ஆவிகள் உலகம்

ஆவிகள் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலோருக்கு ஒருவித அச்சம் ஏற்படும். சிலர் அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை எனக் கூறுவர். ஆனால் இறந்த தங்கள் முன்னொர்களை குல தெய்வமாக வணங்குவர். இல்லாவிட்டால் இறந்தவர்களது நினைவு நாளில் சிலைகளுக்கு மாலையிட்டு, அவர்கள் நினைவாக அன்னதானங்கள் செய்து வணங்குவர். இதுவே ‘நீத்தார் கடன்’ என தமிழில் கூறப்படுகின்றது. கடவுள் இல்லை, ஆவிகள் இல்லை என்று கூறுபவர்கள், சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் உருவ வழிபாட்டை ஒத்ததே! வழிபாட்டின் அடிப்படையே நினைவைப் போற்றுதலும், நன்றி உணர்வுடன் இருத்தலுமே! இதையே பக்திமான்களும் செய்கின்றனர். நாத்திகர்களும் செய்து வருகின்றனர். ’ஆவிகள்’ என்பது பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

ஆவிகள்
மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.

ஆவிகள் உலகம்
கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.

அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான். இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும். பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது. ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.

ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பீடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.

நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர். இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்.

(தொடரும்)

105 thoughts on “ஆவிகள் உலகம்

  • Rabi S சொல்கிறார்:

   Anbulla ANNAVUVUKKU Vanakkam,

   Ennudaiya peiyar S.Rabi P.M.Anusuya(MYLOVER) she was died for accident avala nan pakkanum avakuda pesanum athu mudiyuma anusuya ponapiraghu ennudaiya life thalaikhizhagha maripochu dailyum nan vedhanapaduran and avalaudaiya parents vedhanai padurangha (myuncle and aunty) thirumbhavum nan sernthu vazhamudiyuma en anusuyakuda?…intha life verukkuran dailyum and ennudaiya dreams varathu pallikuthu ennudaiya anusuya death anathum ennudaiya dreamsla vanthathuthan ippadi ithuvaraikkum nan rendu pera parikoduthu iirrukkan innaiku nan niraiya vedhanaikala manasukklla vachikittu varuthapaduran intha vivarangal anaithaiyum nan ippo kannirodu ungalukku anuppuran enaku pathil tharunkal…i am waiting your reply mail…

   *S.RABI TTC,FHO & MD,DCA,BCA,Btech,MBA_MCA___

  • ramanans சொல்கிறார்:

   சகோதரி

   உங்கள் நிலை மன வருத்தம் தருகிறது. உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. தனியாகத் தான் இவ்வுலகிற்கு வந்தோம். தனியாகத் தான் இவ்வுலகிலிருந்து செல்லப் போகிறோம். ஆகவே படிப்படியாக மன உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். கடினம் தான். ஆனால் வேறு வழியில்லை. இதற்காக “தற்கொலை” முயற்சியில் இறங்க வேண்டாம். அது மீளா இருளில் ஆழ்த்தி விடும்.

   இப்போதைக்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களது கணவருக்காக பிரார்த்தனை செய்வதே!

   அவர் தன் உடலைத் தான் துறந்திருக்கிறார். ஆன்மாவை அல்ல.

   அது பரிபக்குவ நிலையை அடையவும், உயரவும் உங்கள் பிரார்த்தனை உதவும்.

   திக்கற்றோருக்கு தெய்வமே துணை!

   தெய்வத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்.

   மன உறுதியை இழக்காதீர்கள்!

   மனதைத் திருப்புவது மிக மிகக் கடினம் தான்.

   ஆன்மீகம், இசை, இலக்கியம், பொதுசேவை என போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். வயதான முதியவர்களுக்கு உதவுதல், ஆதரவற்ற குழந்தைகளை கவனித்தல் போன்ற சேவைகள் உங்கள் மனதைப் பக்குவப்படுத்த உதவும்.

   உங்களுக்காக ஸ்ரீ அன்னையிடம் பிரார்த்திக்கிறேன்.

   ஓம்.

    • ramanans சொல்கிறார்:

     சகோதரி

     அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தது அது. அதாவது விழிப்பு நிலையிலா அல்லது உறக்க நிலையிலா என்பதைப் பொறுத்தே அவரால் எதையும் உணர முடியும். உங்கள் பிரார்த்தனைகள் அவரை விழிப்பு நிலைக்குக் கொண்டு செல்ல உதவும். அவருக்காக இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள். உங்கள் மன உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே இப்போதைய தேவை. இறைவன் உங்களுக்கு சமாதானத்தை அருளட்டும். ஓம்.

 1. Naveen Kumar சொல்கிறார்:

  nan nireya avigal kathai padithurikiren adil sila kadaigal mudivil bremmai nu soliirukanga,adesamayam sila kathaigalil unmai enna solirukirargal. neengal eluthiya artical yallam padithen,nenngal aavi patri aaraichi pandreenga annal avigal unndu enbadu ungal karuthu allava.

  avigalai pathi ninaithal matum bayam varugiradu.nam pakkathi avigal irupadu pol therigirathu,pinthodarvadu pol terigiradu,kalli oru kal kutinalkuda thukivari podum allavuku bayam thali poduthu.

  1. idumathiriyan brammaiku enna karanam?
  2. pambai pathal konjam bayam than varum(adai kannal parthu irukirom) annal siruvadil irundu pati,thatha,pakathuvethukaranganu ellarum pegal pathi solumbathee namaku bayam varuthu(kannuku theriyath oru visayam) enn???
  3.avigalai araichi seyum manithargal enn kadavulai araichi seiyavillaii?

  sir,
  idellam karpanaiya illai unmaiya ungal vilakam ennaku thevai

  pls comment.
  thank u.

