நாடி ஜோதிடம் உண்மைதானா – பகுதி – 3

[நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்]

நாடி ஜோதிடம் என்பது  உண்மையானது தானா?  நம்பத் தகுந்தது தானா?

நாடி ஜோதிடம் உண்மையானதுதான் என்றாலும், அதில் தற்போது பெரும்பாலான போலிகள் ஊடுருவியுள்ளனர். இதனால் உண்மையானவர் யார், பொய்யானவர் யார் என்று அறிந்து கொள்வதில் மிகுந்த குழப்பம் நேரிடுகிறது. ஒரே நபரே சில சமயங்களில் உண்மையானவராகவும் சில சமயங்களில் போலியானவராகவும் காட்சி தருகிறார்.

ஸ்ரீ அகஸ்தியர்நாடி ஜோதிடத்தில் உண்மையானவர்களை விட  போலிகளின் எண்ணிக்கை மிக அதிகம். எனவே நாடி ஜோதிடம் பார்க்கச் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது மிக  அவசியம். ‘உங்கள் சார்பாக நாங்களே அனைத்துப் பரிகாரங்களையும் செய்து விடுகின்றோம், நீங்கள் பணம் மட்டும் கொடுத்தால் போதும்’ என்று கூறுபவர்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல. வியாதி உள்ளவன் தான் மருந்து சாப்பிட வேண்டும். மற்றவன் அவன் சார்பாக மருந்துன்பது யாதொரு பயனையும் விளைவிக்காது என்பதை யாவரும் உணர வேண்டும்.

நாடி ஜோதிடம் என்பது பழமையான ஒன்றுதான். ஆனால் நாடி ஜோதிடர்களில் பலர் நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

நாடி ஜோதிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

இல்லை. வாய்மொழியாக அவ்வாறு கூறப்படுகிறது. நம்பப்படுகிறது. சில பாடல்களின் வடிவத்தைப் பார்க்கும் போது அவை மிகப் பழமையான காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. ஆனால் கால அடிப்படையில் அவற்றை மெய்பிக்க வேண்டுமென்றால் Carbon Test செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. ஆனால் அவற்றிற்கு நாடி ஜோதிடர்கள் சம்மதிப்பதில்லை. மேலும் நாடி ஜோதிடப் பாடல்கள் எல்லாம் அந்தாதி வடிவிலேயே உள்ளது. அவ்வடிவம் தமிழ் இலக்கியத்தில் 13ம் நூற்றாண்டுக்குப் பின்னரே வழக்குக்கு வந்தது. ஆகவே நாடி ஜோதிட ஓலைச் சுவடிகள் மிகப்பழமையானவை என்பதை ஏற்க இயலவில்லை.

அதே சமயம், முக்காலமும் உணர்ந்த மகரிஷிகள், மக்கள் அவற்றை எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக ’அந்தாதி’ வடிவில் எழுதி வைத்தனர் என்ற நாடி ஜோதிடர்களின் கூற்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

பரிகாரங்கள் அவசியம் தானா?

”பரிகாரம் செய்வதும், செய்யாததும் அவரவர்கள் விருப்பம். மழை பெய்யும் பொழுது குடை எடுத்துக் கொண்டு நனையாமலும் செல்லலாம். அல்லது விதியே என்று நனைந்து கொண்டும் செல்லலாம். அது அவரவர்கள் விருப்பம். அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பு” என்று கூறுகின்றனர் நாடி ஜோதிடர்கள்.

