நாடி ஜோதிடம் உண்மைதானா? – பகுதி – 4

 

ஜீவநாடி என்றால் என்ன?

ஒலைச்சுவடிகள்

ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும்.

மேலும் இதனைக் காண மற்ற நாடிகளைப் போன்று விரல் ரேகையையோ, பிற விவரங்களையோ அளிக்கத் தேவையில்லை. நாம் ஜோதிடரிடம் போய் அமர்ந்து கொண்டால் போதும். கேள்விகள் கூட கேட்காமல், தாமே நமக்குத் தேவையான விவரங்களைத் தரும் நாடிகளும் இருந்திருக்கின்றன

“இந்த ஜீவ நாடியைக் கைவசம் வைத்திர்ப்பவர்கள் மிகவும் ஒழுக்கசீலர்களாகவும், தினமும் இறைவழிபாடு செய்கிறவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், மிகுந்த சுத்தத்துடன் நடந்து கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். பொன், பொருள், புகழ், பணம் போன்றவற்றிற்கு ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது. அவ்வாறு அவர்கள் முறை தவறி நடந்து கொண்டால் நாடி பலிக்காது, நாளடைவில் பலன்கள் தவறாகிச் செயலிழந்து விடும்” என்பது நாடி ஜோதிடர்களின் கூற்று.

நாடி ஜோதிடம் ஏன் எல்லோருக்கும் பலிப்பதில்லை?

சுவடிகள்

“கடந்த மற்றும் நிகழ்காலப் பலன்கள் சரியாக இருக்கின்றன. ஆனால் எதிர்காலப் பலன்கள் நடப்பதில்லை. எனவே நாடி ஜோதிடம் என்பது பொய் தான்” என்பது பலரின் கூற்று. இதற்கு நாடி ஜோதிடர்கள், “ கடந்த மற்றும் நிகழ்காலப் பலன்கள் சரியாக இருக்கும்போது எதிர்காலப் பலன்கள் பொய்த்துப்போக ஏதேனும் சரியான காரணம் இருக்க வேண்டும். ஒன்று நாடி ஜோதிடர் போலியானவராக இருக்க வேண்டும். அவர் தவறான தகவல்களைப் பலன்களாகக் கூறியிருக்க வேண்டும். அல்லது அவர் கணித்ததில் ஏதேனும் பிழை ஏற்பட்டு இருக்கலாம். பலன்களைத் தவறாகப் பொருள் கொண்டும் பலன் கூறியிருக்கலாம். ஓலைச்சுவடிகள் மாறியும் இருக்கலாம். இவ்வாறு பலன்கள் மாறுபட பல்வேறு காரணங்கள், சாத்தியக் கூறுகள் உள்ளன.” என்று கூறுகின்றனர்.

“நாடி ஜோதிடம் பார்த்தவர் நாடியில் குறிப்பிட்ட பரிகாரங்கள் போன்றவற்றைச் செய்யாது விட்டிருக்கலாம். அல்லது தவறான முறையில் செய்து இருக்கலாம். அதாவது நாடியில் எந்த முறையில் பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதோ அந்த முறையில் தான் செய்ய வேண்டும். மாறாக முறை மாற்றிச் செய்து விட்டாலோ, தவறாகச் செய்து விட்டாலோ, நம்பிக்கை வைக்காமல் செய்தாலோ பலன்கள் சரியாக இருக்காது. நாடியில் சிலருக்கு யந்திரம் வைத்து வழிபட வேண்டும் என்றும், சிலருக்கு தீட்சை வழியில் ரட்சை அணிய வேண்டும் என்றும் வந்திருக்கும். அதன்படியே அவர்கள் அதனைச் செய்ய வேண்டும். அதற்கு மாறாக பரிகாரங்களை மட்டும் செய்து விட்டு பேசாமல் இருந்து விட்டால் முழுமையான பலன்கள் ஏற்படாது” என்று கூறுகின்றனர் நாடி ஜோதிடர்கள். மேலும் நாடி ஜோதிடர்கள் பாடலைப் படித்துப் பலன்கள் கூறும் பொழுதும், பாடலை ஓலைச்சுவடியில் இருந்து பெயர்த்து எழுதும் பொழுதும் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு” என்கின்றனர்.

