33வது சென்னை புத்தகக் காட்சி

வழக்கம் போல் இந்தப் புத்தக்காட்சியும் வெகு கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.

நான் முதல் நாளும் சென்றேன். இறுதி நாளும் சென்றேன். நடுவிலும் சென்றேன். எல்லா நாளிலும் நல்ல கூட்டம் இருந்தது. சில பதிப்பகங்களில் நிறைய கூட்டம். சிலவற்றில் ஆள் நடமாட்டமே இல்லை. அமுதநிலையம், ஐந்திணை, தமிழ்ப்புத்தகலாயம் போன்றவற்றில் கூட்டம் அதிகம் இல்லை. ஆனால் அல்லயன்ஸ், நர்மதா, விகடன், கிழக்கு, கீழைக்காற்று போன்றவற்றில் நல்ல கூட்டம்.

இந்தளவு கூட்டத்தைப் பதிப்பாளர்கள் எதிர்பார்த்தார்களா என்பது தெரியவில்லை, காரணம் சென்ற ஆண்டு அதிக கூட்டமும் இல்லை. விற்பனையும் இல்லை. இந்த ஆண்டு கூட்டம் அதிகம். விற்பனை எவ்வளவு, யார் முதலிடம் என்பதெல்லாம் இனிவரும் நாட்களில் தெரியும்.

நான் வாங்கிய சில புத்தகங்கள்…

பிரம்ம சூத்திரம் – கண்ணதாசன் பதிப்பகம்

பாபாவின் வரலாறு – கண்ணதாசன் பதிப்பகம்

ஒரு குயிலின் கதை – ஜெபமாலினி பதிப்பகம்

நாடி சொல்லும் கதைகள் – பாகம் 3 – ஹனுமத்தாஸன்

ஜே.கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும் – திருக்குடந்தை பதிப்பகம்

தமிழ்ப் பண்பாடு – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

ஸ்ரீ சத்யசாயி பாபா – விகடன் பிரசுரம்

சுவாமி சிவானந்தர் – விகடன் பிரசுரம்

எப்போ வருவாரோ – விகடன் பிரசுரம்

பம்மல் முதல் கோமல் வரை – விகடன் பிரசுரம்

காஞ்சி மகானின் கருணை நிழலில் – விகடன் பிரசுரம்

சாயிபாபா வரலாறு – கிரி டிரேடிங் ஏஜென்ஸி

மௌனம் (பாபாஜி சித்தர் வரலாறு) – கிரி டிரேடிங் ஏஜென்ஸி

தர்ம சாஸ்திரம் – சுரபி பதிப்பகம்

பண்பாட்டைப் பேசுதல் – தமிழ் ஹிந்து

சத்ய சாயிபாபா – திரிசக்தி பிரசுரம்

மகா பெரியவா – திரிசக்தி பிரசுரம்

திருவடியே சரணம் – திரிசக்தி பிரசுரம்

அய்யர் தி கிரேட் – கிழக்கு பதிப்பகம்

வீர சாவர்க்கர் – கிழக்கு பதிப்பகம்

மர்மங்களின் பரமபிதா – கிழக்கு பதிப்பகம்

சடங்குகளின் கதை – நக்கீரன்

பைசாசம் – பழனியப்பா பிரதர்ஸ்

சந்திரகுப்தரும் சமுத்திர குப்தரும் – பழனியப்பா பிரதர்ஸ்

The Life and Death of J.Krishnamurthy – Krishnamurthy foundation of India

இன்னும் பல புத்தகங்களை வாங்கினேன். அவற்றைப் பற்றிய அறிமுகங்கள் பின்னர்….

 

Advertisements

11 thoughts on “33வது சென்னை புத்தகக் காட்சி

 1. அய்யா நான் ஹனுமத்தாசன் எழுதிய ” நாடி சொல்லும் கதைகள்” பாகம்-1 , பாகம் -2 இரு புத்தகத்தையும் படித்துவிட்டேன் , இப்போது பாகம் -3 வெளியாகயுள்ளதாக சொல்கிறார்கள் , எவ்வளவோ முயன்றும் கிடைக்கவில்லை , தாங்கள் புத்தக பிரியர் என்ற காரணத்தால் நான் மேல் சொன்ன புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கூறுமாறு கேட்டுகொள்கிறேன் . நன்றி .

