நாடி ஜோதிடம் உண்மைதானா – பகுதி – 2

நாடி ஜோதிடர்கள் எப்படிப் பலன் கூறுகிறார்கள்?

முதலில் இறைவனையும், தங்கள் குருநாதரையும்  வணங்கிவிட்டுப் பலன் கூற முற்படுகின்றனர்.  நாடியில் வந்திருக்கும்  இறை வணக்கப்பாடலைக் கூறி, விளக்கமளித்து பின்னர் விரிவான பலன்களைக் கூற ஆரம்பிக்கின்றனர். பொதுக்காண்டம் என்றால் தாயார், தகப்பனார், கணவன் அல்லது மனைவி, குழந்தைகள், கல்வி, தொழில், வியாதி, கடன் போன்றவை பற்றிய செய்திகள் வருகின்றன. மற்றும் பிறந்த நாள் நட்சத்திரங்கள், பிறக்கும் போது இருந்த கிரக நிலைகள் போன்ற தகவல்களும் கூறப்படுகின்றன. அவ்வாறு கூறப்படுபவனவற்றை  தங்கள் ஜாதக நகல்களோடு ஒப்பிட்டு சரியாக உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்ளுமாறு நாடி ஜோதிடர்கள் கூறுகின்றனர்.  அவை அனைத்தும்  துல்லியமாக இருப்பதாகவே நாடி ஜோதிடம் பார்த்தவர்களில் பெரும்பாலானோர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், நாடி பார்க்கும் நபரின் தற்போதைய நிலை, வேலை, தொழில், திருமணம், காதல், குடும்ப உறவு போன்ற தகவல்களும்  சரியாகக் காணப்படுவதாகவே ஜோதிடம் பார்த்தவர்களில் பெரும்பாலானோர்களால் கூறப்படுகின்றது. அது அதற்கென உள்ள தனித்தனியான காண்டங்களைப் பார்க்கும் பொழுது பலன்கள் மேலும் விரிவாக, சரியாக, துல்லியமாக இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர்.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால், முனிவர்களால் எப்படி பின்னால் ஒருவனுக்கு நடக்கப் போவதைமுன்னாலேயே அறிந்து ஓலைச் சுவடியில் எழுதி வைக்க முடிந்தது? அது எப்படிச் சாத்தியம்?

முனிவர்

அந்தக் காலத்தில் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். முனிவர்கள், ரிஷிகள் என்று யாருக்கும் பெரிய பொறுப்புகளோ, கடமைகளோ  ஏதும் இல்லை. இறைவழிபாடு, தியானம், யோகம், மக்களுக்கு அறிவுரை கூறுதல், வழி நடத்துதல் மற்றும் புதிய பல ஆராய்ச்சிகளில் ஈடுபடுதல் இவையே முனிவர்களின் வேலையாக இருந்தது.  அவ்வாறு அவர்கள் நுணுகி ஆராய்ந்து கண்டறிந்த முறைதான் நாடி ஜோதிடம்.

தனித் தன்மை மிக்க முனிவர்கள் மற்றும் சித்தர்கள் தங்கள் தபோ பலத்தினாலும், பின்னால் வருவதை முன் கூட்டியே அறியும் அருளாற்றளாலும், வருங்கால சந்ததியினரின் நலம் கருதி நாடி ஜோதிடக் குறிப்புகளை எழுதி வைத்துச் சென்றதாகக் கூறப்படுகின்றது. அவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள் என்றும் காலத்தைக் கடந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான், ஒரு நபரின் ஓலையைப் பற்றி ஆராய்ந்து எழுதும் போதே, அவர்களுக்கு அக்காலத்தில் இன்னின்ன சிக்கல்கள் ஏற்படும், அவர்கள் அதிலிருந்து மீள முடியும் அல்லது முடியாது, அதற்கான வழிமுறைகள் இன்னின்ன, அவற்றை இந்த இந்த முறையில் பின்பற்றினால் சரியாகும் என்பதெல்லாம் முன்னரே கணித்து எழுத முடிந்திருக்கின்றது என்று நம்பப்படுகிறது.

அந்த ஒலைகளை குறிப்பிட்ட நபர், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்த்துப் பலன் அடையுமாறு விதி அமைப்பு இருப்பதால் தான் நாடி ஜோதிடர்களைத் தேடி, நாடி அவர்கள் வருவதாகக் கூறப்படுகின்றது.

ஓலைச் சுவடிகள் உண்மைதானா, எப்படிப் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு அவற்றை இயற்கைச் சேதாரமில்லாமல் காக்க முடிந்தது?

சுவடிகள்

ஓலைச்சுவடிகளுக்கு ‘நறுக்கு’, ‘முறி’, ‘சீட்டு’, ‘கட்டு’ என்றெல்லாம் அக்காலத்தில் பெயர் உண்டு.  அவையெல்லாம் பனை ஓலைகளால் ஆனவை. பனைமரங்களில் பல வகைகள் உண்டு. ஆண்பனை, பெண்பனை தவிர கூந்தப்பனை, பெரும்பனை என்பன அவற்றில் குறிப்பிடத் தகுந்ததாகும். பெரிய அளவிலான ஓலைச்சுவடிகள் தயாரிக்க இந்த கூந்தப்பனையைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய ஓலைகளைப் பதப்படுத்தி, மயில் துத்தம் கொண்டு சுத்தம் செய்து, வெயிலில் உலர்த்திப் பின்னர் பயன்படுத்தி உள்ளனர். நாடி சோதிட ஓலைச்சுவடிகளை வைத்திருந்தவர்களால் அவை ஆராயப்பெற்று, உண்மை உணரப்பெற்று, போற்றிப் பாதுகாக்கப்பட்டு, வாரிசுகளிடமோ அல்லது சீடர் பரம்பரையினரிடமோ ஒப்படைக்கப்பட்டன. மூல ஓலைகள் அழியும் நிலையில் இருந்திருந்தாலோ, கரையான் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அவை படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. அவ்வாறு பல ஆண்டுகள் சந்ததியினரால் பத்திரமாகப் பாதுகாக்கப் பெற்றவை தற்போது நாடிஜோதிடர்கள் வசம் உள்ளன என்று கூறப்படுகிறது.

நாடி ஜோதிடம் உண்மையானது தானா? நம்பத் தகுந்தது தானா?

(தொடரும்)

 நன்றி:
நாடி ஜோதிடம் உண்மையா? பொய்யா?
மேகதூதன் பதிப்பகம்,
7/13, சின்னப்ப ராவுத்தர் தெரு,
ரத்னா கஃபே பின்புறம்
திருவல்லிக்கேணி, சென்னை-5
(பக்கம்:224, விலை: ரூ70 )
044-42155831

Advertisements

5 thoughts on “நாடி ஜோதிடம் உண்மைதானா – பகுதி – 2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s