சவால் : எழுத்து - என்ற இடுகைக்கு வந்த பின்னூட்டங்களையும், மின்னஞ்சல்களையும் கண்டு திகைத்துப் போய் விட்டேன். எத்தனை மறுமொழிகள், எத்தனை மின்னஞ்சல்கள். பலர் மிகச் சரியாகக் கணித்திருந்தனர். சிலர் கூகிள் மூலம் முயற்சி செய்து விடைகளைக் கண்டறிந்ததாகக் கூறியிருந்தனர். சிலர் குத்து மதிப்பாக எழுத்தாளர்களைக் கணித்து எழுதியிருந்தனர். எப்படியோ இப்பதிவை ஊக்குவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. இது மேலும் மேலும் என்னை எழுதத் தூண்டுகிறது….
- இப்படியெல்லாம் ’பம்மாத்து’ பண்ணி ஜல்லியடிக்க ஆசைதான். ஆனால் என்ன செய்வது? வந்தது ஒரே ஒரு பின்னூட்டம்தான். கணேஷ் என்பவர் எழுதியிருந்தார். அவர் கீழ்கண்டவாறு வரிசைப் படுத்தியிருந்தார். தான் நிச்சயம் ”புத்தகப் புழு”வாகவோ “புத்தகப் பூச்சியாகவோ” இருப்பேன் என்று அவர் அதில் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
1. சா. கந்தசாமி
2. சுஜாதா
3. வண்ணதாசன்
4. பூமணி
5. சுபா
6. ராஜேஷ்குமார்
7. சுஜாதா
8. ஜெயமோகன்
9. சாருநிவேதிதா
10. பாலகுமாரன்
கணேஷ் சரியான விடையை கீழே தந்திருக்கிறேன்.
1. மேலாண்மை பொன்னுச்சாமி
2. சா.கந்தசாமி
3. சுந்தரராமசாமி
4. பூமணி
5. சாருநிவேதிதா
6. ராஜேஷ்குமார்
7. சுஜாதா
8. ஜெயமோகன்
9. யுவன் சந்திரசேகர்
10. பாலகுமாரன்
நீங்கள் புழுவா, பூச்சியா அல்லது வேறு ஏதேனும் ஒன்றா என்பதைப் படித்துப் பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
தோழமையுடன்
பாலா Ar.