  • ramanans சொல்கிறார்:

   நண்பரே..

   நான் ஆவிகள் பற்றி ஆராய்ச்சி எல்லாம் செய்பவனல்ல. இதெல்லாம் இப்படி இப்படி இருக்கின்றன என்று எழுதுபபன். அத்தோடு என் வேலை முடிந்து விடுகிறது. எனக்கு மிகவும் விருப்பமானது ஆன்மீக ஞானமும் சித்தர், மகான்கள், ஞானிகளின் வாழ்வியலும் தான்.

   மற்றபடி நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு மிக விரிவாக பதில் எழுத வேண்டும். தற்போது சமயமில்லை. ஆகவே சுருக்கமாக..

   எல்லாவற்றிற்கும் காரணம் எண்ணங்களே! ஒருவர் இறந்து விட்டார் என்பதை அறியும் போது அல்லது பார்க்கும் போது அல்லது தெரிய வரும் போது அந்த எண்ணங்கள் மூளையில் பதிவாகின்றன. மீண்டும் அவரை உயிரோடு பார்க்க நேர்ந்தால் அது அதிர்ச்சியளிக்கிறது. காரணம் இறந்தவர் மீள முடியாது என்பதும் அப்படி நமக்கு சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களும். மூளை அதற்கு அதிர்ச்சியாக எதிர்வினை ஆற்றுகிறது.

   உதாரணமாக ஒருவர் இறந்து விட்டார் என்பதே நமக்குத் தெரியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுமா? ஏற்படாது. ஏனென்றால் உங்களைப் பொருத்தவரை/ உங்கள் மூளையைப் பொருத்தவரை அவர் உயிரோடுதான் இருக்கிறார். ஆகவே அதிர்ச்சி ஏற்படாது.

   ஆக, எல்லாவற்றிகும் நினைவுகளே, எண்ணங்களே காரணம்.

   விரிவாக பின்னர் பேசுவோம்.

   மேலும் கேள்விகளை வரவேற்கிறேன்.

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   • Naveen Kumar சொல்கிறார்:

    thank u so much sir,
    nan thangalai avigal araichi sebavar enru sonnadarku ennai mannikavum.

    neengal koorom karuthukalai nan etrukolgiren.
    neengal oru nabar iranda piragu varum nigalvugalai soneergal annal adu ninaivin angam endru soneergal .ennaku nadandha sambavathai nan ungalidam solgiren

    enn thatha(grand father) 30.12.2008 andru irandar anru iravu avarai adakam seidu vithu vetirku vandom en thandai mathum enthathavai vathirunda verandavil paduther arugil en thatha ninaivaga pair vaithu pakkathi oru tamblar tea vaithu paduthar veli kadavai konjam thirandu vaithuvitar .marunal kalail kanvilithu parthabothu tamblaril iruntha tea kanoom iruntha idathil iruntha badiye tamblar iruku keleyum oru sothu sindevillai.ore achaream.en thathathan vandu kudithirpar endru nangal ninairirom

    idarkum engal ninaivu than karanam thana illa unmai yaga irukuma ennaku puiyavillai sir…..
    thank you.

    • ramanans சொல்கிறார்:

     இதற்குக் காரணம் “எண்ணம்” தான் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆனால் அதுதான் உண்மை.

     உங்கள் தாத்தா ஆவியாக வந்து அந்த டீயைக் குடித்து விட்டார் என்ற உங்கள் எண்ணமே இதற்குக் காரணம்.

     சரி, அது சாத்தியமா?

     அதுவும் அப்போதுதான் உடலை விட்ட ஒருவர் அவ்வாறு இயங்க இயலும் என்றா நம்புகிறீர்கள்?

     அது முடியாத ஒன்று. இறந்தவர்கள் பெரும்பாலும் தான் இறந்ததையே அறியாத ஒரு வித குழப்ப நிலையிலேயோ அல்லது உறக்க நிலையிலேயே தான் சில நாட்கள் இருப்பர். விழிப்பு நிலையில் இறப்பவர் ஒரு சிலரே! அவர்களே கூட இம்மாதிரி வந்து செய்ய மாட்டார்கள். செய்யத் தேவையுமில்லை. செய்யவும் இயலாது.

     அப்படியானால் தாத்தாவின் நிலை என்னவாக இருக்கும்?

     அவர் விழிப்புற்ற ஆன்மா என்றால் மேல் நோக்கிய பயணத்தில் இருந்திருப்பார். உறக்கத்தில் உயிர் பிரிந்திருப்பின் அந்த நிலையிலேயே சிலகாலம் இருப்பார். அல்லது இரண்டும் கெட்டான் நிலை என்றால் தன் உடல் எங்கே, தான் தற்போது எங்கே, என்னவாக, என்ன நிலையில் இருக்கிறோம் என்ற குழப்பத்தில் இருப்பார்.

     சரி, அப்படியானால் ”டீ” மறைந்தது எப்படி என்கிறீர்களா?

     அது ஏதாவது சிறு மிருகங்களின் வேலையாக இருக்கலாம். அல்லது மனிதர்களுக்கும் மேம்பட்ட சூழலில் வாழும் வேறு வகை சூட்சும சக்திகளின் வேலையாகவும் இருக்கலாம். இதுதான் என்று திட்டவட்டமாக நம்மால் கூற இயலாது.

     ஆனால் உங்கள் தாத்தா வந்து டீயைக் குடித்து விட்டுச் சென்றிருப்பார் என்பதற்குச் சாத்தியமில்லை.

