ஜோதிடம் உண்மையா, பொய்யா?

Astro Symbols 

ஜோதிடம் என்பது உண்மைதானா, அதை நாம் முழுக்க முழுக்க நம்பலாமா இது எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி. ”ஜோதிடம் என்பதெல்லாம் சும்மா ஏமாற்றுவேலை. உழைக்காமலேயே மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கச் சிலர் செய்யும் சாகசங்கள் தான் ஜோதிடம்” – இது சிலரது கருத்து. “அதெல்லாமில்லை. ஜோதிடம் என்பது வேதகாலம் தொட்டு காலம் காலமாக இருந்து வரும் ஒரு ஆரூட முறை. அதைப் பார்த்து, அதன்படி நடப்பதில் தவறொன்றுமில்லை” இது சிலரது கூற்று.

சரி ஜோதிடம் என்றால் என்ன, அது உண்மைதானா, அது மனித வாழ்வுக்கு உண்மையிலேயே அவசியம்தானா, அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றியெல்லாம் இனி ஒவ்வொன்றாகக் காண்போம்.

ஜோதிடம் என்றால் என்ன?

வடமொழியில் ‘ஜ்யோதிஷம்’ என்று கூறப்படுவதே தமிழில் ஜோதிடம் என்று கூறப்படுகிறது. “அறிவைத் தரும் ஒளி” என்பது இதன் பொருளாகும். இதே பொருளிலேயே இது தமிழிலும் சோதி + இடம் = ‘சோதிடம்’ என அழைக்கப்படுகிறது. வேதத்தின் ஆறுபாகங்களில் ஜோதிடமும் ஒன்று. தமிழிலும் ‘சோதிடக்கலை’ ஆய கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதில் மேல் நாட்டவர்கள் ‘சாயன முறை’ என்பதைப் பின்பற்றுகிறார்கள். நம் இந்திய நாட்டில் பின்பற்றப்படும் முறை ‘நிராயன முறை’ என்பதாகும். இந்த ஜோதிடத்தில் பல்வேறு உட் பிரிவுகளும் உள்ளன. பராசரர், ஜைமினி, வராகமிகிரர் என பல மகரிஷிகள் பல்வேறு முறைகளை வகுத்துத் தந்துள்ளனர். காலமாற்றத்திற்கேற்ப வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணிதம் என பல்வேறு முறைகளிலும் ஜாதகம் கணிக்கப்பட்டு பலன்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பல்வேறு அயனாம்ச முறைகளும் எபிமெரீஸ் போன்றவைகளைப் பயன்படுத்தியும் ஜாதகங்கள் துல்லியமாகக் கணிக்கப்பட்டு பலன்கள் கூறப்பட்டு வருகின்றன.

Astro Chart

பொதுவாக படித்தவர், பாமரர் என்றின்றி அனைவராலும் அணுகப்படும் கலையாக ஜோதிடக்கலை விளங்குகின்றது. சாதாரண மனிதர் முதல் நாட்டின் தலையாய மனிதர்கள் வரை அனைவருமே பெரும்பாலும் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். தங்கள் எதிர்காலம் பற்றி அறிவதற்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஜோதிடத்தைப் பார்த்து பலன் அறிந்து கொண்டு வருகின்றனர்.

நம் நாட்டில் பல்வேறு விதமான ஜோதிட முறைகள் பயன்பாட்டில் உள்ளன. ஒருவர் பிறக்கும் போது அமைந்த கிரகநிலைகளின்படி, அவருக்கு, அவர்தம் எதிர்கால வாழ்க்கையினைப் பற்றிய பலாபலன்களைக் கூறுவது பொதுவாக நடைமுறையில் உள்ள  ஜோதிட முறையாகும். மற்றும் கை ரேகை சோதிடம், எண் கணித சோதிடம், கிளி சோதிடம், பிரசன்ன சோதிடம், முகக்குறி பார்த்துப் பலன் சொல்லுதல், மூச்சு ஜோதிடம், பிரமிடு ஜோதிடம், கோடங்கி பார்த்தல் எனப் பல்வேறு முறைகள் புழக்கத்தில் உள்ளன.

