“I have a sweet little Mother
Who lives in my heart
We are so happy together
We shall never depart.”
– The Mother
1973 ஆம் ஆண்டு. நவம்பர் மாதம் பதினேழாம் தேதி. நேரம் இரவு 7.25க்கு ஸ்ரீ அன்னை மகா சமாதி அடைந்தார். அவர் மறைந்து இன்றோடு 36 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன. ஸ்ரீ அன்னையை இந்நாளில் நினைவு கூர்வோம்.

ஸ்ரீ அன்னை
அகில உலகுக்கும் தாயாகப் போற்றப்படும் ஸ்ரீ அன்னையின் அறிவுரைகள் இங்கே…
‘நமக்கு ஒன்றுமே தெரியாது’ என நாம் உணர்வதே, ஞானத்தை அடைவதற்கான முதல் படி.
முழு தன்னம்பிக்கையுடனும் உண்மையான நேர்மையுடனும் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் நல்ல பலனுண்டு.
கடவுள் நீ விரும்புவதையெல்லாம் உனக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உனக்குத் தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்.
இறைவனிடம், ‘நமக்கு அது வேண்டும், இது வேண்டும்’ என்று வேண்டுவதை விட, நமக்குத் தேவையானது எதுவோ, அதை, அவனே தருமாறு ஒப்படைப்பது சிறந்தது.
‘பக்தி’ என்பது தனக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வது அல்ல. இறைவனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதே உண்மையான பக்தி.
சிறிய காரியங்களில் வெற்றியடைவதை விட, மகத்தான பெரிய இலட்சியங்களில் தோல்வி அடைவது எவ்வளவோ மேல்.
மனிதனின் அதிருப்திக்கு, சோகத்திற்கு, தோல்விகளுக்கு அவனுடைய தான் என்ற எண்ணமும், அகந்தையுமே மிக முக்கிய காரணம் ஆகிறது.

இளம் வயதில் அன்னை
ஒருவன் தியானத்தின் மூலம் முன்னேற முடியும். ஆனால் நேர்மையாகச் செய்யப்படும் கர்மயோகத்தால், பல மடங்கு அதிகம் முன்னேற முடியும்.
ஒருவன் எவ்வளவு நேரம் தியானம் செய்கிறான் என்பது ஆன்மிக முன்னேற்றத்தைக் காட்டாது. மாறாக தியானம் செய்ய எந்த முயற்சியுமே தேவையில்லை என்னும் நிலையை எட்டுவதே உண்மையான ஆன்மிக முன்னேற்றமாகும்.
நீ எப்படி இருந்தாய் என்பதை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே! எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. நீ நிச்சயம் முன்னேறுவாய்.
அச்சமுற்றுக் கலக்கமுடன் உன் வருங்காலத்தை எதிர் நோக்காதே.
நம் அவநம்பிக்கையே நம் குறைபாடுகளின் தோற்றுவாயாக இருக்கிறது. உயர்விற்குத் தேவை பூரண நம்பிக்கையே

அன்னை
ஸ்ரீ அன்னையைப் பற்றி திரு. கங்கை அமரன் பாடிய மலர் போல மலர்கின்ற… பாடலைக் கேட்கக் கீழே சுட்டவும்.
http://www.hummaa.com/music/song/Malar+Pola/102668
http://www.hummaa.com/music/song/Malarpola+%28repeat%29/102679
http://www.hummaa.com/music/song/Malarpola+%28theme+Song%29/102127
பாடல் வரிகள் இங்கே….
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே!
பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே!
வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே
வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே (மலர் போல…)

அன்னையின் வருகை
ஒரு நோயும் தீண்டாமல் அணைபோடு தாயே!
நதி காய நேராமல் நீருற்று தாயே!
நல் நிலம் பார்த்து தாயே!
எளியோர்கள் மகிழ்வாக்க வழிகாட்டு தாயே!
வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே!
என் வளமான தாயே!
பசி தாகம் காணாமல் பயிராக்கு தாயே!
ரசிப்போர்கள் செவி தேடி இசையூட்டு தாயே!
இசைப் பாட்டை என்றென்றும் இனிப்பாக்கு தாயே! (மலர் போல…)
புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ
புவி மீது இறைஞானம் எமை என்றும் ஆள
திரு குறையாமல் வாழ
அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம்
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்
அது திரளாக வேண்டும்
பல வீடு பல நாடு பல தேசம் என்று
உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே!
உறவோடு மகிழ்வோடு எனை மாற்று தாயே! (மலர் போல…)
(நன்றி: கங்கை அமரன்)

மதர் சிம்பல்
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மா… அம்மா… அம்மா.. அம்மா!
பாடலைக் கேட்க சுட்டவும்
http://www.hummaa.com/music/song/Ammaum+Neeyee/142306
அன்னையைப் போற்றிடுவோம்; அவள் பாதம் பணிந்திடுவோம்
அன்னையும் காத்திடுவாள்; என்றும் ஆனந்தம் தந்திடுவாள்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் ஸ்ரீ ஆனந்தமயி ஓம் ஸ்ரீ சைதன்யமயி ஓம் ஸ்ரீ சத்யமயி பரமே!

அம்மா சரணம்
அம்மா சரணம்! தாயே சரணம்! குருவே சரணம்!
ஓம் நமோ பகவதே!