  1. நண்பரே…

   நான் கடந்த வருடம் மணிமேகலை பிரசுரத்தில் வாங்கினேன் என்று நினைக்கிறேன். நீங்கள் மணிமேகலை, கிரி டிரேடிங், அம்மன் தரிசனம் போன்ற பதிப்பகங்களில் விசாரித்துப் பாருங்கள். நூலைப் பதிப்பித்திருப்பது எழுத்தாளர் திரு அறந்தாங்கி சங்கர் அவர்கள். நான் இன்று புத்தகச் சந்தை செல்வேன். அந்தப் புத்தகம் எங்கு கிடைக்கிறது எனப் பார்த்து வருகிறேன். அல்லது பதிப்பக/சங்கர் முகவரியையாவது பெற முயற்சிப்போம். நன்றி.

   1. அம்மன் பதிப்பகத்தார் “நாடி சொல்லும் கதைகள் – பாகம் 1 & 2” மட்டுமே வெளீட்டு உள்ளனர் , நான் அதை படித்துவிட்டேன் , மேலும் பாகம் முன்று திரு அறந்தாங்கி சங்கர் அவர்களால் வந்ததும் எனக்கு தெரியும் , நான் கேட்ட்பதேல்லாம் அந்த பதிப்பகம் சென்னையில் எங்குள்ளது என்றுதான். தாங்கள் சரியான முகவரி கொடுத்தால் அங்கு சென்று வாங்குவேன் . தங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி . மேலும் இது பற்றிய தகவல் தெரிந்தால் கூறவும்

    1. நண்பரே, நான் என்னிடம் இருந்த புத்தகத்தை நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களிடம் கையளித்து விட்டேன். அவரிடம் கேட்டு வாங்கலாம் என்றால் அவர் மகள் திருமணத்தில் மிகவும் பிஸி. அதனால் தான் உங்களுக்கு உடனடியாக முகவரியைத் தர இயலாமல் போய் விட்டது. இப்போதுதான் புத்தகச் சந்தைக்குச் சென்று விட்டு வந்தேன். இதோ, பதிப்பக முகவரி –

     அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்
     9, பாஸ்கர் தெரு,
     நேரு நகர்,
     சாலிக்கிராமம்,
     சென்னை – 600 093
     தொ.பே.: 23763359, 23762554

     அது சரி, இந்த வலைத்தளத்தில் ஹனுமத்தாஸனின் நாடி சொல்லும் கதைகள் தொடராக வருகிறதே, அதைப் படித்துள்ளீர்களா.. இல்லையென்றால் உங்களுக்கு இது பயன் தரும்.

     http://www.natpu.in/Pakudhikal/Josiam/nadi.php

     நன்றி, தங்கள் வருகைக்கு.

     1. தங்களுக்கு மிகவும் நன்றி , எனக்கு உதவிய உங்களுக்கு நிச்சயம் அகதியமாமுனி அருள்புரிவார். மேலும் தாங்கள் கூறிய நட்பு தளத்திற்கு சென்று பார்த்தல் அங்கே உள்ள ஒவ்வொரு பதிவின் கிழே என்னுடைய கருத்தினை பதிவுசெயததை தாங்கள் பார்க்கலாக்ம், இதையெல்லாம் கேட்பவன் அதனை படித்து இருக்க மாட்டேனா நண்பரே ! ஏன் இதை கூறுகிறேன் என்றால் நான் ஒரு அகத்திய பக்தன். ஆயினும் தாங்கள் சொன்னதற்கு நன்றி. நான் முதலில் புத்தகத்தை வாங்கிவிட்டு வருகிறேன் . மீண்டும் தங்களுக்கு நன்றி ….

      1. நண்பரே தங்களுக்கு மிக்க நன்றி , முதலில் தாங்கள் அளித்த கிழ்கண்ட தொலைபேசியில் திரு அறந்தாங்கி சங்கர் அவர்களிடம் இந்த புத்தகத்தை பற்றி கேட்டேன் , அவர் இந்த புத்தகம் சென்னை புத்தக கண்காட்சிசலையில் மணிமேகலை பிரசுரத்தில் உள்ளதாக கூறினார் , அவர் கூறியபடியே சென்று அந்த புத்தகத்தை வாங்கிவிட்டேன் , தங்களுக்கு மீண்டும் நன்றி.

 2. அண்ணே…

  நீங்க என்ன புஸ்தக வியாபாரியா? நீங்க புஸ்தகம் வாங்கியிருப்பது படிப்பதற்கா அல்லது விற்பனை செய்வதற்கா? படிப்பதற்கு என்று சொன்னால் என்னால் நம்ப முடியவில்லை. ஏன்னு கேட்டா இதைப் படித்து முடிக்க ஒரு வருஷம் கூட பத்தாதே… அதான்.

  வணக்கம். நன்றிங்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.