ஜோதிடம் பற்றி கலைக்களஞ்சியம்

ஜோதிடம் பற்றி கலைக்களஞ்சியம் கூறுவது முக்கியமானது. அது, ஜோதிடம் என்பது வேதகால ஆரியர்களுக்கும் முற்பட்டகலை என்றும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்கால மக்கள் அதனை அறிந்து வைத்து இருந்தனர் என்றும், மிகவும் பழமையான கலை என்றும் அது குறிப்பிடுகின்றது.

மேலும் ‘சோதிடம் என்பது கிரகங்களின் நிலையை வைத்தும், நட்சத்திரங்களின் நிலையைக் கொண்டும் மானிட, உலக விவகாரங்களைப் பற்றி, முன்கூட்டியே அறிய முடியும் என்ற நம்பிகையை ஆதாரமாக உடையது’ எனக் கூறுகின்றது.

‘சங்கிதை போன்ற நூல்கள்  ஒரு தனி மனிதனுக்கு மட்டுமல்லாது, ஒரு நாட்டிற்கு, உலகிற்கு, அதன் கண் உள்ள மக்களுக்கு என அனைவருக்கும் பலன்கள் கூறும் தன்மை படைத்தனவாக உள்ளது என்றும் சான்றாகப் பராசரர் சங்கிதை, மத்திய சங்கிதை, கர்கர் சங்கிதை மற்றும் சாராவளி போன்ற நூல்களைக் குறிப்பிடலாம்’ என்றும் கலைக்களஞ்சியம் (தொகுதி ஐந்து, பக்: 260-263) குறிப்பிடுகின்றது.

மேற்கண்ட கருத்துக்கள் மூலம் ஜோதிடம் என்பது தொன்மையான ஒரு கலை என்றும், இந்தியா முழுக்க பயன்பாட்டில் இருந்த ஓர் பயிற்சி முறை ஆருடம் என்றும் நாம் அறிந்து கொள்ளலாம்.

(தொடரும்)

Advertisements

13 thoughts on “ஜோதிடம் உண்மையா, பொய்யா?

 1. ஜோதிடத்தின் வரலாறு பற்றிய செய்திகளை முழுவதுமாக தேடுங்கள் நானும் செய்திகளை தருகிறேன் நானும் ஓர் ஜோதிட ஆய்வாளன்

   1. உங்களைப் பற்றி நீங்கள் தான் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் யார், உங்களது இந்தப் பிறவியின் நோக்கம் என்ன, உங்களது பலம், பலவீனம், எப்படி வாழ்வது இது எல்லாவற்றிற்கும் ஆழ்நிலைத் தியானத்தில் விளக்கம் கிடைக்கும். ஆனால் தியானம் சொல்லித் தருகிறேன், சமாதி கொடுக்கிறேன் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றும் வெறும் ’மூச்சுப் பயிற்சி’ ஆசாமிகளிடம் ஏமாந்து விடாமல் எச்சரிக்கையாக இருங்கள்.

    தியானம் என்பது வேறெதுவுமல்ல. மனத்தை அதன் போக்கில் சுதந்திரமாக அலைய விட்டு பின் இழுத்துப் பிடித்து ஓரிடத்தில் நிலைக்க வைப்பதுதான். அவ்வாறு பழகிப் பழகி சிந்தனை, செயல், மனம் ஏதுமற்ற நிலையை அடைவதே சமாதி. சமாதி = சமம் + ஆதி. உங்களது ஆதி நிலைக்குச் செல்வதே சமாதி. இந்த தியான, சமாதி முறைகளுள் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இவற்றை தக்க (நல்ல, ஏமாற்றாத, பணத்தாசையற்ற) குருவினை நாடித் தெரிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் நீங்களே முயன்றும் உண்மையை அறியலாம்.

    தேவை திட நம்பிக்கையும், உள்ள உறுதியும் மட்டுமே!

    நன்றி

 2. தொடருக்கு வாழ்த்துக்கள்.,

  தொடருங்கள் நண்பரே, சோதிடக்கலையில் நம்பகத்தன்மையில் சந்தேகமே இல்லை,

  கணிப்பதில் எடுத்துக்கொள்ள வேண்டிய விதிகள் சில சோதிடரால் சரியாக பின்பற்றப்படாத போதுதான் சர்ச்சைக்கு உள்ளாகிறது.

