உண்மையை உணர்ந்து, இறுதியில் இதோ தற்பொழுது ஒரு ஆன்மிகவாதியாய், அனைவருக்கும் ஆலோசனை கூறும் குருவாய், நல்ல வழிகாட்டும் நண்பனாய் விளங்கிக் கொண்டிருக்கும் பூஜ்ய ஸ்ரீ இராமனந்த குருஜி அவர்கள், தனது வாழ்க்கை அனுபவங்களை மிகச் சுவையாக அழகுபட தெரிவித்துள்ளார் இந்நூலில்.

ஆன்மிகக் கட்டுரைகள் ஒரு புறம், அன்பர்களின் கேள்விகளுக்கான பதில்கள் மறு புறம், மந்திரங்கள், ஸ்லோகங்கள், அவற்றின் மகத்துவங்கள், மூலிகை இரகசியங்கள்,  சித்தர்கள் தத்துவம், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், ஆவிகள், ஏவல், பில்லி, சூனியம்… தேவதைகள்…… என்று இந்நூல் எல்லா தலைப்பிலும் உண்மைகளை ஆராய்கிறது. அலசுகிறது. ஆவிகள் பற்றி… சிறு தெய்வங்கள் பற்றி.. அயல் கிரகப் பயணம் பற்றி, இனி எதிர்காலத்தில் நடக்கப்போவது பற்றி என்றெல்லாம் விரிவாக இந்நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது..  உண்மையில் ஆன்மிகத் தேடல் உள்ளோர் அவசியம்வாங்கிப் படிக்க வேண்டிய நூல். ஆன்மிக, அமானுஷ்ய மற்றும் சித்தர்கள் பற்றிய துறைகளில் ஆர்வமுடையவர்களுக்கு இந்நூல் நிச்சயம் பயன்படும்.

குருஜி இப்போது உஜிலா தேவி என்ற வலைப்பூவின் மூலம் ஆன்மீகப் பணி செய்து கொண்டிருக்கிறார்.

நூல் கிடைக்குமிடம்:

சங்கர் பதிப்பகம்

21, டீச்சர்ஸ் காலனி’

வில்லிவாக்கம், சென்னை-49

தொலைபேசி- 26502086

Advertisements

6 thoughts on “உள்ளங்கையில் சிகரம்

 1. தங்கள் பதிப்புகளை கண்டேன் மிக அருமை தாங்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் அதிகம் உள்ளன என்பதை உணர்ந்து எழுதவும்
  உங்களால் முடிந்தால் ஒரு முறை சதுரகிரி வந்து என்னை சந்திக்கவும்
  விவரம் தேவையில்லை இரண்டு நிமிடம் என்னை நினைத்து தியானம் செய்தால் என்னை சந்திக்கலாம் தவசி குகையில்

  அதிரி’!

  1. ஆஹா..

   அடியேனின் பாக்கியமே பாக்கியம்..

   அவசியம் வந்து தங்களைச் சந்திக்கிறேன் ஐயா.

   இல்லாவிட்டால் உங்கள் பெயரை இருந்த இடத்தில் இருந்தே தியானத்தில் சொல்லி சந்திக்க முயல்கிறேன்.

   ஒரே ஒரு சந்தேகம், நீங்க முனிவரா, சித்தரா?

   முனிவர் என்றால் எந்த வகையைச் சார்ந்தவர்?

   சித்தர் என்றால் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்.

   இதை மட்டும் தயவு செய்து விளக்குங்களேன் ப்ளீஸ்.

   அடியேன் பெற்ற பாக்கியமே பாக்கியம் 🙂

 2. பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குருஜியைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்.
  பேசும் ஆவிகள் மாத இதழ் நின்ற பிறகு ஆவிகள அமானுஷ்யம் தொடர்பாக குருஜி பத்திரிக்கை நடத்தி வந்தார். நான் வடலூரில் வாங்கிப் படித்துள்ளேன்.
  அவரை நான் நேரில் சந்திக்க வேண்டும் என நீண்டநாட்களாக நினைத்து வந்தேன்.
  தங்களது இந்த பதிவு அந்த எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
  உஜிலா தேவியை இப்போதுதான் முதன் முதலாக பார்க்கின்றேன். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!.

  1. வணக்கம் முருகையன். அவரை எனக்கு நேரில் அறிமுகமில்லை. ஆனால் அவரது ஆழமான, உண்மையான, உறுதியான கருத்துகள், சிந்தனைகள் இக்கால கட்டத்திற்கு அவசியம் தேவை. அவரது பக்குவத்தையும், ஆழ்ந்த அறிவாற்றலையும், சிந்தனை மேன்மையையும் அவரது நூல்கள், கட்டுரைகள், தளத்தின் மூலம் அறிந்தேன். அது மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகன அறிமுகமாகவே இவ்விமர்சனக் கட்டுரையை எழுதினேன். தங்கள் கருத்திற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s