     ஆனால் சில காலத்திற்குப் பின் நீங்கள் வைக்கும் படையல்களை, கர்ம காரியங்களை அவர் ஏற்றிருந்திருக்கக் கூடும். அதுவும் சூட்சும ரீதியாக. உடலே இல்லாதவர்கள் எப்படி இயங்கக் கூடும் என்று நினைக்கிறீர்கள்? எண்ணங்களால் மட்டுமே சாத்தியம்.

     அதையே “எல்லாவற்றிற்கும் காரணம் எண்ணங்களே” என்றேன். சரிதானே!

     வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

 2. tamil சொல்கிறார்:

  Nanbarkalay vanakam.nan aviyai parthirukiran.athu nan malaysiyavill valai saithu kondiruntha naram, malai valaiyil oru othuku puramana aattrin oram, nindirunthan, yan vallai iddathuku pinnal appothu, (malayikarar) nanbar yan arukil vanthar ramu (thango atas hantu hantu ,yandrar)(athavathu avargal moziyil,paiiye irukirathu, satham podathay) yandru porul.mani sariyaga maalai 7:45 irukum ,(mana mana)athavathu yangay yandru kattane,mallay yandru vanathi ,kattinar parungal,apppapaa yavlo parusu sir,pariyya thala, pariyaa udampu, kaii parusaa, mallum vall parusa, athavathu kall matum ill, apppapaa ipaa ninaithalum sola varthai illai,athavathu nanbarkal yallam vikira mathithan kathail varum (vathaalam) parthirupirgal, ,athaythan sir ,parusa inguthan oru asscharyam, yanvandral,anatha paiye yankira vathalam, vanill ulavum magangalai, uruvam yaduthu, irunthathu,ithu kandipakaga pramai illai, unmaiya yan knyal kanda nijam,nanbargal nambamal kuda pokalam,annall aduthu nadanthai kalungal,yan nanbar arukil vanthu vanathil (hanthu)paiye irukirathu satham podathay, yandru sonnar,nannum athai athisayathudanum, payathudanum, parthu vitu shock aggie, nanbar satham podathay yandru soliyum, nann konjam payathudanay, malaysia mozhill, (mari mari marilla)nan sona oru sila vinadigalthan, thamatham ,antha sila mani thuligalil, thallai thaniyaga, kai thaniyaga,udambu thaniyaga, vall thaniyaga, pirinthu marainthu vitathu,… ithu unmai yan irandu kankalal parthan,.. nanbargaluku nandri mendum oru, suvarasiyamana… saithukuludan,, santhikiran…nandri

 3. tamil சொல்கிறார்:

  Nanbarkalay vanakam.nan aviyai parthirukiran.athu nan malaysiyavill valai saithu kondiruntha naram malai valaiyil oru othukupuramana aattrin oram nindirunthan yan vallai iddathuku pinnal appothu, malaikarar nanbar yan arukil vanthar ramu (thango atas hantu hantu ,yandrar)(athavathu avargal moziyil,paiiye irukirathu satham podathay) yandru porul.mani sariyaga maalai 7:45 irukum (mana mana)athavathu yangay yandru kattane,mallay yandru vanathi kattinar parungal,apppapaa yavlo parusu sir,pariyya thala pariyaa udampu kaii parusaa malum vall parusa athavathu kall matum ill, apppapaa ipaa ninaithalum sola varthai illai,athavathu nanbarkal yallam vikira mathithan kathail varum vathalam parthirupirgal ,athaythan sir parusa inguthan oru asscharyam, yanvandral,anatha paiye yankira vathalam vanill ulavum magangalai vaithu uruvam yaduthu irunthathu,ithu kandipakaga pramai illai unmaiya yan knyal kanda nijam,nanbargal nambamal kuda pokalam,annall aduthu nadanthai kalungal,yan nanbar arukil vanthu vanathil (hanthu)paiye irukirathu satham podathay yandru sonnar,nannum athai athisayathudanum payathudanum parthu vitu shock aggie nanbar satham podathay yandru soliyum nann konjam payathudanay malaysia mozhill (mari mari marilla)nan sona oru sila vinadigalthan thamatham ,antha sila mani thuligalil thallai thaniyaga kai thaniyaga udambu thaniyaga vall thaniyaga pirinthu marainthu vitathu ithu unmai yan ira kankalal parthan nanbargalu nandri mendum oru suvarasiyama saithukuludan santhikiran

 4. Nilam ZM சொல்கிறார்:

  ungalin aavi pattriya article sila thawarukalai kondullathu, enraalum aavikal enbathu unmaiye eppadi enraal, manitharkal, mirukangal poley aavikal enru oru uyirinam ulakil ullathu athanai muslimkal ‘jinkal’ enru alaippar, intha ‘jinkalum’ manitharkal polevey waalukinrana enraalum awattritku emathu kankalikku marainthu iruppathatkum, virumbiya uruvangal eduppathatkum mudiyum. naam innum ithu pattri pesalaam, any i wish u to develop your work…

 5. paulraj சொல்கிறார்:

  Dear sir,
  I’ve gone through your site. Its very interesting. I want to clarify some questions. Is jesus exist? if yes is there any article? I’m a christian, there are some mistakes in bible i asked to poster but his answer is not satisfying me. I believe god but i dont believe wheather jesus, krishna, alla, buddha, etc exist? please answer. Answer me in tamil format so that i can explain it to my family. They are arguing me whenever they’ve taken the bible. How we are born? is god created us? or a scientific accident?

 6. Arul சொல்கிறார்:

  Mr.R.P HARI அவர்களை தொடர்பு கொள்ளவும் ……….