முடிவுரை
நாடி ஜோதிடம் உண்மையான ஒன்று என்று ஒப்புக் கொண்டாலும், நாடி ஜோதிடர்களின் செயல்பாடுகள், அவர்களது பணத்தாசை, பரிகாரங்கள் என்று சொல்லி ஏமாற்றும் விதம், உண்மைகளைத் திரித்துக் கூறுவது, பயமுறுத்துவது போன்ற காரணங்களினால் இக்கலையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைகிறது.

ஸ்ரீ அகஸ்தியர்

பெரும்பாலானவர்களுக்கு நாடி கூறியபடி எதிர்காலப் பலன்கள் நடப்பதில்லை. அதற்கு தவறான பரிகாரம், போலி நாடி ஜோதிடர், கர்மா என்றெல்லாம் பலவிதமாகச் சமாதானம் கூறினாலும், ஏன் அவை முனிவர்களால் குறிப்பிட்டவாறு நடக்கவில்லை என்பதற்கு சரியான பதில்கள் கிடைப்பதில்லை. ஆகவே நாடி ஜோதிடம் கூறும் எதிர்காலப் பலன்கள் எவ்வளவு தூரம் ஏற்புடையது என்பது ஆவுக்குரியது.

மேலும் நாடி ஜோதிடத்தில் கர்ண பிஷாசி, கர்ண யக்ஷணி என்றெல்லாம் அழைக்கப்படும் தேவதைகளின் ஆற்றல் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இவ்வகை நாடிகள் மந்திர நாடிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி பலன் கூறும்போது கடந்த காலப் பலன்கள் அனைத்தும் மிகச் சரியாக இருக்கும். ஆனால் எதிர்காலப் பலன்கள் ஒன்று கூட நடக்காது. எனவே இது போன்றவர்களிடத்து மிகக் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

 

இறுதியாக நாடி ஜோதிடம் என்பது தொன்மையான கலை என்பது உண்மையானால் அதனை மென்மேலும் வளர்க்க, மக்கள் அதன் மூலம் முழுமையான பயன்களை அடைய அவற்றின் ரகசியக் கதவுகளைத் திறந்து அனைத்து மக்களும் அதன் மூலம் பயன்பெறும் வண்ணம் (நடைமுறை ஜோதிடம் போல்) அதனை எளிதாக்க வேண்டும் நாடி ஜோதிடர்கள், செய்வார்களா?

(முற்றும்)

நாடி ஜோதிடம் என்பது உண்மையா, பொய்யா?  எதைக் கண்டு அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்வது?, சிலருக்கு மட்டும் ஏன் நாடியில் சொன்னபடியே எல்லாம் நடக்கிறது?, சிலருக்கு ஏன் எதுவுமே நடப்பதில்லை.. என்ன காரணம்?..   விரல் ரேகையின் மூலம் ஒருவரது எதிர்கால, கடந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ளுதல் என்பது சாத்தியம் தானா? ஓலைச்சுவடி எழுத்துக்களை  நாடி சோதிடர்களைத் தவிர மற்றவர்களால் ஏன் படிக்க இயலவில்லை?, குறிப்பிட்ட சில நபர்களிடம் மட்டுமே இவ்வகைச் சுவடிகள் உள்ளதே அது ஏன்? தமிழ் நூல்கள் கம்ப்யூட்டர், இணையம், மின் நூல் என முன்னேறிக் கொண்டிருக்க, இவ்வகைச் சுவடிகள் இன்னமும் சுவடிகளாகவே இருப்பது ஏன்? வெளிநாட்டுக் காரர்கள், வேற்று மதத்தவர்கள் உட்பட பலருக்கும் ஓலைச் சுவடியில் அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்கள் வருவதாகக் கூறப்படுவது எவ்வளவு தூரம் உண்மை, உண்மை என்றால் எவ்வாறு சாத்தியம்..? குற்றவாளிகள் போன்றோரை இவ்வகை விரல் ரேகைகளின் மூலம் எளிதில் கண்டுபிடிக்க இயலுமே, ஏன் அதெல்லாம் சாத்தியமாகவில்லை… போன்ற கேள்விகளுக்கான விடை கீழ்கண்ட நூலில் இருக்கிறது.

