33வது சென்னை புத்தகக் காட்சி

வழக்கம் போல் இந்தப் புத்தக்காட்சியும் வெகு கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.

நான் முதல் நாளும் சென்றேன். இறுதி நாளும் சென்றேன். நடுவிலும் சென்றேன். எல்லா நாளிலும் நல்ல கூட்டம் இருந்தது. சில பதிப்பகங்களில் நிறைய கூட்டம். சிலவற்றில் ஆள் நடமாட்டமே இல்லை. அமுதநிலையம், ஐந்திணை, தமிழ்ப்புத்தகலாயம் போன்றவற்றில் கூட்டம் அதிகம் இல்லை. ஆனால் அல்லயன்ஸ், நர்மதா, விகடன், கிழக்கு, கீழைக்காற்று போன்றவற்றில் நல்ல கூட்டம்.

இந்தளவு கூட்டத்தைப் பதிப்பாளர்கள் எதிர்பார்த்தார்களா என்பது தெரியவில்லை, காரணம் சென்ற ஆண்டு அதிக கூட்டமும் இல்லை. விற்பனையும் இல்லை. இந்த ஆண்டு கூட்டம் அதிகம். விற்பனை எவ்வளவு, யார் முதலிடம் என்பதெல்லாம் இனிவரும் நாட்களில் தெரியும்.

நான் வாங்கிய சில புத்தகங்கள்…

பிரம்ம சூத்திரம் – கண்ணதாசன் பதிப்பகம்

பாபாவின் வரலாறு – கண்ணதாசன் பதிப்பகம்

ஒரு குயிலின் கதை – ஜெபமாலினி பதிப்பகம்

நாடி சொல்லும் கதைகள் – பாகம் 3 – ஹனுமத்தாஸன்

ஜே.கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும் – திருக்குடந்தை பதிப்பகம்

தமிழ்ப் பண்பாடு – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

ஸ்ரீ சத்யசாயி பாபா – விகடன் பிரசுரம்

சுவாமி சிவானந்தர் – விகடன் பிரசுரம்

எப்போ வருவாரோ – விகடன் பிரசுரம்

பம்மல் முதல் கோமல் வரை – விகடன் பிரசுரம்

காஞ்சி மகானின் கருணை நிழலில் – விகடன் பிரசுரம்

சாயிபாபா வரலாறு – கிரி டிரேடிங் ஏஜென்ஸி

மௌனம் (பாபாஜி சித்தர் வரலாறு) – கிரி டிரேடிங் ஏஜென்ஸி

தர்ம சாஸ்திரம் – சுரபி பதிப்பகம்

பண்பாட்டைப் பேசுதல் – தமிழ் ஹிந்து

சத்ய சாயிபாபா – திரிசக்தி பிரசுரம்

மகா பெரியவா – திரிசக்தி பிரசுரம்

திருவடியே சரணம் – திரிசக்தி பிரசுரம்

அய்யர் தி கிரேட் – கிழக்கு பதிப்பகம்

வீர சாவர்க்கர் – கிழக்கு பதிப்பகம்

மர்மங்களின் பரமபிதா – கிழக்கு பதிப்பகம்

சடங்குகளின் கதை – நக்கீரன்

பைசாசம் – பழனியப்பா பிரதர்ஸ்

சந்திரகுப்தரும் சமுத்திர குப்தரும் – பழனியப்பா பிரதர்ஸ்

The Life and Death of J.Krishnamurthy – Krishnamurthy foundation of India

இன்னும் பல புத்தகங்களை வாங்கினேன். அவற்றைப் பற்றிய அறிமுகங்கள் பின்னர்….