  எனக்கு தெரிந்து S.Ve.Sekar M.L.A ,pepsi uma,T.M Soundarajan…… போன்ற பலர் பயனடைந்ததாக கூறியுள்ளதை புத்தகத்தில் படித்தேன்.வெளிநாடு வாழ் தமிழர்கள் வருவதையும் பார்த்துள்ளேன்,மேலும் Sun news,Jaya tv,vasanth,Big fm நிகழ்ச்சியிலும் பல கருத்துகளை கூறியுள்ளார்.

  Contact:- http://www.rphari.com/

  Astro- Occult Science Research Centre
  Address : No.10 & 5, Kasim Ali, 2nd Street
  Ice House, (Opp. Venkateswara Hostel)
  Triplicane, Chennai, Pin-600 005
  Tamilnadu, India.
  Phone : 91-44-2844 1970
  Email : rphari@rphari.com
  rphari2002@yahoo.co.in

  Holidays : 8, 17, 26 of every month. Prior appointment is a must for walk in customers. Time 11.00 am. to 6.00 pm.

  For remedies at least one time should contact in person

 7. கிங்மார்டின் சொல்கிறார்:

  எனக்கு யாராவது உதவி செய்ய முடியுமா??
  இறந்து போன என் தாத்தாவின் ஆவியுடன் நான் பேச வேண்டும் …
  இதற்கு உதவுங்கள் … ப்ளீஸ் …
  My E-mail ID : kingmartine@gmail.com

   • கிங்மார்டின் சொல்கிறார்:

    ராமணன் தோழரே…
    எனக்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. ஆனால், நான் என் தாத்தாவின் ஆவியுடன் நேரடியாக பேச வேண்டும். அதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?
    அல்லது தாங்களால் என் தாத்தாவின் ஆவியுடன் பேச இயலுமா?

    • ramanans சொல்கிறார்:

     நன்றி மார்டின். நான் இது பற்றிய செய்திகளைத் தேடித் திரட்டி எழுதும் ஒரு ஆய்வு மாணவன். அவ்வளவே!. எனக்கு ஆவிகளுடன் பேசுவதில் பயிற்சி கிடையாது, அவற்றிலெல்லாம் விருப்பமும் இல்லை. கடவுளோடு பேச முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, ஆவிகள் எல்லாம் எதற்கு?

     என்னால் பேச முடியாவிட்டாலும் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் போன்ற ஆய்வாளர்கள் மூலம் நீங்கள் உங்கள் தாத்தாவின் ஆவியுடன் பேசலாம். ஆனால் என்னால் அதற்கு முழு உத்திரவாதம் அளிக்க முடியாது.

     உங்கள் தாத்தாவை மானசீகமாக, உள்ளன்போடு நீங்கள் பிரார்த்தனை செய்தால் அவரோ (ஒருவேளை அவர் மேல்நிலைக்குச் சென்றிருந்தாலோ அல்லது மறுபிறவி எடுத்திருந்தாலோ) மற்றவரோ உங்கள் கேள்விகளுக்கு கனவின் மூலமோ அல்லது எண்ணக்கடத்தல் மூலமோ பதில் அளிப்பர். முயற்சிக்கவும். உள்ளன்போடு கூடிய உண்மையான பிரார்த்தனைதான் தேவை.

     தங்கள் வருகைக்கு நன்றி.

     • கிங்மார்டின் சொல்கிறார்:

      தங்கள் பதிலுக்கு நன்றி தோழரே!
      ஆனால், நான் நாத்திகவாதி. அது மட்டுமில்லாமல் நான் மிகவும் சிறியவன்.
      இதுதான் எனக்கு ஒரு இடையூராக உள்ளது.
      நீங்கள் “Ouija Board” பற்றி அறிந்தது உண்டா? அதன் மூலம் பேசுவது எளிது என்று நான் அறிந்தேன். ஆனால், எனக்கு அதனை பயன்படுத்தும் முறை தெரியவில்லை.
      தங்களுக்கு தெரிந்தால், தெரிவிக்கவும். மேலும், நான் உங்களை அதிகமாக தொந்தரவு செய்திருந்தால், இந்த அடியனை மன்னிக்கவும்.

      • ramanans சொல்கிறார்:

       நல்லது நண்பரே!

       நாத்திகமும் ஆன்மீகத்தில் ஒரு பகுதிதான். அது ‘இல்லை இல்லை’ என்று எதையும் மறுத்து இறுதியில் பிரம்மத்தை உணரும் பாதை. ஆன்மீகம் ’உண்டு உண்டு’ என்று சொல்லி எல்லாவற்றையும் உணர்ந்து பிரம்மத்தை அடைவது. பாதைதான் வேறு. போய்ச் சேரும் இடம் ஒன்றுதான். ஆனால் போய்ச் சேர்ந்த பின்னர்தான் உணர முடியும்.

       சிறியவர், பெரியவர் என்பதெல்லாம் உடலுக்கும் அதன் வளர்ச்சிக்கும் தான். ஆன்மாவுக்கு இல்லை. பக்குவப்பட்டது, பக்குவப்படாதது – தன்னை முழுமையாக உணர்ந்தது, உணராதது என்ற இரண்டே வேறுபாடுகள்தான் ஆன்மாவிற்கு.

       ஒயிஜா போர்டு பற்றி நான் அறிவேன். என்னுடைய 15 வயதில் அதில் பேச முயன்றிருக்கிறேன். ஆனால் அதுதான் முதலும் கடைசியும். எனக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை. நமது எண்ணங்கள் அந்தக் கை நகர்த்தலில் வெளிப்படுகிறது என்றே நான் நம்புகிறேன். ஆனால் ஆவிகளுடன் உண்மையான பிரார்த்தனை முறையில் மானசீகமாக (எண்ண அலைகள் பரிமாற்ற முறை) உரையாட முடியும். ஆனால் அது எல்லோருக்கும் நன்மையைத் தராது. சிலருக்கு தேவையற்ற பிரச்சினைகளையும், ஆபத்துக்களையும் கூட உண்டாக்கலாம்.

