ஜோதிடம் சில கேள்விகள்

ஜோதிடம் உண்மையா, பொய்யா? கட்டுரைக்கு வந்த பின்னூட்டம்

ranjan
rranjan@….l.com
—-  வ/மா/தி at 8:17பிற்பகல்

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், ஜோதிடம் என்பது உண்மைதான் என்றா? அப்படியானால் கீழ்கண்ட எனது கேள்விகளுக்கு பதில் கூற இயலுமா?

1. ஜோதிடம் உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?

2. ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன ஆகிவிடும்?

3. ஜோதிடம் பார்த்தும் பலருக்கு அதன்படி பலன்கள் நடக்கவில்லையே அது ஏன்?

4. ஒரே ஜாதகத்திற்கு ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமாகப் பலன் கூறுகிறார்களே அது எப்படி?

5. ராகு, கேது பாம்புகள், கிரஹணத்தின் போது சந்திரனை, சூரியனை விழுங்கும் என்பதெல்லாம் பொய் என்று விஞ்ஞானம் நிருப்பித்திருக்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

6. சூரியக் குடும்பத்தில் புதிதாக ஏதேனும் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அப்போது ஜோதிடர்கள் என்ன செய்வீர்கள்?

7. அதது இயற்கையாக நடந்து கொண்டிருக்கும் போது, ஜாதகம் போன்றவற்றை நம்புவது பகுத்தறிவிற்கு முரணாக உள்ளதை அறிவீர்களா?

8. ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்தும் விவாகரத்துகள் நடக்கின்றன, சிலர் இறந்து போகிறார்கள், மனைவியைக் கொலை செய்கிறார்கள். இதெல்லாம் எப்படி? எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கூறுவதுதான் ஜோதிடம் என்றால் எப்படி உங்களால் இவற்றைக் கணிக்க முடியவில்லை.

9. பரிகாரம் என்ற பெயரிலும் யாகம் என்ற பெயரிலும் ஜோதிடர்களும் புரோகிதர்களும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்களே, இது நியாயமா?

10. விதிப்படி தான் அனைத்தும் நடக்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம். அப்புறம் ஏன் ஜோதிடம்?

11. விஷ்ணு ஆலயங்களில் ஏன் நவக்கிரகங்கள் காணப்படுவதில்லை?

12.பட்சி சாஸ்திரம், சகுனம், ராகு காலம், எம கண்டம் இவையெல்லாம் பைத்தியக்காரத்தனமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?

13. செவ்வாய் தோஷம், மூலம் என்றெல்ல்லாம் பெண்களை ஜோதிடம் கொடுமைப்படுத்துகிறதே, இது நியாயம் தானா?

14. கிழக்கே சூலம், மேற்கே சூலம் என்றால் என்ன?

15. பிறக்கும் நேரத்தைத் தவறாகச் சொல்லி ஜாதகம் கணித்தால் என்ன ஆகும்? பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் கூறுவீர்கள்?

– இன்னும் நிறையக் கேள்விகள் உள்ளன. முதலில் இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் முழுமையாக/உண்மையாக பதிலளியுங்கள் பார்ப்போம்.

– ரஞ்சன்,
பிரிட்டானியா

என் பதில்…

அன்பு நண்பரே

என்னை ஒரு ஜோதிடராக நினைத்து இத்தனை கேள்விகள் அடுக்கியுள்ளீர்கள் போலத் தெரிகிறது. முதற்கண் தெரிந்து கொள்ளுங்கள் நான் ஜோதிடன் அல்ல. உண்மைகளைத் தேடும் ஒரு ஆராய்ச்சியாளன், அவ்வளவே! அந்தத் தேடுதலில் ஜோதிடமும் ஒரு அங்கம். அவ்வளவுதான். நம்மைச் சுற்றி இருக்கும் எளிதாகப் புரியாத அல்லது புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை அவதானித்து நான் கட்டுரைகளாகத் தருகிறேன். அதை வைத்துக் கொண்டு என்னை ஜோதிடர் என்றோ அல்லது ஆவிகளுடன் பேசுபவன் என்றோ நினைத்தால் அது அறிவீனம். நான் ஒரு ஆய்வாளன் அவ்வளவே. ஆனாலும் நீங்கள் கேட்ட கேள்விகள் மிக சுவாரஸ்யமானவை. அவற்றிற்கு நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பதலிளிப்பேன். அதுவரை தயவு செய்து காத்திருங்கள்.