நன்றி:
நாடி ஜோதிடம் உண்மையா? பொய்யா?
மேகதூதன் பதிப்பகம்,
7/13, சின்னப்ப ராவுத்தர் தெரு,
ரத்னா கஃபே பின்புறம்
திருவல்லிக்கேணி, சென்னை-5
(பக்கம்:224, விலை: ரூ70 )
044-42155831

Advertisements

25 thoughts on “நாடி ஜோதிடம் உண்மைதானா? – பகுதி – 4

 1. உண்மையிலும் உண்மை நாடிஜோதிடம் மக்களை ஏமாற்ற முட்டாளாக்க பணத்தை பறிக்க நடக்கும் போலித்தனமான ஜோதிட யுக்தி நம்மிடமே பிறந்த தேதியிலிருந்து தாய் தகப்பன் வரை அணைத்து உண்மைகளையும் கேட்டுவிட்டு பஞ்சாங்கத்தை பார்த்து நமது ஜாதகத்தை கணித்து சொல்வது நம்ம ஊரில் இருக்கும் சாதாரண ஜோஸியரின் வேலை இதை மக்களை நம்ப வைத்து நாடி ஜோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் நன்றி

 2. ஏன் இன்னும் நாடி ஜோதிடம் அதாவது ஓலையில் உள்ளவை கணினி மயமாக்கப்படவில்லை ….
  எதிர்கால பலன்கள் ஓலைச்சுவடியில் மாறிக்கொண்டே இருக்கும் என்று சொல்லப்படுவது உண்மையா ….
  ஒரே நபருக்கு பல நிலையங்களில் ஓலைகள் கிடைப்பதும்…கடந்த காலம் நிகழ்காலம் எல்லாம் ஒத்துபோயினும்..எதிர்கால கணிப்புகள் மட்டும் ஏன் வெவ்வேறாக இருக்கின்றன ……
  ஓலை சுவடி பலன்களை நம்பி வாழ்கையில் கெட்டவர்களின் கதைகளை கேட்டதுண்டா

  1. நிறைய மூடர்களின் கதைகளைக் கேட்டிருக்கிறேன். ஐயோ, பாவம். எது உண்மை, எது பொய் என்று கூடத் தெரியாமல், அடிப்படை ஆராய்ச்சி உணர்வு கூட இல்லாமல், கிளி ஜோசியக்காரன் சொல்வதை அப்படியே கிராமத்துப் படிக்காத நம்புவது போல, நாடி ஜோசியன் சொல்வதை அப்படியே நம்பி ஏமாந்த, ஏமாறும் மனிதர்களை நிறையவே கண்டிருக்கிறேன்.

   தன்னையறிவது தானறிவு
   பின்னையெல்லாம் பேயறிவு

 3. வெறும் கட்டை விரல் ரேகையை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் நம் ஓலைச் சுவடியை உறுதி செய்ய நம் பெயர், பெற்றோர் பெயர் , கணவன் மற்று மனை பெயர், வயது என்று பல தகவல்கள் சொல்வது ஆச்சர்யம் தான். ஆனால் பலருக்கும் உண்மையாக நடந்திருகிறது.
  எதிர்காலம் எவ்வளவு பேருக்கு பலிக்கிறது என்பது பற்றிய தெளிவு என்னிடம் இல்லை

  1. எதிர்காலப் பலன்கள் என்பது சந்தேகத்திற்குரியது தான். அது எல்லோருக்கும் பலிப்பதில்லை. ஏனெனில் அங்கே விதிக்கு மட்டுமில்லாமல் மதி என்னும் மனிதனின் நடத்தை சார்ந்த செயல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை தவறினால், மாறான செயல்களைச் செய்தால் நற்பலன்கள் நடக்க வாய்ப்பில்லை,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.