       ஸ்ரீ அன்னை, பகவான் அரவிந்தர் போன்றவர்கள் அது பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள். அது தேவையற்றது என்பதே அவர்களது கருத்து. ஆவியுலகவாசிகளின் ஆன்மப் பயணத்தில் யாரும் குறுக்கிட வேண்டியதில்லை என்பதெ என் கருத்து. நமக்குத் தேவையானால், தேவையானவற்றை அவர்கள் தங்களது சக்திக்கு, பிரார்த்தனைக்கு உட்பட்டு நமக்குச் செய்வார்கள். வழி நடத்துவார்கள். நம்ப வேண்டியது எல்லாவற்றிற்கும் மேலான் இறைவன் ஒருவரையே!

       மண்ணுலகில் சுயநலம் ஏதும் இன்றி பிறர் நலனுக்காகவே வாழ்ந்த அவதார புருடர்கள், பிரம்ம ஞானிகள்,மகான்கள், யோகிகள், சித்தர்கள் இறை தூதர்களும் நம் வணக்கத்திற்குரியவர்கள். வழிகாட்டக் கூடியவர்கள்.

       தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

        • ramanans சொல்கிறார்:

         தோழரே,

         மனிதன் பூமியில் வாழும் எந்த மனோ நிலையில் (கோபாம், பாசம், காதல், காம, வெறுப்பு, க்ரோதம், பழிவாங்கும் உறன்ர்வு, இன்னபிற) இருக்கிறானோ அதே மனநிலை பலருக்கு இறந்த பின்னும் தொடரும். அவர்கள் அந்த நிலையிலிருந்து உயர வாய்ப்புகள் இருந்தும், இருள் பகுதியில் வசிப்பவர்கள் (அதுவே நரகம் அல்லது பாவலோகம் என அழைக்கப்படுகிறது) அந்நிலை மாற்றத்தை உணராமல் அதே பாவ எண்ணங்களுடனேயே இருப்பர். அவர்கள் மறுபிறவி எடுத்து தங்கள் வாசனைகளை ( எண்ணங்களை) போக்கிக் கொள்ளும் வரை அந்த இருள் வாழ்க்கை தொடர்கிறது. அவ்வுலகில் இருப்பவர் தங்களது தீய எண்ணங்களை ஏதாவது ஒரு முறையில் நிறைவேற்றிக் கொள்ள நினைப்பர். நீங்கள் அருள் உலக ஆவிகளைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது இந்த இருள் உலக ஆவிகள் குறுக்கே புகுந்து குழப்பலாம். எண்ணக் கடத்தல்கள் மூலம் பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சிலருக்கு மனோ நிலை குழம்புதல் கூட நடக்கும். மனோ உறுதி குலைந்தவர் உடலில் ஆவிகளின் எண்ணங்கள், தாக்கங்கள் ஊடுருவுவதும் உண்டு. அதன் மூலம் அவர்கள் அன்றாட நடவடிக்கைகளே மாறி விடும். அதனால் தேவையற்ற பல சிக்கல்கள் உருவாகும். ஆகவே தான் மனித வாழ்க்கையில் இம்மாதிரியான விஷயங்கள் – ஜஸ்ட் தெரிந்து கொள்ளலாம் – ஆனால் பின்பற்றத் தக்கதல்ல என்று ஞானிகள் கூறுகின்றனர். உலகெங்கும் பல ஆய்வாளர்கள் இது பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர். இன்னமும் ஆராய்ச்சி செய்கின்றனர். ஆகவே ஆவியுலகுடன் நீங்களாகத் தொடர்பு கொள்ளுதல் தேவையற்றது. இறைவனை நம்பி உளமார, நம்பிக்கையோடு வழிவேண்டினாலே போதும். அவன் நல் வழி காட்டிடுவான். நன்றி!

         • கிங்மார்டின் சொல்கிறார்:

          தங்கள் பதிலுக்கு நன்றி தோழரே,

          இருந்த போதிலும் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. அதனை தெளிவுப்படுத்திக் கொள்ளவே, நான் என் தாத்தா அல்லது வேறு ஏதாவது நல்ல ஆத்மாவுடன் பேச நினைக்கிறேன்…

          உங்களுக்கு ஏதேனும் எளிய,எந்த ஒரு ஆபத்தும் இல்லா வழி தெரிந்தால் தயவுசெய்து kingmartine@gmail.com க்கு தெரிவிக்கவும்…

          நன்றி…!!!

          • ramanans சொல்கிறார்:

           எனக்குத் தெரியாது ஐயா. எனக்கு அவ்வாறு பேச வாய்ப்புக் கொடுத்த போதும் நான் மறுத்து விட்டேன். எனக்கு அதில் உண்மையாகவே ஆர்வம் இல்லை. நமக்கு உண்மையிலே தெரிய வேண்டுவதை, இறையருள் கண்டிப்பாகத் தெரிவிக்கும். தெரிவிக்கக் கூடாததை, நாம் என்னதான் முயற்சித்தாலும் அறிய முடியாது. இது இயற்கை, விஞ்ஞானம், பகுத்தறிவு என எல்லாவற்றிற்குமே பொருந்தும். நன்றி!

