பண்டைய புராணக் கதைகளிலும் மற்றும் பல நாட்டுச் சிறுகதைகளிலும் தேவதைகள் வந்து மனிதர்களுக்கு உதவி செய்வதாய்க் கேள்விப்பட்டிருக்கிறோம். தேவதைகள் என்பவை உண்மையிலேயே உள்ளவைதானா அல்லது மனிதர்களின் ஆசைகளினால் எழுந்த கற்பனையா?
பண்டைய கிரேக்க, ரோமானிய புராணங்களில் மட்டுமல்ல கிறித்துவ மற்றும் இஸ்லாமிய நூல்களிலும் கூட தேவதைகள் பற்றி, தேவ தூதர்கள் பற்றி, ஜின்கள், மலக்குகள் பற்றியெல்லாம் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. நமது இந்து மதத்தில் காற்று, நீர், நெருப்பு, ஆகாயம், மண் என ஒவ்வொன்றிற்கும் ஒரு கடவுள்கள் இருப்பது போல ரோமானியர்களும், கிரேக்கர்களும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தேவதைகளைக் குறியீடாக வைத்துள்ளனர். காதலுக்கு வீனஸ், போருக்கு மார்ஸ் என்று இப்படிப் பல தேவதைகள் உள்ளனர்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கை அவனது எண்ணங்களாலேயே அமைகிறது. அதே சமயம் சுற்றுப்புறச் சூழல்களும் அவனைப் பாதிக்கிறது. அதற்கேற்ப அவனது எண்ணங்களின் மாற்றம் ஏற்பட, அதன் படி அவன் வாழ்க்கை உயர்வையோ, தாழ்வையோ அடைகின்றன. அந்த எண்ணங்களை பாதிப்பை ஏற்படுத்தும் வேலைகளைச் செய்பனவே தேவதைகள். சூட்சும உடல் கொண்ட இந்தத் தேவதைகள் மனிதனின் எண்ணங்களீல் அவனறியாமலே தூண்டி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
இயேசு பிறக்கும் முன் தேவதைகள் தோன்றி அவரது பிறப்பை முன் அறிவித்திருக்கின்றன. அதுபோல நபிகள் நாயகத்திற்கும் தேவதூதர்கள் தோன்றி காட்சி அளித்திருக்கின்றனர். பெண் தன்மை கொண்டவர்கள் தேவதைகள் என்றும், ஆண் தன்மை கொண்டவர்கள் தேவதூதர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்து மதத்தை விட, உலகின் பிற மதங்களில் தேவதைகளைப் பற்றிய நம்பிக்கைகள் அதிகம். தேவதைகளுக்கு இறக்கைகள் உண்டு என்றும், இல்லை என்றும் இருவேறு நம்பிக்கைகள் அவர்களிடம் நிலவி வருகின்றன. தமிழ்நாட்டிலும் சிறு தெய்வங்களை குல தேவதைகளாக வழிபடும் வழக்கம் உள்ளது.
சில இடங்களுக்கு தேவதைகள் வந்து போவதை சக்தி வாய்ந்த புகைப்படக் கருவிகள் மூலம் வெளிநாட்டினர் படம் பிடித்துள்ளனர். அவற்றிலிருந்து சிலவற்றைக் கீழே பார்ப்போம்.
” வரம் கொடுக்கும் தேவதைகள்
வந்த போது தூங்கினேன்
வந்தபோது தூங்கி விட்டு
வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன் ”
- இது கவிஞர் முகமது. மேத்தா அவர்களின் கவிதை வரிகள்.
நாம் தேவதைகளின் வரவிற்காக எப்போதும் என்றும் விழிப்பாக இருப்போமாக.





