ஆசியாவின் பெரிய நூலகத்தில்…


ஆசியாவின் பெரிய நூலகத்தில் ஒருநாள்…

சில ஆண்டுகளுக்கு முன்னால் சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்குச் சென்றிருந்த போது இது போன்ற ஓர் நூலகம் நம் தமிழ்நாட்டில் அமையுமா என எண்ணியிருக்கிறேன். அதெல்லாம் வெறும் பகற்கனவு என்று பேசாமல் இருந்து விட்டேன். ஆனால் சமீபத்தில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்றழைக்கப்படும் அண்ணா நூற்ராண்டு நூலகத்தை தமிழக அரசு அமைத்திருப்பதாகக் கேள்விப்பட்டவுடன், அப்படி என்ன பெரிதாக அதில் இருக்கப் போகிறது; கன்னிமாரா, தேவநேயப் பாவணர், ஞானாலயா, ரோஜா முத்தையா என்று எல்லாம் நூலகத்தையும் தான் பார்த்திருக்கிறோமே என்று சற்று அலட்சியமாகத் தான் நினைத்து அங்கே சென்றேன். ஆனால் என் நினைப்பு பொய்யாகியது. அதன் உருவாக்கமும், பிரமாண்டமும் கண்டு உண்மையிலேயே திகைத்துத் தான் போனேன். தமிழக அரசு கல்விப் பணியில் செய்திருக்கும் முக்கியமான, முதன்மையான, மகத்தான சாதனை இது என்று சொன்னால் அது மிகையில்லை. அங்கே அடுத்த புகைப்படங்கள் சில இங்கே….

நூலகத்தின் முகப்பு


நூலகத்தின் முகப்பு

நுழைவாயில்


நுழைவாயில்


மாற்றுத் திறன் உடையோருக்கான நுழைவாயில்


மாற்றுத் திறனோருக்கான நுழைவுப்பாதை


நட்சத்திர ஓட்டலின் வரவேற்பறை அல்ல… நூலகத்தின் வரவேற்பறை தான்…


வரவேற்பு


வரவேற்பறை


வரவேற்பு அறை


நூலகத்தின் உள்ளே…


நூலகத்தின் உள் நுழைவு வாயில்


பார்வையற்ற மாணவர் படிக்கிறார்…


ப்ரெய்ல் மூலம் கற்கும் பார்வையற்ற இளைஞர்

இந்த நூலகத்தின் முக்கியமான சிறப்பு குழந்தைகளுக்கான பகுதிதான். குழந்தைகள் தானாகவே செயல் வழிக் கற்றல் மூலம் படிக்கவும், ஆடிப் பாடி விளையாடவும், கணிணி மூலம் கற்கவும், பொழுது போக்கவும் மிகச் சிறப்பான வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்காண உள்நாட்டு, வெளிநாட்டுப் புத்தகங்கள் உள்ளன.  கண்ணைக் கவரும் ஓவியங்கள் சிறப்பு. குழந்தைகள் விளையாட தனியாக உள் விளையாட்டு அரங்கம் உள்ளது வெகு சிறப்பு. குழந்தைகளுக்கு வசதியாக முதல் தளத்திலேயே இவை அனைத்தும் அமைந்துள்ளன.


ஓவியமும் புத்தகங்களும்

அழகழகாய் நூல்கள்…


குழந்தைகள் புத்தக வரிசை

விளையாட்டுப் பிள்ளைகள்


கணிணிகளும் கண்மணிகளும்
கணிணியில் விளையாடும் கண்மணிகள்


ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்…


குழந்தைகள் உள் விளையாட்டரங்கம்

இந்நூலகம் 8 ஏக்கர் பரப்பில் தரைத்தளத்துடன் 8 மாடிகள் கொண்டு அமைந்துள்ளது. மாடிக்குச் செல்ல படிகள், தானியங்கி (லிஃப்ட்), எஸ்கலேட்டர் (நகர்வு தளம்) உள்ளது. முதல் தளம் குழந்தைகளுக்கானது. மற்றும் நாளிதழ்கள், சஞ்சிகைகள் என பொது நூல்களுக்கான தளமும் அங்கு உள்ளது. 2-வது தளத்தில் தமிழ் நூல்களும், 3-வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4-வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. 5-வது தளத்தில் பத்திரிகைகளின் பழைய பதிப்புகளும், 6-வது தளத்தில் அரசு ஆவணங்களும், 7-வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள் மற்றும் ஆடியோ-வீடியோ தொகுப்புகளும் இடம் பெற்றுள்ளன. புகைப்படத் தொகுப்புகளும், பிறவும் 8-வது மாடியில் அமைந்திருக்கிறன.

மாடிகளுக்குச் செல்லும் வழி


நகர்வு தளம்

பல லட்சம் நூல்கள் கொள்ளளவு கொண்ட, 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய இந்நூலகத்தின் முக்கியமான சிறப்பு,  கூட்ட அரங்கு, கலை அரங்கு, கருத்தரங்கு என சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கும், 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளது தான்.

கருத்தரங்கு அறை


கருத்தரங்கு அறை


புத்தகங்கள்


குழந்தைகளுக்கான நூல்கள்

ஓவியங்கள்


சுவற்றோவியம்


அறை ஓவியம்

நாளிதழ்கள், சஞ்சிகைகள் பகுதி


நூலகத்தின் ஒரு பகுதி


வாசிப்பறையின் ஒரு பகுதி


வாசிப்ப்றை


வாசிப்பறையின் ஒரு பகுதி


இந்நூலகம், முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.  மாற்றுத் திறன் உடையோர் எளிதில் வந்து செல்லும் வண்ணம் தனிப் பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், பார்வையற்றவர்கள் பிரெய்லி முறையில் படிக்கும் சிறப்பு நூலக அரங்கும் தரைத் தளத்திலேயே அமைந்துள்ளது சிறப்பானது.  பொதுமக்கள் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் இந்நூலகத்தைப் பயன்படுத்தலாம். தானியங்கி வசதி கொண்ட இணைய மின் நூலகம் உள்ளதுடன் யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடனும் அகலக் கற்றை (பிராட் பேண்ட்) மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் உணவு விடுதி போன்ற வசதிகளும், பிற பணிகளும் இன்னமும் முழுமை பெறவில்லை.  தற்போது நூலகம் செயல்பட்டு வருகிறது என்றாலும் பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதால் ஜனவரி மாதம் முதல் முழுமையான அனைத்து வசதிகளுடனும் நூலகம் செயல்படத் துவங்கும் என நூலகத் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட, 180 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்நூலகம் தமிழக அரசின் மிகப் பெரிய சாதனை என்றால் அது மிகையில்லை. ஆனால் இந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் கிராம, நகர்ப்புற நூலகங்களை மேலும் தரம் உயர்த்தினால் அது பலரும் வந்து வாசிக்க வழி வகுக்கும்.

அமைவிடம்: இந்நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ளது. கிண்டி – பிராட்வே செல்லும் 21G பேருந்து இந்நூலகம் வழியாகச் செல்லும். மற்றும் 5C, 54 F போன்ற சில பேருந்துகளும் இவ்வழிச் செல்கின்றன. கிண்டியிலிருந்து  10-15 நிமிடங்களில் இந்நூலகத்தை அடைந்து விடலாம்.

காலை 9.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை வார விடுமுறைகள் ஏதுமின்றி நூலகம் செயல்படும்.


வணக்கம்

Advertisements

4 thoughts on “ஆசியாவின் பெரிய நூலகத்தில்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.