 8. Giri சொல்கிறார்:

  Aiyya, Thangalathu Karuththu Aanaithum Arumai, Thalai Vanangu kiren, thayavu seiythu Thudaravum….. Please Continue…. Please Continue…. Please Continue…

  Vegu Natkalaga En Manathil Oru Porattam Athu Eanna Venral , Nan Yaar ?,
  Ethu than , En Peyar Giri, Nan oru Manitha Piravi, Ethu Ellam Eannakkum Theriyum, Aanal Nan intha piravi eduththa karanam theriya villai, ithu patri thankalukku therintha Aanmeega karthukkal Erunthal veliyidavum,

 9. சுதாகர் சொல்கிறார்:

  ஆவிகள் இருக்கின்றன ஆனால் மரித்தவர்கள் அல்ல
  நீங்கள் சொல்கின்றபடி ஆசைதீராமல் இந்த உலகத்தில் சுற்றி திரிகின்ற
  ஆவிகள் ஒரு ஆவி நினைத்தால் கூட மொத்த மனிதர்களையும் அழித்துவிடலாமே
  என்னை பொறுத்தவரை பயப்படாதவர்களை ஆவியால் ஒன்றும் செய்ய முடியாது ஆனால்
  பயப்படுகின்ற மனிதர்களை ஆவிகள் நிச்சயம் தாக்கி அவர்களின் வாழ்கையை அளித்து விடும்
  நாம் என்ன சொல்வோம் இல்லை இந்த உலகத்தில் பயபடுகின்றவர்கள் அதிகமாய் இல்லை என்று சொல்வோமா 100 /95 சதவிதம் பயப்படுகின்றவர்கல்தான் இந்த உலகத்தில் அதிகம் உண்டு நீங்கள் கூறுவது போல இந்த உலக வாழ்கையை விட ஆவி வாழ்கைதான் அதிக சந்தோசமாய் இருக்கும்
  ஏனென்றால் நினைத்ததை எதுவாய் இருந்தாலும் சாதிக்கலாமே
  என்னுடைய கருத்து என்னவெனில் மரித்தவர்கள் உலகத்தில் திரும்பவும் வர முடியாது கடவிளின் அனுமதி இல்லாமல், மனிதன் செய்த நன்மைக்கு அல்லது தீமைக்கு அவனுக்கு கூலி வழங்கப்படும்
  இப்படி மரிக்கிறவர்கள் இடத்தைதான் சாத்தான் பிடித்து கொள்கின்றான் ஏனென்றால் அவனுடைய வேலையே மனிதனை அழிப்பது தான் கடவுளுக்கு எதிரி என்றால் கடவுள் பிள்ளைகள் அவனுக்கு யார்
  தொடரும் ……………………………

  • ramanans சொல்கிறார்:

   //ஒரு ஆவி நினைத்தால் கூட மொத்த மனிதர்களையும் அழித்துவிடலாமே//

   ஆவிகளுக்கு அந்த அளவிற்கு எந்தச் சக்திகளும் கிடையாது. அவற்றுக்கு உருவமும் கிடையாது. மனித மனத்தில் சிறு சிறு தாக்கங்களை, பாதிப்புகளை ஏற்படுத்த முடியலாம். அவ்வளவுதான்.

   //பயப்படுகின்ற மனிதர்களை ஆவிகள் நிச்சயம் தாக்கி அவர்களின் வாழ்கையை அழித்து விடும்//

   இது எல்லோருக்கும் பொருந்தாது. சில கோழைகள், பயந்தாங் கொள்ளிகள் விதிப்படி சில சமயம் பாதிக்கப்படலாம். அழிக்க எல்லாம் ஆவிகளால் முடியாது. அவற்றிற்கு அப்படிப்பட்ட ஆற்றல்கள் ஏதும் இல்லை.

   நீங்கள் கூறுவது போல இந்த உலக வாழ்கையை விட ஆவி வாழ்கைதான் அதிக சந்தோசமாய் இருக்கும். ஏனென்றால் நினைத்ததை எதுவாய் இருந்தாலும் சாதிக்கலாமே?

   யார் சொன்னது? எதை நினைப்பது, எதைச் சாதிப்பது? புலனின்பத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கு பஞ்சபூதங்களால் ஆன உடல் என்ற அமைப்பு தேவை. அவை ஆவிகளுக்கு இல்லை. ஆனால் ஞான வாழ்க்கையை விரும்பும் மேம்பட்ட ஆவிகளுக்கு ‘ஆவிகள் உலகம்’ அமைதியையும், சந்தோஷத்தையும் தரும். மற்ற சாதாரண ஆவிகளுக்கு அல்ல. அவற்றிற்கு அவை ஒரு ரெஸ்ட் ப்ளேஸ் மாதிரி தான்.

   //என்னவெனில் மரித்தவர்கள் உலகத்தில் திரும்பவும் வர முடியாது கடவிளின் அனுமதி இல்லாமல்.,..//

   உண்மை. நல்லது, கெட்டது எல்லாமே அவ்ன் ஆணைப்படியே நடக்கின்றன. அவனன்றி ஓரணுவும் அசையாது. எல்லாமே அவன் சித்தம் தான்.

   // மனிதன் செய்த நன்மைக்கு அல்லது தீமைக்கு அவனுக்கு கூலி வழங்கப்படும்.//

   ஆமாம்.

   //இப்படி மரிக்கிறவர்கள் இடத்தைதான் சாத்தான் பிடித்து கொள்கின்றான். ஏனென்றால் அவனுடைய வேலையே மனிதனை அழிப்பது தான். கடவுளுக்கு எதிரி என்றால் கடவுள் பிள்ளைகள் அவனுக்கு யார்?//

   கிறித்துவம் கூறும் கருத்துக்கள் இவை. இஸ்லாத்தும் இது பற்றிக் கூறுகிறது. ஆனால் இந்துமதம் இது போன்ற விஷயங்களை இன்னமும் ஆழமாக, தெளிவாக, விளக்கமாகச் சுட்டுகிறது.