  வாழ்த்துக்கள்

  1. ஆமாம். நண்பரே!

   ஜோதிடம் போன்ற தொழில்கள் சேவைத் தொழில்கள். ஆனால் இக்காலத்தில் பலரும் இதன் மூலம் பணம் பெயர், புகழ் சம்பாதிக்க நினைக்கின்றனர். பேராசையால் பரிகாரங்கள் அது, இது என்று சொல்லி ஏமாற்றுகின்றனர். மக்களும் ஏமாறுகின்றனர். போலி சோதிடர்களா இந்தக் கலைக்கே அவமானம்!

   போலி ஜோதிடர்களிடம் சென்று ஏமாறுவதை விட்டு விட்டு மக்கள் கடவுளை முற்றிலுமாகச் சரணடைந்து தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முயலலாம். இல்லாவிட்டால் மகான்கள், சித்தர்கள் ஆலயத்தை, ஜீவ சமாதிகளை தரிசனம் செய்து தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ளலாம்.

   ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள் இல்லையா?

 3. உங்கள் பதிவை பின்தொடர முடியாதா அப்படியானால் உங்களது ஒவ்வொரு பதிவையும் எனக்கு மினஞ்சல் செய்ய முடியுமா ? இரண்டு பதிவை இபோதுதான் படித்தேன். தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள்.

  san1988220@gmail.com

  sorry first comment is spelling mistake.

  1. கேசவன் சார். இதுதான் அந்த இணைய தள முகவரி.

   http://www.feedblitz.com/f/?Track

   இதில் என் தள முகவரியை (https://ramanans.wordpress.com/) பதிந்துக் கொண்டு விடுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து விடுங்கள். அப்புறம் என்ன…. இங்கு பதிவேற்றப்பட்டால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தகவலும், கட்டுரையும் வந்து விடும்.

   தங்கள் வருகைக்கு நன்றி!

 4. உங்கள் பின்தொடர முடியாதா அப்படியானால் உங்களது ஒவ்வொரு பதிவையும் எனக்கு மினஞ்சல் செய்ய முடியுமா ? இரண்டு பதிவை இபோதுதான் படித்தேன். தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள்.

  1. என்னைப் பின் தொடர்வது கடினம் ஆயினும் இய்லாத காரியமல்ல. அதற்கு ஏதோ ஒரு மின்னஞ்சல் தளம் உள்ளது. அதன் முகவரியில் என் தள முகவரியை நீங்கள் பதிந்து கொண்டு, உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து விட்டால், இங்கு பதிவுகள், பதிவேற்றம் செய்யப்படும்போது, உங்கள் முகவரிக்கு தகவல் மற்றும் லிங்க் வந்து விடும்.

   வோர்ட் பிரெஸ் ஜாவா ஸ்கிரிப்ட் நிரல்களை ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் தான் இந்தப் பிரச்சனை.

 5. தமிழும் சோதிடக்கலையும் பிரிக்க இயலாதது. ஏனெனில் இக்கலையை நமக்கு உருவாக்கியவர் குறுமுனி அகத்தியர்தாம். இவரேயாம் தமிழையும் உருவாக்கியதாக பதிவாகியுள்ளது. இச்சோதிடக்கலையைத்தான் நம்மவர்கள் வானவியலோடு ஒப்பிடுகிறார்கள். இதை நாம் அறிவியல் பூர்வமாகவும் நிருபிக்கலாம் என்பதை நான் இந்த இரண்டு கட்டுரைகள் மூலமாக பதிவு செய்திருக்கிறேன்.

  http://itsmytamil.blogspot.com/2009/11/jothidam-astronomy-ii.html
  http://itsmytamil.blogspot.com/2009/10/blog-post_3530.html

  1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. ஆனால் இன்றைய காலத்தில் ஜோதிடத்தின் பெயராலும், முனிவர்கள், சித்தர்களின் பெயராலும் ஏமாற்றுபவர்களே அதிகமாகி விட்டார்கள். இது மிகவும் வருத்தத்திற்குரியது. தெரிந்தே தவறு செய்வபர்களை நாம் என்ன செய்வது?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s