அன்புடன்
ரமணன்

விரைவில் மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள் வரும்

Advertisements

34 thoughts on “ஜோதிடம் சில கேள்விகள்

 1. Dear Ramanan

  R.Ranjan has asked very deep and smart questions. You have also agreed to answer. wonderful. However every one including Ranjan seem to be in a hurry. The problem is that we all go by the fashionable fad. If we say that we do not believe in astrology this is the best “in” thing or a stand to be taken by the revolutionary or by a rebel.
  If there is something that has survived ages and ages from the days of Gupta Dynasty (Varahamihirar is the famous astrologer) that is Satya or Truth.
  ARS writes in Kumudam Jythoish and many people believe him as a Jyothish Guru. Can you pl. forward these questions to him and ask him to provide answers? That will end this debate started by Ranjan.

  All the best
  regards
  Mouli

  1. யார் அப்படிச் சொன்னது? ஜோதிட ரீதியாக அப்படி இருக்க வேண்டியதில்லை. ஆனால் உளவியல் ரீதியான காரணங்களால் அக்காலத்தில் ஒரு சில வீடுகளில் இவை வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். (முறையாகக் கிடைக்காத அக்கால மருத்துவ முறைகள், சிகிச்சைகள், பாதுக்காப்பின்மை போன்றவைதான் காரணம்) மேலும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவள் கணவர் அன்போடு கவனித்துக் கொள்பவராக இருக்கலாம். மற்றவர் அப்படி இல்லாமல் இருக்கலாம். அதை நினைத்துக் கூட மற்றொருவருக்கு மனப்பாதிப்பு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் பழகி, பிரிந்து, ஒருவருக்கு ஆண் குழந்தை- இன்னொருவருக்குப் பெண் குழந்தை பிறந்து ஏதேனும் மனச் சங்கடங்கள், உள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஒரு சிலர் அப்படிக் கூறியிருக்கலாம் அக்காலத்தில். ஆனால் தற்காலத்தில் அப்படியிருக்கத் தேவையில்லை. இருக்கவும் வேண்டியதில்லை. நன்றி.

 2. நண்பர்களே இன்று நான் புதிதயதாக பதிகிறேன் ஜோதிடம் பற்றிய செய்திகளை பார்ப்பதற்கு போகும் முன் சற்று நாம் சிந்திக்க வேண்டும்
  இன்றைய உலகில் அறிவியல் முன்னேற்றம் வேகமாக வளர்ந்துள்ளது ஏன் ,அதற்கு பொருளாதர உதவிகள் ,ஆய்வுக்கூடங்கள்,முடிவுகள் கூற கால அவகாசம் .இவற்றை எல்லாம் கொடுத்து பிறகுதான் நாம் அறிவியலை பற்றிய செய்திகளை சொல்கிறோம்.500 ஆண்டுக்குமுன் ஒருமருந்தை கண்டு பிடித்த உடன் அதை பயன் படுத்தி நிறைய பாதிப்புக்கள் கூடவந்திருக்காலாம் அல்ல்வா ? அதே போலத்தான் கடந்த பல நூற்றாண்டுகாளக எந்த ஆய்வும் இல்லாமல் இருக்கும் ஜோதிடம் பற்றி ஏன் இத்தனை கேள்வி காத்திருங்கள்

 3. அருமையான சிந்திக்கத் தூண்டும் கேள்விகள். ஆனா பதில் போடத் தைரியமில்லாமல், பயந்து கொண்டு பதிவே போடாம இருக்காக அண்ணாச்சி ச்சீச்சி….

  1. பயமில்லை நண்பரே! உண்மையிலேயே நேரமில்லை. சில நாட்கள் பொறுங்கள். எல்லாவற்றிற்கும் விரிவான பதிலோடு வருகிறேன். நிறைய பதிவுகளையும் தருகிறேன். சீச்சீ… சேச்சே… எல்லாம் வேண்டாம். சரிங்களா கோயிஞ்சாமி?