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

 10. சுதாகர் சொல்கிறார்:

  பூமியில் அனுபவிக்க வேண்டிய இச்சைகள் தீராமல், மறுபிறப்பும் எடுக்க முடியாமல் அவதிப்படும் என்று கூருகீர்கள் சரி
  பத்து வயது குழந்தைகள் மற்றும் குழந்தைகள் மரிக்கும் போது அவர்களும் அப்படிதான் பூமியில் திரிவார்களா அவர்களும் இந்த பூமியில் ஒன்றையும் அனுபவிக்க வில்லையே …………..

 11. சுதாகர் சொல்கிறார்:

  நீங்கள் சொல்கிறபடி மனிதர்கள் பூமியில்ஒன்றையும்அனுபவிக்காத
  காரணத்தினால் பூமியில் பேய்களாக சுற்றி திரிகிறார்கள்
  என்று கூறுகிறீர்கள் சரி குழந்தைகள் மற்றும் பத்து வயது குழந்தைகள் இவர்கள் மரித்தாலும் இப்படிதான் சுற்றி திரிவார்களா
  ஏனென்றால் அவர்களும் ஒன்றையும் அனுபவிக்க வில்லையே……………..

 12. சுதாகர் சொல்கிறார்:

  ஆவிகள் இருக்கின்றன அது உண்மை ஆனால்
  மரித்தவர்கள் அல்ல இந்த உலகம் தோன்றும் முன் இரண்டு ஆவிகள் தான் இருந்தன ஒன்று நல்லவைகளை செயும்
  நல்ல ஆவி( கடவுள்) இன்னொன்று கட்டத்தை
  செயும் கட்ட ஆவி
  அதனால் தான் இந்த உலகில்
  நன்மை – தீமை
  கடவுள் – பிசாசு
  உண்மை உள்ளவன் – உண்மை இல்லாதவன்
  ஒரிஜினல் – டுப்ளிகட் என்று இருக்கிறது
  மனிதன் மரித்த பின் செய்த நன்மைக்காக சொர்கத்துக்கு போகிறான்
  மனிதன் செய்த தீமைக்க நரகத்துக்கு போகிறான் அவளவுதான்…… மனிதன் பிசாசாக வர முடியாது என்பது என் கருத்து …….

  • ramanans சொல்கிறார்:

   தங்கள் கருத்திற்கு நன்றி. இறந்தும் ஆசைகள் அடங்காமல், பூமியில் அனுபவிக்க வேண்டிய இச்சைகள் தீராமல், மறுபிறப்பும் எடுக்க முடியாமல் அவதிப்படும் ஆன்மாக்கள், குறிப்பிட்ட காலம் வரை ஆவிகளாய் அலையும். அவற்றின் பரிபக்குவம், அனுபவம், ஆன்ம வேட்கைக்கேற்ப அவை நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கும் என்பது சில நூல்களில் காணப்படும் கருத்தாகும். நன்றி.

 13. பூத‌ம்.இன் சொல்கிறார்:

  ச‌ரிங்க‌.. நீங்க‌ சொல்ற‌து போல‌ ஆவிக‌ள் இருந்தால், இற‌ந்த‌ உயிர்க‌ள் அனைத்தும் ஆவிக‌ள் ஆக‌ மாறும். அப்ப‌டியானால் , நாம் தின‌மும் கொல்லும் கொசு, கோழி, ஆடு, மாடு ‍ இவ‌ற்றின் ஆவிக‌ள் ஏன் வ‌ருவ‌தில்லை? ஒரும‌னித‌னுக்கு, கொசு ஆவி பிடித்து விட்ட‌து அல்ல‌து கோழி ஆவி பிடித்துவிட்ட‌து என்று யாருமே சொல்வ‌தில்லையே. ஏன்.? இந்த‌ கொசுக்க‌ள் த‌ங்க‌ள் முன்னோர்க‌ளுக்கு ஐய‌ர் கொசுவை வைத்து அஞ்ச‌லி செலுத்துகிற‌தா? க‌ம்ப்யூட்ட‌ர‌ க‌ண்டுபிடிச்ச‌வ‌ன் அதை மெஷினாதான் பாக்குறான், ஆனா ஆவிய‌ ந‌ம்முற‌வ‌ங்க‌ ,க‌ம்ப்யூட்ட‌ருக்கு பூ, பொட்டு வ‌ச்சி கும்புடுறாங்க‌.. ஆவின்னா அது இட்லி சுடும்போது வ‌ற்ற‌துதான். ம‌ற்ற‌தெல்லாம் வேஸ்ட்..

  • ramanans சொல்கிறார்:

   தங்களின் மேலான கருத்துக்கு நன்றி பூதம். உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு இது போன்ற ஆவி விஷயங்களிலெல்லாம் எந்த ஆர்வமும் இல்லை. இப்படியெல்லாம் உலகில் நம்பிக்கை நிலவுகிறது, ஆராய்ச்சிகள் நடக்கின்றன என்பதைத் தான் நான் கூற விரும்புகிறேன். நம்புவதும், நம்பாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் மற்றும அனுபவம். நம்புவதால் யாதொரு லாபமும் இல்லை. நம்பாததால் எவ்வித நட்டமும் இல்லை. இதெல்லாம் உலகியல் நடப்புகள். அவ்வளவுதான். இதற்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து நாம் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நமக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன.

   இங்கு நான் ஆவி பற்றிய கட்டுரைகளைக் கொடுத்திருப்பதால் நான் ஆவிகள் ஆர்வலனோ, ஆவியுலக ஆராய்ச்சியாளனோ அல்லது அப்படிப்படவர்களை ஆதரிப்பவனோ நலம் விரும்புபவனோ அல்ல. நான் ஒரு கட்டுரையாளன் அவ்வளவே! நான் அறிந்த, தெரிந்த செய்திகளை, எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை, நான் சந்தித்த மனிதர்களை, விஷயங்களை இதில் பதிவு செய்கிறேன் அவ்வளவே! இது சிலருக்கு ஏற்க முடிவதாக இருக்கலாம். ஏற்க முடியாததாகவும் இருக்கலாம்.

