ஸ்ரீ கணபதி சாஸ்த்ரி

மஹா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வித்யா குருவாக விளங்கியவர் பைங்காநாடு ஸ்ரீ கணபதி சாஸ்த்ரிகள். அவரது 141வது ஜயந்தி விழா நாளை (01-07-2011) அன்று சென்னை மடிப்பாக்கம், ஸத்சங்கம் ஹாலில் நடைபெற இருக்கிறது.

ஸ்ரீ கணபதி சாஸ்த்ரி சம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டிலுமே மிகுந்த பாண்டித்யம் பெற்றவர். வேதாந்த கேஸரி, மஹா மஹோபாத்யாய போன்ற பட்டங்களைப் பெற்றவர். இலக்கிய வகைமைகளில் அரிதினும் அரிதான சித்திரக் கவிகளை, சம்ஸ்கிருதத்தில் யாத்தவர். பேரறிஞர். தமது 41 வயதுக்குள் கிட்டத்தட்ட நூற்றிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஒவ்வொன்றும் ஒரு அரிய பொக்கிஷம். அதன் கண்காட்சியும், சம்ஸ்கிருதப் பேராசிரியர்கள், அறிஞர்களது சொற்பொழிவும், வேத பாராயணமும் நாளை நடைபெற உள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். அழைப்பிதழ் கீழே…

அழைப்பிதழ்