  1. நகைச்சுவை என்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் சிறந்த ஒன்று மிஸ்டர் கோபால கிருஷ்ண கோகலே. படியுங்கள். நன்றாகச் சிரியுங்கள். ஆனால் தனியாகச் சிரித்துக் கொண்டிருக்காதீர்கள். சரியா?

   எனக்கு நிறைய வேலை இருக்கிறது. ஆனால் ’வெட்டி’ என்று எதுவும் இல்லை. உங்களுக்கு?

   அன்புடன்
   ரமணன்

 4. கண்ணாடிக்கல் என்று ஒன்று இருப்பதால் வைரக்கல் என்ற ஒன்று இல்லை என்றாகிவிடுமா தோழர்களே…!!,

  இன்றைய காலகட்டத்தில் எதில் தான் போலிகள் இல்லை, போலிகளைத் தரம் பிரித்து அறியமுடியாத உங்கள் மந்த புத்தியை மறைத்து, மொத்த அனைத்தையுமே போலி என்பதில் எந்த உண்மையும் இல்லை. அப்படி அனைத்தையுமே போலி என்பது உண்மையான தேடல் உள்ள மனிதரின் கருத்தாகாது..

  நான் விவாதிக்க வரவில்லை எனது கருத்தை மட்டுமே சொன்னேன்…
  நன்றி வணக்கம்.

  1. உண்மை தோழி. பாலுக்கும் கள்ளுக்கும் வேறுபாடு அறியாத, அதை சீர்தூக்கிப் பார்த்து அறிந்து கொள்ளும் தெளிவில்லாதவர்களாகத் தான் இங்கே பலர் உள்ளனர். எந்த ஒரு ஆராய்ச்சி அறிவும் இல்லாமல் கண்மூடித்தனமாக எதையும் ஏற்றுக் கொள்வது அல்லது முற்றிலுமாக மறுத்து நிராகரிப்பதே பலரது செயல்பாடாக உள்ளது. பகுத்தறிவு என்பதன் உண்மையான பொருள் தெரியாத இவர்களைக் கண்டு பரிதாபப்படுவதைத் தவிர நாம் வேறு எதுவும் செய்வதற்கில்லை.

   தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழி.

 5. ஐயா,

  மகான்களைப் பற்றியும் அவர்கள் செய்யும் அற்புதங்கள் (!!!) பற்றியும் எழுதியுள்ளீர். நல்லது. தற்போது ஒரு சாமியார் ஆபாசச் செயல் புரிந்து மாட்டிக் கொண்டுள்ளாரே அவர் குறித்து ஏதும் எழுதாமல் கள்ள மௌனம் சாதிப்பது ஏனோ? ஒருவேளை அவர் உங்கள் குருநாதரோ? குருத்துரோகி எனக் கூறுவார்கள் என ஐயமோ. பகல்க!

  1. அ.நம்பி, ஏன் இந்தக் கிண்டல்? ஆன்மீகம் என்றால் ஏன் இவ்வளவு இளக்காரம்? ஒரு சில போலிகள் தவறு செய்வதால் ஆன்மீகம் முழுக்க முழுக்கத் தவறாகி விடுமா? உங்கள் கேள்விக்கு விரிவான பதிலை பின்னர் தருகிறேன்.