   அதே சமயம் நான் ஒரு ஆன்மீக ஆர்வலன், என்பதையும் அந்த ஆன்மா என்பதன் உண்மையைத் தேடிக் கொண்டிருப்பவன் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். அந்த உண்மையைத் தேடி நாம் செல்லும் பாதையில் எவ்வளவோ நம்ப முடியாத விஷயங்கள் இருக்கும். அவ்வற்றை எல்லாம் கடந்துதான் உண்மையை அடைய முடியும். அவற்றிலேயே தங்கி விவாதம் செய்து கொண்டிருந்தால் அங்கேயே தேங்கிப் போய் நின்று விட வேண்டியதுதான்.

   பரிணாமம் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்கும் உண்டு.

   புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,
   பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,
   கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
   வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,
   செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,
   எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
   — மாணிக்க வாசகர், திருவாசகம்

   கடவுளை நம்பாதவன் நாத்திகன் அல்ல;
   தன்னையே நம்பாதவன் தான் நாத்திகன்
   – சுவாமி விவேகானந்தர்.

   நான் என்னையும் நம்புகிறேன். இயற்கையான, எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்தியையும் நம்புகிறேன்.

  • ramanans சொல்கிறார்:

   ஆம். அப்படித்தான் சொல்கிறார்கள், அந்தத் துறையில் ஆய்வு செய்பவர்கள். ஆனால் என்னைப் பொருத்தவரையில் இதில் நம்பிக்கையில்லை என்பதை விட ஆர்வமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நம் மனம் மிகவும் வலிமை மிக்கது. அதுவே கூட ஆவிகள் கூறுவதாக சில எண்ணங்களை நமக்குள் தோன்றச் செய்யலாம்.

   நான் ஆவிகளைப் பார்த்ததில்லை. ஆனால் பார்த்ததாகக் கூறியவர்களைச் சந்தித்திருக்கிறேன். நான் சிறுவயதில் கிராமத்தில் வசித்த போது, திடீரென்று மாரடைப்பால் காலமான எதிர் வீட்டுப் பெரியவர் (55 வயது) வெகு நாட்கள் கழித்துப் பிறந்த பாசமான தன் மகனின் உடலில் (8 வயதுச் சிறுவன்) புகுந்து பேசியதைக் கேட்டு வெல வெலத்திருக்கிறேன். (அவன் மிமிக்ரி செய்யக் கொஞ்சம் கூட வாய்ப்பில்லை. அதற்கான காரணங்களும், சூழலும் இல்லவே இல்லை).

   ஆகவே, ஆவிகள் இருக்க வாய்ப்புண்டு என்றுதான் நான் நம்புகிறேன். ஆனாலும் அனுபவமே உண்மையான ஆசான்.

 14. பரசுராம் சொல்கிறார்:

  ஆவி உலகம் பற்றி தாங்கள் கூறிய கூற்றுக்கள் மிகவும் நன்றாக இருந்தது…. ஆவிகளை பற்றியும் மறு பிறவி குறித்தும் அறிவதற்கு ஏற்ற தமிழ் புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள் …

 15. நம்பி சொல்கிறார்:

  ஆவிகள் பற்றி நல்லதுதான் தலைவர்கள் சிலைகளுக்கு மாலையணிவிப்பது இதோடு ஒப்பிடுவது இதெல்லாம் ஒத்துக்கொள்ளமுடியாது அது அவர்கள் இதுமாதிரி அர்த்தம் எடுத்து கொள்வீர்கள் என்று தெரிவித்தால் வேறோரு முறையை கையாள்வார்கள். அப்பொழுதும் இதுவும் அதுமாதிரிதான் என்று சொல்லிக்கொண்டே போகவேண்டியது தான். இறப்பிற்கு பிறகு தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அதை உயிருடன் இருக்கும் பொழுது தெரிந்து கொள்ளமுடியாது, அனுபவிக்கவும் முடியாது. இதைத்தான் பகுத்தறிவுவாதிகள் (நாத்திகர்கள்) குறிப்பிடுவது. நான் ஆவியானவுடன் என் உடலை நான் பார்க்கமுடியும். அதுதான் உண்மை. அதுவரை நான் அனுபவித்ததாக கூறினாலும் பொய்தான். (எல்லாவற்றிற்கும் சாட்சி தேவை உயிர் உலகத்தில்)

 16. ரமணன் சொல்கிறார்:

  அன்பின் ஆவிச்சாமி,

  ’ஆவிகள் உலகம்’ என்பது கற்பனை என்போருக்கு கற்பனை. உண்மை என்போருக்கு உண்மை. நான் எதையும் ஆதரிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆகவே, இப் பதிவை நீக்க வேண்டிய அவசியமும் இல்லை. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

 17. ஆவிச்சாமி சொல்கிறார்:

  அய்யா,

  ஆவியாவது ஒன்றாவது எல்லாம் கற்பனை அய்யா, உளறல். எமக்குத் தெரிந்தது பரிசுத்த ஆவி ஒன்று தான். அதையும் யாம் கண் கொண்டு பார்த்ததில்லை. இந்தக் கட்டுரை ஒரு அபத்தம். நல்ல கட்டுரைகளின் ஊடே திருஷ்டிப் பரிகாரம் போல். உடனடியாக பதிவை நீக்கி விடுங்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s