”எல்லாருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முனிவர்கள் பரிகாரங்கள எழுதி வைத்துள்ளனர். அதனை நாங்கள், எங்களை நாடி வருபவர்களுக்குப் படித்துச் சொல்கிறோம். எங்களை நாடி வருபவர்களுக்கு அறிவுறுத்துவது எங்கள் கடமை. அதனை பின்பற்றுவதும், பின்பற்றாததும் அவரவர்கள் இஷ்டம். நாடி ஜோதிடர்கள் யாரும் பரிகாரம் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்த மாட்டார்கள். அவ்வாறு வலியுறுத்தினால், பணத்தை எங்களிடம் கொடுத்து விடுங்கள், எல்லாவற்றையும் நாங்களே செய்து இடுகிறோம் என்று யாரேனும் ஒருவர் கூறினால், அவர் நிச்சயம் சந்தேகத்திற்குரியவர்தான்” என்பது நாடி ஜோதிடர்களின் கூற்று.

நாடி மூலம் அனைத்தையும் அறிதல் சாத்தியம் என்றால்,  ஒரு நாட்டின் எதிர்காலம் போன்றவற்றையும், ஆபத்துக்கள் போன்றவற்றையும் முன்னதாகவே அறிந்து கொண்டு காத்துக்கொள்ளலாமே! அது ஏன் நடைமுறையில் இல்லை?

நிச்சயம் காத்துக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு அறிந்து காத்துக் கொள்வதற்கு சித்தர்களின் அருளாசி வேண்டும். கேட்பவரின் மனதும் தூய்மையானதாக, எந்த ஒரு உயிருக்கும், அதன் வாழ்க்கைக்கும் இடையூறு செய்யாததாக, இயற்கைக்கு எதிரானதாக இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம். இது போன்ற காரியங்களுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் எல்லைக் காண்டம், அரசியல் காண்டம் போன்றவை. மேலும் ஜீவ நாடி என்ற ஒரு நாடி இருக்கிறது. அது கையில் இருந்தால், அதற்குரிய முனிவரும் அனுமதி அளித்தால் எல்லாமே சாத்தியம் தான்.

ஜீவநாடி என்றால் என்ன?

(தொடரும்)

நன்றி:
நாடி ஜோதிடம் உண்மையா? பொய்யா?
மேகதூதன் பதிப்பகம்,
7/13, சின்னப்ப ராவுத்தர் தெரு,
ரத்னா கஃபே பின்புறம்
திருவல்லிக்கேணி, சென்னை-5
(பக்கம்:224, விலை: ரூ70 )
044-42155831
 

 

 

 

64 thoughts on “நாடி ஜோதிடம் உண்மைதானா – பகுதி – 3

 1. kingsly சொல்கிறார்:

  dear sir
  i am christian but i fully trust agathiyar. i am very sad about Honble mr.Hanumman Dhasan. I try to contact him for appointment past few years.But i am not get it. now i am in Coimbatore. I want to see my naadi. Pls refer me to good and true naadi jothidar and his mobile number for appointment.

  i am very happy about you and your service also…
  Pls don’t stop this guidance. Once again thank you for your proper guidance.

 2. praveen kumar சொல்கிறார்:

  நாடி பொய்யோ அல்லது உண்மையோ , நான் நம்புவதேல்லாம் அகத்திய பெருமானை மட்டும் தான் , மேலும் அவரின் ஜீவா நாடி பார்க்கும் பகியத்தையும் பெற்றேன்.

  • ramanans சொல்கிறார்:

   மிக்க நன்றி பிரவீன். அப்போ ஹனுமத்தாஸனை அல்லது கணேசன் சாரை சந்தித்திருக்கிறீர்கள் அல்லவா? நல்லது. அகத்தியர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். அமைதி நிலவட்டும். எனக்கும் அவர் அருள் காட்சி உண்டு என்பது நாடி கூறும் தகவல். நம்புகிறேன். நன்றி தங்கள் வருகைக்கு.

   • praveen kumar சொல்கிறார்:

    ஹனுமத்தாசன் அய்யாவை சந்திக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை , சமிபத்தில் அவர் இறைவன் அடி சேர்ந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு பெரும் வருத்தமுற்றேன் . கணேசன் அய்யா மூலமாகதான் அகத்தியர் அருள் பெற்றேன் ! . .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s