 6. 1. ஜோதிடம் உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?
  பூமி தன்னை தானையும் சுற்றி சூரியனையும் சுற்றிவருகின்றது இப்படி அறிவியல் நமக்கு உணர்துகின்றது,,அந்தபூமியில் உள்ள புவியீர்புசக்தியால் அதன் மேல்பரப்பில் நாம் உயிர்வாழ்கின்றேம்,அந்த பூமி தன் நிலைபாட்டை சற்று மாற்றிநால் நம் நிலமை என்னாவது யோசிக்கவேண்டும், இந்த சமச்சீர் இயக்கம் எப்படிநிகழ்கின்றது என்று பூட்டன் காலத்திலே யோசித்துயிருக்கான் அந்த பாவி சித்தபுருஷன்மார்,அதற்கு அவனுக்கு கிடைத்த ஆதாரத்தை குறியீடாக குறித்து வைத்தானுவ,ஒரு குறீயீடு பலவிசையத்தை உணர்த்தும் காலத்தையும் இடத்தையும் பொருத்து அதன் பொருள் மாறுபடும். நீ இருக்கும் காலத்திற்கும் இடத்திற்கும் அதன் பொருள் அறியாமையால் ஆதாரம் மற்றதாக தோணும்.அவ்வளவுதான்,,,,,
  இருதைய அடைப்பு நோய் உள்ளவர் மருத்துவர்மேல் கொண்ட நம்பிக்கையால் அவரிடம் செல்கின்றான் அவரும் முதலில் மயக்கி அவனை கொன்று அதை சரிபடுத்தி விடுகின்றார்,இதில் அவரை பார்கவேண்டுய அவசியம் என்ன என்று கேட்டால் என்ன பதில் சொல்வது யோசிக்கவும்.அதை போல் என்ணங்கள் மனதுடன் செயல்படாமல் அடைத்து நிற்கும் போது போவதுதான் ஜோதிடத்தை தேடி,
  எல்லா கேள்விக்கும் விடையளிப்போன் நிதானமாக.
  இதரகலாச்சாரசீரளிவால் வந்த எண் கணிதம்,பெயர் ஜோதிடம், ராசிகல்,போன்ற ஆதாரம்யில்லாத பொய்வித்தைகளால் நிஜகணிதம் பொய்ஆக்கப்படுகிறது.இந்த பொய் வித்தைகளை கையாள்பவர் முழு பொய்யரே….எவன் ஒருவன் எண்கணிதம் பார்கப்படும் என்று ஜோதிடத்தோடு தொடர்பு படுத்துவானோ அவன் பொய்யான ஜோதிடர் என்பது உன்மை.அளவு கோலின் அளவு தொரியாமலே அளந்து அளவு சொல்பவர் மாதிரி பட்ட ஏமாற்று பேர்வழியே,,,
  தொடரும்,,,நன்றி.
  அடுத்து பதில்,,, ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன ஆகிவிடும்?

  1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. அதிக வேலைப்பளுவினால் என்னால் இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க முடியவில்லை. பிளாக் போஸ்ட் செய்யவும் இயலவில்லை. தங்கள் பதில் தெளிவாக இருக்கிறது. தொடருங்கள். மிக்க நன்றி

 7. காலமும் நேரமும் கடவுள் கையில் இருக்கிறது
  உலகில் மனிதனாய் பிறக்கிற எல்லாருக்கும் இடறல் பூமியில் நிச்சயம் உண்டு
  எந்த ஒரு மனிதனும் ஜோதிடனும் கூட எனக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை என்று கூற முடியாது
  அளவுக்கு அதிகமாய் ஆஸ்தி இருந்தாலும் நிம்மதி என்பது கொஞ்ச நேரம் தான் இருக்கும்
  அதனால் ஜோதிடம் உண்மையாய் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் மேலான ஒருவர் உண்டு
  அவர்தான் கடவுள் அவரால் எல்லாவற்றையும் மாற்றவும் முடியும்……………………………………என்பது என் கருத்து

  1. மணியன் சார்,

   பதில்களைப் பார்த்த பிறகு இம்முடிவிற்கு வருவதுதான் சிறந்தது. முன் முடிவுகளோடு எந்த ஒரு கருத்தியலையும் அணுகினால், அது நமது கொள்கைகளுக்கு ஏற்பாக இல்லை என்றால் மழுப்பலாகவும், சொதப்பலாகவும்தான் தோன்றும்.

   எது உண்மை என்று அறிய நீங்களும் ஆராய்ந்து பார்க்கலாமே! அதைவிடுத்து, யாரோ சிலர் கூறிய தகவல்களை அல்லது எழுதிய கற்பிதங்களை அடிப்படையாக, முன் முடிவாக வைத்துக் கொண்டால் எல்லாமே முட்டாள்தனமாகத் தான் இருக்கும்.

   தங்கள் வருகைக்கு என் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.